.

Saturday, May 30, 2020

வாழ்த்துகிறோம்.....
30.5.2020 இன்று பணி ஓய்வு பெறும்
கடலூர் மாவட்ட சங்க 
அமைப்புச் செயலர் 
தோழர் V. மாசிலாமணி JE விழுப்புரம் 
அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க
 கடலூர் மாவட்ட சங்கத்தின் பணிநிறைவு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் 
தோழர்கள்
 K. சுப்புராயலு TT 
கடலூர்,
 K. திருநாவுக்கரசு TT 
பண்ருட்டி 
மற்றும் 
தோழர் A.சுப்ரமணியன் TT விருத்தாசலம் 
பணி ஓய்வு பெறுகின்றனர்.
இத் தோழர்களின் பணி ஓய்வு காலமும் சிறப்பாக அமைய கடலூர் NFTE-BSNL மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். தோழமையுடன்
D.குழந்தை நாதன் 
மாவட்ட செயலாளர்
 கடலூர்

Sunday, May 17, 2020



கூட்டு போராட்டத்தின் வெற்றி

தோழர்களே.. நமது கடலூர் மாவட்டத்தில் கேபிள் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை OUTSOURCING பிரிவில் பணிக்கு அமர்த்த வேண்டி நமது NFTE, BSNLEU  தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தோம். 

 நமது நியாயமான கோரிக்கைகளை   இரண்டு ஒப்பந்தகாரர்களும்  நம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும்  பணிக்கு எடுத்து கொள்வதாகவும், ஏற்கனவே  உள்ள சம்பளம் தொடரும் என்றும் உறுதி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து நமது போராட்டங்கள்  முடித்து  கொள்ளப்படுகிறது. ஆகவே இன்று முதல்  (17.05.2020)  நமது தோழர்கள் மீண்டும் பணிக்கு செல்லுமாறு  NFTE, BSNLEU  மாவட்டச் சங்கங்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர் முயற்சி எடுத்திட்ட நமது NFTE, BSNLEU  மாவட்ட சங்கத்திற்கும், மூன்று ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட சங்கத்திற்கும், மாநில சங்கத்திற்கும்  நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.  போராட்ட அறைகூவலை ஏற்று  போராட்ட  களத்தில் நின்ற அனைத்து ஒப்பந்த ஊழியர்களூக்கும், அனைத்து கிளைச் செயலர்களுக்கும் ,   மாநில , மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும் நன்றியினை மனதார தெரிவித்துக் கொள்கின்றோம்.

    நமது போராட்டத்திற்கு மேலும் வலுவூட்டும் விதமாக   செயல்பட்டு தீர்வினை உண்டாக்க முயற்சி எடுத்த நமது மாநில தலைவருக்கும், மாநில செயலருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம் 

        தோழமையுடன்
                                    D.குழந்தைநாதன்                                                                           மாவட்டச் செயலர்
         NFTE, கடலூர்
         .



Wednesday, May 6, 2020

தலித் எழில்மலை மறைந்தார்
தலித் எழில்மலை 1998- 99 இல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் சிதம்பரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வாஜ்பாய் பிரதமராக இருந்த மந்திரிசபையில் தனி அந்தஸ்து சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். பின்னர் 2001 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடலூர் மாவட்ட தொலைத்தொடர்பு  ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர்  இருந்த காலத்தில் கடலூர் சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையம் மற்றும் நெய்வேலி டவுன்ஷிப் தொலைபேசி நிலையம் ஆகியவற்றை இவர் திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று தனது 74ஆவது வயதில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். கடலூர் மாவட்டம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்
குழந்தை நாதன் 
மாவட்ட செயலர் 
கடலூர்

Saturday, May 2, 2020

மே தின கொடியேற்றம்  


கடலூர் பொது மேலாளர் அலுவலகம் 


           நமது கடலூர் பொது மேலாளர் அலுவலகத்தில்  NFTE  சங்க கொடியினை  மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம்   ஏற்றி வைத்து மே தின வாழ்த்துக்களை தெரிவித்தார். அதே போல் பொது மேலாளர் அலுவலக்த்திலிருந்த TMTCLU சங்க கொடியினை மாவட்டச் செயலர் தோழர் A.S.குருபிரசாத் ஏற்றி வைத்தார்.  TRA அலுவலக்த்தில் உள்ள நமது NFTE  சங்க கொடியினை தோழர் K.மகேஷ்வரன் ஏற்றி வைத்தார். மற்றும் நமது தொலைபேசி நிலையத்தில்  தோழர் K.சுப்புரயலு அவர்கள் மே தின கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


       மேற்கண்ட மே தின கொடியேற்ற நிகழ்வு  நமது  மாவட்டச் செயலர் தோழர் D.குழ்ந்தைநாதன் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.   தோழர் S.சகாயசெல்வன், தோழர் M.S.குமார், தோழர் R.சுப்ரமணியன், தோழர் T.கலைச் செல்வன், தோழர் M.செல்வகுமார், தோழர் வீரமணி, தோழர் வெங்கடேசன், தோழியர் S.சுகந்தி உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றி கலந்த  செவ்வணக்கம்.
 










சிதம்பரம்

   சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் தோழர்.A.தமிழ்வேந்தன் அவர்கள் சம்மேளன கொடியை ஏற்றினார்.விழாவில் கலந்துகொண்ட தோழர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.தோழர் இரா.ஸ்ரீதர் மேனாள் மாவட்ட செயலர் அவர்கள் கலந்துக்கொண்டார்கள். அதனை தொடர்ந்து இரண்டாம் முறையாக விடுபட்ட ஒப்பந்த ஊழியர்கள் 7 பேருக்கு ரூ.1000 பெருமானமுள்ள உதவி பொருள்கள் வழங்கப்பட்டது. மற்றும் ஏற்கனவே அங்கு பணி செய்த ஒப்பந்த ஊழியர்களுக்கு  அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை  சங்க வேறுபாடின்றி வழங்கப்பட்டது.
குறிப்பு : விழாவில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.





உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் 11 ஒப்பந்த ஊழியர்களுக்கு அந்த கிளைச் சங்கத்தின் சார்பில் அரிசி 10 கிலோ, மளிகைப் பொருட்கள் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நமது மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் K.அம்பாயிரம் இம்மாதம் பணி ஓய்வு பெறுவதனை முன்னிட்டு சங்க வேறுபாடின்றி கூடுதலாக காய்கறி முதற்கொண்டு தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்தார். தோழருக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்





விருத்தாசலம்

இன்று காலை விருத்தாசலம் தொலைபேசி நிலையத்தில் தோழர் B.கிருஷ்ணமூர்த்தி கிளைச் செயலர் தலைமையில் நமது சங்க கொடியினை ஏற்றி செவ்வணக்கம் செலுத்தினார்கள். இந்த மே தினத்தில் விருத்தாசலம் தொலைபேசி நிலையத்தில் பணி புரியும் 10 ஒப்பந்த ஊழியர்களூக்கு அரிசி 10 கிலோ, மளிகைப் பொருட்கள், காய்கறிகள்  அடங்கியவற்றினை கொடுக்கப்பட்டது. முன் நின்ற அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றி...



விழுப்புரம்




நெய்வேலி

திண்டிவனம்


செஞ்சி

கள்ளக்குறிச்சி