.
Friday, October 16, 2020
*இரங்கல் செய்தி
* *கடலூர் தொலைபேசிக் கிளைத் தலைவராக பணியாற்றி, பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றவருமான *தோழர் A. பழனிசாமி TT அவர்கள் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் பிரிவில் வருந்தும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கடலூர் மாவட்டம் NFTE BSNL சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அஞ்சலியை உரிதாக்குகிறோம். *கடலூர் மாவட்ட சங்கம் *NFTE BSNL*
Tuesday, October 13, 2020
ஒற்றுமையின் பலம்
தோழர்களே அனைவருக்கும் வணக்கம்,
நமது கடலூர் மாவட்ட நிர்வாகம் நமது மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை வரும் அக்டோபர்-16ந் தேதி முதல் நிறுத்தப்படுவதாக முடிவெடுத்து அதனை ஒப்பந்தகாராரின் வாயிலாக அமுல்படுத்திட நடவடிக்கை எடுத்து வந்தது. இதனை அறிந்த நமது NFTE-BSNLEU ஒன்று சேர்ந்து ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர் .
நமது NFTE, BSNLEU, மற்றும் TNTCWU, TMTCLU, NFTCL உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்திட முடிவு செய்து வரும் 14-10-2020 முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்குமாறு அறைகூவல் விடுத்தது. அந்த அறைகூவலுக்கிணங்க 14 முதல் தொடர் உன்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக் மாவட்ட நிர்வாகத்திற்கு அனைத்து சங்கங்களின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நமது NFTE, BSNLEU , TMTCLU, TNCWU, NFTCL உள்ளிட்ட மாவட்ட சங்க பொறுப்பாளர்களை அழைத்து இன்று மதியம் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சில உறுதிமொழி கொடுத்தது அதில் வரும் 31.10.2020 எந்த ஒரு ஒப்பந்த ஊழியர்களையும் வேலை விட்டு நீக்குவதில்லை என்றும்... மாவட்டம் முழுவதும் EOI பிரிவில் சில ஒப்பந்த ஊழியர்களை கூடுதலாக நியமிப்பதற்கு உறுதிமொழி கொடுத்துள்ளது .
மேற் சொன்ன சில வாக்குறுதியின் அடிப்படையில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக NFTE, BSNLEU , TMTCLU, TNTCWU, NFTCL உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதனை மெய்பித்துள்ளோம்... போராட்ட அறைகூவலுக்கு தயாராக இருந்த அனைத்து தொழிற்சங்க தலைவர்களுக்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் நன்றி,,,, நன்றி..தோழமையுடன்
NFTE, BSNLEU , TMTCLU, TNTCWU, NFTCL
மாவட்ட செயலர்கள், கடலூர்.
Thursday, October 8, 2020
மாவட்ட செயற்குழு
COVID-19 காலத்தில் இயற்கை எய்திய நமது தோழர்கள், விருப்ப ஓய்வு பெற்ற தோழர்கள், ஓய்வு
பெற்ற தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்தபடியாக நமது மாவட்ட செயலர் தோழர் D. குழந்தைநாதன்
துவக்கவுரையாற்றினார். ATT/TT மாற்றல், நிர்வாகத்தின் அணுகுமுறை ஆகியவற்றினை
குறித்து பதிவு செய்தார்.
இறுதியாக நமது மாவட்ட பொருளார் தோழர் A.S.குருபிரசாத்
நன்றி நவில மாவட்ட செயற்குழு இனிதே முடிவுற்றது.
- v ஊழியர்களின் அடையாள அட்டை மற்றும் மருத்துவ அடையாள அட்டைகளின் காலக்கெடு முடிந்துவிட்டதால் உடனடியாக அவற்றை மாற்றி ஊழியர்களுக்குப் புதியதாக அடையாள அட்டைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்தை இந்த மாவட்டச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
v ஊழியர்கள் அவசர காலத்தில்
மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதி பெறுவதில் தற்போது பெரும்
இடர்பாடுகளைச் சந்திக்க நேர்கிறது. கோவிட்-19 பாதிப்புக்கான சிகிச்சை எனில் அனுமதி
இல்லை என்பதே எதார்த்தம். அனுமதி மறுக்கப்படுவதற்கு மருத்துவமனைகளின் பில்களைப் பட்டுவாடா செய்ய BSNL நிர்வாகம் தாமதிப்பதே
காரணமாகும். இந்நிலையில் குறைந்தபட்சம் ஊழியர்கள் தாங்களே பணத்தை செலுத்தும் வகையில்
(Not on MRS Credit Based) அவசர காலத்தில் BSNL ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்
மருத்துவமனை உள்நோயாளியாக அனுமதி பெறும் வகையில், சில குறிப்பிட்ட
மருத்துவமனை நிர்வாகங்களோடு BSNL மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட ஊழியர்களுக்கான அத்தகைய மருத்துவமனைகளை ஒப்பந்தம் செய்து அறிவிக்க
வேண்டும் என இச்செயற்குழு மாவட்ட நிர்வாகத்தினை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
- v ஓய்வு பெற்ற ஊழியர்கள் / பணியில் இருக்கும் ஊழியர்களின் மருத்துவ பில்களைப் பட்டுவாடா செய்வதில் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
- v கடலூர் மெயின் தொலைபேசி நிலையம், திருப்பாதிரிப்புலியூர்,
சிதம்பரம் தொலைபேசி நிலையத்தில் இருக்கும் BSNL–OLTகளைப் பயன்படுத்தி இயங்கும் FTTH குழுக்களைக் கலைக்காமல், அந்தக்
குழுக்கள் மூலமாகவே புதிய இணைப்புகளை BSNL நிர்வாகமே
வழங்கிட வேண்டும் என இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
- v COVID-19 காலத்தில் தொழிற்சங்கங்கள் தரும்
ஆலோசனைகளை / ஒத்துழைப்பை மாவட்ட நிர்வாகம் நம்பிக்கையோடு அணுகுவதற்கு மாறாக முரண்பாடாக
நடந்து கொள்வதையும், ஒப்புக்கொண்டவற்றையும் கூட தன்னிச்சையாகக் கைவிடுவதையும் இச்செயற்குழு
வருத்தத்தோடு சுட்டிக் காட்டுகிறது.
- v ஊழியர்களைத் தொடர்ந்து பணியிடம் மாற்றும் நிர்வாகத்தின் போக்கை செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உரிய திட்டமிடல், தலமட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் இல்லாததே திட்டமில்லா திடீர் திடீர் மாறுதல் உத்தரவுகளுக்குக் காரணம். இது சேவையை மேம்படுத்த உதவாது, கைவிட வேண்டும் என நிர்வாகத்தை இச்செயற்குழு வேண்டுகிறது.
- v ஒப்பந்த ஊழியர்களும் நிரந்தர ஊழியர்களோடு இணைந்து, நிறுவனத்தின் வளர்ச்சிப் பணிகளைத்தான் செய்து வருகிறார்கள். எனவே, ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளில் மாவட்ட நிர்வாகம் மனிதாபிமானத்தோடு நடக்க வேண்டும் என இச்செயற்குழு விழைகிறது.
- v CLUSTER –OUTSOURCING நடைமுறை குளறுபடிகளைத்
தீர்த்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட இச்செயற்குழு கேட்டுக்
கொள்கின்றது. அதிகரிக்கும் லைன் பழுதுகள், மற்றும் தொலைபேசி இணைப்பு சரண்டர்களைக்
குறைக்க, இந்த நடைமுறையின் அமலாக்கம் உரிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
ஒப்பந்ததாரர்கள் செயல்திறனைக் கண்காணிக்கப் பகுதி வாரியாகப் பொறுப்பு அதிகாரிகள்
நியமித்து அறிவிக்க வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
- v இது வரையில் எந்தெந்தப் பணிகள் ஒப்பந்ததாரர்களுக்கு விடப்பட்டுள்ளது என்பதனை மாவட்டச் சங்கங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என இச்செயற்குழு நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறது.
- v தேசியக் கவுன்சில் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட மட்டத்திலான ஜெசிஎம் கூட்டாலோசனைக் குழு மற்றும் Works’ Committee கூட்டங்களை நமது மாவட்டத்தில் அமைத்து நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுத்திட இச்செயற்குழு வற்புறுத்துகிறது.
- v ஊழியர்களுக்கான ஆண்டு ரகசியக் குறிப்புகள் (Confidential
Reports) உரிய மேற்பார்வை அதிகாரிகளால் எழுதப்பட்டு பணி முடிக்கப்பட்டதை நிர்வாகம்
உறுதி செய்யவும், அக்குறிப்புகளை விதிகளுக்கு ஏற்ப ஊழியர்கள் பார்வைக்கு வழங்கவும்
விரைவில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
v மேற்கண்ட தீர்மானங்கள் கொண்டு வருவதற்குத் தற்போதைய மாவட்ட நிர்வாகத்தின்
உதவிகரமற்ற அணுகுமுறையே காரணம். விஆர்எஸ் அமலாக்கத்திற்குப் பிறகு நிர்வாகம் ஒரே
DGM அதிகாரத்தின் கீழ் வந்து விட்டது. தலைமைப் பொறுப்பில் உள்ள மாவட்டப் பொது மேலாளரும்
புதுவையிலிருந்து வருகைதரும் அதிகாரியாக உள்ளதால் அன்றாட நிர்வாகம் ஓர் குடையின் கீழ்
என்ற நிலையில் உள்ளது. எனவே சேவை குறைபாடாக இருந்தாலும், ஊழியர்கள் பிரச்சனைகள் என்றாலும்
பொறுப்பு அவரையே சார்ந்தது. எனவே அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது
அனைவரது விழைவு மட்டுமல்ல, மாவட்டப் பொதுமேலாளருக்கு இச்செயற்குழுவின் வேண்டுகோளும்
ஆகும். இல்லையெனில் மாவட்டதின் தொழில் அமைதி பாதிக்கப்படும் என்பதை மிகுந்த பொறுப்புணர்வோடு
NFTE தொழிற்சங்கத்தின் இம்மாவட்டச் செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.