TMTCLU
இணைப்பு விழா
கூட்டம் ( 19-01-2019)
அன்புள்ள தோழர்களே!.. வணக்கம்...
நாம் திட்டமிட்டப்படி ஒத்த கருத்துடைய ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள்
ஒன்றுபட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு தலைமை பொது மேலாளர் அலுவலகம்
சென்னை NFTE சங்க அலுவலகத்தில் 19-01-2019 அன்று
மரியாதைக்குரிய தலைவர் ஆர்கே அவர்கள்
தலைமையில் NFTCL மாநிலச் செயல் தலைவர் காரைக்குடி தோழர் V. மாரி , NFTCL திருச்சி மாவட்டச் செயலர் தோழர் Y.மில்டன் ஆகியோர் முன்னிலையில்
தொடங்கியது. மறைந்த தலைவர்கள் சவுகத்அலி ( காரைக்குடி ) ராமகிருஷ்ணன் ( திருநெல்வேலி), P.சுப்ரமணியன் (கடலூர்) மாரிச்சாமி (ஓப்பந்த ஊழியர், குடந்தை )
ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட்து
மாநிலச்
செயலர் தோழர் R. செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
துவக்கவுரையாக K. நடராஜன் மாநிலச் செயலர் NFTE அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளியின்
நேற்றைய நிலைமை இன்று மாறுப்பட்டுள்ளது. எப்படி நாம் நடத்திய போராட்டங்கள் வாயிலாக
வங்கி கணக்கு மூலம் ஊதியம், EPF,
ESI முறைப்படுத்தியது. UAN எண்
வாங்கியது, போனஸ் பெற்றது, பணித்தன்மைக்கேற்ற ஊதியம் இவை அனைத்தும் NFTE சங்கமும் , TMTCLU சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக கிடைத்தது என்றால்
மிகையாகாது. ஆகவே நாம் ஒப்பந்த தொழிலாளிக்கு இன்னும் பல நன்மைகள் செய்திட
ஒன்றுப்பட வேண்டியது அவசியம். அதற்காக மத்திய சங்கம் அமைக்க வேண்டும் என்று தனது
உரையில் பதிவு செய்தார்.
ஒற்றுமைக்கான
வித்தாக முத்தான கருத்துரையாக தோழர் K. அசோகராஜன் ( NFTCL அகில இந்திய துணைத் தலைவர்,புதுவை ) ஒன்றுபட்ட
அமைப்பு இன்றைய தேவைக்கு நல்லது என்று உரையில் பதிவு செய்தார். அனைத்து மாவட்டங்களிருந்தும் வந்திருந்த NFTE, TMTCLU, NFTCL உள்ளிட்ட
சங்கங்களின் 30 க்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் மேலும் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டுமென தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
மத்திய சங்க நிர்வாகிகள் தோழர் P.காமராஜ், தோழர் A.செம்மலமுதன், மாநில உதவிச் செயலர் தோழர் G.S .முரளிதரன், மூத்த தொழிற்சங்க தலைவர்கள் சேது, தமிழ்மணி மற்றும் TMTCLU மாநிலப்
பொருளாளர் தோழர் M.விஜய்
ஆரோக்யராஜ் ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.
மாநில
முழுவதும் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள்
வாழ்வில் முன்னேற்றம் காண ஒன்றுபட்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் தோழர் P.காமாராஜ், தோழர் V.மாரி, தோழர் M.விஜய் ஆரோக்யராஜ், தோழர் Y.மில்டன், தோழர் A.S.குருபிரசாத் ஆகிய உறுப்பினர்களை
கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு
ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை விளக்க மாநாடு நடத்த, அகில இந்திய சங்கம் அமைப்பதை துரிதப்படுத்திட, மாநில முழுவதும் ஒற்றுமையைக் கட்டி ஒப்பந்த
ஊழியர்களை ஒன்றுபடுத்த மாவட்ட மாநாடுகளை நடத்தி பிறகு மாநில மாநாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இரண்டு
ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தை ஒன்றுபடுத்த முன் முயற்சி எடுத்த ஆர்கே, சேது ,
தோழர்கள் V.மாரி, S.முருகன்( காரைக்குடி ), தோழர்கள் பழனியப்பன், மில்டன் (திருச்சி) , தோழர்
ராஜேந்திரன் ( மதுரை), தோழர்கள் M.விஜய்
ஆரோக்யராஜ் , ராஜேஷ் ( குடந்தை) , தோழர்கள்
இரா.ஸ்ரீதர் . A.S.குருபிரசாத், D.குழந்தைநாதன் M.S.குமார் ( கடலூர்), தோழர்கள் தங்கமணி நாகலிங்கம் ( புதுவை), தோழர்கள் கிள்ளிவளவன்,
கலைச்செல்வன் ( தஞ்சை), தோழர் ஜெயசீலன், ராம்சேகர் (விருது நகர்), தோழர்கள் Kமணி, D.வீரமணி, விஸ்வநாதன் (தருமபுரி), தோழர்கள்
ராபர்ட்ஸ், ராஜாதம்பிதுரை (
கோயம்புத்தூர்), தோழர்கள் அல்லிராஜா, ராஜ்குமார் (வேலூர்), தோழர்கள் பாலகுமார்,
இசையரசன்( சேலம்) தவிர்க்கமுடியாத காரணத்தால் வர இயலாமையை தெரிவித்த மாவட்ட செயலர்கள் மற்றும் முன்னணி
தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தோடு கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டது.
- தமிழகத்திலுள்ள
ஆளில்லா தொலைபேசி நிலையங்கள், CSC,
SALES, BROAD BAND, TOWER Maintance, அலுவலகப் பிரிவு ஆகிய பகுதிகளிலுள்ள
இடங்களில் ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தி காலியிடங்களை நிரப்பிடுக..
- ஒப்பந்த
ஊழியர்கள் பயன் பெறும் வகையில் EPF,
ESIக்கு பிடித்தம்
செய்யப்பட்ட தொகையை அந்தந்த அலுவலங்களில் முறையாக மாதாமாதம் செலுத்திவதை கண்கானிக்க வேண்டும்.
- போனஸ் வழங்குவதில்
மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் உத்திரவின்படி அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும்
குறைந்தபட்ச போனஸ் ரூ 7000- வழங்குவதை நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும்.
- கிராஜ்விட்டி
:- பணிக்கொடை வழங்கும் சட்டம் 1972ல் உள்ளபடி BSNLல் பணி புரியும் ஒப்பந்த
ஊழியர்களுக்குக் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
- ஊதியம்:- மத்திய தொழிலாளர்
நல ஆனையத்தின் உத்திரவு படி மாதா மாதம் 7ந் தேதிக்குள் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
- மத்திய
சங்கம்:- NFTCW என்ற
புதிய பெயரில் மத்திய சங்கம் அமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
- மாநில
மாநாடு:- தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட மாநாடுகளை
நடத்திய பிறகு மாநில மாநாடு நடத்த ஏற்பாடு
செய்ய வேண்டும்.
- கருத்தரங்கம்:-
ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை விளக்க கருத்தரங்கம் பிப்ரவரியில் திருச்சியில் நடத்துவது.
- சமவேலைக்கு சம
ஊதியம்: மாநில உயர்நீதி மன்றத்தில் உள்ள சம வேலைக்கு சம ஊதியம் , வாராந்திர ஓய்வு
ஊதிய வழக்கு துரிதப்படுத்த வேண்டும்.
மேற்கண்ட
தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
நன்றியுரை: தஞ்சை தோழர் நாடிமுத்து அவர்கள்
நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
தோழமை
வாழ்த்துக்களுடன்
R.செல்வம்
மாநிலப் பொதுச் செயலர், TMTCLU.