.
Thursday, December 31, 2015
செய்திகள்
CORPORATE அலுவலகம் முதல் கன்னியாகுமரி வரை
BSNLலில் SERVICE WITH A SMILE
SWAS என்னும் 100 நாள்
இன்முக சேவைக்காலத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
--------
MRS மருத்துவத்திட்டத்தை மறு ஆய்வு செய்யும் குழுவின் கூட்டம் 08/01/2016 அன்று டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
---------
தேக்க நிலை STAGNATION பற்றி 11/01/2016 அன்று சங்கங்களுடன்
BSNL நிர்வாகம் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
--------
தமிழக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது BSNL சேவையைச் சீரமைக்க
சிறப்பு நிதி உதவி அளித்திட நமது இலாக்கா அமைச்சரை
மத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
--------
பதவிப்பெயர் மாற்றக்குழுவின் பரிந்துரைகள் BSNL நிர்வாகக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு வாரிய ஒப்புதலுக்காக
BOARD APPROVAL அனுப்பப்பட்டுள்ளது.
-----------
01/01/2016 முதல் 3.5 சதம் முதல் 5 சதம் வரை
IDA உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
---------
JTO பதவியில் தற்காலிகப் பதவி உயர்வு வகிக்கும் TTA தோழர்களுக்கு Phase -I பயிற்சி வகுப்பு சென்னை RGMTTCயில் 04/01/2016, 11/01/2016 மற்றும் 18/01/2016 ஆகிய தேதிகளில் துவங்குகின்றன.
Wednesday, December 30, 2015
Tuesday, December 29, 2015
TMTCLU பொதுக்குழு-கடலூர்
இன்று 29-12-2015 கடலூர் NFTE
மாவட்ட சங்க அலுவலகத்தில் TMTCLU பொதுக்குழு
மாவட்டத் தலைவர் M.S.குமார் தலைமையில் நடைபெற்றது. கடலூர் ஒப்பந்த ஊழியர்கள் பலரும் கலந்து
கொண்டனர். மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு துவக்க உரையாற்றினார். பொதுக்குழுவில் கடலூர் புதிய TMTCLU
கிளை துவக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிர்வாகிகள் பட்டியலை மாவட்டத்தலைவர் தோழர் M.S.குமார் முன்மொழிய தோழர் S.அண்ணாதுரை
வழிமொழிய அனைவருடைய முழுமனதுடன் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். NFTE மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், TMTCLU மாநிலஉதவிசெயலர்
தோழர் A.சுப்ரமணியன், NFTE மாவட்ட உதவிசெயலர் தோழர் D.குழந்தைநாதன், TMTCLU மாவட்ட அமைப்பு
செயலர் தோழர் V.முத்துவேல் மற்றும் TMTCLU மாநிலபொதுச்செயலர் தோழர் R.செல்வம்
ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினர். ஒப்பந்த
ஊழியர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டது மிகவும் சிறப்பாக அமைந்தது.
புதிய
கடலூர் TMTCLU கிளையின் நிர்வாகிகள்,
தலைவர்: தோழர்
P.சுந்தர்ராஜ்
உதவித்தலைவர்கள்: தோழர் P.ரவி
தோழர்
K.வசந்தராஜன்
செயலர்: தோழர்
R.பன்னீர்செல்வம் TM/CDL
உதவி செயலர்கள் : தோழர் M.மணிகண்டன்
தோழர்
M.சுரேஷ்
தோழர்
P.வீரமணி
தோழர்
K.தீபன்ராஜ்
பொருளாளர்: தோழர் S.பாலகணபதி
உதவிப்பொருளர் : தோழர் கார்த்திகேயன்
அமைப்புசெயலர்கள் : தோழர் P.விஜய்
தோழர்
V.ஜான்சன்
தோழர்
M.மாசிலாமணி
தோழர்
K.சந்திரசேகரன்
புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்
Sunday, December 27, 2015
Thursday, December 24, 2015
வருந்துகிறோம்!!
நம்முடன் பணியாற்றி ஓய்வு பெற்ற பண்ருட்டி தோழர். A.தங்கராசு,
TM அவர்கள் உடல்நலக்குறைவினால் இன்று 24-12-2015
அதிகாலை 4.00மணிக்கு அவரது சொந்த ஊரான திருவதிகையில் இயற்கை எய்தினார். அவரது
பிரிவால் வாடும் தோழர்தம் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் நமது ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம்.
தோழர் கிளைத்தலைவராக சிறப்பாக பணியாற்றி பண்ருட்டி பகுதியில் சங்க
வளர்ச்சிக்கு மிகவும் பெருந்துணையாக விளங்கியுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
தோழரின் இறுதி சடங்கு இன்று மாலை 4-மணிக்கு
திருவதிகையில் நடைபெறும்
Wednesday, December 23, 2015
--- இரும்பின்
இனிப்பு ---
இரும்பு என்றதும் சேலம் எஃகு தான் நினைவுக்கு வரும். சேலம் என்றதும்
மாங்கனியின் இனிப்பு நாவில் ஊறும். நமது சேலம்
தோழர்களும் எஃகின் உறுதியையும் மாங்கனிச் சுவையையும் ஒன்றாய்
வாய்க்கப்பெற்றவர்கள்.
தண்ணீர் மட்டுமா மலையிலிருந்து பள்ளம் நோக்கிப்பாயும்? கனிவும்
கருணையும் தான் என உலகறிய உரத்துக்கூறி சேலத்திலிருந்து நமது தோழர்கள் நிவாரணப்
பொருள்களைச் சுமந்து வந்தனர்.
சேலம் மாவட்ட செயலர் தோழர் C.பாலகுமார், மாவட்ட தலைவர் தோழர் S.சின்னசாமி,
மாநில துணைத்தலைவர் தோழர் G.வெங்கட்ராமன், மாவட்ட உதவிசெயலர் தோழர் G.ஜெயக்குமார்,
மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R.மணி மற்றும் GMO கிளைசெயலர் தோழர் K.பாலசுப்ரமணியன் ஆகியோர் வந்தனர். நமது நிர்வாகம் வாகனம் தந்து
உதவியது. பொதுத்துறையான நமது BSNL ஒவ்வொரு பகுதி அதிகாரிகளும் புதிய முன்னுதாரணம் படைத்துவருகின்றனர்.
நாம் பெருமைபடுகிறோம். நன்றி பாராட்டுகிறோம்.
தங்கள் அன்போடும் பெரு உள்ளத்தோடும் ரூ.85,000/-மதிப்புள்ள
பொருட்களை நூறு குடும்பத்திற்கு தரும் வகையில் எடுத்து வந்தனர்.
மலையிலிருந்து பள்ளத்திற்குப் போவது தானே இயல்பு. நமது தோழர்களும்
அதையே பரிந்துரைத்தனர். தாழ்வான பகுதியான கடலூர் மஞ்சகுப்பம் வண்ணான்குட்டை
பகுதிக்கு தோழர்களை அழைத்து சென்றோம்.
எண்பது குடும்பங்களுக்கு தோழர்கள் நிவாரணப் பொருள்களை வழங்கி மன நிறைவடைந்தனர்.
நிறைவு நம்மால் உதவ முடிந்ததே என்பதற்குத் தானே தவிர, நிறைவாகக் கொடுத்தோம் என்ற
எண்ணத்தில் அல்ல. சென்று பாருங்கள் உங்களால் முடிந்த அருகில் உள்ள இடங்களை.
பெருமழையின் பாதிப்பு தொடர்வதை உணரமுடியும்.
அப்பகுதியை சார்ந்த மேலும் இருபது நபர்களுக்கு நமது தொழிற்சங்க
அலுவலகத்தில் மூத்தத் தொழிற்சங்க தலைவர் தோழர் S.தமிழ்மணி அவர்களின் தலைமையில்
வழங்கினோம்.
இடம் பெரிதுண்டு நெஞ்சில், நமது பணி தொடரும்.
ஒத்துழைத்த தோழர்களுக்கு நன்றி!
78.2 சத IDA
இணைப்பு வேண்டி
ஆர்பாட்டம்
BSNL அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒய்வு பெற்ற மூத்தத் தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வேண்டி நாடு தழுவிய கண்டன ஆர்பாட்டம் கடலூர் GM அலுவலக வாயிலில் 22-12-2015 மதிய உணவு
இடைவேளையில் நடைபெற்றது. கூட்டமைப்புத்தலைவரும் நமது மாவட்டச் செயலருமான
தோழர்.இரா.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பில் மாநில
அமைப்புசெயலர் தோழர் N.அன்பழகன், கூட்டமைப்பு கன்வீனர்
BSNLEU மாவட்ட செயலர் தோழர்.K.Tசம்பந்தம், SNEA மாவட்ட
செயலர் தோழர்.P.சிவக்குமரன் , AIBSNEA சார்பில் தோழர் K.தனசேகர்,
ஓய்வுபெற்றவர்கள் சங்கத்தின் சார்பில் திரு.சந்திரமோகன், முத்துகுமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினர். SNEA மாவட்ட தலைவர் தோழர் C..பாண்டுரங்கன் போராட்ட கோஷமிட்டார். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற
தோழர்கள் நிறைவாக கலந்து கொண்டு 78.2 சத IDA இணைப்புக்கான ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கினர். தோழர்களுக்கு நன்றி.
Subscribe to:
Posts (Atom)