.

Wednesday, October 30, 2013

போனஸ் வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம் கடலூர் 30-10-2013

 போனஸ் வழங்க  கோரி உண்ணாவிரத போராட்டம் கடலூரில்  30-10-2013 அன்று பொது மேலாளர் அலுவலகத்தின் முன் நடைபெற்றது. மாவட்ட தலைவர் R செல்வம் தலைமையில் 18 தோழர்கள் உண்ணாவிரதமிருந்தனர் . மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 120 தோழர்கள் பங்கேற்றனர். மாநில துணை தலைவர் லோகநாதன் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார் 
முன்னாள் மாவட்ட செயலர் சுந்தரமூர்த்தி , தோழமை சங்கத்தை சேர்ந்த நல்லதம்பி (PEWA மாவட்ட செயலர்), D சிவசங்கர் (SNATTA மாநில தலைவர்), மாவட்ட அமைப்பு செயலர் ரங்கராஜன் , மாவட்ட உதவி செயலர்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணகுமார்,  மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் , மாநில அமைப்பு செயலர் N  அன்பழகன், SNEA மத்திய குழு உறுப்பினர் அசோகன் SNEA மாவட்ட செயலர் பாண்டுரங்கன் AIBSNLEA மாவட்ட செயலர் வெங்கடேசன் ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் 
























இந்த மாத  சம்பள பட்டுவாடா 
இந்த மாத சம்பளம் இந்தியன் வங்கி தவிர மற்ற  வங்கி கணக்கில் ஊதியம் பெறுவோருக்கு ICICI வங்கியிலிருந்து நேரடியாக கிரெடிட் செய்யப்பட உள்ளது. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் மாவட்ட செயலரையோ கணக்கு அதிகாரியையோ உடனே அணுகவும் 

Tuesday, October 29, 2013

சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் கிளைகள்- இணைந்த பொதுக்குழு கூட்டம் 28-10-2013

நவம்பரில் நடைபெறவிருக்கும் ஒலிக்கதிர் பொன்விழா நன்கொடை வசூல் மற்றும் கிளை பிரச்சனைகள் பற்றிய ஆய்வுகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

30-10-2013 அன்று நடைபெறும் உண்ணாவிரதபோராட்டத்தில் அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்துக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது

தோழர்: H.இஸ்மாயில் M.தேவராஜன் (கிளை தலைவர்கள்) அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வரவேற்புரை தோழர்:V.கிருஷ்ணமூர்த்தி (கிளைசெயலர்)   

தோழர்: R.செல்வம் (மாவட்ட தலைவர்) V.லோகநாதன் (மாநில துணை தலைவர்) இரா.ஸ்ரீதர் (மாவட்ட செயலர்) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

பொன்விழா நன்கொடையாக ஒவ்வொரு உறுப்பினரும் ரூபாய் 500/= வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைநகர் தொலைபேசி நிலையம் செயலிழந்த பிரச்சினையை உரிய மன்றத்தில் விவாதிக்க மாவட்ட சங்கத்தை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது





Monday, October 28, 2013

சம்பள பிடித்தம்

மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கு ஏற்ப 2013 பிப்ரவரி 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டவர்களுக்கு மட்டுமல்லாமல் விடுப்பில் சென்றவர்களுக்கும் சம்பள பிடித்தம் இந்த மாதம் செய்யப்பட்டு  உள்ளது .  விடுப்பில் சென்றவர்கள் இதை மறுபரிசீலனை செய்ய கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு மனு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நகலை மாவட்ட செயலருக்கும் அனுப்பும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தீபாவளி விடுமுறை

BSNL  மாத காலண்டரில்  தீபாவளி பண்டிகைக்கான  விடுமுறை 03-11-2013 என்று தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது. 02-11-2013 அன்று தான்  தீபாவளி பண்டிகைக்கான  விடுமுறை என்பதை தெரிவித்து கொள்கிறோம் . 

Sunday, October 27, 2013

இரங்கல்


நம்முடன் பணிபுரியும் தோழியர் P பச்சையம்மாள் RM கடலூர் அவர்களின் மகள்    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் இன்று (27-10-2013) மாலை கடலூரில் நடைபெறும் .


Friday, October 25, 2013

உளுந்தூர்பேட்டை கிளை பொதுக்குழு -24-10-2013





78.2 சத IDA இணைப்பிற்கான நிலுவை-CMD வேண்டுகோள்

BSNL ஊழியர்களுக்கு 01/01/2007 முதல் 09/06/2013 வரையிலான காலத்திற்கு 78.2 சத IDA இணைப்பிற்கான நிலுவையை வழங்கிட DOT செயலருக்கு BSNL CMD வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் பணிபுரியும் ஊழியர்கள்  புதிய தெம்புடன் கூடுதலாக பணி புரிந்து நிறுவன வளர்ச்சிக்கு உதவிடுவார்கள் எனவும் CMD கருத்து தெரிவித்துள்ளார்.




சென்னை சொசைட்டியில் விழாக் கால கடன்


சென்னை சொசைட்டியில் விழாக் கால கடன் ரூ.10000/-  25.10.2013 முதல் பட்டுவாடா செய்யப்படும். சனிக்கிழமையும் பட்டுவாடா உண்டு.(வட்டி16.5%) தேவைப்படும் அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து விழாக் கால கடனை பெற்றுகொள்ளவும் .
                                                          - V கிருஷ்ணமூர்த்தி 
                                                                                           RGB சிதம்பரம் 

Wednesday, October 23, 2013

போனஸ் வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் 30-10-2013


நமது அடிப்படை உரிமையான   போனசை  உடனடியாக வழங்கக்கோரி 

30/10/2013 புதன் அன்று 
நாடு தழுவிய போராட்டம் 

அகில இந்திய , மாநில மாவட்டத் தலைநகர்களில் 
உண்ணாவிரத போராட்டம்

போராடாமல் வென்றதில்லை 

போராடி நாம் தோற்றதில்லை 

Thursday, October 17, 2013

இந்த மாத GPF  பட்டுவாடா 
 
இந்த மாதம் முதல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் பேங்க் மற்றும் கனரா  வங்கி கணக்கில் ஊதியம் பெறுவோருக்கு GPF தொகை ICICI வங்கியிலிருந்து நேரடியாக இன்று  கிரெடிட் செய்யப்பட உள்ளது. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் மாவட்ட செயலரையோ கணக்கு அதிகாரியையோ உடனே அணுகவும்

குடந்தை மாவட்ட சங்க இதழ் "இயக்கம்" வெளியீட்டு நிகழ்ச்சி -15-10-2013




 



குடந்தை மாவட்ட சங்க இதழ் "இயக்கம்" வெளியீட்டு நிகழ்ச்சி 

Wednesday, October 16, 2013

இரங்கல்

நம்முடன் பணிபுரியும் நமது சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த தோழர் T செல்வராஜ் STS விழுப்புரம்    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த  இரங்கலை உரித்தாக்குகிறது. 

இறுதி நிகழ்ச்சிகள்  இன்று (16-10-2013) மாலை விழுப்புரத்தில் நடைபெறும்  .


Thursday, October 10, 2013

ஜுனாகட் மத்திய செயற்குழு முடிவின்படி ஆர்ப்பாட்டம் 09-10-2013

ஜுனாகட்  மத்திய செயற்குழு முடிவின்படி ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக 09-10-2013 அன்று நடைபெற்றது.
கடலூர் 

கடலூர் GM அலுவலத்தின் முன் மதியம் 1 மணிக்கு கடலூர் தொலைபேசி கிளை தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் மாநில துணைத்தலைவர் V லோகநாதன் SNATTA மாநில தலைவர் D சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் . கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலர் சிறப்புரையாற்றினார்.இறுதியாக தோழர் N ராஜாராம் நன்றி கூறினார்.  பெரும்பாலான தோழர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த GM அலுவலக கிளை மற்றும் தொலைபேசி கிளைகளை பாராட்டுகிறோம்  







சிதம்பரம் 
கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் -காட்டுமன்னர்கோயில் கிளைகள் கூட்டு தலைமை தோழர்கள் M.தேவராஜன் -V.கிருஷ்ணமூர்த்தி
கண்டன கோசத்தை தோழர் கிருஷ்ணமூர்த்தி நிகழ்த்தினர் .

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தோழர் S.தமிழ்மணி மாநில பொதுசெயலர் ஒ .தொ.சங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார் .50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நன்றியுரை தோழர் நாவு கூறினார் .




செஞ்சி