.

Wednesday, December 31, 2014






செய்திகள்

01/01/2015 முதல் IDA  2.2 சதம் உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்த IDA 100.3 சதம் ஆகும்.

************************

NFTE உறுப்பினர் சந்தா மாதம் ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 2015ல் இருந்து அமுலுக்கு வரும்.

·        மத்திய சங்கம் ரூ.6/=
·        மாநில சங்கம்   ரூ.9/=
·        மாவட்ட சங்கம் ரூ.10/=

**********************

  தள்ளி வைக்கப்பட்ட தமிழ் மாநில செயற்குழு
10/02/2015 அன்று சென்னையில் நடைபெறும் என்று

மாநிலச்சங்கம் அறிவித்துள்ளது.


Monday, December 29, 2014

  BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு கூட்டம்- கடலூர் 

BSNL அனைத்து ஊழியர்-அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு  சார்பாக  கலந்தாய்வுக் கூட்டம் கடலூரில் இன்று 29-12-2014 மாலை  BSNLEU அலுவலகத்தில் NFTE மாவட்டச் செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர்கள் BSNLEU-K.T.சம்பந்தம், SNEA- C.பாண்டுரங்கன், SNEA- மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர்.அசோகன், AIBSNLEA-மாவட்டச்செயலர் P.வெங்கடேசன், P.சிவக்குமரன்-SNEA, NFTE மாவட்ட அமைப்பு செயலர். தோழர். முகுந்தன், NFTE மூத்த தோழர்.K.செல்வராஜ், R.பன்னீர்செல்வம், NFTE முன்னாள் மாவட்ட செயலர் தோழர்.P.சுந்தரமூர்த்தி, BSNLEU கிளைச் செயலர் தோழர்.S.சௌந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

              ஜனவரி’30 அன்று கடலூரில் மாநிலம் அளவிலான கருத்தரங்கம் தேதி  மாற்றம் குறித்த நமது தமிழ் மாநிலச்செயலரின் வேண்டுகோளை சென்றக்கூட்டத்தில் மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர் முன்வைத்திருந்தார். இதைப்  பற்றி இன்றைய இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கன்வீனர் தோழர்.K.T.சம்மந்தம் கருத்தரங்க தேதி மாற்றம் செய்வதில் உள்ள சில பிரச்சனைகளை எடுத்துரைத்தார். கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டபின் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஜனவரி’30 அன்றே இக்கருத்தரங்கை கடலூரில் சிறப்பாக நடத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
     
   BSNL அனைத்து ஊழியர்-அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் அறைகூவலை ஏற்று மாவட்டம் தழுவிய தர்ணா போராட்டத்தை கடலூரில் ஜனவரி -7 அன்று நடத்துவது எனவும்,

     கையெழுத்து இயக்கம் ஜனவரி-3 அன்று பண்ருட்டி, ஜனவரி-6 அன்று கள்ளக்குறிச்சி, ஜனவரி-10 அன்று  உளுந்தூர்பேட்டையிலும் நடைபெறும், அன்றே உளுந்தூர்பேட்டையில் கூட்டமைப்பு கூட்டம் நடத்துவது எனவும்,

      கருத்தரங்கத்திற்கான செலவிற்காக  NFTE ரூ.20.000. BSNLEU ரூ.20,000, SNEA ரூ.10,000, AIBSNLEA ரூ.10,000, தருவது எனவும், கருத்தரங்கம் நடத்தப்படும் மண்டபச் செலவை மாநிலசங்கம் வழங்கும் என முடிவெடுக்கப்பட்டது.

     நமது சங்க இதழ் ஒலிக்கதிர் பொன்விழா நடைபெற்ற அதே கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் ஜனவரி30 மதியம் 2-30 மணிக்கு இக்கருத்தரங்கம் நடைபெறும்.

 செஞ்சியில் நடைபெற்ற  மாவட்ட செயற்குழு முடிவின்படி உறுப்பினர்கள் அனைவரும் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற  ரூ.100/-நன்கொடை அளிக்கவேண்டும்.

செயற்குழு முடிவினை ஏற்று கிளைச்செயலர்கள் அனைவரும்  உறுப்பினர்கள் அனைவரிடமிருந்தும் விரைவில் வசூலித்து தரும்படி மாவட்ட சங்கம் கேட்டுகொள்கிறது...




ஒப்பந்த ஊழியர் ஊதியம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு முந்தைய ஒப்பந்தக்காரரால் தரப்படாமல் இருந்த அக்டோபர் மாதத்திய ஊதியம் புதிய ஒப்பந்தக்காரர் மூலம்   நாளை 30-12-2014 வழங்கப்படவுள்ளது. ERP அமுல்படுத்திய பிறகும் தொடர் முயற்சியின் காரணமாக  பட்டுவாடா செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. இப்பிரச்சினையை பேசி தீர்த்து வைத்த மாவட்ட சங்கங்களுக்கு (NFTE,BSNLEU,TMTCLU,TNTCWU ) நன்றி!

டிசம்பர் மாதத்திய சம்பளம் ஜனவரி-7 க்குள் வழங்கப்படவுள்ளது, (நவம்பர் மாத சம்பளம் டிசம்பர்-1 க்குள் வழங்கப்பட்டுவிட்டது)  


சொசைட்டி செய்தி


2015-ம் வருடத்திற்கான சொசைட்டி டைரி மற்றும் காலண்டர் கடலூரில் சொசைட்டி டைரக்டர் தோழர்.V.கிருஷ்ணமூர்த்தி வாயிலாக GM அலுவலகத்தில்   31-12-2014 புதன் கிழமை காலை 11.00 மணி  முதல் வழங்கப்படவுள்ளது. கிளைச்செயலர்கள் மற்றும் சொசைட்டி RGB உறுப்பினர்கள் தங்கள் பகுதி சொசைட்டி உறுப்பினர்கள் பெயர் பட்டியலுடன் நேரில் வந்து பெற்றுக்கொள்ளவும்.

Sunday, December 28, 2014

மாநில செயற்குழுக்கூட்டம் ஒத்திவைப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக                        30-12-2014 அன்று நடைபெறவிருந்த மாநில செயற்குழுக்கூட்டம் ஒத்திவைப்பு என மாநிலசங்கம் அறிவிப்பு

Saturday, December 27, 2014

AITUC மாநில மாநாடு-தேனி 
இன்று தேனியில் நடைபெற்று கொண்டிருக்கும்  AITUC  மாநில மாநாட்டில் 
தோழர்.பட்டாபி உரையாற்றுகிறார்.



நமது தோழர்கள் P .காமராஜ்-புதுவை , SSG-கோவை  ,நமது மாவட்டத் தலைவரும் TMTCLU மாநில சங்க பொதுச் செயலருமான தோழர்.R .செல்வம், காரைக்குடித் தோழர் மாரி , தருமபுரி மாவட்டச் செயலர் தோழர்.மணி ஆகியோர் சார்பாளாராக கலந்துகொண்டனர். 

வருந்துகிறோம் 
ம்முடன் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த தோழர் J.P. லூர்துசாமி CSS (Rtd.) 27-12-2014 மதியம் காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம் 

அன்னாரது இறுதி நிகழ்ச்சி 28-12-2014 மதியம் கடலூர் நேரு நகர் இல்லத்தில் இருந்து நடைபெறும்
AITUC மாநில மாநாடு 
சிறக்க மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!

இன்று துவங்கிய AITUC  மாநில  மாநாட்டில்
 தமிழ்மாநில  செயலர் தோழர். பட்டாபி  பங்கேற்று  உரையாற்றுகிறார். லட்சம் வரவேற்புக்குழு செயலராக செயல்படுகிறார்.   தோழர்கள்.   சேது , மாரி காரைக்குடி, லால்-காரைக்குடி, முருகேசன்-மதுரை மாவட்டச் செயலர், உட்பட மதுரை,காரைக்குடி தோழர்கள்  வரவேற்புக்குழுவில்  செயல்படுகிறார்கள் .
நமது மாவட்டத் தலைவரும்
TMTCLU பொதுச்செயலாளருமான தோழர் R.செல்வம்,  
சம்மேளனச் செயலர் தோழர். S.S. கோபாலகிருஷ்ணன்
அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் புதுவை P.காமராஜ், தர்மபுரி மாவட்டச்செயலர் மணி  ஆகியோர் சார்பாளராக கலந்து கொண்டு சிறப்பிகின்றனர்.

மாநாடு சிறக்க மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!

BSNL ஐ பாதுகாக்க நாடு முழுவதும் மக்களிடமிருந்து ஒரு கோடி கையெழுத்து பெற்று பாரத பிரதமரிடம் சமர்பிக்க BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் 26-12-2014 அன்று மாலை 5.00 மணிக்கு சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில்  மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
NFTE கிளை தலைவர் தோழர் இஸ்மாயில்  தலைமையேற்ற இந்த நிகழ்வில்  200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். BSNLEU தோழர் G.S.குமார் வரவேற்புரையாற்றினார்.
BSNLEU மாவட்ட செயலர் K.T.சம்பந்தம் மக்கள்  சந்திப்பு இயக்கத்தின் நோக்கத்தை பற்றி எடுத்துரைத்தார். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் K.பாலகிருஷ்ணன் CPI(M)  அவர்கள் கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.CPI மாநில குழு உறுப்பினர் தோழர் T.மணிவாசகம், CPI நகர செயலர் தோழர் V.M.சேகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் K.S.அழகிரி, திராவிட முன்னேற்ற கழகம் R.S.வெங்கடேசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் செல்லப்பன்,பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொறுப்பாளர் வேணு புவனேஸ்வரன்,அண்ணாமலை பல்கலை கழக ஊழியர் சங்க நிர்வாகி மதியழகன், CPI(M) மாவட்ட குழு உறுப்பினர் C. வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலர்கள் இரா.ஸ்ரீதர், P.வெங்கடேசன்-AIBSNLEA, C.பாண்டுரங்கன்-SNEA, கடலூர் தோழர்கள் A.அண்ணாமலை,V.இளங்கோவன், V.முத்துவேல், R.பன்னீர் செல்வம்,R. கிருஷ்ணமூர்த்தி,  A.C.முகுந்தன், T.V.பாலு,E.பாலு ஆகியோர் கலந்துகொண்டனர். NFTE மாநில துணைத்தலைவர் தோழர். V.லோகநாதன் நிறைவுரையாற்றினார். SNEA கிளை செயலர் தோழர். A.நடராஜன் நன்றியுரை வழங்கினார். சிதம்பரம் கிளை சங்கங்கள் சிறப்பாக விழா ஏற்பாடு செய்திருந்தன.
சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.K .பாலகிருஷ்ணன் (CPIM ) முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை துவக்கி வைத்தார்.





முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.திரு.அழகிரி அவர்கள் 


CPI மாநிலக் குழு உறுப்பினர் தோழர்.மணிவாசகம்