.

Friday, February 28, 2014

பணி ஓய்வு - பிப்ரவரி 2014

28-02-2014 அன்று பணி ஓய்வு பெறும் தோழர்கள் 

M தேவராஜன் STS காட்டுமன்னார்கோயில் 
R ராமலிங்கம் SSS  விருத்தாசலம் 
D ராமசந்திரன் RM குமராட்சி 
P ராஜேந்திரன் TM விழுப்புரம் 

ஆகியோருக்கு மாவட்ட சங்கம் தனது நெஞ்சு நிறை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது 

HIGH SPEED CYBER CAFE துவக்கம்

கடலூரில் அதிவேக இணைய தள கூடம் (HIGH SPEED CYBER CAFE ) 28-02-2014 அன்று துவக்கப்பட உள்ளது. FRONT OFFICE மற்றும் BACK OFFICE எங்கே செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் CALL CENTRE -ஐ பழைய இடத்திற்கே மாற்றி அந்த இடத்தில CYBER CAFE செயல்பட உள்ளது.  HIGH SPEED CYBER CAFE சிறப்பாக  செயல்பட நம் வாழ்த்துக்கள்  

தோழர் R ராமலிங்கம் பணி நிறைவு பாராட்டு விழா-26-02-2014

விருத்தாசலம் கிளை செயலர் தோழர் R ராமலிங்கம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா  26-02-2014 அன்று நடைபெற்றது.கிளை தலைவர் V இளங்கோவன் தலைமை தாங்கினார்.தோழர்  மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். மூத்த தோழர் ரகு , ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் K சுப்ரமணியன், சம்மேளன செயலர் G ஜெயராமன் ,மாநில துணை தலைவர் லோகநாதன், மாநில பொருளர் அசோகராஜன், மாவட்ட தலைவர் செல்வம் மற்றும் மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

Thursday, February 27, 2014

LJCM கூட்டம்

கடலூர் மாவட்ட கவுன்சில்( LJCM ) கூட்டம் வருகின்ற 05-03-2014 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது 

செயலக கூட்டம்

மாதாந்திர மாவட்ட செயலக கூட்டம் வருகின்ற 01-03-2014 அன்று மாலை 5 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகளும் அனைத்து கிளை சங்க நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

அஞ்சலி

மத்திய அரசு ஊழியர்களின்  தலைவரும்  AIRF இரயில்வே தொழிற்சங்கப்பிதாமகரும்  தொழிலாளர் மேம்பாட்டிற்காக தோழர்.குப்தாவுடன் தொடர்ந்து தோள் கொடுத்தவருமான 
                                                 தோழர்.உம்ரமால் புரோஹித் 

இன்று 27/01/2014 அதிகாலை மும்பையில் இயற்கை எய்தினார்.
அவரது மறைவு மத்திய அரசு ஊழியருக்கு பேரிழப்பு.
 மறைந்த தலைவருக்கு நமது அஞ்சலி 

Sunday, February 23, 2014

RGB தேர்தல் -கமிட்டி கூட்டம் 24-02-2014

சென்னை சொசைட்டி RGB தேர்தல் சம்பந்தமாக கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் அவசர கூட்டம் 24-02-2014 அன்று மாலை 3 மணியளவில் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும் 

இரங்கல்

விழுப்புரத்தில்   பணிபுரியும் தோழியர் S வசந்தா RM   அவர்கள்    23-2-2014 அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் நமது இரங்கலை உரித்தாக்கிக்கொள்கிறோம்.  இறுதிச்சடங்கு 24-2-2014 மாலை இருந்தை கிராமத்தில்   நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

Saturday, February 15, 2014

மாவட்ட செயலக கூட்டம் 18-02-2014

மாவட்ட செயலக கூட்டம் வருகின்ற 18-02-2014 அன்று மதியம் 2 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகளும் அனைத்து கிளை சங்க நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.  பொருள்: சென்னை சொசைட்டி RGB தேர்தல் 

Wednesday, February 12, 2014

பயிலரங்கம்

NFTE தமிழ் மாநில சங்கம் நடத்தும் லோக்கல் மற்றும் மாநில கவுன்சில் உறுப்பினர்களுக்கான பயிலரங்கம் வேலூரில் 22-02-2014 அன்று நடைபெறவுள்ளது. 

அதில் பங்கேற்பவர்களுக்கான சிறப்பு விடுப்பு அறிவிப்பும் வெளியாகிவுள்ளது.
 
இந்த பயிலரங்கில் தேசிய கவுன்சில் உறுப்பினரும் ஜார்கண்ட் மாநில செயலருமான தோழர்  மகாவீ ர் சிங், சம்மேளன செயலர் தோழர் G ஜெயராமன் ,அகில இந்திய அமைப்பு செயலர் தோழர் S S கோபாலகிருஷ்ணன் , தோழர் ஆர் கே , தோழர் முத்தியாலு , தோழர் தமிழ்மணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.  

பொதுமேலாளர் (நிர்வாகம் ) திருமதி இராதா மற்றும் வேலூர் பொதுமேலாளர் திரு C  A ரெட்டி ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
திண்டிவனம் தோழியர்  J சொக்கம்மாள் பணி நிறைவு பாராட்டு விழா