.
Tuesday, February 28, 2017
Sunday, February 26, 2017
27.2.2016
நடைபெறும் ( Works Committee ) பணிக்குழு கூட்டத்திற்கு நிர்வாகத்திடம்
கொடுக்கப்பட்ட கடிதம், மற்றும் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளின் தொகுப்புக்
கடிதம்.
To
The
Sr. General Manager,
B.S.N.L..,
Cuddalore 607 001
Sir,
Sub:
Works Committee Meeting – submission of new items
For discussion –
reg
***
*** ***
Kindly find herewith enclosed the
list of new items for discussion in the newly formed Works Committee Meeting
please.
At this juncture we thankfully
recollect many settled items in the previous works committee meetings under
your Chairmanship for improvement of services of BSNL. We hope that the ensuing meetings would also
be more purposeful in taking the BSNL services to a newer heights and thereby
augmenting the revenue of the Company.
Also we would like to place on
record our sincere appreciation for the initiatives taken by the administration
in conducting more and more Melas. We hereby reassure our cooperation with the
administration in all its initiatives for the growth of the BSNL.
Looking forward for a frank
discussion in the newly formed Works Committee we hereby submit the items, Sir,
With
kind regards,
Yours
faithfully,
Encl: Works Committee items
(R. SRIDHAR.)
Copy
to District Secretary
1.
The
AGM (Admn) CDL for infmn
2.
The
Circle Secretary, NFTE, CNI
25.02.2016
கடலூரில் நடைபெற்ற
TMTCLU மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்
1. சமவேலைக்கு சமஊதியம் வழங்க
கோரி AITUC சங்கத்தின் சார்பாக நடைபெறும் கையெழுத்து
இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவது. இயக்கத்தினை மார்ச் 15-க்குள்
முடிப்பது எனவும்,
2. சமவேலைக்கு சம உதியத்தை
அமுல்படுத்தகோரி ஏப்ரல் 11-ல் சென்னையில் நடைபெறவுள்ள
பேரணியில் பெருந்திரளாக கலந்து கொள்வது எனவும்,
3. TMTCLU கிளைச் சங்கங்கள்
உறுப்பினர்களிடம் சந்தாவை வசூல் செய்து மேல்மட்டங்களுக்கு பகுதிப்பணம்
அனுப்பப்படவேண்டும்.
4. ESI கார்டு பெறாத ஒப்பந்த
ஊழியர்கள் உடனடியாக பெறுவதற்கு கிளைச் சங்கங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.
5. பணிநீக்கம் செய்யப்பட்ட கடலூர்
தோழர்கள் J.கந்தன், இராஜேந்திரன், இருவரும் வேலைக்கு
எடுத்துக் கொள்ளப்படவேண்டும். மேலும் காலதாமதம் ஏற்பட்டால் தொழிற்சங்க
நடவடிக்கையில் இறங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
--TMTCLU
மாவட்ட சங்கம்
Friday, February 24, 2017
Thursday, February 23, 2017
Wednesday, February 22, 2017
AITUC
கையெழுத்து இயக்கம்
தமிழகம்
முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக எவ்வித
பணிப்பாதுகாப்பு இல்லாமல் குறைந்த உதியத்தில், அதிக கூடுதல் வேலை பளுவுடன்
பணியாற்றிவரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர
ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவர்களை
நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், தமிழக முதலமைச்சருக்கு தமிழக AITUC சார்பில்
கோரிக்கை மனு அளித்திடவுள்ளது. அதற்கான கையெழுத்து இயக்கத்தை கடலூர் மாவட்டத்தில்
சிறப்பாக நடத்திடவும், இதற்காக கடலூர் மாவட்டத்தில் கருத்தரங்கம் நடத்துவது
குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூர் NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில் 21.02.2017
மாலை 5.00மணியளவில் தோழர் S.தமிழ்மணி அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. கடலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலரும், மாநில
நிர்வாகக்குழு உறுப்பினருமான தோழர் T.மணிவாசகம், கடலூர் AITUC மாவட்ட செயலர் தோழர்
துரை, CPI கடலூர் நகரசெயலர் தோழர் குளோப், தோழர் மகாதேவன், AITUC கடலூர் மாவட்ட
நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் V.இளங்கோவன், உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க தோழர்
ஜோதி, மின்வாரிய பணியாளர் சங்கத் தோழர் இராஜேந்திரன், TMTCLU மாநில இணைப்பொதுசெயலர்
தோழர் R.செல்வம், TMTCLU மாவட்ட செயலரும், AITUC கடலூர் மாவட்ட நிர்வாகக்குழு
உறுப்பினருமான தோழர் G.ரெங்கராஜூ, TMTCLU மாவட்ட தலைவர் தோழர்
MS.குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். NFTE கடலூர் மாவட்ட செயலர்
தோழர் இரா.ஸ்ரீதர் உட்பட மாவட்ட, கிளைத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
Tuesday, February 21, 2017
பணிக்குழுக்கூட்டம்(WORKS COMMITTEE)
தோழர்களின் கவனத்திற்கு
வருகின்ற 27.2.2017 திங்கள்கிழமை மாவட்ட பணிக்குழுக்கூட்டம்(WORKS
COMMITTEE) நடைபெறவுள்ளது.
பணிக்குழுக்கூட்ட உறுப்பினர்கள்:
1.
இரா.ஸ்ரீதர்-
கடலூர்
2.
P.M.K.D.பகத்சிங்-பெண்ணாடம்
3.
K.ஜெய்சங்கர்-நெய்வேலி
டவுன்ஷிப்
4.
S.மணி – கள்ளக்குறிச்சி
5.
ரவி
– விழுப்புரம்
6.
S.சண்முகம் –
விழுப்புரம்
கிளைச்செயலர்கள் தங்கள் பகுதியிலுள்ள இலாக்கா பணி சம்மந்தப்பட்ட
பிரச்சனைகளை தொகுத்து உடனடியாக மாவட்ட செயலரிடம் தெரிவிக்கவும்.
Monday, February 20, 2017
வாழ்த்துகிறோம்!!
தமிழ்மாநில தொலைத்தொடர்பு வட்டத்தில் கடலூர் தொலைத் தொடர்பு மாவட்ட விற்பனைப்பிரிவு
(Sales Team) 2016-ம் ஆண்டு மூன்று காலாண்டு தொடர்ந்து
முதல் இடத்தை பெற்றுள்ளது. மாநில நிர்வாகம் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை கௌரவித்துள்ளது.
நமது மாவட்ட முதன்மைப் பொதுமேலாளர் திரு.மார்ஷல் ஆண்டனி லியோ அவர்கள் நமது
மாவட்ட விற்பனை பிரிவில் பணிபுரியும் அனவருக்கும் சான்றிதழ் வழங்கியும், ரொக்கப்பரிசு
வழங்கியும் கௌரவித்தார்.
கடலூர் மாவட்ட சங்கம் கடலூர் விற்பனைபிரிவில் பணிபுரியும் அனைவரையும்
வாழ்த்துகிறது.
Saturday, February 18, 2017
பிப்ரவரி 13, 14 தேதிகளில்
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற
NFTE மத்திய
செயற்குழுத் தீர்மானங்கள்
பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பு (எண் PMO
ID No. 4542267//PMO/2016- ESI தேதி 30-12-2016)
BSNL லின்
தற்போதைய நிலை பற்றி DOT யிடம் கோரிய விவர அறிக்கை லட்சக்கணக்கான ஊழியர்களிடம் நியாயமான அச்ச உணர்வையும் பரபரப்பையும் எழுப்பியது மட்டுமல்ல கடும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நிதி ஆயோக் அமைப்பு பொதுத் துறை நிறுவனங்களை விற்பது அல்லது உரிமை மாற்றித் தருவது என்ற பரிந்துரை அளித்துள்ள பின்புலத்தில் பொதுத்துறை நிறுவனங்களான BSNL
மற்றும் ITI
பற்றிப் பிரதமர் அலுவலகம் கோரியுள்ள விவரம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. BSNL ஐ விற்பது அல்லது உரிமைகளை மாநிலங்களுக்கு
மாற்றித்
தருவது
என்ற
நிதி
ஆயோக்
அமைப்பின்
பரிந்துரை
முற்றிலும்
தேவையற்ற
ஒன்றேயாகும்.
ஏனெனில், BSNL நிறுவனம் தற்போது மறுமலர்ச்சி அடையும் பாதையில் நடைபோடுவது மட்டுமல்ல, ஆப்பரேஷனல் லாபம் அடைந்துள்ளது. இதனை மாண்புமிகு பாரதப் பிரதமரும் தமது 2016
சுதந்திர
தின உரையில் பெருமையுடன் குறிப்பிடவும் செய்தார். BSNL நீடிப்பது என்பது தேச மக்களின் நலம் சார்ந்தது, காரணம் BSNL
நிறுவனமே
தேசத்தின் மூலைமுடுக்கு வரை தொலைத்தொடர்பு சேவையை நாட்டு மக்களுக்கு நியாயமான குறைந்த விலையில் வழங்கி வருகிறது. மேலும் தேசத்தின் பாதுகாப்பு நலன் சார்ந்தும் அது மிகவும் அவசியமானது. எனவே நீதி ஆயோக் அமைப்பின் பரிந்துரையை தேசிய செயற்குழுக் கூட்டம் வன்மையாக எதிர்க்கிறது.
எனவே நமது மத்திய சங்கம் இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்திட BSNL அசோசியேஷன்கள் / சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு மூலம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என முடிவு செய்கிறது. மேலும் நமது மத்திய சங்கம் மற்ற சங்கங்களின் ஆதரவைத் திரட்டி ஒருங்கிணைக்கவும் பணிக்கிறது.
2. செல்கோபுரம் துணை நிறுவனம்
செல்கோபுரம் துணை நிறுவனம் அமைக்கத் துடிக்கும் அரசின் திட்டம்
குறித்து தேசிய செயற்குழு ஆழமாக விவாதித்தது. இம்முயற்சி
BSNL நலனிற்குக் கடுமையான கேட்டினை விளைவிக்கக்கூடியது, எனவே இதனை எதிர்ப்பது என தேசிய செயற்குழுக் கூட்டம் முடிவுசெய்கிறது. மற்றொரு பொதுத்துறை நிறுவனமான MTNL ல் இத்தகைய துணைக்கம்பெனி உருவாக்கப்பட்டது. அது தனியார்மயமாக்குவதற்கான
முன்னேற்பாடாகவும், அங்கு நிலவும் நிச்சயமற்ற பணிநிலைமைகளும்
அதனால் ஊழியர்களுக்கு ஏற்படும் பாதகங்களும் நம் முன் உள்ள நல்ல உதாரணம்.
எனவே,
எல்லா சங்கங்களையும் ஒன்று திரட்டி அரசின் டவர்
கம்பெனி உருவாக்க முயற்சியை முறியடிக்கப் போராடுவது என இக்கூட்டம் முடிவுசெய்கிறது, முதற் கட்டமாக, பாரத பிரதமருக்கு அனைத்து ஊழியர்களும் ஒரு குறிப்பிட்ட நாளில் அஞ்சல் அட்டை இயக்கம் நடத்துவது எனவும் முடிவு செய்கிறது.
கம்பெனி உருவாக்க முயற்சியை முறியடிக்கப் போராடுவது என இக்கூட்டம் முடிவுசெய்கிறது, முதற் கட்டமாக, பாரத பிரதமருக்கு அனைத்து ஊழியர்களும் ஒரு குறிப்பிட்ட நாளில் அஞ்சல் அட்டை இயக்கம் நடத்துவது எனவும் முடிவு செய்கிறது.
3.
ஊதியமாற்றம்
ஊதிய மாற்றத்திற்கான சதீஷ்சந்திரா கமிட்டி அறிக்கை இன்னும்
வெளியிடப்படவில்லை. ஊதிய மாற்றத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை
DPE இன்னும் வெளியிடவில்லை. அங்கீகரிக்கப்பட்ட
இரண்டு சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தைக்
குழுவை BSNL நிர்வாகம் இன்னும் அமைக்கவில்லை. இந்தப் பின்னணியில் தேசிய செயற்குழு ஊதிய மாற்றப் பிரச்சனையை
ஆழ்ந்து விவாதித்தது.
• ஊதிய மாற்றத்திற்கான DPE வழிகாட்டு நெறிமுறைகளை
வெளியிட
• BSNL
நிர்வாகம்
ஊதிய மாற்றத்திற்கான
பேச்சுவார்த்தைக் குழுவை விரைவில் அமைத்திட
• ஊதிய
மாற்றத்திற்கான சதீஷ்சந்திரா கமிட்டி அறிக்கையை வெளியிடக் கோரியும்
தோழமைச் சங்கங்களுடன் இணைந்து கவன ஈர்ப்பு நாள் இயக்கம் நடத்துவது
என இச்செயற்குழு முடிவு செய்கிறது.
4.
போனஸ் ( PLI )
8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு போனஸ் பெற்றுத் தந்து, போனஸ் பெற்றுத் தந்ததன் மூலம் தொழிலாளிகளுக்கு
NFTEஅளித்த வாக்குறுதியை மெய்ப்பித்த மத்திய சங்கத் தலைமையை இச்செயற்குழு
மனதாரப் பாராட்டுகிறது. 2015 – 16 ம் ஆண்டிற்கான PLI போனஸையும் விரைவாகப் பெற்றுத்
தர கோருகிறது.
5.
பென்ஷன் – பென்ஷன் பங்களிப்பு
BSNL ன் நிதி ஸ்திரத் தன்மைக்கு அச்சுறுத்தலாக நீடித்த பென்ஷன் பங்களிப்பு 60 : 40 பிரச்சனையில் விடாப்பிடியாக முயன்று,
பிரதமர் அலுவலகத்திற்கும் பிரச்சனை எடுத்துச் சென்று (BSNL
ல்
இணைந்த DOT
ஊழியர்களின் ஓய்வூதிற்கான 60 : 40) பென்ஷன்
பங்களிப்பை ரத்து செய்த மத்திய சங்கத் தலைமைக்கு
இச் செயற்குழு பலமான பாராட்டுதல்களை உரித்தாக்குகிறது.
இச் செயற்குழு பலமான பாராட்டுதல்களை உரித்தாக்குகிறது.
ஓய்வுபெற்றோர்களுக்கு
மறுக்கப்பட்ட 78,2 IDA அடிப்படையிலான பென்ஷன் நிர்ணயத்தை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குப்
பெற்று தந்தமைக்காகவும் மத்திய சங்கத்தைப் பாராட்டுகிறது.
6.
வீட்டுவாடகைப்படி 78.2 IDA
ல்
78.2 IDA அடிப்படையில் வீட்டுவாடகைப்படியைப் பெற்றுத்
தந்தமைக்காகவும் மத்திய தலைமையைப் பாராட்டுகிறது.
7.
LICE பதவி உயர்வு
JE மற்றும் TT கேடர் இலாக்கா பதவி உயர்வு காலிஇடங்களில்
சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு பெற 15 சதவீத இடங்களை
ஒதுக்கீடு செய்ய இந்த தேசிய செயற்குழு கோருகிறது.
8.
வணிகப்பகுதி உருவாக்கம்
வணிகப் பகுதி உருவாக்கத்தின்
போது நிர்வாகம் சங்கங்களோடு கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் போக்கை இச்செயற்குழு கண்டித்து
தனது கவலையைப் பதிவு செய்கிறது.
9.
நான்காவது சனிக்கிழமை விடுமுறை
வங்கியில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போல BSNL
நிறுவனத்திலும்
மாதத்தின் 4வது சனிக்கிழமையை விடுமுறையாக அறிவிக்க இந்தச் செயற்குழு கோருகிறது.
Subscribe to:
Posts (Atom)