.
Friday, June 30, 2017
Thursday, June 29, 2017
பணி
ஓய்வு நாள் சிறக்க வாழ்த்துகிறோம்!!
இன்று 30.6.2017 பணி ஓய்வு பெறும்
திரு. K.சமுத்திரவேலு DGM ADMN/ CFA
கடலூர்
தோழர் K.தக்ஷ்ணா மூர்த்தி TT
விழுப்புரம்
தோழர் L.சையத் சம்சுதீன் TT
கள்ளக்குறிச்சி
தோழர் R.கஜேந்திரன் TT விழுப்புரம்
தோழர் A.அண்ணாமலை OS கடலூர்
தோழர் T. காசிராஜன் OS சிதம்பரம்
தோழர் V.முனியாண்டி TT கடலூர்
தோழர் M.திருநாவுக்கரசு TT
விழுப்புரம்
தோழர் M.அனந்தராஜ் JEவிழுப்புரம்
தோழர் K. தனபால் TT விருத்தாசலம்
ஆகியோருக்கு
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்....
அன்புள்ள தோழர்களே வணக்கம்,
அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு
சம வேலைக்கு சம ஊதியம், 480 நாட்கள் பணி புரிந்த ஒப்பந்த
ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC சங்கத்தின் சார்பில் சென்னையில் மாநிலம் தழுவிய
பேரணி ஜூலை 28ந் தேதி
நடைபெறவுள்ளது. ஆகவே தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஓப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பாக
(TMTCLU
)
சார்பாக திரளான தோழர்கள், தோழியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று
தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
தோழமையுடன்
R.செல்வம்
தமிழ் மாநிலச் செயலர்
Tuesday, June 27, 2017
Monday, June 26, 2017
வருந்துகிறோம்...
தோழர் A.செல்வகுமார் TT புதுச்சத்திரம் அவர்களின் தாயார்
பார்வதியம்மாள் அவர்கள் இன்று (26.6.2017) மாலை 3.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த
வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அம்மையாரது பிரிவால் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும்
மாவட்ட சங்கத்தின் சார்பில் இரங்கலை உரித்தாக்குகிறோம்.
அம்மையாரது இறுதி நிகழ்ச்சி நாளை மாலை 4.00
மணிக்கு புதுச்சத்திரம் ரயிலடி அருகில் உள்ள
அவரது இல்லத்தில் நடைபெறும்.
Saturday, June 24, 2017
Tuesday, June 20, 2017
நா காக்க…
”
நா
காக்க
என்று
பேருந்தில்
எழுதி
வைத்திருக்கிறீர்களே,
அது
ஓட்டுனருக்கா
அல்லது
நடத்துனருக்கா?” -- கேட்டது,
அந்த நாள் சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர்
அந்த நாள் சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர்
”நா உள்ள எல்லோருக்கும்” – இது பதில்.
சொன்னவர் அன்றைய தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா.
சொன்னவர் அன்றைய தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா.
நாமும் அதைத்தான் நினைவூட்ட விரும்புகிறோம்
எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளால்
அல்ல
. எனவே பணிவோடு வேண்டுகிறோம்
வேலி தாண்டிய வெள்ளாடாக வேண்டாம்.
நாவினால் சுட்ட வடு ஆறாது. அப்படி ஆறாது இன்னும் பசுமையாக இருக்கிறது, பிதாமகன் குப்தாவைப் பற்றி, பந்தலில் ஜூஸ் கொடுத்த அஞ்சா நெஞ்சன் ஆர்.கே.-வைப் பற்றி, அறிவுஜீவி என்றெல்லாம்… … … இப்படி எத்தனை எத்தனையோ. . . பசுமையாக . . .இன்று சனீஸ்வரன் (Saturn)
’ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் – கம்யூனிஸ்ட் என்னும் பூதம்’ இப்படித் துவங்குகிறது மாமேதை மார்க்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.
இன்றோ சிலரை Saturn
(சனி)
பிடித்து
ஆட்டுகிறது,
பயம் தேவையில்லை, சனி எல்லோருக்கும்
கெடுதல்
செய்யாது.
பொங்கு
சனி
என்பார்கள்
நன்மை
விளையும்போது
10
ஆண்டுகளாக
பதவி
உயர்வு
மறுக்கப்பட்ட (STR) RM தோழர்களுக்கு விடியல் பிறக்கட்டும்! நன்மை கிடைக்கட்டும்!
சொந்த வீட்டில் யார் எந்த அறையில் இருப்பது, உட்காருவது, . . . . . .
என்பதை எல்லாம் பக்கத்து வீட்டுக்காரர்
நாட்டாண்மை
செய்யலாமா?
வேண்டாம், வேலூரில் கட்டிய ஒற்றுமை பிம்பம் அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே,
நீரடித்து நீர் விலகாது, கோழி மிதித்துக் குஞ்சு சாகாது,
எதிர்காலக் கடமைகளிலிருந்து
இயக்கத்தைத்
திசை
திருப்பல்
வேண்டாமே! கடமை பெரிதுண்டு!
வேண்டாமே! கடமை பெரிதுண்டு!
Saturday, June 17, 2017
Thursday, June 15, 2017
கவன
ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம்-14.6.2017
கடலூரில் மூன்றாவது
ஊதியக்குழுவிற்கான பேச்சுவார்த்தை நடத்திட ஊழியர் தரப்பை உள்ளடக்கிய கமிட்டி
அமைத்திடவும், 15% ஊதிய நிர்ணயம் செய்திட BSNL-க்கு வழிக்காட்டிட DPE/DOTயை வலியுறுத்தி National
Forum of BSNL unions and Association சார்பில் ஜூன் 14-ந்தேதி கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் மாவட்டத்தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில், வெளிபுறப்பகுதி
கிளைச்செயலர் தோழர் E.விநாயகமூர்த்தி கண்டன
கோஷமிட, மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் V.லோகநாதன்,
N.அன்பழகன், V.இளங்கோவன் மற்றும் SEWA தோழர்
சுதாகர்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர் விளக்கவுரையாற்றினார்.
தோழர்கள், தோழியர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்டம்
தோறும் உள்ள கிளைகளில் கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெய்வேலி கிளை
Wednesday, June 14, 2017
Tuesday, June 13, 2017
நமது BSNL நிறுவனத்தின்......!
பணத்தை...! வீண் செலவு செய்வதைக் கண்டித்து...!
மத்தியஅரசின்
போக்கைக் கண்டித்து,
ஜூன் 12-ல் நடைபெற்ற மாவட்டம் முழுவதும்
அனைத்து BSNL அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்டம்
முழுவதும் நடைபெற்றது.
கடலூர்
கள்ளக்குறிச்சி
சிதம்பரம்
பண்ருட்டி
நெய்வேலி டவுன்ஷிப்
Saturday, June 10, 2017
பணத்தை...! வீண் செலவு செய்வதைக் கண்டித்து...!
ஜூன் 12-ல்
மாபெரும்
கண்டன ஆர்ப்பாட்டம்
அருமைத்
தோழர்களே...! தோழியர்களே...!! வணக்கம்.,
மத்தியில்
ஆளும் பாஜக (BJP) அரசு ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு காலம் நிறைவடைந்து
விட்டது. இந்நிலையில் மத்திய அரசு தன்னுடைய மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் பற்றி
"SABKA SAATH SABKA VIKAS SAMMELAN" அனைவரும் இணைந்து
அனைவரின் வளர்ச்சிக்காக செயல்படுவோம் என்ற முறையில் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்திட
திட்டமிட்டு., கூட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கிறது. கூட்டங்கள்
நடத்துவது அவர்களின் உரிமை என்ற அடிப்படையில் நாம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால்
அந்தக் கூட்டங்களை BSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் செலவில்
நடத்துவது என்ற மத்திய அரசின் முடிவு எந்த வகையில் நியாயம்...!
எந்தவிதத்திலும்...,
நியாயம் இல்லாத இம் முடிவை அப்படியே ஏற்று., BSNL கார்ப்பரேட் அலுவலகம் 24-05-2017
தேதியிட்ட CA/Mktg./33-1/2017 என்ற உத்திரவு எண்
கொண்ட கடிதத்தை வெளியிட்டுள்ளது.
இந்த கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள்:
மத்திய
அரசின் மூன்றாண்டு கால நிறைவை ஒட்டி நாடு முழுவதும் "SABKA
SAATH SABKA VIKAS SAMMELAN" அனைவரும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக
செயல்படுவோம் என்ற முறையில் 27-05-2017
முதல் 15-06-2017 வரை 583 இடங்களில் சாதனை விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த 583
இடங்களில் தமிழகத்தில் 5 இடங்கள் உள்ளிட்ட (கரூர்,
கிருஷ்ணகிரி, திருச்சி நகரம், திருச்சி ஊரகம் மற்றும் தேனி) 42 இடங்களில்.,
இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு BSNL-க்கு
வழங்கப்பட்டுள்ளது.
இதர 541
இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான பொறுப்பை மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது. 42 இடங்களில் நடைபெறும் மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டங்களுக்கு BSNL நிறுவனம் தான் செலவு செய்ய வேண்டும். BSNL நிறுவனம் 42
இடங்களில் நடைபெறும் கூட்டத்திற்கு செலவு
செய்ய வேண்டும் என்றால் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்திட வேண்டும்.
மத்திய
ஆட்சியாளர்களின் பொதுத்துறை விரோத மற்றும் தனியார் ஆதரவு கொள்கைகளின் காரணமாக கடந்த
சில ஆண்டுகளாக BSNL நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை
சந்தித்து வந்த நிலையில்., ஊழியர் மற்றும் அதிகாரிகள் இணைந்து
செயல்படுத்திய பல திட்டப் பணிகளின் காரணமாக BSNL நிறுவனம் லாபத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. BSNL-ன் நிதி
நிலைமையை காரணம் காட்டி ஊழியர்களின் 3-வது ஊதிய மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தர மறுக்கின்ற அரசாங்கம் இப்படிப்பட்ட செலவுகளை BSNL
உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் மேல் சுமத்துவது என்பது அரசின் அதிகாரத்தை
தவறாக பயன்படுத்துவதாகும்.
BSNL
பணத்தில் இது போன்ற அரசின் சாதனை விளக்க கூட்டங்களை நடத்துவதை கண்டித்து அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பாக 12-06-2017
அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.
போராட்டவாழ்த்துக்களுடன்...!
தோழமையுள்ள...!
மாவட்ட
செயலர்கள்
BSNLEU,
NFTE, SNEA, AIBSNLEA, TEPU, SEWA, PEWA
கடலூர்
மாவட்ட சங்கங்கள்
Subscribe to:
Posts (Atom)