தோழர்களே வணக்கம்.
CSC பகுதியில் காலை 09.00மணி முதல் மாலை 05.00 மணி வரையில் தொடர்ந்து நமது
ஊழியர்கள் இந்த கொரோன வைரஸ் தொற்றை பரவலை
கட்டுபடுத்திட (144) ஊரடங்கு காலத்தில் பணிக்கு அனைத்து ஊழியர்களும் வரவேண்டும் என
நமது மாநில நிர்வாகத்தின் உத்திரவின் பேரில் நமது மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட உத்திரவினை வாய்மொழி மூலமாக
அமுல்படுத்தியதன் மூலம் நமது ஊழியர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். நமது மாவட்ட
சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக
பொது மேலாளரை நேரில் சந்தித்து
விவாதித்தோம். சரியான தீர்வு கிடைக்காததால்
மாநில சங்கத்திற்கும் கொண்டு சென்றோம். மாநிலச்
சங்கம் , மாநில நிர்வாகத்திடம்
வலியுறுத்தியன் பேரில் , மாநில நிர்வாகமும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநிலச்
செயலரிடம் உறுதி அளித்தனர். இருப்பினும் நமது மாவட்ட செயலாளர் நமது பொது
மேலாளரிடம் தொடர்ந்து முறையிட்டதின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் இன்று துணைப் பொது மேலாளர் (CFA) அவர்கள் மாவட்ட செயலரை அழைத்து பேசினார். அதனை தொடர்ந்து
நாளை ( 23.04.2020) முதல் CSC பணிக்கு வரும் ஊழியர்கள் காலை 09.00மணி
முதல் மதியம் 01.00 மணி வரையில் பணி செய்தால்
போதும் எனவும் மதியம் 01.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையில் ஒருவர் மட்டும் பணியில் இருந்தால் போதும் என அறிவித்தார்.
இதற்கு ஒத்துழைப்பு நல்கிய மாநில செயலாளருக்கும், மாவட்ட பொது மேலாளர்
அவர்களுக்கும் , துணை பொது மேலாளர் ஆகியோருக்கு நமது நன்றி...
தோழமையுடன்
D.குழந்தைநாதன்
மாவட்டச் செயலர், NFTE, கடலூர்.
No comments:
Post a Comment