தோழர்களே வணக்கம்.
தனியார் செல்பேசி நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி இருக்கிற நேரத்தில் வாடிக்கையாளர்கள் பலரும் நமது பிஎஸ்என்எல் நிறுவனம் நோக்கி வர தொடங்கி இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நமது உபயோகிப்பாளர்கள் தளத்தை விரிவு படுத்துவதற்கு தோழர்கள் தல மட்டத்தில் கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தல மட்டத்தில் அதற்கு ஏதுவான சூழல்கள் நிலவவில்லை. உதாரணமாக
SANCHAR SOFT மற்றும் MNP போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அந்தப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் அதனை சரி செய்திடக்கோரி மாநில நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்திடவும் ஏதுவாக 17.07.2024 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு மாநில தலைவர் தோழர் G.S. முரளிதரன் அவர்கள் தலைமையில் ONLINE MEETING நடைபெற உள்ளது.
தல மட்டத்தில் நமது தோழர்கள் சந்திக்கும் வாடிக்கையாளர்கள் பிரச்சனைகளை விரிவாக பேசிட மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் தங்களது மேலான கருத்தை கூறி பிரச்சனை தீர்விற்கு ஆலோசனை வழங்கிடவும் கூட்டத்தை செழுமைப்படுத்திடவும் வேண்டும் என தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
K.Natarajan,
Cs NFTE-BSNL,
TN Circle,
Chennai,
15.07.2024.
No comments:
Post a Comment