.
Friday, November 30, 2018
Thursday, November 29, 2018
அனைத்து
மத்திய சங்கங்கள் ஆதரவு…..
AUAB ஆல் வழங்கப்பட்ட வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து பிரதான மத்திய
தொழிற்சங்கங்களும் மாண்புமிகு மானோஜ்
சின்கா மத்திய அமைச்சர் ( தொலைத்தொடர்பு) அவர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளன. அவற்றில்
”நாடு முழுவதும் டிசம்பர் 3ல் BSNL அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நட்த்தவுள்ள போராட்டத்திற்கான கோரிக்கைகளை
மிகவும் நியாயமானதாகக் கருதுவது மட்டுமல்லாமல் BSNL ல் அவர்களின்
உறுதிப்பாட்டையும் காட்டுகின்றன" ஆகவே தாங்கள் தலையிடுமாறு வலியுறுத்துகிறோம்” எனக் கடிதம் கொடுத்துள்ளன.
பேருருவாய் எழுவோம், பெரும்பணி முடிக்க!
டிசம்பர் 3 முதல் நாடுதழுவிய
காலவரையறையற்றப் பெருந்திரள் வேலைநிறுத்தம் !
BSNL நிறுவனத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் அமைப்புகளின்
கூட்டமைப்பு (AUAB கூட்டமைப்பு) 2018 டிசம்பர் 3ம் தேதி தொடங்கி
ஒரு சக்தி மிக்க, பெருந்திரள் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விட்டுள்ளது. கோரிக்கை, மக்கள் பணியாற்ற BSNL நிறுவனத்திற்கு
4-G அலைக்கற்றையை உடனே வழங்கு, தாமதமின்றி ஊதிய மாற்றத்தை அமலாக்கு, ஓய்வூதிய மாற்றத்தைச்
செய், ஓய்வூதிய பங்களிப்பில் உள்ள முரண்பாடு களைந்து, ஊழியர்கள் பெறும் உண்மையான ஊதியத்தின்
அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பைக் கணக்கிடு ( அதாவது, தவறான கணக்கீட்டில் நிறுவனத்திடமிருந்து
வசூலித்த கோடிக்கணக்கான தொகையைத் திரும்ப வழங்கு) மற்றும் முந்தைய 2வது ஊதிய மாற்றக்குழுவின்
போது தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்த்து வை என்பதே ஆகும்.
Tuesday, November 27, 2018
போராட்டம்
ஒத்திவைப்பு
கடலூர் மாவட்ட நிர்வாகத்தின்
மெத்தனப்போக்கை கண்டித்து 28.11.2018 நடைபெறவிருந்த தர்ணாப் போராட்டத்தை ஒட்டி நமது
கடலூர் பொதுமேலாளர் தனது குடும்ப துக்க நிகழ்வுக்கு இடையே 26.11.2018 மதியம் 1.00 மணியளவில்
நம்மிடம் பேச்சுவார்த்தை நடத்திட கடலூர் வந்திருந்தார். தோழர்கள் இரா.ஸ்ரீதர், D.குழந்தைநாதன்,
A.S.குருபிரசாத், R.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற விவாதத்தில்
எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் பொதுமேலாளர் தனது நிகழ்வுகளை முடித்தபின்
இரண்டு நாட்களில் மீண்டும் விவாத்திக்கலாம் எனக்கூறியதன் அடிப்படையில் நமது போராட்டம்
ஒத்திவைக்கப்படுகிறது.
Monday, November 26, 2018
Sunday, November 25, 2018
கடலூர் மாவட்ட BSNL குடும்ப உறுப்பினர்கள்
என்பதற்குப் பெருமை கொள்வோம் !
நன்றி தோழமைகளே !
அன்புடையீர் ! வணக்கம்.
நீறு பூத்த நெருப்பு, மேகம் மூடிய நிலவு, துடைக்கப்படாத வைரம், தூசு படிந்த கண்ணாடி, தூண்டப்படாத விளக்கு . . . இப்படி இவை எல்லாமே கூட்டுப் புழுவாய் சலனமற்று இருப்பவைதான். சந்தர்ப்பமும்,
வேளையும் வாய்க்கும்போது
தன் குணம் காட்டி தங்கமாய் தகதகக்கும், வண்ணச் சிறகசைத்து வான் பறக்கும் !
நமது மாவட்டத்தைச்
சேர்ந்த BSNL குடும்ப உறுப்பினர்கள் – ஒப்பந்த ஊழியர் தொடங்கி, அதிகாரி ஈராய் – அத்தனை பேரும் அப்படித்தான்!
’கோடிக்கால் பூதமடா’ என்று தோழர் ஜீவா தொழிலாளர்களைக் ’கோபத்தின் ரூபமடா’ என்பார்.
கோபத்தில்
மட்டுமல்ல, வாரி அணைப்பதில், ஓடோடிச் சென்று உதவுவதிலும் நமது தோழர்கள் கோடிக்கால் ரூபத்தின் வாரிசுகள் தாம்.
கோவையிலே நமது மாநிலச் சங்கச் செயற்குழு
அறைகூவலை ஏற்று, ’தமிழகத்திற்குச் சோறிடும் அன்னையாம்’ காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில்
கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பைத் துடைக்க நிவாரண நிதி திரட்டும் பணியில் நமது மாவட்டத்தின் பங்கைச் செலுத்த வேண்டுகோள் விடுத்தோம்.
தாங்கள் யார் என்பதை நமது தோழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
நிவாரண உதவி என்பது காலத்தே உடனே செய்வது என்ற வகையில் நமது மாவட்ட அதிகாரிகளும் ஊழியர்களும், நண்பர்களும் தாரளமாக முன்வந்து வழங்கி உள்ளனர்.
கடலூர் மாவட்டப் பங்காக நாம் இதுவரை ரூ40,000/- (ரூபாய் நாற்பது ஆயிரம்) தொகையை அனுப்பி வைத்து விட்டோம்.
(நிவாரண உதவி, அத்தியாவசிய உடனடித் தேவை பொருட்களாக வழங்கிட குடந்தை
மாவட்டச் செயலர் தலைமையில் செயல்படும் நிவாரணக்குழுத் தோழர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்)
இதுவரை நிதி அளித்த அத்தனைத் தோழர்களுக்கும், தோழியர்களுக்கும், அதிகாரிகள்,
ஒப்பந்த ஊழியர்கள், நண்பர்களுக்கும் -- விழியோரம் நீர் பெருக்கி,
நமது நெஞ்சத்தின் ஈரத்தால் நன்றி சொல்வோம் !
உங்களை எண்ணித்தான்
ஒரு கவிஞன் இப்படிப் பாடினான் போலும்,
”
இந்தப் பூமிப்பந்தின்
எந்த
ஒரு மூலையில்
கண்ணீர்
சிந்தினாலும்,
அதைத் துடைக்க
எம்
சுட்டுவிரல்
நீளும்! ”
நன்றி தோழமைகளே!...
குறிப்பு : ’சொர்க்கத்தின்
கதவை கடவுள் திறந்தே தான்
வைத்திருக்கிறான், கடைசி மனிதன் வருவதற்காகவும்’ என்பார்கள். நன்கொடை வழங்காத தோழர்கள், உதவி செய்ய முடியாமல் போனதாக வருந்த வேண்டாம்.
இன்றைக்கு – இப்போது -- தாருங்கள்! அடுத்த தவணையாக அனுப்பி வைப்போம் !
தோழமை வாழ்த்துக்களுடன்,
இரா.ஸ்ரீதர்
மாவட்டச் செயலாளர், NFTE
Friday, November 23, 2018
நவம்பர் மாத மத்திய சங்க இதழ் டெலிகாம்
தலையங்க தமிழாக்கம்
திரும்பிப் பார்ப்போம், நமது மரபார்ந்த மாபெரும் செல்வம் –
காலங்கள் தோறும் அரண்செய் கற்கோட்டை!
இருபதாம் நூற்றாண்டு
தொடங்கி தபால்
தந்தித் தொழிலாளர்
இயக்கத்தின் வீரகாவியம்,
சுதந்திரப் போராட்டத்தின்
கூறுகளையும் தன்னுள்ளே
இயல்பாய் கொண்டிருந்தது. தந்தி, தபால், ஆர்எம்எஸ் பிரிவுகளில் சங்கங்களைத்
துவக்கி அமைப்பு
ரீதியாகத் தொழிலாளர்களைத் திரட்டி இயக்கத்தை விரைவுபடுத்தினர் நமது முன்னத்தி தியாகத்
தலைவர்கள் ஹென்றி பார்ட்டனும் தாரபாதாவும். அவர்கள் மேற்கொண்ட சோதனைகளும்
சந்தித்த இடர்பாடுகளும்;
போராட்டங்களும் தியாகங்களும்
சாராம்சத்தில் செவ்விலக்கியமாய் நமக்கே உரிய பெருங்காவியங்களாக உயர்ந்து நிற்கின்றன.
அனைவருக்கும் புரட்சிகர சம்மேள தின நல்வாழ்த்துகள்!
Subscribe to:
Posts (Atom)