.
Monday, December 31, 2018
Sunday, December 30, 2018
Sunday, December 23, 2018
Saturday, December 22, 2018
அஞ்சலி…..
பிரபஞ்சத்தின் ஒருதுளியெனத்தான்
உன் இருப்பு இருந்தது...
ஆனால் படைப்புலகில்
நீயும் ஒரு சூரியனாகத்தான்
இருந்தாய்...
பெண்மையை போற்றிய
பெருந்தகைநீ...
உன்எழுத்துக்கள்
உழுதமனங்களில்
என்றும் பசுமையே
வேர்விட்டிருக்கும்.
புதுவைஉன்னால்
இன்னொரு மகுடத்தை
சுமந்துகொண்டிருந்தது..
சிலவெற்றிடங்களை
எதைக்கொண்டும்
நிரப்பமுடியாது.
மென்மையான
உனதுகுரல்...
சாந்தமானகுணம்
ஒரு எழுத்தாளனுக்கானதல்ல..
ஆயினும் உனது போர்குணம்
எதற்கும் சமரசம்
செய்துகொண்டதில்லை...
எழுத்துச்சிற்பியே
வாழும்போது
வாழ்ந்தவன் நீ...
போய்வா..
தமிழிருக்கும்வரை
நீயும் இருப்பாய்.
NFTE செங்கொடி தாழ்த்தி அஞ்சலி
மறைந்த
எழுத்தாளர் பிரபஞ்சன் நமது தோழர் சிரில் அறக்கட்டளை
தமிழ் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்
Thursday, December 20, 2018
Wednesday, December 19, 2018
CMD உடன் சந்திப்பு:
நமது அகில இந்தியத்தலைவர்
மற்றும் பொதுச்செயலர் ஆகியோர் CMD-யை சந்தித்தனர் தலைவர்கள் தற்போது நிலவியுள்ள நிதிநெருக்கடிபற்றி விவாதித்தனர்,
மேலும் நிர்வாகம் தனது செலவினங்களை குறைக்க
வேண்டும் என்று வலியுறுத்தினர். அது கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து துவங்கவேண்டுமெனவும்
தெரிவித்தனர். GPF, ஓய்வூதிய பங்களிப்பு ஆகியவைகளை
அரசுக்கு செலுத்தாமல் உள்ளது. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்ட
வங்கிக் கடன்கள் வங்கிகளுக்கு செலுத்தப்படாமல் உள்ளதையும் சுட்டிக்காட்டினர். CMD
தற்போதைய நிலைமை 15 நாட்களுக்குள்
தளர்த்தப்படும் என்று உறுதியளித்தார்.
Tuesday, December 18, 2018
வருந்துகிறோம்…
கடலூர் வெளிப்பகுதித்
தோழர் S.நவாப்ஜான் TT (FriendsNagar Exge) அவர்களின் தாயார், திரு.ஷேக் (Retd
Cable Splicer) அவர்களின் மனைவி இன்று 18.12.2018 மதியம் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வருந்தும் தோழருக்கும்
அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி நிகழ்ச்சி நாளை
19.12.2018 கடலூர் வண்ணாரப்பாளையம் தொலைபேசி ஊழியர் குடியிருப்பில் உள்ள இல்லத்தில்
நடைபெறும்.
Monday, December 17, 2018
அஞ்சலி
கடலூர்
முன்னணித் தோழரும், நீண்ட காலமாக மாவட்டப் பொருளாளர் பணியில் சிறப்பாக மணியாற்றியவரும், மாவட்ட செயலராக பணிபுரிந்தவருமான, அனைவராலும் PS என்று அழைக்கப்படும் தோழர் P. சுப்ரமணியன் இன்று
அதிகாலை 5.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கிறோம். தோழரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
தோழரது விலாசம்: எண் 6 காலேஜ் ஆசிரியர்கள் நகர்,(சாவடி புத்துக்கோவில் அருகில்) உண்ணாமலை செட்டி சாவடி, கோண்டூர் அஞ்சல், கடலூர்
தோழரது விலாசம்: எண் 6 காலேஜ் ஆசிரியர்கள் நகர்,(சாவடி புத்துக்கோவில் அருகில்) உண்ணாமலை செட்டி சாவடி, கோண்டூர் அஞ்சல், கடலூர்
Thursday, December 13, 2018
Wednesday, December 5, 2018
Monday, December 3, 2018
Sunday, December 2, 2018
செயலாளர்-டெலிகாம் மற்றும் AUAB ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தைகள் இன்று 2.12. 2018 நடைபெற்றது.
அரசு விதிமுறைப்படி 4 ஜி ஸ்பெக்ட்ரம், ஓய்வூதிய மாற்றம் மற்றும் பிஎஸ்என்எல் மூலம் ஓய்வூதிய பங்களிப்பு செலுத்துதல் ஆகியவற்றில் ஒதுக்கீடு செய்வதற்கான சிக்கல்களில் முன்னேற்றங்கள் உள்ளன.
இருப்பினும், 3 வது சம்பள மறுபரிசீலனை பிரச்சினையில் முட்டுக்கட்டை நிலவுகிறது. இந்த பிரச்சினையின் நிலை குறித்து செயலாளர், டெலிகாம் அளித்த பதிலில் நம்பிக்கை இல்லை.
இத்தகைய சூழ்நிலைகளில், தகவல் தொடர்புத்துறை அமைச்சருடன் கலந்துரையாட வாய்ப்பளிக்கும் வாய்ப்பினைக் கருத்தில் கொண்டு, AUAB தலைவர்கள் ஒரு வாரம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தாமதப்படுத்த முடிவு செய்துள்ளது. அமைச்சருடனான சந்திப்பில் பயனுள்ள தீர்வு காணப்படாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தம் 10-12-2018 அன்று 00:00 மணி முதல் தொடங்கும்.
Saturday, December 1, 2018
வருந்துகிறோம்
கடலூர் CAF
Section-ல் பணிபுரியும் தோழர் S.ரமேஷ் Asst Off.Supdt அவர்களின் தகப்பனார் இன்று 1.12.2018
அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வருந்தும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும்
கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம். அன்னாரது இறுதி
சடங்கு இன்று 1.12.2018 மாலை 4.00 மணியளவில் கடலூர் பீச்ரோடு தீயணைப்பு நிலையத்தின்
அருகிலுள்ள திருவள்ளுவர் நகர், 29ம் இலக்கமுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
Subscribe to:
Posts (Atom)