.

Friday, October 30, 2015

பணி ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள்!!
31-10-2015 பணி ஓய்வு பெறும் விக்கிரவாண்டி தோழர் R.பாபு TTA அவர்களின்
 ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

தோழர் R.பாபு கேசுவல் மஸ்தூராக தனது இலாக்காப் பணியை தொடங்கி ரெகுலர் மஸ்தூர், டெலிகாம் மெக்கானிக்காகி தற்போது TTA-வாக பணிபுரிந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 28, 2015

 மத்திய செயற்குழு

 மத்திய செயற்குழு வருகின்ற நவம்பர் 1,2,3 தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் ஒளரங்காபாத் நகரில் நடைபெறுகிறது. நமது மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், மாவட்ட தலைவர் தோழர். R.செல்வம், மாவட்ட துணைத்தலைவர் தோழர் P.அழகிரி
ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
மாவட்ட பொறுப்புகளை மாவட்ட உதவி செயலர் தோழர்.D.குழந்தைநாதன் அவர்கள் இந்நாட்களில் கவனிப்பார்.
கிளைச்செயலர்கள் தோழர்.D.குழந்தைநாதன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.7598775139

மத்திய செயற்குழுவில் கீழ்கண்டவைகள் விவாதிக்கப்படவுள்ளன

  • கிளை முதல் மாநில மட்டங்களில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த 
  • ஊழியர்கள் பிரச்சனைகள்-தீர்வுகள்,
  • டெலாய்ட்டி கமிட்டி –பிரச்சனைகள்
  • டவர் கார்ப்பரேசன் உருவாக்கம்,
  • போனஸ் பிரச்சனை

பண்ருட்டி கிளை மாநாட்டுத் தீர்மானங்கள்
  •   கடலூர் மாவட்டத்தின் முக்கிய வியாபார தலமான பண்ருட்டியில் நீண்டகாலமாக வியாபாரிகள் எதிர்பார்க்கும் 3Gசேவையை உடனடியாக நிறுவுவதற்கு  நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செயற்குழு வேண்டுகிறது. 
  •     இன்றைய தேவை ஒற்றுமையே என்பதை வலியுறுத்தி ஒன்றாக பயணிப்போம் என்று மீண்டும் மீண்டும் அழைக்கின்றோம். அங்கீகாரத் தேர்தலை ஒன்றாக சந்திக்கவேண்டும். நம் முன்னே ஊதியக்குழு உள்ளது. ஒற்றுமைப்படுவது முடியாத ஒன்றல்ல.  அனைத்தும் நம் கையில் என்று கிளை மாநாடு வேண்டுகோள் விடுக்கின்றது.
  •    2016-ல் நடைபெற இருக்கின்ற அங்கீகாரத் தேர்தலில் NFTE முதன்மை இடத்தைப் பெறுவதற்கு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். நம்மில் போட்டி என்பது யார் சங்கத்திற்கு அதிகம் உழைப்பது என்பதில் இருக்கவேண்டும். 


தீர்மானங்களை தோழர்.T.வைத்தியநாதன்-SSS முன்மொழிய தோழர்.G.ரங்கராஜு-TM வழிமொழிந்தார்.

Tuesday, October 27, 2015

ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் பிஎஃப்
மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம் எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர, மொத்த சம்பளம் எவ்வளவு அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்? எதற்கு பிடிக்கிறார்கள் என்பது தெரியாது.
வருமான வரிக்காக பிடிக்கிறார்களா அல்லது வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள் என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர். இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.
எவ்வளவு பிடிக்கிறார்கள்?
பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.
சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.
நிரந்தர கணக்கு எண் (UAN)
புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.
தெரிந்துகொள்வது எப்படி?
சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும்.
இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம்.
பணம் எடுப்பது எப்படி?
பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனை
வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.
பங்குச் சந்தையில் பி.எஃப்.
ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.


                                     நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ்

Sunday, October 25, 2015

பண்ருட்டி கிளை மாநாடு

    அக்டோபர் 09-ந் தேதி கிளை செயலர் தோழர் S.பாஸ்கரன் அக்டோபர் 24-ல் கிளை மாநாடு நடத்த அறிவிப்பு செய்தார். அதே சமயம் பண்ருட்டி கிளைத் தோழர் P.முருகன் தன்னிச்சையாக அதே தேதியில் மாநாடு அறிவித்தார். இதனை தொடர்ந்து தோழர்.P.முருகனிடம் மாவட்ட சங்கத்தின் அறிவுரைப்படி பண்ருட்டி கிளை செயலர் தோழர்.S.பாஸ்கரன், கிளைத்தோழர்.G.ரங்கராஜு ஆகியோர் ஒற்றுமையாக மாநாட்டை நடத்த ஒத்துழைக்கும்படி வேண்டி பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட செயலரும் தோழரிடம் பேசி மாநாட்டை  நிறுத்தி ஒற்றுமைக்கு வழிவகுக்கும்படி வேண்டினார். இறுதியாக 23-10-2015 இரவு மாநிலப் பொருளர் தோழர் K.அசோகராஜன் அவர்களும் முருகனிடம் பேசி மாநாட்டை நிறுத்தும்படி வேண்டியுள்ளார். இருப்பினும் தோழர் P.முருகன் இதனை ஏற்றுக் கொள்ளாமல் எனது மேலிடத்தின் உத்தரவுப்படி தான் தனித்து மாநாட்டை நடத்துவேன் என விடாப்பிடியாக மறுத்தார்.


இதனை தொடர்ந்து பண்ருட்டி கிளை செயலர் தோழர் S.பாஸ்கரன் அறிவித்தபடி கிளை மாநாடு 24-10-2015 சனிக்கிழமை காலை பண்ருட்டியில் உள்ள கடலூர் மாவட்ட AITUC தலைமை அலுவலகத்தில் கிளைத்தலைவர் தோழர் T.வைத்தியநாதன் தலைமையில்  சம்மேளனக் கொடியேற்றத்துடன் நடைபெற்றது. கிளை செயலர் தோழர் S.பாஸ்கரன் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். தோழர் G.ரங்கராஜு அஞ்சலியுரை நிகழ்த்தினார். மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன்  துவக்கவுரை நிகழ்த்தினார். கிளைசெயலர் தோழர் S.பாஸ்கர் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். ஆண்டறிக்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் அனைவரும் ஒருமனதாக  ஏற்றுக்  கொண்டபடி  புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளைத்தலைவராக தோழர் T.வைத்தியநாதன், கிளைசெயலராக தோழர் S.பாஸ்கரன், கிளைப் பொருளாளராக தோழர். P.லட்சுமணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நெய்வேலி கோட்டப்பொறியாளர் திரு.P.சிவக்குமரன் அவர்கள் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கி, இன்றைய கட்டத்தில் நமது துறையினை முன்னெடுத்து செல்ல சங்கங்கள் இடையே ஒற்றுமை தேவை என வலியுறுத்திப் பேசினார்.  பின்னர்  புதுவை மாவட்ட செயலர் தோழர் M.செல்வரங்கம், மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம், மாவட்ட துணைத்தலைவர் தோழர் P.அழகிரி, மற்றும் பண்ருட்டி BSNLEU கிளைச்செயலர் தோழர்.T.சுந்தர் உள்பட மாவட்ட, கிளைச்சங்க நிர்வாகிகள், மற்றும் கடலூர்  AITUC மாவட்டப் பொதுச்செயலர் தோழர்.P.துரை. ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். கிளை தோழர் P.லட்சுமணன் நன்றி கூறினார். கிளை மாநாட்டில் புதுவை தோழர்கள், மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநாட்டு நிகழ்வுகளை பண்ருட்டி தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 









Thursday, October 22, 2015

ஒற்றுமை கருதி
பண்ருட்டி தோழர்களுக்கு ஒற்றுமை கருதி மாவட்ட செயலரின் முறையீடு...... 


Wednesday, October 21, 2015

தீபாவளி – மீலாடி நபி  விடுமுறை தேதி மாற்றம்
தீபாவளி விடுமுறை தேதி 11-11-2015 புதன்கிழமைக்கு பதிலாக
10-11-2015 செவ்வாய்க்கிழமை மாற்றியும்,
மீலாடி நபி விடுமுறை தேதி 24-12-2015 வியாழக்கிழமைக்கு  பதிலாக 
23-12-2015 புதன்கிழமையாக  மாற்றியும் தமிழ்மாநில நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவு நகல்








Monday, October 19, 2015

திண்டிவனம் கிளை செயலர்கள் கருத்தரங்கம்-
மாவட்ட செயற்குழு
   மயிலாடுதுறை மாநில செயற்குழு வழிகாட்டுதல்படி இன்று (19-10-2015) திண்டிவனம் ராஜ்மஹால் திருமணமண்டபத்தில் கடலூர், புதுவை மாவட்டங்களின் இணைந்த மாவட்ட செயற்குழு மற்றும் கிளைச்செயலர்கள் கருத்தரங்கம் தோழர்கள் R.செல்வம்,M.தண்டபாணி ஆகிய  இரு மாவட்ட தலைவர்களின் கூட்டுத்தலைமையில் நடைபெற்றது. திண்டிவனம் கிளைத்தலைவர் தோழர்.G.ஜெயச்சந்தர் கவிதை நயத்துடன் திண்டிவனத்தின் வரலாற்றைகூறி வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். கடலூர் மாவட்ட உதவித்தலைவர் தோழர் P.அழகிரி அஞ்சலியுரையாற்றினார்.  புதுவை மாவட்ட செயலர் தோழர் M.செல்வரங்கம் புதுவை மாவட்ட மாநாடு நிகழ்வுகள், வருகின்ற ஊழியர் சரிபார்ப்பு தேர்தலில் மாவட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் அணுகி புதுவையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற நாம் செய்ய வேண்டியவற்றை விளக்கி பேசினார். பிறகு கடலூர் மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கடலூர் மாவட்டத்தில் சென்ற சரிபார்ப்பு தேர்தலைவிட நமது சங்கம் கூடுதலாக வாக்குகள் பெற அனைத்து மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும் இன்று முதல் நமது பணியை துவக்க வேண்டும் என்றும், அதற்காக நாம் கடுமையாக உழைத்து நமது சங்கத்தை முதன்மை சங்கமாக்க பாடுபட வேண்டும் என வலியுறுத்தி பேசினார். பின்னர் இரு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணித் தோழர்கள் ஆகியோர் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் அவர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தார். பின்னர் மத்தியசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ் இந்தியா முழுவதும் உள்ள சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை, அதில் நாம் பெறவேண்டிய எண்ணிக்கையின் அவசியத்தை விளக்கி மத்திய சங்க செயல்பாடுகள், அண்மையில் நடைபெற்ற மத்திய கவுன்சில் கூட்ட முடிவுகள் பற்றி விளக்கி பேசினார். திண்டிவனம் தோழர்.V.குப்பன் (மாவட்ட உதவித்தலைவர்) நன்றி தெரிவித்தார்.

இணைந்த செயற்குழு தீர்மானங்கள்:
  
 1.   2016-ல் நடைபெற உள்ள அங்கீகாரத் தேர்தலில் நமது சங்கத்தை முதன்மை சங்கமாக ஆக்குவதற்கு நாம் அனைவரும் சேர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். 2007-ல் ஊதியக்குழுவில் நாம் இழந்தவற்றை, 2017-ல் (ஊதியக்குழுவை பெறுவதற்கும்) மீண்டும் பெறுவதற்கும் மாவட்ட செயற்குழு அனைத்து தோழர்களையும் கேட்டுகொள்கிறது.


 2.  பண்ருட்டி கிளையில் இரண்டு தோழர்களும் 24-10-2015-ல் பண்ருட்டி கிளை மாநாடு நடத்துவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். மாவட்ட சங்கம் கிளை மாநாட்டை ஒற்றுமையாக நடத்துவதற்கு முயற்சித்து வருகிறது. ஆகவே 24-10-2015-ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பண்ருட்டி கிளை மாநாட்டை நிறுத்தவேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது. இரு தரப்பும் சுமூக சூழ்நிலை உருவாக்கிட பேச்சு வார்த்தை நடத்திட ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.









Saturday, October 17, 2015

வருந்துகிறோம்
நெய்வேலி தோழர் C.பாண்டுரங்கன் Retd.SSS அவர்கள் இன்று (17-10-2015) காலை உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார். தோழரின் மறைவிற்கு மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
தோழர் பாண்டுரங்கன் நெய்வேலி கிளையின் முன்னணித் தோழராக திகழ்ந்தவர். கிளைச் செயலராகவும், மாவட்ட சங்க நிர்வாகியாகவும் இருந்தவர். சிரில் அறக்கட்டளையின் உறுப்பினராகவும் இருந்து தனது பங்கை சிறப்பாக செய்த தோழர்.
தோழரின் மறைவினால் வருந்தும் அவர்தம் குடும்பத்தாருக்கு மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழரின் இறுதி நிகழ்ச்சி நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் உள்ள காந்திநகரில்  அவரது இல்லத்தில் நாளை (18-10-2015) காலை 8-00 மணிக்கு  நடைபெறும்.

கள்ளக்குறிச்சி உண்ணாவிரதப்போராட்டம் ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி கோட்டநிர்வாகத்தின் செயலற்ற தன்மையைக் கண்டித்து
20-10-2014 செவ்வாய்கிழமை நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப்போராட்டம் கோட்டப்பொறியாளருடன் நடைபெற்ற பேச்சவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையிலும்,
மாவட்ட சங்கத்தின் வழிகாட்டுதலின்படியும் ஒத்திவைக்கப்படுகிறது
JCM தேசியக்குழு 16/10/2015 அன்று டெல்லியில்  மனிதவள இயக்குநர் திருமதி.சுஜாதா ராய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 
நமது மாநில செயலர் தோழர் பட்டாபி ஊழியர் தரப்பில் கலந்து கொண்டார். 

கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.


1.  மின்விபத்து மற்றும் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின்   குடும்பங்களுக்கு கருணை அடிப்படை பணிகளில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தப்பட்டது. மேலும் தற்போதுள்ள அளவுகோல்களைத் தளர்த்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிர்வாகம் சாதகமாக பரிசீலிக்க ஒத்துக்கொண்டுள்ளது.

2. 01/01/2007 முதல் 07/05/2010 வரை பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு TTA  தோழர்களுக்கு வழங்கப்பட்டது போலவே ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வழங்கும் முடிவு பரிசீலிக்கப்படும்.

3. அகன்ற அலைவரிசை பழுது நீக்கும் பணி சோதனை அடிப்படையில் சில குறிப்பிட்ட நகரங்களில் தனியாருக்குத்  தாரை வார்க்கப்படும்.

4. 78.2 சத IDA இணைப்பில் 01/01/2007 முதல் நிலுவை வழங்குவது பற்றி மீண்டும் நினைவூட்டல் கடிதம் DOTக்கு  அனுப்பப்படும்.

5.CASUAL ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது  பற்றி 
BSNL வாரியக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

6. ஊழியர்களின்  வாடகை இல்லா குடியிருப்புத்தொலைபேசியில் 
இரவுநேர இலவசங்களை  அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

7. TTA ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் பற்றி  ஊழியர் தரப்பு இரண்டு    வாரங்களுக்குள் தங்களது கருத்துக்களை அளிக்க வேண்டும்.

8. DELOITTE குழு அமுலாக்கத்தில்  மாவட்டங்கள் இணைக்கப்படும் போது BUSINESS AREA எனப்படும் வியாபார வட்டத்தில் சம்பளம் மற்றும்  நிர்வாகப் பொறுப்புக்களும்,  ஊழியர் மாற்றங்கள் SSA அளவிலும் இருக்கும்.

9. MDF மற்றும் பழுது பதியும் தொலைபேசிகளை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும்.

10.இலாக்காத் தேர்வுகள்  அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. திருத்தங்கள் இருந்தால் மீண்டும் வெளியிடப்படும்.

11.சீருடை சம்பந்தமாக புதிய கொள்கை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

12.CORPORATE  அலுவலகப் பணியாளர்களுக்கு தலைமையகப்படி  
HQ ALLOWANCE வழங்குவது ஏற்கப்படவில்லை.

13. தவறுதலாக  வழங்கப்பட்ட பட்டுவாடாவை மீண்டும் பிடித்தம் செய்யக்கூடாது என்ற உச்ச  நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் அத்தகைய பிடித்தங்கள் இருந்தால் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

14. பணி நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் பணி நிறைவு நாளன்றே வழங்குவது, TA மற்றும் மருத்துவ முன்பணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

15. விதி 8ன் கீழ் ஊழியர்களுக்கு மாற்றல் வழங்குவதற்கு நிர்வாகத்தால் தடையாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று நிர்வாகத்தரப்பு கூறியுள்ளது.

16. மிகுதி நேரப்படியை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் எனவும்  ஏனைய படிகள் உயர்வு பற்றி பரிசீலிக்க இயலாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

17. JCM நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட  பிரச்சினைகள் அமுலாக்கம் பற்றி 19/10/2015 அன்று கூட்டம் நடைபெறும்.

18. பதவிகளின் பெயர் மாற்றப் பரிந்துரை BSNL நிர்வாகக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. விடுபட்ட கேடர்களுக்கும் பெயர் மாற்றுதல் பற்றி பரிசீலிக்கப்படும்.