.

Wednesday, July 17, 2024

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். 

இன்றைக்கு 17.07.2024 நடைபெற்ற இணைய வழி கூட்டத்தை மாநிலத் தலைவர் தோழர் G.S.முரளிதரன் அவர்கள் தலைமையேற்று நடத்தி தந்தார்கள்.

தனியார் செல்பேசி நிறுவனங்கள் மிகக் கடுமையாக 17% முதல் 27% வரை கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.  இந்த சூழ்நிலையில் உபயோகிப்பாளர்கள் பலரும் நமது BSNL நிறுவனத்தை நோக்கி வர தொடங்கி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் SANCHAR AADHAR கிடைக்காமலும் , சில Technical error இருப்பதும் நம் நிறுவனம் நோக்கி வரக்கூடிய வாடிக்கையாளர்களை சோர்வடையச் செய்கிறது. எனவே இதை சரி செய்திட மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு அதை சரி செய்திடக்கோரி மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டது.

குடந்தை மாவட்டச் செயலரும் மாநிலத் துணைச் செயலாளருகிய தோழர் விஜய் ஆரோக்கியராஜ் துவக்கவுரை ஆற்றினார்.

அதைத்தொடர்ந்து தஞ்சை, கடலூர்,திருச்சி,காரைக்குடி, பாண்டிச்சேரி,தூத்துக்குடி, விருதுநகர்,மதுரை,தர்மபுரி, வேலூர் , குன்னூர்,கோவை, ஈரோடு மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றும் தோழர்கள் தோழியர்கள் என 25 க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்று தங்களுடைய மேலான கருத்துக்களை வழங்கினார்கள்.

அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகளை ஒருமனதாக எடுத்து அதனை மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கடிதம் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 

1. உடனடியாக sanchar Aadhar எந்தவித பிரச்சினையும் இன்றி தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
2. மாவட்ட அளவில் MNP மற்றும் இதர விஷயங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை கவனித்திட, களைந்திட nodal officer நியமிக்கப்பட வேண்டும். 

3. Clerical staff போதுமான அளவில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இல்லாத காரணத்தால் apprenticeship முறையில் பணி அமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

4. வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு வரக்கூடிய உபயோகிப்பாளர்களை guide செய்திட helpdesk அமைத்திட வேண்டும். 

5. SSA அளவில் உபயோகிப்பாளர்களை கவர்ந்திடும் வண்ணம் விளம்பர FLEX வைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
6.  Franchise Tender period முடிவுற்ற வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட சங்கம் மூலமாக கடிதம் கொடுத்து அதன் நகலை மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும். மாவட்ட நிர்வாகத்தை மாநில நிர்வாகத்திற்கு கடிதம் எழுதிட வலியுறுத்த வேண்டும்.

7.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளைத் தவிர மாவட்ட சங்கங்கள் சந்திக்கக்கூடிய இது சம்பந்தமான இதரப் பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதமாக கொடுத்து அதன் நகலை மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும்.

நாகர்கோயில் மாவட்ட செயலாளர் தோழர் லட்சுமண பெருமாள் மேளாவில் இருப்பதனால் அந்தப் பகுதியில் இருந்து தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தெரிவித்திருந்தார். திருநெல்வேலி மாவட்டச் செயலர் தோழர் நடராஜன்,  அகில இந்திய செயலாளர் தோழர் ஸ்ரீதர் மற்றும் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் பழனியப்பன் ஆகியோர்கள் தவிர்க்க முடியாத சொந்த வேலை காரணமாக வர இயலவில்லை என தெரிவித்திருந்தார்கள். திருச்சி மாவட்ட செயலாளர் தோழர் ஹென்றி அவர்கள் மருத்துவமனை சென்றிருந்த காரணத்தால் மாவட்டத்தின் சார்பாக தோழர்களை பங்கேற்கச் செய்திருந்தார். முன்னாள் அகில இந்தியச் செயலர் தோழர் காமராஜ் மற்றும் அல்லிராஜா ஆகியோர்கள் கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள். 17.07.2024
இன்றைக்கு விடுமுறையாக இருந்த போதும் கூட கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய மேலான கருத்துக்களை வழங்கிய அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். நன்றிகள்.

தோழமையுடன் ,
K.Natarajan ,
Cs NFTE-BSNL,
TN Circle,
Chennai,
17.07.2024.

No comments:

Post a Comment