.
Saturday, December 31, 2022
Thursday, December 15, 2022
தமிழ் மாநில செயற்குழு 15/12/22
மாநில செயற்குழுவில்
மாநில உதவித்தலைவர் தோழர் A.சகாயசெல்வன் உரை.
Tuesday, December 13, 2022
Tuesday, November 8, 2022
Thursday, October 27, 2022
Sunday, October 2, 2022
Friday, September 16, 2022
Sunday, September 11, 2022
Friday, September 9, 2022
கடலூர் மாவட்ட செயற்குழுவும், மத்திய சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டும் 08.09.2022 அன்று காலை10.00 மணியளவில் மாவட்டத் தலைவர் தோழர் D.ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் இனிதே நடந்தேறியது.
கடலூர், விழுப்புரம், சிதம்பரம், திட்டக்குடி, செஞ்சி, நெய்வேலி தோழர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் கடலூரில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டிற்கான வரவு செலவு அறிக்கையினை சமர்பித்தார்..
. நிறைவுறையாக தோழர் K. நடராஜன் மாநிலச் செயலர் அகில இந்திய மாநாடு பற்றியும், CMD பங்கேற்பு, தோழமைச் சங்கத் தலைவர்கள் பங்கேற்பு நிர்வாகத்தின் நிலைப்பாடு , ஊழியர்களின் நலன் , AUABன் முக்கியத்துவம் ஆகியன பற்றி உரை நிகழ்த்தினார். NFTE தலைமையிலான கூட்டணியின் வெற்றி மட்டுமே , நிறுவனத்தை காப்பாற்றும் மற்றும் ஊழியர் நலனை காப்பாற்றுவதற்கு ஓரே வழி என்ற விசாலப் பார்வையான உரை தோழர்களுக்கு உற்சாகமூட்டுவதாக அமைந்தது.
மாவட்ட உதவிச் செயலர் தோழர் R. மலர்வேந்தன் அவர்களின் நன்றி கூற மாவட்ட செயற்குழு நிறைவுற்றது.
இன்குலாப் ஜிந்தாபாத்
D.குழந்தைநாதன்
மாவட்ட செயலர், NFTE,
கடலூர்-01.
இறுதியாக செயற்குழுவில் தீர்மானங்கள் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
தீர்மானங்கள்
9வது
அங்கீகாரத் தேர்தல் 12.10.2022ல்
நடைபெற
உள்ளது.
தேர்தல்
செலவினங்களை ஈடுசெய்ய ஒவ்வொரு உறுப்பினரும் ரூ 200/-
மத்திய, மாநில, மாவட்ட, கிளைச் சங்க நிர்வாகிகள் ரூ 2000/- நன்கொடையாக
அளித்து
வெற்றிக்கான பங்களிப்பினை செலுத்துமாறு இந்த மாவட்ட செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
விழுப்புரம் வாடிக்கையாளர் சேவை மையம், ஊழியர்கள் நலன் கருதி கருத்து கேட்டு இடமாற்றம் செய்யப்பட்டது பாராட்டத்தலுக்குறிய செயலாகும். அந்த வகையில் விழுப்புரம் கோட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுதலை தெரிவித்துக் கொண்டு
,மேலும்
சில
குறைகள்
இருக்கிறது, அதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சரி செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
கடலூர் வாடிக்கையாளர் சேவை மையம் இடமாற்றல் சரியான திட்டமிடல் இல்லாமல் திறக்கப்பட்டது வருத்தத்திற்குறியது. வாடிக்கையாளர் நலனையும் , ஊழியர்களின் நலனையும் கருத்தில் கொண்டு முறைப்படுத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தினை செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
ஆன்லைன் வருகை பதிவு ( ONLINE ATTENDANCE ) குறித்த
நேரத்தில் பதிவு செய்தல் வேண்டும் . இதில் ஏதேனும் சிரமம் இருந்தால் உடனடியாக மாவட்ட சங்கத்திடம் தெரிவித்து தீர்வு கண்டிட மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
வருவாய் வளர்ச்சிக்காக
சுமார்
15 நாட்களுக்குள் இரண்டு FTTH
இணைப்பினை அனைத்து உறுப்பினர்களும்
தங்களது
பங்களிப்பாக கட்டாயம் பிடித்து தர வேண்டுமென செயற்குழு பணிக்கின்றது.
புதிய மாவட்ட நிர்வாகத்தின் நேர்மையான செயல்பாட்டை வரவேற்பதோடு, தனி நபர் பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தினை மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
கடலூரில் நடைபெற்ற 7 வது மாவட்ட மாநாட்டில் நிரப்பட்டாமல் உள்ள பதவிகளில் தோழர் R.பன்னீர்செல்வம்
அவர்களுக்கு மாவட்ட உதவிச் செயலராக இச்செயற்குழு ஒருமனதாகச் நியமிக்கிறது. நிரப்பப்படாமல் இருக்கும் 3 பதவிகளை ஒற்றுமையினை கருதி நிரப்பப்படாமல்
வைக்கப்படுகிறது.
ராஞ்சியில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில்
தோழர் S.ஆனந்தன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து
தன்னை மீண்டும் NFTEயில்
அடிப்படை
உறுப்பினராக சேர்த்து கொள்ள வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில், மாநாட்டில் நீண்ட விவாதத்திற்கு பிறகு
ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் மத்திய , மாநில
சங்கம் கொடுக்கின்ற வழிகாட்டுதலை கடலூர் மாவட்ட சங்கம் ஏற்றுக் கொள்வதென இச் செயற்குழு முடிவு செய்துள்ளது.
மாவட்ட செயற்குழுவில் மாவட்ட மாநாட்டின் வரவு செலவு கணக்கு சமர்பிக்கப்பட்டு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
9வது
சங்க
அங்கீகாரத் தேர்தலின் வெற்றிக்கு
உறுப்பினர்கள் தங்களது கடமையினை சிறப்பாக
பணியாற்றிட வேண்டும் எனவும் ஓய்வு பெற்ற தோழர்கள் மற்றும் அதிகாரி தோழர்களும் தங்களுக்கான தேர்தல் பங்களிப்பை செலுத்திட வேண்டும்
என தோழமையுடன்
மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
தோழமையுடன்:
NFTE மாவட்ட சங்கம், கடலூர்