.

Monday, March 30, 2015


தோழர்கள் கவனத்திற்கு 
கருத்தரங்கம் நடைபெறும் டவுன் ஹால் கடலூர் போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது 
பாண்டிசேரி மற்றும் பண்ருட்டி மார்க்கமாக வருபவர்கள் வரும் வழியில் போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும் . Rameswaram-Varanasi ரயில் மார்க்கமாக வருபவர்கள் திருப்பாதிரிபுலியூர் (TDPR ) நிலையத்தில் இறங்கி பேருந்து அல்லது ஷேர் ஆட்டோ மூலமாக போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும்.Karaikal-Bengaluru ரயில் மார்க்கமாக வருபவர்கள் கடலூர் போர்ட் ஜங்க்ஷன் (CUPJ)  நிலையத்தில் இறங்கி பேருந்து அல்லது ஷேர் ஆட்டோ மூலமாக போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும்
மேலும் தொடர்புக்கு 
தோழர்கள்                 செல்பேசி எண் 
V இளங்கோவன் ---9486100691
A .C முகுந்தன்-9486104804



வரைபடம்












இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
 22-வது அகில இந்திய மாநாட்டு பேரணி 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 22-வது அகில இந்திய மாநாட்டு இறுதி நாளான         29-03-2013 மாலை நடைபெற்ற செம்படை பேரணியை தோழர் வ.சுப்பையா அவர்களின் நினவு இல்லம் அருகே தமிழ்நாடு தொலைதொடர்பு கல்வி மையம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர்.K.சேது அவர்களின் தலைமையில் நமது தோழர்கள் வரவேற்று வாழ்த்தி கோஷமிட்டனர். தேசிய துணைப் பொதுசெயலர் தோழர், குருதாஸ்தாஸ்குப்தா, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர்.தா.பாண்டியன். தமிழ் மாநில செயலர் தோழர்.இரா.முத்தரசன், AITUC மாநில பொதுச்செயலர் தோழர்.T.M மூர்த்தி , திருச்சி மாவட்ட செயலர் தோழர்.இந்திரஜித் ஆகியோர் நமது அருகே பேரணியை பார்வையிட்டனர்.




















Sunday, March 29, 2015

ஏப்ரல் 21,22-2015 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம்-புதுவை

28-03-2015 அன்று புதுவை தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை கூட்டமைப்பு தலைவர்கள் உரையாற்றினர். நமது மாவட்டத்தலைவர் தோழர்.செல்வம்,மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் மாநிலசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.சேது ஆகியோர் உரையாற்றினர். நமது அகில இந்திய செயலர் தோழர்.சந்தேஸ்வர் சிங் சிறப்புரையாற்றினார், அவரது ஆங்கில உரையை மத்தியசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.காமராஜ் மொழிபெயர்த்தார். 







Saturday, March 28, 2015

விருத்தாசலம் TMTCLU கிளை துவக்கம்

கிளைத்தலைவர் தோழர்.லாரன்ஸ் தலைமையில் 27-03-2015 நடைபெற்றது.
கிளைச்செயலர் தோழர்.V.இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
தலைவராக தோழர்.S.ராஜேந்திரன், செயலராக தோழர். V.வீராசாமி,
பொருளராக தோழர்.S. சுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
TMTCLU மாநிலபொதுசெயலர் தோழர்.R.செல்வம்,TMTCLU மாவட்ட செயலர் தோழர்.ரங்கராஜு, NFTE மாவட்ட அமைப்புசெயலர் தோழர்.A.அம்பாயிரம்,
 மாவட்ட  உதவி தலைவர் S.அன்பழகன்,NFTE மாவட்ட உதவிச்செயலர் தோழர்.D.குழந்தைநாதன், NFTE கிளைப்பொருளர் தோழர்.கமலக்கண்ணன்-TTA  ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.
இறுதியாக TMTCLU புதிய கிளைசெயலர் தோழர். V.வீராசாமி நன்றி கூறினார்.



Friday, March 27, 2015


TMTCLU ஒப்பந்த ஊழியர்கள் சங்க கலந்தாய்வுக்கூட்டம்
24-03-2015 செவ்வாய் கிழமை மாலை தலைவர் தோழர்.M.S.குமார் அவர்களின் தலைமையில் கடலூர் NFTE மாவட்டசங்க 
அலுவலகத்தில் நடைபெற்றது.
 2-4-2015 கடலூரில் நடைபெறவுள்ள மாநில செயற்குழு கூட்டத்திற்கான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் பற்றி கலந்தாய்வு நடைபெற்றது. NFTE முன்னாள் மாவட்டசெயலர் மூத்த தோழர்.M.பக்கிரி,
கடலூர் NFTE தோழர்.K.ராகவன், திண்டிவனம் TMTCLU தோழர்.ஜானகிராமன், உளுந்தூர்பேட்டை TMTCLU தோழர்,பாஸ்கர்,
சிதம்பரம் TMTCLU தோழர்.கிருஷ்ணகுமார், NFTE மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் ஆகியோர் தங்களது பங்கை மாவட்டபொருளர் தோழர். அண்ணாதுரையிடம் வழங்கினர். இக்கூட்டத்தில்  TMTCLU மாவட்டசெயலர் தோழர்.G.ரங்கராஜ், TMTCLU மாநில இணைசெயலர் தோழர்.A.சுப்ரமணியன், TMTCLU மாநில பொதுச்செயலர் தோழர்.R.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். இறுதியாக NFTE மாவட்டசெயலர்.தோழர்.இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார்.




Tuesday, March 24, 2015

FORMAL MEETING
25-03-2015 வியாழன்காலை 11.00 மணியளவில் நிர்வாகத்துடன் FORMAL MEETING நடைபெறும். கூட்டத்தில் மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர்,
மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம்,
மாவட்ட துணைத்தலைவர் தோழர்.P.அழகிரி,
மாவட்ட துணைச்செயலர்கள் தோழர்.D.ரவிச்சந்திரன்,தோழர்.K.கிருஷ்ணக்குமார்

 ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.



Monday, March 23, 2015

மார்ச் 23: இந்திய இளைஞர்களின் எழுச்சி நாயகன் பகத்சிங் நினைவு தினம் இன்று..பகத் சிங் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகன். புரட்சிகரமான ஆயுதம் ஏந்திய ஒரு வீரனாக மட்டுமே நம்மில் பலருக்கு அவரைத்தெரியும். பகத் சிங் கண்ட கனவுகள்,கொண்டிருந்த கொள்கைகள் பிரமிப்பானவை.

பதினான்கு வயது இருக்கும் பொழுது பகத் சிங் ஊருக்கு எண்ணற்ற பேர் வந்திருந்தார்கள். முதலில் யாருமே அந்தப்பக்கம் போகவே இல்லை. என்ன விஷயம் என்று பகத் சிங் கேட்டார். குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மக்களை கொன்று அரசுக்கு எதிராக வந்திருக்கும் கூட்டம் அது என்றார்கள். “அவர்களை முன்னின்று வரவேற்க வேண்டியது நம்முடைய கடமைஇல்லையா ?” என்று கண்களில் ஒளி மின்ன கேட்டு வரவேற்றான் பகத் சிங். ஊரே அவன் பின்னர் அணி திரண்டது.

லாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்கு பழிதீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு,சுக்தேவ்,ஆசாத் உடன் இணைந்து திட்டமிட்டார்பகத் சிங். அதற்கு காரணமான ஸ்காட்டை கொல்வதற்கு பதிலாக சாண்டர்சை கொன்றுவிட்டார்கள், ஆங்கிலேய அரசாங்கம் அப்பொழுதே இவர்களை தேடிக்கொண்டு இருந்தது ஏப்ரல் எட்டு அன்று தான் அது நடந்தது. போலீஸ் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது. பகத் சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் தான் குண்டுகளை வீசினார்கள். இன்குலாப் ஜிந்தாபாத்,ஏகாதிபத்தியம் ஒழிக என்று குரல் கொடுத்துக்கொண்டே அதை செய்து முடித்தார்கள் அவர்கள். தப்பிக முயலாமல் கம்பீரமாக் சரணடைந்தார்கள்.

புரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்று பகத் சிங் தெளிவாக பதிவு செய்கிறார். கேளாத ஆங்கிலேயரின் செவிட்டு காதுகளுக்கு உறைக்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம் என்று கம்பீரமாக சரணடைந்த பின்னர் கோர்ட்டில் சொன்னார் பகத் சிங்.

வழக்கு விசாரணையின் பொழுது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுக்க எல்லாம் செய்தார் அவர். சிறையில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில் வாழ நேர்ந்தது. சாப்பாடு வாயில் வைக்கவே முடியாது,ஒழுங்கான மருத்துவ வசதிகள்,கழிப்பறை எதுவும் கிடையாது. இதையெல்லாம் எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உரிமைகளை பெற்றார்கள்
தோழர்கள்.

பகத் சிங் இக்காலத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை.

அங்கே இருந்த சிக்கல்களை பற்றி ஒரு கடிதத்திலும் புலம்பவில்லை அவர். ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட்விட்மேனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் ,உமர் கய்யாமின் கவிதைகள் என்று எக்கச்சக்கமாக தான் வாசித்தவற்றை பதிவு செய்கிறான் பகத் சிங்.

சுரண்டலற்ற,எல்லாருக்கும் சமநீதி கிடைக்கும் சமுதாயம் விடுதலைக்கு பின்னர் அமைய வேண்டும் என்றும் அது சார்ந்து என்ன செய்ய வேண்டும் என்று அப்பொழுதே பதிவுகள் செய்கிறார் பகத் சிங். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் மதவாதம் ஒழிய மக்களுக்கு தெளிவை உண்டு செய்ய வேண்டும் என்றும் எண்பது வருடங்களுக்கு முன்பே இருபது வயது இளைஞன் ஒருவன் பதிவு செய்திருக்கிறான் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ‘ஒரு நாய் நம் மடியில் அமரலாம். நம் சமையலறைக்குள் செல்லலாம். ஆனால் ஒரு மனிதன் தொட்டுவிடக்கூடாது…விலங்குகளை நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதர்களோடு மட்டும் நெருங்க முடியவில்லை.’ என்று ஜாதியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் பகத் சிங்
பகத் சிங்கின் அப்பா அரசிடம் மகனை விடுவித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். பகத் சிங் தன் தந்தையை தான் இனிமேல் தந்தை என்று கொள்ளமாட்டேன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து போனது என்று கடிதம் எழுதுகிறார். அம்மாவுக்கு பகத் சிங் எழுதும் கடிதம் கண்ணீரை வரவைக்க கூடியது. “என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின் விதையில் எழவேண்டிய தாக்கம் எழாமல் போகும் !” என்று குறிக்கிறார்

சாகிற நாட்கள் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது எடை கூடிக்கொண்டே போனது பகத் சிங்குக்கு. நாட்டுக்காக சாகப்போகிறோம் என்கிற பெருமிதம் அலை மொத்த தூக்கு மேடையை தொடுகிற பொழுது ,”மரணத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள் !” என்று விட்டு பகத் சிங் மரணத்தின் வாசலை தொட்டார்.-

அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதாக தான் தூக்கு மேடை வந்தார். இறுதிவரைநாத்திகனாக இருந்த அவர் அந்த இடைவெளியில் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா ? “சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன் “என்றார் . “ஏன்?” என கேட்டதற்கு,”ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன் உடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்!” என்றார் .அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும் புரட்சியும் நூல் தான்

- பூ.கொ.சரவணன்

Sunday, March 22, 2015

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்டசெயலருடன் சந்திப்பு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்டசெயலர் 
தோழர்.T. மணிவாசகம் அவர்களை தோழர் இரா.ஸ்ரீதர் சந்தித்து பேசினார்.
உடன் சிதம்பரம் மூத்த தோழர் இஸ்மாயில்மரைக்காயர்,
சிதம்பரம் கிளைச்செயலர் தோழர்.V.கிருஷ்ணமூர்த்தி
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் நல்லகண்ணு, தீஸ்தா சீதல்வாட்டுக்கு காயிதே மில்லத் விருது: கோபாலகிருஷ்ண காந்தி வழங்கினார்
 அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் ஆகியோருக்கு வழங்கப் பட்டது. காந்தியடிகளின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி இந்த விருதுகளை வழங்கினார்.
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மையாக பணியாற்றிய வர்களுக்கான காயிதே மில்லத் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இருவருக்கும் விருதினை மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி வழங்கினார். விருது பெற்ற இருவருக்கும் பரிசுத்தொகையாக ரூ.5 லட்சம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோபால கிருஷ்ணகாந்தி பேசியதாவது:
இந்தியாவின் ஒருமைப் பாட்டுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்த ஒவ்வொருவரும் தியாகம் செய்துள்ளனர். இதில் நல்லகண்ணு மிகவும் முக்கிய மானவர். சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் ஒன்று சேர வேண்டும். நல்லகண்ணுவுக்கும் தீஸ்தா சீதல்வாட்டுக்கும் விருதை அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தி இந்துவிடம் கூறும்போது, “எனக்கு கிடைத்த இந்த விருதை நான் சார்ந்த கட்சிக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன். தேசத்தின் ஒற்று மைக்காக பெரிதும் உழைத்த காயிதே மில்லத் பெயரில் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறதுஎன்றார்.
தீஸ்தா சீதல்வாட் கூறும்போது காயிதே மில்லத் பெயரில் தமிழகத் தில் விருது பெறுவதை பெருமை யாக கருதுகிறேன். தமிழகத்தில் கவுரவக் கொலைகள் மற்றும் சாதிய வன்முறைகள் நடக்கின்ற நிலை மாற வேண்டும்என்றார்.
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் தாவூத் மியாகான் பேசும்போது, “அரசியல் வாழ்வில் நேர்மை என்றதும் விருதுக்கான தேர்வுக்குழு நல்லகண்ணுவின் பெயரைத்தான் முதலில் பரிந்துரை செய்தது. அதேபோல், பெண்மணி ஒருவருக்கு விருது வழங்க வேண் டும் என்ற போது, குஜராத் கலவரத் தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக் காக போராடிய மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் தேர்வு செய்யப்பட்டார்என்றார்.
தேர்வுக்குழுவில் இடம்பெற்றி ருந்த மத்திய அரசின் முன்னாள் செயலர் மூசாரஸா, கல்வியாளர் வசந்தி தேவி, பேராசிரியர் அ.மார்க்ஸ், பிஷப் தேவசகாயம், கேப்டன் அமீர் அலி மற்றும் தமிழ் நாடு தலைமை காஜி சலாஹுதீன் முகம் மது அயுப் சாஹிப், ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்ளிட் டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
                                                                   .நன்றி! 


Saturday, March 21, 2015

மார்ச் 21-
உலக வன நாள் மற்றும் மரங்களின் நாள்

 மழை பெய்த பிறகு மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? புதிதாய் பச்சைப்பசேலென்று கும்மாளமிடும் குழந்தைகள் போல அவற்றைப் பார்ப்பதே மகிழ்ச்சி! ஏன் தெரியுமா? முதல் தூரல் விழுவதற்கு முன்பு வரை காற்றில் கலந்து வந்த மாசுக்களை வடிகட்டி தன்மேல் பூசிக்கொண்டு நல்ல காற்றை மனித குலத்திற்கு வழங்கிய கைமாறு கருதாத தொண்டால் தான்! அது மட்டுமா, ஒரு சராசரி உயரமுள்ள ஒரு மரம் இரண்டு குடும்பங்கள் வெளியிடும் கரியமில் வாயுவை உறிஞ்சிக்கொண்டு அதற்கு ப்திலாக ஆக்சிஜனை நமக்கு வழங்குகிறது.
இந்திய வனக்கொள்கை மூன்றில் ஒரு பங்கு காடாக இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், நடைமுறையில் 22 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. அந்தக் காடுகளை அழிப்பதிலும் காட்டின் காவலர்களான வனவாசிகளைக் காட்டைவிட்டே துரத்துவதிலும் பன்னாட்டு,உள்நாட்டு முதாலாளிகள் குறியாக உள்ளனர்.
மரங்கள் குறைவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை, மழைக்குறைவு, பெருகும் நோய்கள், மாசுக்கட்டுப்பாட்டுக்கு ஆபத்து என பலப் பல பிரச்சனைகள்!
ஒரு காலத்தில் DET அலுவலகம் என்றழைக்கப்பட்ட கோட்ட அலுவலகம் முன்பு ஒரு படை தங்கும் விசாலம் மிகுந்த ஒரு தூங்குமூஞ்சி மரம் இருந்தது…. அதன் பிறகு நேற்று வரை ஒரு சில அசோக மரங்கள் இருந்தன….

ஏன் மொட்டையாய் நிற்கிறீர்கள்?
மரங்களைக் கேட்டோம்
ஒரு மரம் சொல்லியது
”வன நாள் கொண்டாட பேனர் கட்ட வசதியாய் இருக்குமாம்”

இன்னொரு மரம் கூறியது
          ”அலுவலகர்கள் சுவாசிக்க பிராணவாயு மையம் திறக்கும் போதும்                நாளை திறப்பு விழா பேனர் கட்டலாமே…..?
விருத்தாச்சலம் கிளை மாநாடு
19-03-2015
கிளைத்தலைவர் தோழர்.V.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயலர் தோழர்.R.ராமலிங்கம் வரவேற்புரை நிகழ்த்த
 மூத்தத்தோழர். D.மோகன்ராஜ் அஞ்சலியுரை நிகழ்த்தினார்.
மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார். தனது துவக்கவுரையில் “ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க நாம் முழுமையாக கலந்துகொண்டு வெற்றிகரமாக்கவேண்டும்“ என வலியுறுத்தினார்.
கிளை ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு சமர்பிக்கப்பட்டு முழுமனதுடன் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கிளை நிர்வாகிகள் தேர்வில்  ஒன்றுபட்ட பட்டியலுக்கு மாவட்டசங்கம் முயற்சிசெய்தும் பலனில்லாமல் தலைவர், கிளைசெயலர் பதவிகளுக்கு போட்டி ஏற்பட்டது. மொத்தமுள்ள 25 கிளை உறுப்பினர்கள் முழுமையாக கலந்துகொண்டது சிறப்பம்சமாகும்.
 கிளைத்தலைவராக தோழர்.லாரன்ஸ்,STS
கிளைசெயலராக தோழர்.V.இளங்கோவன்,Motor Driver
கிளைப்பொருளராக தோழர்.கமலக்கண்ணன், TTA
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திட்டக்குடி,பெண்ணாடம்,உளுந்தூர்பேட்டை,விழுப்புரம்,சிதம்பரம்,கடலூர் பகுதி தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சம்மேளனச்செயலர் தோழர்.G.ஜெயராமன்
 மாநில அமைப்புசெயலர் தோழர்.N.அன்பழகன்
 ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி முன்னாள் மாவட்டசெயலர் தோழர்.P.சுந்தரமூர்த்தி, 
மாவட்ட அமைப்புசெயலர் தோழர்.K.அம்பாயிரம்,
மாவட்ட உதவித்தலைவர்கள்  
தோழர்.S.அன்பழகன்,தோழர் P.அழகிரி, 
மாவட்ட உதவிச்செயலர் தோழர்.D.ரவிச்சந்திரன்,  
மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார்.

கிளைசெயலர் தோழர்.V.இளங்கோவன் நன்றியினை கூற மாநாடு நிறைவுற்றது.