பெருந்திரள் தர்ணா
BSNL நிர்வாகத்துடன் ஏற்பட்ட 12.06.2012 உடன்பாட்டை
அமுல்படுத்தக்கோரி 09.05.2013 அன்று கூடிய Forum of BSNL UNIONS / Associations ன் தீர்மானத்தின் அடிப்படையில் 22.05.2013
அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் தோழர்களின் உற்சாகமான பங்களிப்பின் மூலம்
வெற்றி பெற்றது.
நமது
எச்சரிக்கை ஆர்ப்பாட்டத்தினையும் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதினால் நாம்
ஏற்கனவே எடுத்த முடிவின்படி BSNL நிர்வாகத்தின் மெத்தனப்போக்கைக் கண்டித்து 05.06.2013
அன்று பெருந்திரள் தர்ணா போராட்டத்தினை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது என
முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே
தோழர்கள் அனைவரும் 05.06.2013 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, GMO அலுவலகம் முன்பு நடைபெற
உள்ள பெருந்திரள் தர்ணாவில் முழுமையாக பங்கேற்று போராட்டத்திற்கு மேலும் வலுசேர்த்திட
வேண்டுகிறோம்.