.

Friday, July 31, 2015

பணி ஒய்வு சிறக்க வாழ்த்துக்கள்
இன்று (31-7-2015) பணி ஒய்வு பெறும் தோழர்களின் ஓய்வுகாலம் சிறக்க மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!

பணிஓய்வு பெறும் தோழர்கள்
S.பாலன்-TM ஸ்ரீமுஷ்ணம்
K.லக்ஷ்மிநாராயணன்-TM சிதம்பரம்
S.பழனிசாமி-TM புவனகிரி
K.முத்துசாமி-TM CCSM

M.சுப்பையன்-TM, நெய்வேலி TS

Thursday, July 30, 2015

பணிஓய்வு பாராட்டு

தோழர் S.பாலன் TM.திருமுட்டம் அவர்களின் பணிஓய்வு பாராட்டு கூட்டம் திருமுட்டம் திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் 30-07-2015 காலை 11:00 மணிக்கு தோழர்கள் K.நாவு, M.தேவராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. திரு.M.குப்புசாமி SDE வரவேற்புரை நிகழ்த்ததோழர்கள் D.ரவிச்சந்திரன், A.மகாலிங்கம், S.வரதராஜன் TTA, அய்யனார்-JTO, மற்றும் உறவினர்கள் வாழ்த்த தோழர். V.பாலகிருஷ்ணன். கிளைசெயலர். KTL அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.










GM அலுவலக்கிளை பொதுக்குழு

இன்று (30-07-2015) GM அலுவலக்கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் தோழர் D.துரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர். P.ஜெயராஜ் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளை விளக்கினார் மேலும் அவர் சில பொதுத்துறைகளுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படாமலிருக்கிறது. NLC ஊழியர்களுக்கு 2007 க்கு பிறகு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் அதனடிப்படையில் 2012 ல் வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படாமலிருப்பதை கண்டித்து வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதுபோல் BSNL நிறுவனத்தில் BSNLEU வின் தவறான ஊதிய உடன்பாட்டால் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை என்ற நிலை ஆனதால் நமக்கு 2012 ல் கிடைக்கவேண்டிய ஊதிய மாற்றம் 2017க்கு தள்ளிப்போனது எனவும், மேலும் விபத்தில் படுகாயமடைந்த OFC TEAM தோழர்களுக்கு உதவி புரிந்த தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட பொருளர் தோழர்.A.சாதிக்பாஷா, மாவட்ட உதவி செயலர் தோழர் D.குழந்தைநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பணி ஓய்வுபெற்ற தோழர்களின் பாராட்டு விழா நடத்துவது எனவும், அவ்விழாவிற்கு தோழர்கள் ரூபாய் இருநூறு நன்கொடை அளிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. GM அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சுழல்மாற்றத்தை அவசியம் விரைந்து நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. தோழர் S.குருபிரசாத் நன்றி கூறினார். தோழர்கள், தோழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.







திண்டிவனம் புகழஞ்சலி கூட்டம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு திண்டிவனத்தில் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் சார்பில் புகழஞ்சலி கூட்டம் தோழர்.நடராஜன் SDE/TNV அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதிகாரிகள், ஊழியர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
 




சிதம்பரம் புகழஞ்சலி கூட்டம்


சிதம்பரம் கோயில் தொலைபேசி நிலைய வாயிலில் தோழியர் V.உஷா SDE/CDM அவர்கள் தலைமையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. தோழர்கள். K.நாவு, G.S.குமார், R.ரவிகுமார் அஞ்சலி உரைநிகழ்த்தினர்.


Wednesday, July 29, 2015

==============================================
GM அலுவலக கிளைபொதுக்குழுக் கூட்டம்
30-07-2015 மதியம் உணவு இடைவேளை 
தலைமை: தோழர்.D.துரை கிளைத்தலைவர்

வரவேற்புறை: தோழர்.P.ஜெயராஜ்

சிறப்புரை : தோழர்.இரா.ஸ்ரீதர் மாவட்டசெயலர்

நன்றியுரை : தோழர்.S.குருபிரசாத்,
அனைவரும் வருக!
தோழர்.S.ராஜேந்திரன் கிளைச்செயலர்
===========================================================
30-07-2015 காலை 11-மணியளவில் கடலூரில் 
WORKS COMMITTEE கூட்டம் நடைபெறும்
========================================================================
கள்ளக்குறிச்சி கிளை பொதுக்குழுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி கிளை பொதுக்குழுக்கூட்டம் கிளைத்தலைவர் தோழர். K.பாண்டியன் தலைமையில் இன்று(29-07-2015) மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் தோழர்.P.அழகிரி கலந்து கொண்டார். மற்றும் கிளை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை பற்றி எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் அதிகாரிகள்/உறுப்பினர்கள் கலந்தாய்வுக்கூட்டத்தின் நிகழ்வுகள் ஆய்வு செய்யப்பட்டது.
நிர்வாக தரப்பில் இருந்து போதுமான அளவு முன்னேற்றம் தேவைப்படுகிறது. மேலும் கள்ளக்குறிச்சி கோட்டப்பொறியாளர் ஊழியர் சங்க பிரதிநிதிகளை சந்திப்பதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை. ஊழியர் சங்க பிரதிநிதிகளை மாதம் ஒருமுறையேனும் சந்தித்து பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
செப்டம்பர்’2 வேலைநிறுத்தத்தில் தோழர்கள் அனைவரும் முழுமையாக கலந்துகொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தை கிளை செயலர் S.மணி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
========================================================================

Tuesday, July 28, 2015

மக்களின் ஜனாதிபதி அவர்களுக்கு புகழஞ்சலி


இன்று (28-07-2015) முன்னாள் ஜனாதிபதி திரு. APJ. அப்துல்கலாம் அவர்களின் மறைவிற்கு  கடலூர் அலுவலக வாயிலில் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் புகழஞ்சலிக்கூட்டம் மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. BSNLEU சார்பில் K.T.சம்பந்தம், FNTO சார்பில் P.ஜெயபாலன், NFTE சார்பில் சம்மேளன செயலர் தோழர் G.ஜெயராமன், SNEA சார்பில் P.சிவக்குமரன், AIBSNLEA சார்பில் திரு.K.சாந்தகுமார் DGM(FIN), SNATTA சார்பில் K.சிவசங்கரன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். இக்கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.







கேடர் பெயர் மாற்றம்

BSNL-ல் பணிபுரியும் non executive கேடர் பெயர் மாற்றம் குறித்த பிரச்னை பல சுற்று பேச்சு வார்த்தைக்குப்பின் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உத்தரவு விரைவில் வெளிவரும்.

Ø TELECOM MECHANIC – TELECOM TECHNICIAN
Ø REGULAR MAZDOOR – TELECOM ASSISTANT
Ø T T A   - JUNIOR ENGINEER
Ø Sr.TOA ( NE 7 to NE 10) – OFFICE ASSOCIATE
Ø Sr.TOA ( NE 11&NE12)- OFFICE SUPERINTENDENT
என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய சங்கத்திற்கு நன்றி.

Monday, July 27, 2015


இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர்,  இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவரகள் 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருதுமத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னாவிருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் மக்களின் ஜனாதிபதிஎன்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர்.

இன்று இரவு (27-07-2015) மாரடைப்பால் காலமானார். அவருக்கு நமது மாவட்ட சங்கத்தின் அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

Sunday, July 26, 2015

சிதம்பரம் கிளை பொதுக்குழுகூட்டம்


பொதுக்குழுகூட்டம் 25-07-2015 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தை கிளை தலைவர் தோழர் K.நாவு தலைமை ஏற்று வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தலமட்ட பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.தோழர் S.வரதராஜன் TTA அவர்கள் கேபிள் பற்றிய வரைபடம் அந்தந்த பகுதில் உள்ள TM மற்றும் ஏற்கனவே அந்த பகுதியில் பணியாற்றிய தோழர்களை கொண்டு தயாரித்தால் கேபிள் பழுதுகளை விரைவாக நீக்கமுடியும் மேலும் வருங்காலத்திலும் இந்த வரைபடம் பயனுள்ளதாக அமையும் என ஆலோசனை கூறியது அனைவராலும் பாராட்டப்பட்டது. அண்ணாமலை நகர், புவனகிரி பகுதியில் சில பில்லர்கள் பழுதடைந்து தளம் போடப்பட்டு பல வருடம் ஆகியும் பில்லர் பராமரிப்பு பணி நடைபெறவில்லை. நகர பகுதிகளில் புதியதாக கட்டப்படும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு தேவையான கேபிள்களை போட்டு வைத்தால் புதிய இணைப்பு வழங்க பயனுள்ளதாக அமையும் எனவும் தோழர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது.மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் அவர்கள் சிறப்புரையாற்றி இன்றைய நிகழ்வுகளை எடுத்துக்கூறினார்.பொதுக்குழுவை மாதம் ஒரு முறை நடத்தினால் பிரச்சனைகள் தீர்வில் காலதாமதம் ஏற்படாது.கேபிள் பணிக்கான புதிய ஒப்பந்தம் இந்த மாதம் போடப்படும் அதனால் கேபிள் பணிக்கான ஆள் பற்றாக்குறை தீர்க்கப்படலாம். சில பொதுத்துறைகளுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படாமலிருக்கிறது. NLC ஊழியர்களுக்கு 2007 க்கு பிறகு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் அதனடிப்படையில் 2012 ல் வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படாமலிருப்பதை கண்டித்து வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதுபோல் BSNL நிறுவனத்தில் BSNLEU வின் தவறான ஊதிய உடன்பாட்டால் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை என்ற நிலை ஆனதால் நமக்கு 2012 ல் கிடைக்கவேண்டிய ஊதிய மாற்றம் 2017 க்கு மாறியது.புதிய ஊதியம் நமக்கு கிடைக்க வேண்டுமானால் நமது துறை லாபமீட்டும் துறையாக மாறினால் தான் கிடைக்கும் அகவே நமது தோழர் இன்னும் சிறப்பாக களப்பணியாற்றவேண்டும் என மாவட்ட செயலர் வலியுறித்தினார் சிதம்பரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று ஒருமாதமாகியும் இன்றுவரை ஊழியர்களுக்கு தேவையான HMT, CRONE TOOL மற்றும் எவ்வித  உபகரணங்களும் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திடவேண்டும். மேலும் ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து உபகரணங்களும் வாங்கி தர நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும் என மாவட்ட செயலர் தனது உரையில் கூறினார்..


Thursday, July 23, 2015

திண்டிவனம் கிளை பொதுக்குழுகூட்டம்
திண்டிவனம் கிளை பொதுக்குழுகூட்டம் 23-07-2015 புதன்கிழமை மாலை  நடைபெற்றது. அவ்வமயம் கிளையின் புதிய அறிவிப்புப்பலகையை  மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றி இன்றைய நிகழ்வுகளை எடுத்துக்கூறினார். இக்கூட்டத்தில்  தலமட்ட பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.


குறிப்பு: கிளைகள் தோறும் இரண்டு மாதம் ஒருமுறை தலமட்ட பிரச்சனைகள் பற்றி விவாதிக்க பொதுக்குழு நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பண்ருட்டி தோழர் S. உத்திராபதி TM அவர்களின் தாயார் நேற்று (22-7-2015)இரவு 9-00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பிரிவில் வாடும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது இறுதி நிகழ்ச்சி இன்று (23-7-2015) மாலை 4மணிக்கு அவரது இல்லம் பண்ருட்டி விழமங்கலம் என்ற இடத்தில் நடைபெறும்.