.

Thursday, June 30, 2016

இன்று பணிஓய்வு பெறும் தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்
பணிஓய்வு பெறுபவர்கள்
P.அழகிரி Office supdt கள்ளக்குறிச்சி
V.பெருமாள் Telecom Technician கடலூர்
A.விஸ்வநாதன் Telecom Technician கடலூர்
R.ராஜேந்திரன் Asst. Telecom Technician கடலூர்
P.கமலா Telecom Technician கடலூர்
L.இளங்கோவன் Telecom Technician ஒலக்கூர்
S.நடராஜன் Telecom Technician சிதம்பரம்
B.கலியராஜு Telecom Technician சிதம்பரம்
M.காமராஜ் Telecom Technician B.முட்லூர்
S.ரகோத்தமன் Office supdt கடலூர்
S.லட்சுமி Office supdt விழுப்புரம்
R.சங்கரன் SDE கடலூர்
C.பழனியப்பன் SDE விருத்தாசலம்
R.ராஜேந்திரன் Office supdt திண்டிவனம்


Wednesday, June 29, 2016


கடலூரில் 28-06-2016 அன்று நடைபெற்ற தோழர்கள் A.விஸ்வநாதன், R.ராஜேந்திரன் பணிஓய்வு பாராட்டுவிழா காட்சிகள்




சிதம்பரத்தில் 28-06-2016 அன்று நடைபெற்ற பணிஓய்வு பாராட்டுவிழா காட்சிகள் சில 





கடலூரில் 28-06-2016 அன்று நடைபெற்ற பணிஓய்வு பாராட்டுவிழா காட்சிகள்




சிதம்பரத்தில் 28-06-2016 அன்று நடைபெற்ற பணிஓய்வு பாராட்டுவிழா காட்சிகள் சில 




Sunday, June 26, 2016

தோழர் P.அழகிரி பணிஓய்வு பாராட்டு விழா
கடலூர் மாவட்ட துணைத்தலைவர்  தோழர் P.அழகிரி பணிஓய்வு பாராட்டு விழா  கள்ளக்குறிச்சிக்கிளையின்  சார்பில்  கிளைத்தலைவர் தோழர் K.பாண்டியன் தலைமையில் 25-6-2016 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. தோழர் K.ராமன் வரவேற்புரை நிகழ்த்திட மாநிலதுணைத்தலைவர் தோழர்  V.லோகநாதன் துவக்க உரைநிகழ்த்தினார்.
மாவட்ட தலைவர் தோழர். R.செல்வம், மாவட்ட செயலர் தோழர்  இரா.ஸ்ரீதர் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் D.குழந்தைநாதன், K.அம்பாயிரம், D.இரவிச்சந்திரன், A.ரவிச்சந்திரன், A.C.முகுந்தன்,  கிளைசங்க செயலர்கள் தோழர்கள் கடலூர் S.ராஜேந்திரன், விழுப்புரம் G.கணேசன், முன்னாள் மாவட்ட செயலர் தோழர்  P.சுந்தரமூர்த்தி, மாநில உதவி செயலர் தோழர் தஞ்சை K.  நடராஜன், சேலம் மாவட்டசெயலர் தோழர்  C.பாலகுமார், குடந்தை மாவட்ட செயலர் தோழர் விஜய் ஆரோக்கியராஜ், மாநில அமைப்புசெயலர் தோழர் N.அன்பழகன், மாநிலத் துணைத்தலைவர் தோழர் G.வெங்கட்ராமன், கடலூர் முன்னாள் மாவட்ட செயலர் தோழர் என்.கே.எஸ், AIBSNLPWA சங்கத்தின் சார்பில் தோழர் P.ஜெயராமன், TMTCLU மாவட்டசெயலர் தோழர் G.ரங்கராஜு, TMTCLU மாவட்ட அமைப்புசெயலர் தோழர் V.இளங்கோவன், TMTCLU மாவட்டத் தலைவர் தோழர் M.S.குமார் மற்றும் அதிகாரிகள் திரு.காந்தி, திரு.ராஜவேலு ஆகியோரும் தோழரை  வாழ்த்தி  உரையாற்றினர். 
மேலும் மூத்தத் தலைவர்கள் தோழர்T.ரகு, தோழர் S.தமிழ்மணி,தோழர் ஆர்.கே, தோழர் சேது, சம்மேளன செயலர் தோழர் G.ஜெயராமன், அகிலஇந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர்,P.காமராஜ் ஆகியோரும் வாழ்த்தினர். மாநில  செயலர் தோழர் பட்டாபி அவர்களும், AITUC மாநில பொதுசெயலர் தோழர் T.K.மூர்த்தி அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
 சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.T.உதயசூரியன் அவர்களும் கலந்து கொண்டு தோழர் அழகிரியை வாழ்த்தினார். இறுதியாக தோழர் அழகிரி ஏற்புரை நிகழ்த்திட கல்லை  உதவி கிளைசெயலர் தோழர் N.ராஜாராமன் நன்றி தெரிவித்தார்.  விழா ஏற்பாடுகளை கிளைசெயலர் தோழர் S.மணி  உள்ளிட்ட கிளைத் தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர். அத்தோழர்களுக்கு மாவட்ட  சங்கத்தின் வாழ்த்துக்கள். 






Thursday, June 23, 2016

தோழர்களுக்கு  ஓர் வேண்டுகோள்!!
நமது தமிழ்மாநில சங்க அலுவலகத்தின் காப்பாளராக பணியாற்றிவந்த தோழர் கார்த்தியின் குடும்ப நிவாரணநிதி வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதுவரை நிதி அளிக்காத கிளைகள் உடனடியாக தோழர்களிடம் நிதியை  பெற்று மாவட்ட சங்கத்திடம் அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தோழமையுடன்
இரா.ஸ்ரீதர்.
  மாவட்ட செயலர்      

Tuesday, June 21, 2016

விருதுநகர் மாவட்ட மாநாடு

விருதுநகர் மாவட்ட மாநாடு 18/06/2016 அன்று விருதுநகரில் தோழர்.தளவாய்பாண்டியன் அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. 

தோழர்கள்.ஆர்.கே., சேது, பட்டாபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.இராமசாமி. துணைப்பொது மேலாளர்திரு.இராதாகிருஷ்ணன்ஆகியோர்சிறப்புறை ஆற்றினார்கள்   BSNLEU தவிர அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர். 

சென்ற இராஜபாளையம் மாநாட்டில் மாநாடு துவங்குவதற்கு முன்பே  பதவிகளுக்குப் போட்டி என்ற நிலை உண்டாகியது.

இம்முறை ஒருமித்த கருத்துடனே மாநாடு துவங்கி ஒன்றுபட்ட பட்டியலைத் தேர்வு செய்தது.

மாவட்டத்தலைவர் தோழர்.இராகவன் அவர்களுக்கும்
மாவட்டச்செயலர். தோழர்.இராம்சேகர் அவர்களுக்கும்
மாவட்டப்பொருளர் தோழர். செல்வராஜ் அவர்களுக்கும்
மற்றும் ஏனைய மாவட்டச் சங்க நிர்வாகிகளுக்கும்
நமது வாழ்த்துக்கள்

ஊழலும்... ஒழுக்கமின்மையும்... 
ஒருசேர நடமாடும் விருதுநகரில்.. 
நேர்மை போற்றிட.. கண்ணியம் காத்திட...
NFTEன் மரபு வளர்த்திட... 

 கடலூர் மாவட்ட சங்கம் புதிய நிர்வாகிகளை பணி சிறக்க வாழ்த்துகிறது.

Monday, June 20, 2016

வருந்துகின்றோம்

     நமது விழுப்புரம்  பகுதி தொலைபேசி நிலையத்தில்  பணிபுரியும்  தோழர் A.பட்டுசாமி TM  அவர்கள் (20-06-2016)இன்று காலை அகால மரணம் அடைந்தார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
    அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் பரிவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை விழுப்புரத்தில் நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
                                                                                                      -BY-

                                                                                 NFTE-மாவட்டச் சங்கம், கடலூர்.

Friday, June 17, 2016

        

                                               வருந்துகிறோம்

  நம்முடன் பொது மேலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் தோழர் P.சுப்பிரமணியன் SSS/CDL அவர்களின் தந்தையார் அவர்கள்  போபாலில் (17-06-2016) இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

       அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

       அன்னாரின் இறுதி ஊர்வலம் மத்திய பிரதேசத்திலுள்ள போபாலில் நடைபெறும்

                                                                                   -by-
                                                           NFTE மாவட்ட சங்கம், கடலூர்.

                                                        TMTCLU மாவட்ட சங்கம், கடலூர்.

Wednesday, June 15, 2016

BSNL ஓய்வு பெற்றோர் நலச்சங்க (BSNLPWA)
5-வது மாவட்ட மாநாடு
கடலூர் திருவள்ளுவர் திருமண மண்டபத்தில்  13-6-2016 திங்கள்கிழமை நடைபெற்றது. நமது மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு NFTE மாவட்ட சங்கத்தின் சார்பில் மாநாட்டை வாழ்த்தியும், மாநாட்டில் மாவட்டத் தலைவராக திரு.K.இளங்கோவன், செயலராக திரு.N.திருஞானம், பொருளராக திரு.ஹாஜாகமாலுதீன் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும் உரையாற்றினார்.
இம் மாநாட்டு நுழைவு வாயிலில் தேசியக்கொடி மற்றும் BSNLPWA சங்கக் கொடி ஏற்றுவதற்காக கம்பம் நட்டு உதவிய நமது தோழர் S.நவாப்ஜான் அவர்களையும் அவர்தம் குழு தோழர்களையும் நமது மாவட்ட சங்கம் சார்பில் வாழ்த்துகிறோம். 
   
வருந்துகிறோம்..
கடலூர் தோழர் K.கோதண்டராமன், டெலிகாம் டெக்னிசியன் அவர்களின் தாயார் இன்று          (15-6-2016)  அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்  தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது பிரிவில்வாடும்  தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும்  மாவட்ட சங்கத்தின்ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


அம்மையாரது இறுதி நிகழ்ச்சி இன்று (15-6-2016) மாலை 3-00  மணியளவில் கடலூர் ஆணைக்குப்பம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அருகில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும்.

Saturday, June 11, 2016

13-06-2016 திங்கள்
கடலூரில் நடைபெறும்
AIBSNLPWA
5-வது மாவட்ட மாநாடு
வெற்றிபெற

கடலூர் மாவட்ட   சங்கத்தின்  வாழ்த்துக்கள் .
ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

        தீர்வடையாத பிரச்சனைகளைத் தொகுத்து மாவட்ட நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்து 14.06.2016 கிளைகளில் “கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்” என்பதும் தெரிவிக்கப்பட்டது.
                துணைப்போதுமேலாளர்(CFA) அழைப்பின் பேரில் பேரில் மாவட்டத்தலைவர் தோழர் R.செல்வம், மாவட்ட உதவிசெயலர் தோழர் D.குழந்தைநாதன், GM அலுவலக செயலர் தோழர் S.ராஜேந்திரன் ஆகியோருடன் மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் சென்றார். அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விரிவான விவாதம் சுமூகமாக நடைபெற்றது.
         ஆகவே, துணைப்பொதுமேலாளர்(CFA) அளித்த நிர்வாகத்தின் உறுதிமொழியை ஏற்று 14.06.2016 அன்று அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
நிர்வாகம் தனது உறுதிமொழியை விரைவில்

செயல்படுத்தும் என நம்புகிறோம்!