.
Friday, May 31, 2019
Wednesday, May 22, 2019
Saturday, May 18, 2019
கண்ணீர் அஞ்சலி..
சிதம்பரம் மூத்த தோழர் சுதாகரன் அவர்கள் இன்று 18.5.2019 காலை 5.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் சுதாகரன் சிதம்பரம் பகுதியில் மூத்த தோழர் அண்ணாச்சி ரங்கநாதன் அவர்களுடன் சிதம்பரம் பகுதியில் இணைந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் முதல் முறையாக மஸ்தூர் சங்கத்தை உருவாக்கி அதன் தலைவராக பணியாற்றினார். கிளை, மாவட்ட சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றினார். தோழர் சுதாகரன் கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா. ஸ்ரீ தர் அவர்களின் சித்தப்பா ஆவார்.
அன்னாரது மறைவினால் வருந்தும் குடும்பத்தாருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது இறுதி சடங்கு நாளை 19.5.2019 காலை 9.00 மணியளவில் நடைபெறும்.
Thursday, May 16, 2019
Wednesday, May 15, 2019
Tuesday, May 14, 2019
வருந்துகிறோம்...
பெண்ணாடம் தோழர் V. இளங்கோவன் JE (கடலூர் மாவட்ட சங்க அமைப்புச் செயலர்) அவர்கள் தாயார் P. கமலம் அவர்கள் நேற்று 13.5.2019 இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வருந்தும் தோழருக்கும் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மையாரது இறுதி இறுதி சடங்கு இன்று 14.5.2019 மதியம் ஒரு மணியளவில் பெண்ணாடம் மேற்கு வீதி உள்ள இல்லத்தில் நடைபெறும்.
Friday, May 10, 2019
நமது பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் தோழர் T.பாலாஜி Telecom Technician (Stores) நமது மாவட்ட சங்கத்திற்கு தனது பங்களிப்பாக 5 சேர்
வாங்கி கொடுத்துள்ளார். தோழர் இம்மாதம் 31-06-2019 அன்று பணி ஓய்வு பெறவுள்ளார். தோழரின் பணி ஓய்வுக் காலம் சிறக்க மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்...
( மாவட்ட
செயலர் இரா.ஸ்ரீதர், மாவட்ட பொறுப்பு செயலர் D.K, மாநில
துணைத் தலைவர் V.லோகநாதன், கிளைச் செயலர் S.R, R.S.வேதராமன்
(SDE) கபிலன், (TMTCLU)மாவட்டத் தலைவர் M.S.குமார் ஆகியோருடன் சேர் வழங்கிய
நண்கொடையாளர் தோழர் T.பாலாஜி ,,, தோழருக்கு நன்றிகள் )
தோழமையுடன்
மாவட்டச் சங்கம்,கடலூர்.
நமது பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் தோழியர் கோமதி ராமலிங்கம் OS நமது மாவட்ட சங்கத்திற்கு நன்கொடையாக ரூ2000/- வழங்கினார். தோழியர் இம்மாதம் 31-05-2019 அன்று பணி ஓய்வு பெறவுள்ளார். தோழியரின் பணி ஓய்வுக் காலம் சிறக்க மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்...
தோழமையுடன்
மாவட்டச் சங்கம்,கடலூர்.
Wednesday, May 8, 2019
Monday, May 6, 2019
தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை
தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை குழு கூட்டம் நாளை 7.5.2019 மாலை 4.30 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும்.. அவ்வமயம் நமது BSNL பணிபுரியும் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் குழந்தைகளில் இவ்வாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தமிழில் முதல் இடம் பிடித்த மாணவ செல்வங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தமிழுக்கு ஊக்கம் - பரிசளிப்பு விழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆகவே அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
அன்புடன்
வீ.லோகநாதன்
செயலாளர்
சிரில் நினைவு அறக்கட்டளை
Thursday, May 2, 2019
அண்ணாச்சி DR அவர்களின்
மூன்றாம் ஆண்டு நிணைவு நாள்
கடலூர் மாவட்ட NFTE சங்கத்தின் பலம்
ஆணி வேர், தோழர் சிரிலின் சீடன்,
எல்லோராலும் அண்ணாச்சி என்றும்
DR என்றும்அன்புடன் அழைத்த
ஆணி வேர், தோழர் சிரிலின் சீடன்,
எல்லோராலும் அண்ணாச்சி என்றும்
DR என்றும்அன்புடன் அழைத்த
தொழிற்சங்க வழிகாட்டி
தோழர் கடலூர் D ரங்கநாதன்
தோழர் கடலூர் D ரங்கநாதன்
பனி போர்த்திய இமையமென வெள்ளுடை தரித்த கருணைச் செங்குன்று!
கோட்டமில்லாத நேரிய கொள்கைச் சிங்கம்!
அவர் பார்த்துப் பார்த்து கட்டிய கடலூர் கோட்ட சங்கம் – அதன் உறுப்பினர்கள் அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் பெருக்கம்!
அண்ணாச்சி நேர் பார்த்து கட்டி அமைத்த தந்தி—தொலைபேசி கம்பிப் பாதைகள், தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறிப் போயிருக்கலாம்.
ஆனால், அவர் கட்டி வளர்த்த
கொள்கை வீரர்கள் உண்டு—அண்ணாச்சி போற்றிய
கொள்கையை மேல் எடுத்துச் செல்ல!
கொள்கையை மேல் எடுத்துச் செல்ல!
மறைந்த நம் தலைவருக்கு
செங்கொடி தாHழ்த்தி புகழ் அஞ்சலி செலுத்துவோம்!
செங்கொடி தாHழ்த்தி புகழ் அஞ்சலி செலுத்துவோம்!
அண்ணாருக்கு நமது தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார்..உடன் நமது மாவட்ட செயலர் மற்றும் நமது தோழர்கள்....
மே தின பேரணி
தோழர்களே!. தோழியர்களே!!..
01-மே-2019 அன்று கடலூர் திருப்பாப்புலியூர் ரெஜிஸ்டர் அலுவலகத்திலிருந்து AITUC-CITU சார்பில் மே தினப் பேரணி புறப்பட்டு தேரடித் தெருவில் முடிந்தது. பேரணியில் நமது மாவட்டச் செயலர் உட்பட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் AITUC சார்பாக நமது மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன் அவர்கள் பேரணியில் விண்ணதிரும் வகையில் கோஷமிட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
Subscribe to:
Posts (Atom)