.

Tuesday, April 26, 2016



கடலூரில் 15-04-2016 அன்று நடந்த அண்ணல் Dr.அம்பேத்கர் அவர்களின் 125-வது பிறந்தநாள் விழாவில் தோழர்.பட்டாபி அவர்கள் ஒருங்கிணைந்த சமூக கட்டமைப்புக்கு அம்பேத்கரின் வழிகாட்டல்” என்ற தலைப்பில் ஆற்றிய அற்புத உரையின்  ஒலி வடிவம்.

Saturday, April 23, 2016

செயலகக்கூட்டம் 22-04-2016

செயலகக்கூட்டம் 22-4-2016 மாலை கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன், மாநில அமைப்புசெயலர் தோழர் N.அன்பழகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள், மற்றும் முன்னணித் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 29-4-2016 அன்று திண்டிவனம், கடலூர், விழுப்புரம் ஆகிய ஊர்களில் மாநிலச்செயலர் தோழர் பட்டாபி அவர்கள் கலந்துகொள்ளும் தேர்தல் சிறப்புக்கூட்டத்தையும், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய ஊர்களில் சம்மேளனசெயலர் தோழர் G.ஜெயராமன் அவர்கள் கலந்துகொள்ளும் தேர்தல் சிறப்புக்கூட்டத்தையும் அருகாமையில் உள்ள கிளைகளோடு இணைந்து பெருவாரியான தோழர்களை கலந்து கொள்ளசெய்து சிறப்பாக நடத்திடுமாறு செயலகக்கூட்டதில் வலியுறுத்தப்பட்டது.

கிளைச் செயலர்கள் தேர்தல் நன்கொடையை விரைவில் தோழர்களிடம் பெற்று மாவட்ட சங்கத்திடம் அளித்திடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Tuesday, April 19, 2016

செயலகக் கூட்டம்

வருகின்ற 22-04-2016 வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் செயலகக் கூட்டம் நமது மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

                                                                              தோழமையுடன்
                                                                        இரா.ஸ்ரீதர்
                                                                                 மாவட்ட செயலர்

Monday, April 18, 2016


ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்படும்:
மத்திய அமைச்சர் தத்தாத்ரேயா தகவல்
           பண்டாரு தத்தாத்ரேயா

ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச மாதாந்திர ஊதியம்   ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்படும். இதுகுறித்து விரைவில் நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப் படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய தொழிலா ளர் நலன் மற்றும் வேலைவாய்ப் புத் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஹைதரா பாத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இப்போதைய நடைமுறைக் கேற்ப தொழிலாளர் நல சட்டங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சர்வதேச நிலவரத் துக்கேற்ப தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவும் திட்டமிடப்பட் டுள்ளது.ஆனால், இதுதொடர்பான சட்டத் திருத்தங்களை நாடாளு மன்றத்தில் இயற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் போதிய ஒத்துழைப்பு தர மறுக்கின்றன. எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி நிர்வாக உத்தரவு மூலம் விரைவில் இந்த அம்சங்களை செயல்படுத்த உள்ளோம்.
ஒப்பந்த தொழிலாளர் (கட்டுப்பாடு மற்றும் நீக்குதல்) மத்திய விதிமுறைகளின் 25-வது பிரிவில் திருத்தம் செய்யவும் ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வரைவு விதிமுறைகள் சட்ட அமைச்சகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் இது தொடர்பாக நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
18-04-2016


                          நன்றி:-

Saturday, April 16, 2016

அண்ணல் Dr.B.R.அம்பேத்கார் அவர்களின் 125வது பிறந்தநாள் விழா.....


கடலூர் மாவட்ட NFTE சங்கம் நடத்திய அண்ணல் Dr.B.R.அம்பேத்கார் அவர்களின் 125வது பிறந்தநாள் விழாக்கூட்டம் 15.04.2016 மாலை கடலூர் BSNL வாடிக்கையாளர் சேவைமைய அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் மாநில செயலர் தோழர் S.தமிழ்மணி தலைமையேற்று நடத்தினார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் அம்பேத்கார் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்டதலைவர் தோழர்.R.செல்வம் வரவேற்புரை நிகழ்த்த கூட்டம் இனிதே துவங்கியது. மாநில துணைத் தலைவர் தோழர்.V.லோகநாதன், மாநில அமைப்புசெயலர் தோழர் N.அன்பழகன். சம்மேளனசெயலர் தோழர்.G.ஜெயராமன் ஆகியோர் அண்ணல் அம்பேத்காரின் கருத்துக்களை, செயல்பாட்டினை விளக்கினர். மாநிலசெயலர்  தோழர்.R.பட்டாபிராமன். தனக்கே உரிய பாணியில் அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றையும் அவரின் சமூக போராட்ட குணங்களை பற்றியும் சிறப்பாக உரையாற்றினார். இறுதியாக மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் கலந்துகொண்டனர்.






Thursday, April 14, 2016

பண்ருட்டி கிளையின் புனரமைப்பு கூட்டம்.
பண்ருட்டி கிளையின் புனரமைப்பு கூட்டம். தோழர் S.பாஸ்கரன் அவர்கள் தலைமையில்   14.04.2016 காலை 10.30 மணிக்கு தோழர்.R.கணேசன் சம்மேளனக் கொடியேற்றிட இனிதே துவங்கியது. முன்னதாக Dr.B.R.அம்பேத்கார்     .125வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு மலர்மாலை சூட்டப்பட்டு அண்ணலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. திரு உருவப்படத்தின் முன் இருந்த தீபஒளியை மாநில உதவிசெயலர் தோழர்.P.சென்னகேசவன் அவர்கள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அனைவரும் மரியாதை செலுத்திட இனிதே கூட்டம் துவங்கியதுதோழர்.P.முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணைத்தலைவர்
தோழர்.V.லோகநாதன்அவர்கள்.துவக்கவுரையாற்றினார். முன்னாள் மாவட்ட செயலர் .தோழர்.P.சுந்தரமூர்த்தி, விருதை தோழர் D.மோகன்ராஜ்,  மாவட்ட உதவிசெயலர் தோழர்G.ரங்கராஜ், மாவட்டத்தலைவர் தோழர்R.செல்வம்
ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். அவற்றை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.( நிர்வாகிகள் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது) புதிய நிர்வாகிகள் பட்டியலை தோழர்  P.சென்னகேசவன் அவர்கள் வாசித்து புதிய நிர்வாகிகளை வாழ்த்தி, வருகின்ற தேர்தலில் நமது பங்கை முழுமையாக செலுத்தி நமது சங்கத்தை வெற்றிபெற செய்ய வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து மாநில அமைப்புசெயலர் தோழர் N.அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர்இரா.ஸ்ரீதர் தமது உரையில் “ 15-4-2016 கடலூரில் நடைபெறவுள்ள அண்ணல் Dr.அம்பேத்கர் 125-வது பிறந்தநாள் விழாவிற்கு திரளாக தோழர்கள் பங்கேற்குமாறும், 30-4-2016 அன்று மாநிலசெயலர் தோழர் பட்டாபி அவர்களுடன் சம்மேளனசெயலர் தோழர் ஜெயராமன், தோழர் அன்பழகன், தோழர் லோகநாதன், தோழர் மோஹன்ராஜ் ஆகியோர் கலந்துகொள்ளும் தேர்தல் சுற்றுப்பயணம் சிறப்பாக அமைய கிளைசெயலர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து பணியாற்றிடுமாறும், அனைத்துக் கிளைகளும் மேல்மட்டத்திலிருந்து வருகின்ற செய்திகளை, இடுகின்ற பணிகளை கறாராக அமுல்படுத்திடவேண்டுமெனவும் கூறி, மாநில சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க இக்கிளையின் ஒற்றுமைக்கு வித்திட்ட தோழர்கள் K.அசோகராஜன், P.சென்னக்கேசவன் ஆகியோருக்கு நன்றி கூறி புதிய நிர்வாகிகளை வாழ்த்தினார். இறுதியாக  மாநிலப்பொருளர் தோழர்K.அசோகராஜன் வாழ்த்திப் பேசினார்...தோழர்.R.நந்தகுமார்.TTA நன்றியுரை வழங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.. 

புதிய நிர்வாகிகள் பட்டியல்

தலைவர்:             தோழர் S.பாஸ்கரன் TM
துணைத் தலைவர்கள்: தோழர் S.உத்திராபதி TM
                      தோழர் R.பாஸ்கரன் SSS
                                                   தோழர் R.கணேசன் TM
                      தோழர் C.யேசுராஜா TM
செயலர்:              தோழர் P.முருகன் TM
உதவிசெயலர்கள்:     தோழர் G.ரெங்கராஜு TM
                      தோழர் R.வெங்கடேசன் TM
                      தோழர் S.S.D.பாஷா TM
                      தோழர் A.கணபதி TM
                      தோழர் K.சின்னையன் TM
பொருளாளர்:          தோழர் T.வடமலை TM
உதவிப்பொருளாளர்:       தோழர் P.லட்சுமணன் TM
அமைப்பு செயலர்கள்:      தோழர் G.காமராஜ் TM
                                                    தோழர் M.ஏழுமலை TM
                      தோழர் R.குமார் TM
                      தோழர் V.செல்வகுமார் TM            
தணிக்கையாளர்                தோழர் T.வைத்தியநாதன் STS    


புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!!






 







Wednesday, April 13, 2016


செய்திகள்
  • 2007ம் ஆண்டு   TTA ஆளெடுப்பில் பணி நியமனம் பெற்ற அனைவரையும் 22/05/2016 நடைபெறவுள்ள JTO போட்டித் தேர்வுக்கு  தற்காலிகமாக அனுமதிக்குமாறு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
  • 2007ம் ஆண்டிற்கான TTA  காலியிடங்களுக்கு தேர்வு பெற்றிருந்த போதிலும்பல தோழர்கள் பயிற்சி முடித்து 01/07/2008க்குப்பின்தான் பணி நியமனம் பெற்றனர். அத்தகைய தோழர்கள் ஆந்திராவில் நீதி மன்றம் சென்றனர். ஆந்திர நீதிமன்றம் அவர்களை தேர்வுக்கு அனுமதிக்குமாறு நிர்வாகத்திற்கு உத்திரவிட்டது. நீதிமன்ற உத்திரவை அனைத்து தோழர்களுக்கும் அமுல்படுத்திட நமது சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. தற்போது அனைவரும்  தேர்வெழுத அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
  • விதி 8 - RULE 8ன் கீழ் மாற்றலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோழர்கள் தங்களது விருப்ப மாற்றலை ERP மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என CORPORTE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
  • BSNL அதிகாரிகளுக்கான POST PAID  செல் இலவச உபயோக அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

       B பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ.700/- வரையிலும்...
       A பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ800/-வரையிலும்...
 இலவசமாகப் பேசிக்கொள்ளலாம். அனைத்து அதிகாரிகளுக்கும்  STD       வசதியும்... தேசம் முழுவதும் இலவசமாக ROAMING வசதியும் உண்டு...
  • தமிழகத்தில் DELOITTE குழு பரிந்துரைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. 08/04/2016 அன்று அனைத்து அதிகாரிகள் அமைப்புக்களையும்  மாநில நிர்வாகம் சந்தித்துள்ளது. தற்போதைய 17 SSA  மாவட்டங்களை 10 வணிகப் பகுதிகளாக BUSINESS AREAவாக  மாற்றும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. DELOITTE சம்பந்தமாக ஊழியர் சங்கங்களுடன் கலந்தாலோசனை நடைபெறவில்லை. தேர்தலுக்குப்பின்  கலந்தாலோசனைக்கூட்டம்  நடைபெறலாம்.