.

Saturday, May 1, 2021

இந்த உலகத்தின் முதுகெலும்பே உழைப்பாளர்கள். இந்த உலகம் இன்று இருக்கும் இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணம் உழைப்பு. ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பும் ஈடு இணையில்லாதது. ஒரு காலத்தில் கொத்தடிமைகளாக இருந்த இந்த தொழிலாளர்கள் தங்களை தாங்களே விடுவித்துக்கொண்டு மீண்டும் சுதந்திர காற்றை சுவாசித்த நாளே நாம் மே தினமாக கொண்டாடுகிறோம்.


உலகெங்கும் தொழிலாளர் உண்டு-அவர்
உயர்வுக்கு வழி செய்தல் நன்று ...

ஏற்றம் அடைந்திட வேண்டும்-அவர்
ஏழ்மை அகன்றிட வேண்டும்

பாடுபடும் தொழிலாளி-அவர்
பாரினில் உயர வேண்டும்...

 தொழிலாளியின் வியர்வை

தங்கத்தை காட்டிலும் மதிப்பானது...!

வைரத்தை விட ஜொலிப்பானது....!!
முத்தை விட அழகானது.....!!!

 

உலகின் படைப்புக்கள் எங்கள்
உழைப்பெனும் உளியால்
செதுக்கபட்டவை....

 

இரத்தமும்,வியர்வையும்
விலையாக கொடுத்து
தொலைபேசியினை சேவையாக தந்தோம்....

வியர்வை துளிகளை
ஒன்றினைத்தே...

உங்கள் கையில் உலகத்தினை தந்தோம்..

 அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்

                      வாழ்த்துக்களுடன்: NFTE மாவட்ட சங்கம், கடலூர்.

 

 

No comments:

Post a Comment