.
Saturday, May 31, 2014
Thursday, May 29, 2014
Tuesday, May 27, 2014
அறிவார்ந்த அதிகாரிகள்...
அவதிப்படும் தோழர்கள்...
ஒரு வேதனைக்குரல்...
---------------------------------------------
JTO ஆளெடுப்பு விதி 26/09/2001ல் இருந்து நடைமுறைக்கு வந்தாலும் ஒரேயொரு இலாக்காப் போட்டித்தேர்வு 02/06/2013 அன்று மட்டுமே நிர்வாகத்தால் ஒப்புக்கு நடத்தப்பட்டது.
நமது அதிகாரிகள் அறிவார்ந்த தீர்க்கதரிசிகள் என்பதை அந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியான அன்றே நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் காலியிடங்கள் 2000,2001,2002 மற்றும் 2012 ஆகிய வருடங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது. மற்ற ஆண்டுகளுக்கான காலியிடம் எங்கே சென்றது என்பது நமது அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
JTO நேரடி நியமனம் மார்ச் 2001ல் 3199 பதவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த நியமனம் 2001 JTO ஆளெடுப்பு விதிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டதாக BSNL தலைமையக உத்திரவு எண்: 5-9/2001/PER IV தேதி 10/10/2001 கூறுகின்றது. இதன்பின் 2002, 2005,2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் JTO நேரடி நியமனம் நடந்துள்ளது.
2007 மற்றும் 2008ல் மட்டும் ஏறத்தாழ 250 முதல் 300 JTO காலியிடங்கள் தமிழ்நாடு வட்டத்தில் மட்டும் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் 2001,2005,2007 மற்றும் 2008 ஆண்டுகளுக்கான இலாக்கா நியமனத்திற்கான காலியிடங்கள் அறிவிப்பு இன்று வரை BSNL நிர்வாகத்தால் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரத்தில் நெடுங்கதைகள் சொல்வதும் பழங்கதைகள் சொல்வதும் மட்டுமே நமது அதிகாரிகளின் வாடிக்கையாக உள்ளது. நியாயமான முடிவுகள் ஏதும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதால் சேவையில் மூத்த TTAக்களையும் இளைய TTAக்களையும் மோதவிட்டு அவர்களை நீதிமன்ற வாயிலில் காத்துக்கிடக்க வைத்ததுதான் நமது அதிகாரிகளின் திறமையாகும்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த மூத்த TTA தோழர்களும்
13 ஆண்டுகளாக சேவை செய்த கல்வித்தகுதியும் திறமையும் கொண்ட இளைய TTA தோழர்களும் ஒரு பதவி உயர்வு கூட இல்லாமல் இருப்பது BSNLல் வேதனைமிக்க சாதனையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் BSNL உத்திரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மூத்த மற்றும் இளைய தோழர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆண்டுகள் பல ஆயினும் பிரச்சினை இன்னும்
கிணற்றில் போட்ட கல்லாகவே.. இருக்கின்றது.
நாங்களும் விமோச்சனத்திற்காக காத்திருக்கின்றோம்..
கல்லாக.. சபிக்கப்பட்ட... கல்லாக..
வேதனையுடன்...
13 ஆண்டுகளாக TTAவாகவேப் பணிசெய்யும்
P.செல்லப்பா,
SNATTA மாவட்டச்செயலர்
காரைக்குடி.
9489943483.
நன்றி : NFTE காரைக்குடி வலைத்தளம்
Thursday, May 22, 2014
வருமான வரி பிடித்தம் தொடர்பாக தோழர்கள் கவனத்திற்கு
இந்த மாதம் முதல் வருமான வரி பிடித்தம் செய்யப்பட உள்ளதால், பிரிவு 80c தவிர மற்ற வருமான வரி சலுகைகளுக்கான (வீட்டு வாடகை ரசீது, வங்கிகளில் வாங்கியுள்ள வீட்டு கடன் வட்டி)வாய்ப்புகள் உள்ள தோழர்கள் கணக்கு அதிகாரிக்கு உத்தேச தொகையை குறிப்பிட்டு கடிதம் கொடுக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்
நினைவுக் குறிப்புகள்: போராட்டங்களின் தோழர் உமாநாத்!
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினருமான ஆர்.உமாநாத் இன்று திருச்சி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 92.
\
தோழர் உமாநாத் கேரளா மாநிலம் காசர்கோடு என்ற இடத்தில் 1921 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் ராமநாத் ஷெனாய். தாய் நேத்ராவதி. பிராமண குடும்பத்தில் பிறந்த இவருக்கு 5 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். மார்க்சிஸ்ட் மாநில உறுப்பினர் யு.வாசுகி, நிர்மலா ராணி மற்றும் லக்ஷ்மி ஆகியோர் இவரது மகள்கள் ஆவர்.
உமாநாத் சிறு வயதிலேயே 1930-ல் நடந்த அந்நிய துணி எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர். கல்லூரியில் பயின்றபோது வேலையின்மைக்கு எதிராக கண்ணனூர் முதல் சென்னை கோட்டை வரை நடந்த பட்டினி பாதயாத்திரையில் பங்கேற்றார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் 1940 ஆம் ஆண்டு தன்னை கட்சியின் முழுநேர ஊழியராக இணைத்துக்கொண்டு தலைமறைவாக இருந்து கட்சி பணிகளை மேற்கொண்டார்.
பிரிட்டிஷ் ஆட்சியை வன்முறை மூலம் தூக்கி எறிய சதி செய்ததாக கைது செய்யப்பட்டு, சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். 9 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய உமாநாத், பல போராட்டங்கள், உண்ணாவிரதத்திற்கு தலைமை வகித்துள்ளார்.
தோழர் உமாநாத் நடத்திய உண்ணாவிரத போராட்டங்கள் மிகவும் பிரபலமானவை. பெரும் வெற்றிகளை ஈட்டியவை. 2 வாரம், 3 வாரம், 4 வாரம் என்று அவர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். உயிர் போகும் நிலைவரினும் கோரிக்கைகள் நிறைவேறாமல் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றதே இல்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை குத்தகை விவசாயிகளுக்கு பெற்றுத் தந்ததில் உமாநாத் பங்கு மகத்தானதாகும்.
7 வருடங்கள் 10 மாதங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 7 வருடங்கள் 2 மாதங்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். உமாநாத் சோவியத் யூனியன், மக்கள் சீனம், நிமேனியா, பல்கேரியா, ஆஸ்திரேலியா, ரோமாபுரி, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளுக்கு சென்றவர். கட்சி உறுப்பினராக தொடங்கி அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக தன்னை உயர்த்திக் கொண்டவர்.
இவர் 1952 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள் பொன்மலை தியாகிகள் திடலில் சடங்குகள் இன்றி திருமணம் செய்துகொண்டார். உமாநாத் வாழ்க்கையில் தோழர் பாப்பா உமாநாத்தின் பங்கு மகத்தானது. மனைவியாக, நல்ல தோழராக, சக போராளியாக வாழந்திருக்கிறார்.
1962-ல் புதுக்கோட்டை நாடாளுமன்ற தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மரண தண்டனை கூடாது என்பதை வலியுறுத்தி தனது முதல் கன்னிப் பேச்சை நாடாளுமன்றத்தில் பேசியவர். சிஐடியு மாநில பொதுச் செயலாளராகவும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இரு தடவை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தோழர் உமாநாத் இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் உழைப்பாளிகளின் உரிமைக்களுக்காக சிம்ம கர்ஜனை செய்தவர். பல தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாவதற்கு வித்திட்டவர். பல தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாவதற்கு இவரது போராட்டங்கள் உதவின.
ஆலைப் பிரச்சினை முதல் உலக பிரச்சினை வரை பொதுமக்களுக்கு புரியும் வகையில் பேசி புரிய வைப்பதில் உமாநாத் நிகரற்றவர். தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்கள் இயக்கத்தை சிஐடியு மூலம் உருவாக்கியே தீரவேண்டும் என்று உமாநாத் உறுதியாக நின்றார். பெண்களிடம் உள்ள அறியாமையையும், மூடநம்பிக்கைகளையும் விரட்டி அவர்கள் பாரதி பாடியதுபோல் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்ந்த ஞானச்செருக்கும் கொண்டவர்களாக பெண்ணுரிமைக்காக போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர் உமாநாத்.
நன்றி: தி ஹிந்து தமிழ்
Tuesday, May 20, 2014
சென்னை கூட்டுறவு சங்க இயக்குனர் தேர்தல்
NFTE அமோக வெற்றி
அன்பார்ந்த தோழர்களே
கடலூரில் நீங்கள் தேர்ந்தெடுத்த RGB தோழர்களில் இயக்குனருக்கு போட்டியிட்ட தோழர் V கிருஷ்ணமூர்த்தி TM புவனகிரி வெற்றி பெற்றுள்ளார்.
தோழருக்கு நமது வாழ்த்துக்கள்
2004-ல் தோழர் இரா ஸ்ரீதர் மாவட்ட செயலராக இருந்தபோது தோழர் G வேதாச்சலம் STS விழுப்புரம் அவர்களை இயக்குனராக முன்னிறுத்தி வெற்றி பெற செய்தார். இப்போது அடிப்படை கேடரில் உள்ள தோழரை கடலூர் சார்பில் வெற்றி பெற செய்ய முன் முயற்சி எடுத்த மாவட்ட செயலருக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறோம்.
இயக்குனர் தேர்தல் முடிவுகள்
சென்னை தொலைபேசி
மொத்த இடங்கள் = 8
NFTE கூட்டணி வெற்றிபெற்ற இடங்கள் = 8
தமிழ் நாடு
மொத்த இடங்கள் = 10
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் = 10
பொது
மகளிர் =2
NFTE கூட்டணி வெற்றிபெற்ற இடங்கள் = 2
SC /ST =1
தலைவர் :தோழர் S.வீரராகவன்
துணைத்தலைவர் :தோழர் K.ரகுநாதன்
பொருளர் :தோழர் R திரிசங்கு
துணைத்தலைவர் :தோழர் K.ரகுநாதன்
பொருளர் :தோழர் R திரிசங்கு
Sunday, May 18, 2014
நிர்வாகத்திற்கு நன்றி
தற்காலிக மாற்றலில் வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் திரும்பி வரும்போது, அவர்கள் முன்பு பணியாற்றிய இடத்தை தருவதே மரபாக இருந்து வந்துள்ளது.
JTO ஆக TCIL லிருந்து திரும்பி வந்தபோது தற்போது ஓய்வு பெறவுள்ள DGM (CM ) அவர்களுக்கு அந்தவகையில் விழுப்புரம் மறுக்கப்பட்டதை 16-05-14 அன்று நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் நினைவு படுத்தினர்.
ஆனால் NON-EXECUTIVE பிரிவில் அந்த மரபு முதலில் மீறப்பட்டது, விழுப்புரம் தோழர் சுப்ரமணியன் TM மாற்றலின் போதுதான். அப்போது அதை ஏற்றுக்கொண்ட அன்றைய NFTE தலைவர்கள், இப்போது தோழர் கோதண்டராமன் TM சென்னையிலிருந்து வந்த போது பொங்குகிறார்கள்....
இன்றைய NFTE மாவட்ட சங்கத்திற்கு ஊழியர் பிரச்சினையில் அக்கறை இல்லை என்று குசு..குசு.. பிரச்சாரம் என்ன?...பாண்டியிலிருந்து நான் தீர்த்து வைக்கட்டுமா என 'அ ....ராஜாக்கள்' போருக்கு புறப்படுவது தான் என்ன?...
NFTE மாவட்ட சங்கம், பிரச்சினை தீர்வில் அணி பார்ப்பதில்லை என்பதை எவரும் தம் நெஞ்சை தொட்டு பார்த்தால் உணர முடியும் .
கடலூரிலிருந்து சென்ற தோழர் கோதண்டராமனுக்கு கடலூர் மறுக்கப்படுவது நியாயமில்லை என நாம் நிர்வாகத்திடம் எடுத்து கூறிய பின் 17-05-2014 அன்று கடலூர் புதுப்பாளையத்தில் பணியில் சேர உத்திரவு வழங்கப்பட்டுள்ளது .
இதன் மூலம் பழைய தவறு சரிசெய்யப்பட்டுள்ளது என்பதில் மாவட்ட சங்கத்தின் பெருமை உயருகிறது.
பிரச்சினையை தீர்த்து வைத்த Sr .GM ,DGM (CFA ) ஆகியோருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
TMTCLU ஆர்ப்பாட்டம் 17-05-2014
TMTCLU மாநில சங்க அறைகூவலுக்கிணங்க கடலூர் மாவட்ட அலுவலகத்தின் முன் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தோழர் MS குமார் தலைமையேற்றார். மாவட்ட சங்க ஒருங்கிணைப்பாளர் தோழர் G ரங்கராஜ் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டார். NFTE மாவட்ட செயலர் தோழர் இரா ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். NFTE மாநில துணைத்தலைவர் தோழர் V லோகநாதன், தோழர் V இளங்கோவன், TMTCLU மாநில உதவிச்செயலாளர் தோழர் A சுப்ரமணியன்,விழுப்புரம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். TN TCWU சங்க மாவட்ட செயலர் தோழர் M பாரதிதாசன் மற்றும் அந்த சங்கத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட பொருளர் தோழர் முரளி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். தோழர் D ராஜா கிளைசெயலாளர் பண்ருட்டி நன்றியுரை வழங்கினார் .
Saturday, May 17, 2014
Wednesday, May 14, 2014
மக்களவைத் தேர்தல் 2014: வாக்குப்பதிவில் புதிய சாதனை!
ஒன்பது கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் 66.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலேயே அதிக வாக்குப்பதிவு சதவீதம் இதுவாகும்.
கடந்த 1984-85-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவானதே இதுவரை அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதமாக இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட பின், ராஜீவ் காந்தி அரசியலில் களமிறங்க, அப்போது ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக 64.01 சதவீத வாக்குகள் பதிவாகின.
மக்களவைத் தேர்தலில் சாதனை அளவாக 66.38 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. எட்டு கட்ட வாக்குப்பதிவுகளில் 66.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
9-வது கட்ட வாக்குப்பதிவு
இறுதி மற்றும் 9-வது கட்டமாக உத்தரப்பிரதேசம், பிஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது.
இதில், மேற்கு வங்க மாநிலத்தில் 81.77 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இமாசலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தின் மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை வாக்களித்தார் 97 வயது சியாம் சரண் நேகி. இந்தத் தேர்தலில் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடியோ ராகுல் காந்தியோ அர்விந்த் கேஜ்ரிவாலோ கதாநாயகன் அல்ல. நேகிதான். காரணம் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தல் முதல் ஒன்றுவிடாமல் தவறாமல் வாக்களித்து வருகிறார் நேகி.
1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடுமையான குளிரில் பாதையெல்லாம் பனிபெய்து மூடியிருக்க நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்களித்தவர்தான் சியாம் சரண் நேகி. அப்போது அவருக்கு வயது 34. 1952 பொதுத் தேர்தல் முதல் கட்டமாக 1951-லேயே இமாசலத்தில் தொடங்கியது. பிற மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது இமாசலத்தில் கடும் குளிர்காலமாக இருக்கும் என்பதாலும் அது வேட்பாளர் களுக்கும் வாக்குச்சாவடி அதிகாரி களுக்கும் பெரிய இடை யூறாக இருக்கும் என்பதாலும் தேர்தல் அங்கு முன்கூட்டியே நடந்தது.
நன்றி : தி ஹிந்து தமிழ்
வாழ்த்துக்கள்
SR.TOA தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
நமது கடலூர் மாவட்டத்தில் தேர்வில் வெற்றி பெற்றோர் விவரம்:
D.சரவணக்குமார்
B.சரோஜா
M.செல்வக்குமார்
தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
Monday, May 12, 2014
TMTCLU உளுந்தூர்பேட்டை கிளை மாநாடு
௦9-௦5-2௦14 அன்று உளுந்தூர்பேட்டையில் தோழர் M.நஷீர் பாஷா
அவர்களின் தலைமையில், TMTCLU துணை பொது செயலர் A.சுப்பிரமணியன் அவர்கள் சங்க கொடியினை ஏற்றிவைத்து சிறப்பான கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் NFTE யின் கிளை செயலர் தோழர் நாராயணன் , சேகர், T.கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் தோழர்கள் பங்கேற்றனர். பழமலை
என்கின்ற விருதாசலத்திலிருந்து தோழர் S.அன்பழகன் அவர்களின் தலைமையில் தோழர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும்,
பண்ருட்டியிலிருந்து தோழர் ராஜா பங்கேற்றதும், சிறிய கிளையாக இருந்தாலும் 3௦
மேற்பட்ட தோழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது
சிறப்பானதாக இருந்தது .
வரவேற்புரையாக தோழர் D.K என்கின்ற D.குழந்தைநாதன் அவர்கள் உரையாற்றினார் அடுத்தபடியாக
வாழ்த்துரையாக தோழர் M.அம்பாயிரம் மாவட்ட உதவி தலைவர் NFTE அவர்களும், தோழர் G.கணேசமூர்த்தி அவர்களும், S.அன்பழகன்
மாவட்ட உதவி தலைவர் NFTE அவர்களும், A.
சுப்பிரமணியன் மாநில துணை பொது செயலர்
TMTCLU அவர்களும்,மற்றும் TMTCLU மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் G.ரங்கராஜு நீண்ட
நெடிய உரையாற்றினர் ஒப்பந்த தொழிலாளர்கள்
நாம் ஒற்றுமையுடன் அதிக செயல்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என தனது
கருத்துகளை பதிவு செய்தார். மற்றும் M.S. குமார் மாவட்ட தலைவர் TMTCLU அவர்களும் வாழ்த்துரை வழங்கி தங்களது
கருத்துகளை பதிவு செய்தனர்.
சிறப்புரையாக
நமது பொது செயலர் தோழர் R.செல்வம் அவர்கள் நீண்ட நேரம் மாநில சங்க செயல்பாடு
பற்றியும், மாநில சங்கம் என்ன என்ன கோரிக்கைகளை வைத்து தொழிலாளர்களுக்காக பயன்
தரும் வகையில் செயல்படுகிறது என்பதை பற்றியும், ஒப்பந்த தொழிலாளர்கள் எவ்வாறு
ஒற்றுமையுடனும் செயல்படுவது, வரும்
மே மாதம் 17-ம் தேதி கடலூர் மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் (G.M OFFICE-CUDDALORE) முன்பாக நடைபெறுகின்ற
ஆர்பாட்டத்தில் நமது கோரிக்கைகளை வென்று எடுக்க திரளான தோழர்கள் பங்கேற்று
சிறப்பிக்க வேண்டும் எனவும் நமது மாநில செயலர்
சுட்டிகாட்டி தனது சிறப்புரையினை முடித்தார்.
இறுதியாக
தோழர் P.அழகப்பன் நன்றி கூற மாநாடு
இனிதே முடிவுற்றது.
Subscribe to:
Posts (Atom)