.

Friday, September 28, 2018


வருந்துகிறோம்

        நமது பொது மேலாளர் அலுவலகத்தில் பணி புரியும் தோழர் T.பாலாஜி SLM/CDL அவர்களின் தாயார் நேற்று (28-09-2018)  மாலை இயற்கை  எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
       அன்னாரின் பிரிவால் அவரது குடும்பத்தாருக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

       அன்னாரின் இறுதி ஊர்வலம்  இன்று மாலை (29-09-2018) ஆலப்பாக்கம் அருகிலுள்ள பள்ளிஓடை கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்று நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
                                                                                         By
மாவட்டச் சங்கம்,
கடலூர்
NFTE
உளுந்தூர்பேட்டை கிளைச் சங்கம்.

26-09-2018  அன்று   தோழர் A.ராமன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா  தோழர் P.முத்துவேல்  தலைமையில் நடைபெற்றது. துவக்கவுரையாக  மாநில துணைத் தலைவர் தோழர் V.லோகநாதன்  உரையாற்றினார்.   மாநில உதவிச் செயலர் தோழர் P. சுந்திரமூர்த்தி, TMTCLU  மாநில பொதுச் செயலர் தோழர் R.செல்வம், மாவட்டச் செயலர் தோழர்  இரா.ஸ்ரீதர் மற்றும் மாவட்ட . கிளைச் சங்க  பொறுப்பாளர்கள்  வாழ்த்துரை வழங்கினார்கள்.
            சிறப்புரையாக மாநில துணைத் தலைவர் தோழர் P.காமராஜ் சம்மேளனச்  செயலர்   தோழரை பாராட்டியும், நமக்கு வரும் PAY COMMISSION  பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.
        இறுதியாக  தோழர் N.சேகர் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.


        பணி ஓய்வு பாராட்டு கூட்டத்தினை சிறப்பாக நடத்திய  மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் K.அம்பாயிரம் உள்ளிட்ட உளுந்தூர்பேட்டை கிளைக்கு வாழ்த்துக்கள்.


மாவீரன் பகத்சிங்
மாவீரன் பகத்சிங் பற்றி பல்வேறு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை நமது தோழர் பட்டாபி அவர்கள் http://www.pattabiwrites.in/ என்ற இணையதளத்தில் எழுதியுள்ள ”பகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி?” கட்டுரைத்தொகுப்பு.
இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச சமூகம் குறித்த வேட்கை பரவலாக அறியப்பட்டவைதான். அவரின் தியாக மரணம் இன்றும் ஆதர்சனமாக இளைஞர்களை கவ்விப்பிடிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. லாகூர் சதிவழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மரணதண்டனை என்பது முடிவான பின்னர் அவர்களை காப்பது காந்தியின் பெரும்  பொறுப்பு என்கிற எதிர்பார்ப்பு அதிகமானது. தூக்குத்தண்டனை மாற்றப்படாமல் நிறைவேற்றப்பட்டப்பின்னர் இப்பிரச்சனையில் காந்தி குறித்த விவாதங்கள்  நடக்கத்துவங்கின.  அவை இன்றும் ஓய்ந்தபாடில்லை. பகத்சிங் போன்ற போராளிகளின் நடவடிக்கைகள், காந்தியின் பங்குபாத்திரம், பிற தலைவர்களின் நிலைப்பாடுகள் இக்கட்டுரையில் சுருக்கமாக விவாதிக்கப்பட்டுள்ளன.




NFTE - TMTCLU
15-09-2018 அன்று  நடைபெற்ற TMTCLU  சங்கத்தின் மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மான்ங்களை இன்று (28-09-2018) மாவட்ட நிர்வாகத்திடன் கொடுப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம்  தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்...

                                             
                                                 கடித நகல்:



Wednesday, September 19, 2018

1968ஆம் ஆண்டு செப்டம்பர் போராட்டம் 





Monday, September 17, 2018

NFTE – TMTCLU
மாவட்ட சங்கங்கள், கடலூர்.
ஆர்ப்பாட்டம்
            NFTE – TMTCLU   மாநில சங்கங்களின் அறைகூவலின் படி தமிழகத்தில்  பணிபுரியும்              ( கடலூர் மாவட்டத்தினை தவிர்த்து )  ஒப்பந்த ஊழியர்களுக்கு இரண்டு மாதம்  சம்பளம் வழங்காதததினை கண்டித்து  தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.  நமது கடலூர்  மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக  17-09-2018 அன்று மாலை 5மணிக்கு    பொது மேலாளர் அலுவலக முன்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
                ஆர்ப்பாட்டம் தோழர் P.அன்பு தலைமையில்  சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தோழர் A.S.குருபிரசாத் மாவட்ட செயலர் TMTCLU,  தோழர் R.பன்னிர்செல்வம் கிளைச் செயலர் TMTCLU, தோழர் M.S.குமார் மாவட்ட தலைவர் TMTCLU, மாநில  இனைப் பொதுச் செயலர் தோழர் S.தமிழ்மணி மற்றும் NFTE மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் ஆகியோர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
 NFTE மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள்  நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்தும் . ஊழியர்களின்  நலனில் அக்கறையோடு செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தனது உரையில் பதிவு செய்தார்.

இறுதியாக தோழர் P.சுந்தர்ராஜ்  நன்றி கூற கூட்டம் முடிவுற்றது..

தோழமையுடன்
         இரா.ஸ்ரீதர் DS/NFTE
           A.S.குருபிரசாத் DS/TMTCLU












Saturday, September 15, 2018

NFTE - TMTCLU
  தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
மாவட்டச் சங்கம், கடலூர்

தோழர்களே!
ஆர்ப்பாட்டம்
கடலூர் SSA  தவிர்த்து மாநிலத்தின் மற்ற SSAக்களின் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களூக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படாததனை கண்டித்து மாநிலச் சங்கத்தின் அறைகூவலின்படி 17-09-2018 அன்று மாலை 5.31 மணிக்கு    நமது பொது மேலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு  செய்யப்படுகிறது.
தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்று  உழைக்கும் ஒப்பந்த  ஊழியர்களுக்கு நியாயமான ஊதியத்தினை பெற்று தர நாமும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம்

                                                       தோழமையுடன்
இரா.ஸ்ரீதர் DS/NFTE

A.S.குருபிரசாத் DS/TMTCLU
NFTE - TMTCLU
  தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
மாவட்டச் சங்கம், கடலூர்

15-09-2018   அன்று மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் தலைமையில் மாவட்ட செயற்குழு நமது NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில்  சிறப்பாக நடைபெற்றது. தோழர் R.பன்னீர்செல்வம் கிளைச் செயலர் வரவேற்புரையாற்றிட  தோழர் A.S.குருபிரசாத் மாவட்ட செயலர் ஆய்படு பொருள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்பின்னர் மாவட்ட உதவிச் செயலர் தோழர் G.ரங்கராஜ்  துவக்கவுரையாற்றிட  கள்ளக்குறிச்சி தோழர் ராஜா,  உளுந்தூர்பேட்டை பாஸ்கர், விருதை சக்திவேல் கடலூர் சுரேஷ், பண்ருட்டி ராஜா, நெய்வேலி பாலமுருகன், விழுப்புரம் கிளைச் செயலர் தோழர்  நடராஜன், தோழர் மணிமாறன் மற்றும்  பலர் கருத்துரை வழங்கினார்கள். வாழ்த்துரையாக NFTEயின் மாவட்ட உதவிச் செயலர் தோழர்D.குழந்தைநாதன்   தமது   கருத்துக்களை பதிவு செய்தார்.
சிறப்புரையாக  TMTCLU   மாநில பொதுச் செயலர் தோழர் R.செல்வம் நமது சங்க செயல்பாடுகளைப் பற்றி விரிவாக எடுத்து கூறினார். அடுத்து நமது NFTE  மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்  நமது நியாயமான கோரிக்கைகளை வலுவாக்கி வெற்றி பெற  நாம் இன்னும் பலத்தோடு செயலாற்றிட வேண்டும்.  விடுப்பட்ட தோழர்களை மீண்டும் பணியில் அமர்த்திடவும் , குறைந்த பட்ச போனஸ் வழங்கிட வலியுறுத்தி முதலில் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுப்பது என்றும், பின்னர் தேவையெனில் தர்ணா நடத்த வேண்டும் என்றும் தமது உரையில் பதிவு செய்தார்.

இறுதியாக  மாவட்ட பொருளாளர் தோழர் J.கந்தன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.

தீர்மான்ங்கள்
1.கடலூர் SSA வில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச போனஸ் ரூபாய் 7000/- வழங்கிட மாவட்ட நிர்வாகம்  உறுதி செய்திட வேண்டும்.
2.விடுமுறை நாட்களில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அன்றைய சம்பளத்தை  வழங்கிடுக
3. விடுபட்ட  தோழர்களுக்கு காலதாமதமின்றி உடணடியாக பணி வழங்கிடுக
4. ஒப்பந்த ஷரத்தின் படி  ஒப்பந்தகாரரின் அலுவலகத்தினை உடணடியாக அமைத்திட மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுத்திடுக.
5. 2009ஆம் ஆண்டிற்கான நிலுவை தொகையினை காலதாமதமின்றி வழங்கிட நடவடிக்கை எடுத்திடுக.
6. ஒப்பந்த ஊழியர்களின்  பிரச்சனைகளை கண்கானிக்க மாநில நிர்வாகத்தின் வழிகாட்டலின்படி  நோடல் ஆபிஸர் நியமித்திடுக.
7. கேபிள் பகுதியில் தேவைக்கேற்ப ஒப்பந்த ஊழியர்களை நியமித்திடுக..
8. ஒப்பந்த ஊழியர்களுக்கு வாடகைக்கு Quarters  வழங்கிடுக நடவடிக்கை எடுத்திடுக.
9. கேபிள் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு TRAVELLING ALLOWANCE வழங்கிட  நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
10. மாநிலச் சங்கத்தின் அறைகூவலின்படி 17-09-2018 அன்று மாலை ஆர்ப்பாட்டம்நடத்துவது என முடிவு  செய்யப்படுகிறது.
11. மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்ணயித்த ஊதியத்தை  நடைமுறைபடுத்திடுக..

மேற்கண்ட கோரிக்கைகள்  தீர்மானங்களாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன...மற்றும் மாவட்ட சங்கத்தின் தொடர் முயற்சியினால் தோழர் பாலமுருகன்/ நெய்வேலி அவர்களுக்கு ESIC  முலம் மருத்துவ செலவு தொகை ரூபாய் 62000/- ஐ பெற்று கொடுக்க உறுதியாக செயல்பட்ட மாவட்ட சங்கத்திற்கு  நன்றிகள் பல...

தோழமையுடன்:- A.S.குருபிரசாத், மாவட்டச்  செயலர் , TMTCLU