.

Thursday, October 31, 2019


 தோழர் குருதாஸ்தாஸ் குப்தா மறைந்தார் 


ஏஐடியூசி மாபெரும் இயக்கத்தின் மாபெரும் தலைவர் மறைந்தார்.  என்எல்சி வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்த தொழிலாளர் போராட்டத்திற்கு வித்திட்டு முன்னின்று நடத்திய தோழர்.
          NLC  ஒப்பந்த தொழிலாளர்களுக்களின் கோரிக்கையின் மீது தனி கவனம் செலுத்தி அதனை நிறைவேற்றிட பாடுவட்ட மாபெரும் தலைவர்                தோழர் குருதாஸ்தாஸ் குப்தா.  தொழிலாளர்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் 40 வருடங்களாக தொடர்ந்து சிங்கமென கர்ஜித்த மாபெரும் சிறந்த நாடாளுமன்றவாதி.         
          2003 தமிழக முதல்வர் ஜெயலலிதா  ஆட்சியின் போது பல லட்சம் தமிழக அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து ஒரு கருத்தரங்கில் அன்றைய இந்திய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் திரு வாஜ்பாய் அவர்களே தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக நடைபெறும் நடவடிக்கையின் மீது உரிய கவனம் செலுத்திட கர்ஜித்தவர் . அன்றைய பிரதமரை   நேரடியாக   கண்டனம் தெரிவித்த ஒரே மாபெரும் தலைவர் தோழர் குருதாஸ் தாஸ்குப்தா.
          ஏ.ஐ.டியுசி நூற்றாண்டு தொடங்கிய இன்னாளில் மறைந்த தோழருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் செவ்வணக்கம்.
          தோழருக்கு   நமது சங்கங்களின் சார்பில் பொது மேலாளர் அலுவலகத்தில் தோழருக்கு அஞ்சலி  இன்று மதிய உணவு இடைவேளை நேரத்தில் நிகழ்ச்சி நடைபெறும் . தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
                                                                               தோழமையுடன்
                                                                               D.குழந்தைநாதன்
                                                                 மாவட்டச் செயலர், கடலூர்-01.


Monday, October 28, 2019

வாருங்கள் அன்புடன் அழைக்கின்றோம்... விவாதிக்க.... நாளைய BSNLலின் நன்மை கருதி..



பங்குபெறுவோம்...... விவாதிப்போம்...... 
புரட்சி செய்வோம்....


Tuesday, October 15, 2019


மக்கள் சேவையில் 4-G தரத்துடன் மீண்டும் BSNL

-புத்தாக்கக் கருத்தரங்கம்-



அன்புடையீர்,
        வணக்கம். புது உற்சாகத்துடன் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  கைத்தொலைபேசி சாதாரண மக்களுக்கு ஒரு கனவாக இருந்ததை மாற்றி, அனைவர் கையிலும் செல்பேசி –உலகத்தரத்தில், கட்டுப்படியாகும் கட்டணத்தில்—என்று மாற்றி அமைத்ததில் பெரும் பங்கு அரசுத் தொலைபேசித் துறையாய் இருந்து பொதுத்துறை BSNL என்றான எங்களுக்கு உண்டு.  தனியார் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை – ஹலோ சொன்னதும் முதல் யூனிட் 16 ரூ, இன்கமிங் காலுக்கும் கட்டணம் என்ற அத்தனையும் – ஒழித்து, ஒரு வினாடிக்கு ஒரு பைசா, அரை பைசா என்றெல்லாம் தொலைத்தொடர்பில் புரட்சிக்கு வித்திட்டது BSNL எனில் மிகையில்லை.
        சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறோம். தரைவழி தொலைபேசி மட்டுமே அளித்த அரசுத் துறை, அரசின் புதிய பொருளாதார தொலைத்தொடர்பு கொள்கையால், பொதுத்துறையாக  2000 ஆண்டு அக்டோபர் முதல் தேதி புதிய பிறப்பெடுத்தது. கடந்து விட்ட இந்த 20 ஆண்டுகளில் எவ்வளவு நிகழ்வுகள். துவக்கப்பட்ட நிலையில் புதிய BSNL நிறுவனத்தின் நிகர கையிருப்பு 40 ஆயிரம் கோடி, பல லட்சம் மதிப்புடைய நிலம், கட்டடம் என அசையா சொத்துகள், சுமார் 3 லட்சம் ஊழியர்கள்.
        ஆனாலும், செல் சேவை வழங்கத் தனியாருக்கு அனுமதியளித்த அரசு எங்களுக்கு அனுமதி தரவில்லை; ஊழியர்கள் போராடித்தான் செல் சேவையில் தாமதமாக நுழைந்தோம். அதற்குள் செல் சந்தையைப் பிடித்த தனியார் நிறுவனங்களின் அத்தனை கட்டணக் கொள்ளைகளும் அரங்கேறின. செல் வியாபாரமல்ல, மக்கள் சேவை என்றாக்கியது BSNL. அரசு உதவாதது மட்டுமல்ல, -- சமமான விளையாட்டுக் களத்தை உறுதி செய்யாது – பாரபட்சமாக நடந்து கொண்டபோதும், தனியாரோடு கால்கள் கட்டப்பட்ட நிலையில் நாங்கள் கடமை ஆற்றுகிறோம்.  
3-G அலைக்கற்றை பெற ரொக்கமாக அரசுக்கு BSNL 18ஆயிரம் கோடி அளித்தது; தனியார் நிறுவனங்களோ பொதுத்துறை வங்கிகளின் கேரண்டி மற்றும் வங்கிக் கடன் பல்லாயிரம் கோடியில் தங்கள் வியாபாரத்தை நடத்தினர். இன்று அந்த நிறுவனங்களில் பல கடையைக் கட்டி ஓடிவிட்டனர், கடன் சுமையை வாராக்கடனாகப் பொதுத்துறை வங்கிகள் சுமக்கும்படி– அதாவது பொதுமக்களாகிய நம் தலையில் தான் – ஏற்றிவிட்டன.  லாபம் குறைந்ததும் ஓடி விட்டவர்கள், நிறுவனத்தை நடத்தும் போதும் கிராமங்களை எட்டிப் பார்க்கவில்லை, காஷ்மீரமோ, வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களோ மலைப் பிரதேசமோ அங்கெல்லாம் செல் கோபுரம் அமைக்கவில்லை, புயல் மழை வெள்ளம் நிலச்சரிவுஎன்ற இயற்கைச் சீற்றத்தின் போதும் பொதுமக்களோடு நிற்கவில்லை.  அப்போதெல்லாம் உற்றதுணையாய் உடன்நின்றது எங்கள் பொதுத்துறையான  BSNL மட்டுமே.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை, நீதித்துறை போன்றவற்றின் டிஜிட்டல் மயமாக்கும் செயல்பாடுகளைச் செயல்படுத்துவது BSNL. மேலும் மத்திய அரசின் ”டிஜிட்டல் இந்தியா” மக்கள் சேவையைப் பாரதத்தின் பல இலட்சம் கிராமப்புறங்களுக்கும் கொண்டு சேர்ப்பது BSNL பொதுத்துறையே.
        இன்று தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. பேசுவதற்கு மட்டும் போன் என்ற காலம் போய், டேட்டா இல்லை எனில் உயிரோட்டச் செயல்பாடு ஏதுமில்லை என்றாகி விட்டது. அதற்கு அடுத்த தலைமுறை அலைக்கற்றை 4G – 5G வேண்டும். இன்றைய அரசோ திட்டமிட்டு சொந்த நிறுவனமான BSNL ஐ புறக்கணிக்கிறது, இவ்வளவு இலட்சம் சொத்து மதிப்புடைய நிறுவனத்திற்கு வெறும் ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற ஒப்புதலோ 4G அலைக்கற்றையோ வழங்க மறுத்து ஒரு வருட காலமாக –100 நாள் திட்ட இலக்குடைய அரசு – BSNL புத்தாக்கம் மறுசீரமைப்பு பற்றி பேசுவதற்கே தாமதிக்கிறது. நோக்கம் அனைவருக்கும் தெரிந்த ரகசியமே. இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது மக்கள் சேவையே.
        பெருமுதலாளிகள் நிறுவனங்களின் கைகளில் உள்ள பத்திரிக்கை முதலிய ஊடகங்கள் வாயிலாக பொதுத்துறையான BSNL நிறுவனம் பற்றிய பொய்யான கட்டுக்கதைகள் – விரைவில் மூடப் போகிறார்கள், இன்று ஒன்னரை லட்சம் உள்ள ஊழியர்களே அதிகம், விருப்ப ஓய்வு தர வேண்டும் என்றெல்லாம் – மக்களை நம்ப வைக்க முட்டாள் ஆக்க முயற்சி நடக்கிறது.
        இதற்கெல்லாம் எங்களின் ஒரே பதில் – வீழ்வேன் என்று நினைத்தாயோ?  என்பது தான். அதற்குத் திட்டமிடவே கடலூரில் எதிர்வரும் நவம்பர் 6ம் தேதி BSNL புத்தாக்கத் திட்டமிடல் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்கில் வங்கி, எல்ஐசி, இரயில்வே, பாதுகாப்புத் துறை, ஏர் இந்தியா என பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசின் மக்கள் விரோத, பிற்போக்குக் கொள்கையை முறியடிக்க –
பொதுத்துறையைக் காக்க இந்திய உழைக்கும் வர்க்கமும், பொதுமக்களும் ஒன்று திரளவேண்டிய  அவசியத்தை வலியுறுத்தவும் –
இந்த தேசபக்த கோரிக்கையை – தேசத்தின் அரசியல் கோரிக்கையாக -- பாராளுமன்றத்தில் உறுதியாக ஆதரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கருத்தரங்கில் பற்கேற்க உள்ளார்கள். நிர்வாகத் தரப்பு அதிகாரிகளும் பங்கேற்பர்.
        அவர்களோடு சமீபத்தில் நடந்து முடிந்த ஊழியர் சரிபார்ப்புத் தேர்தலில் தமிழக அளவில் 50 சத வாக்குகளுக்கு மேல் பெற்று முதன்மை இடத்தையும் அகில இந்திய அளவில் அதிக வாக்குகளோடு இரண்டாமிடம் பெற்ற NFTE சங்க வெற்றிக்கு உழைத்த தோழர்களைப் பாராட்டிடவும் அகில இந்தியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், தோழமைச் சங்கத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
·       தேச விடுதலை என்ற ஒரே கோரிக்கையை வென்று இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் மகாத்மா காந்தியடிகள் கொண்டாட்டங்களில் இல்லை,
·       புரட்சி வெற்றியடைந்த இரவில் மாமேதை லெனின் நடுநிசி கடந்த நேரத்தில் சோவியத்தின் திட்டங்களை வரைந்து கொண்டிருந்தார்,  
·       அண்ணல் அம்பேத்கார் இரவில் விழித்துக் கொண்டிருந்த காரணம் கேட்டபோது – மற்ற தலைவர்கள் உறங்கச் சென்ற நிலையில் –’எனது மக்களின் விடியலுக்காக விழித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறியது போல,
        NFTE பேரியக்கத்தின் வெற்றி -- கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், நன்றி அறிவிப்பு என்றெல்லாம் ஆரவாரமாகக் கூற மாட்டோம் – மக்கள் சேவைக்காக, BSNL நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்ய, அதற்காகத் திட்டமிட, சங்கங்களிடையே ஒற்றுமையை மேலும் வலிமையாகக் கட்ட கருத்தரங்கில் கூடுவோம்!
        கருத்தரங்கத்தின் வெற்றிக்கு ஏனைய மாவட்டச் சங்கங்கள் நன்கொடையோடு கடலூர் மாவட்டச் சங்க நிர்வாகிகள், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநிலச் சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் தலா ரூபாய் 2000/= வழங்க முடிவு செய்துள்ளனர்.  ஓய்வு பெற்ற நமது முன்னாள் தோழர்களும் நண்பர்களும் எப்போதும் போல் நமக்கு உதவுவர். கடலூர் மாவட்டத் தோழர்கள் தங்களால் இயன்ற, விரும்பிய அளவு – தினைத் துணையாயினும், பனைத்துணையாகக் கொள்வோம் – நன்கொடை அளிக்க வேண்டும்.  அதனினும் முக்கியம் நீங்கள் அனைவரும் அவசியம் கருத்தரங்கில் பங்கேற்கத் தோழமையுடன் அழைக்கிறோம்.
அன்புடன் அழைக்கும்,

G.கணேசன்                 A.S.குருபிரசாத்                D.குழந்தைநாதன்
மாவட்டத் தலைவர்                  மாவட்டப் பொருளர்                         மாவட்டச் செயலர்
    
     இரா.ஸ்ரீதர்
   ஒருங்கிணைப்பாளர்


தோழர்களே!!
வணக்கம்!
11.10.2019 வெள்ளி மாலை 5.00 மணியளவில் கடலூர் மாவட்டச்சங்க அலுவலகத்தில் செயலகக்கூட்டம் மாவட்டத் துணைத்தலைவர் தோழர் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச்சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில்
Ø மாநில சங்கத்தின் சார்பில் கடலூரில் 11.11.2019 அன்று   கோரிக்கை மாநாடு மற்றும் நன்றி அறிவிப்பு கூட்டம் சிறப்பாக நடத்திட முடிவெடுக்கப்பட்டது. மேலும்  கடலூர் மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் தலா ரூ.2000 தருவதென்றும், மேலும் நன்கொடை வசூல் செய்து தருவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
v பிரச்சனைத் தீர்வு:
Ø ஒப்புக்கொண்ட மாற்றல்களை (Transfer) நிர்வாகம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கவும், NEPP விரைவாக அமுல்படுத்திட நிர்வாகத்தை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது,
Ø கடலூர் மாவட்ட JCM, works committee, sports council, welfare board     உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
v JCM குழு
1.  இரா.ஸ்ரீதர் AOS, பொதுமேலாளர் அலுவலகம்
2.  D.குழந்தை நாதன் JE-கடலூர்
3.  S. மணி TT-கள்ளக்குறிச்சி
4.  D.ரவிச்சந்திரன் TT-சிதம்பரம்
5.  G.ஜெயச்சந்தர் TT-திண்டிவனம்
6.  D. சரவணக்குமார் AOS- விழுப்புரம்
v Works committee
கடலூர் பகுதி
1.  D.குழந்தை நாதன் JE-கடலூர்
2.  K. ஜெய்சங்கர் TT-சத்திரம்
3.  PMKD.பகத்சிங் TT- திட்டக்குடி
விழுப்புரம் பகுதி
1.  S. சண்முகம் TT- விழுப்புரம்
2.  N.பெரியசாமி TT-கள்ளக்குறிச்சி
3.  R.ரவி TT-செஞ்சி
v Special Welfare Board
Ø M.மஞ்சினி TT-கடலூர்
v Sports Cultural Board
Ø K.V.பாலச்சந்தர் JE-கடலூர்
 தோழமையுள்ள
D.குழந்தைநாதன்
மாவட்டச் செயலர்

Saturday, October 12, 2019


கணிப்பொறி /செல்பேசிக் கடன்
Computer/Mobile Phone Loan

கணிப்பொறி /செல்பேசிக் கடன் (Computer/Mobile Phone Loan) நமது மாவட்ட சேமநல நிதி (Welfare Fund)-ல் வழங்கப்படவுள்ளது. கடன் வேண்டுபவர்கள் உடனடியாக கடன் விண்ணப்பத்துடன், கணிப்பொறி /செல்பேசி (Computer/Mobile Phone ) quotation-னுடன் இணைத்து மாவட்ட பொதுமேலாளர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும்.
குறிப்பு: கடன் விண்ணப்பம் பரிசீலனை முதல் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

Thursday, October 10, 2019


அவசர செயலகக்கூட்டம்
தோழர்களே! வணக்கம்
நாளை 11.10.2019 வெள்ளி மாலை 5.00 மணியளவில் கடலூர் மாவட்டச்சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தோழர் G.கணேசன் தலைமையில் அவசரச் செயலகக்கூட்டம் நடைபெறும். அனைத்து மாவட்டச்சங்க நிர்வாகிகள், அனைத்துக் கிளைச்செயலர்கள் தவறாது பங்கேற்க வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுள்ள
D.குழந்தைநாதன்
மாவட்டச் செயலர்

Wednesday, October 9, 2019

        


         தஞ்சையில் நடைபெற்ற அனைத்து  மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் BSNL புத்தாக்கமும்....  கோரிக்கை மாநாடும்...... நன்றி அறிவிப்பு கூட்டத்தினை சிறப்பாக நடத்திட   நமது கடலூர் மாவட்ட சங்கத்திற்கு மாநிலச் சங்கம் பொறுப்பு வழங்கியுள்ளது.
             மாநிலச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று  கடலூர் மாவட்ட சங்கம் வருகின்ற 06.11.2019 அன்று நடத்திட திட்டமிட்டுள்ளது. மாநிலச் சங்கத்தின் வேண்டுகோளின் படி  அனைத்து மாவட்ட சங்கங்களும்  நிதியினை விரைந்து  கீழே குறிப்பிட்ட வங்கி எண்ணுக்கு அனுப்பிடமாறு தோழமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.


D.KULANDAINATHAN
A/C NUMBER: 614901502899
ICICI CUDDALORE MAIN BRANCH
IFSC CODE: ICIC0006149

                                                                                                          D.குழந்தை நாதன்
                                                                    மாவட்ட செயலாளர்
பெரும்திரள் ஆர்ப்பாட்டம்

LIC,EPF,PLI, வங்கி,சொசைட்டி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பிடித்தங்களை செலுத்தாத நிர்வாகத்தை கண்டித்து  10-10-2019  அன்று
பெருந்திரள் ஆர்ப்பாட்டம்”.

அன்பார்ந்த தோழர்களே ,,

          நாம் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு பல மாதங்களாக தவணைகளை செலுத்தாத நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக செலுத்திட வலியுறுத்தியும்  10-10-2019 ஆம் தேதி அனைத்து கிளைகளிலும் பெரும்திரள் ஆர்ப்பாட்டம்  நடத்திட வேண்டுகிறோம்.

          வங்கிக்கடன் தவணை ஜூலை வரை செலுத்தப்பட்டிருந்த போதும்  அபராத வட்டி ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படுகிறது. இன்சுரன்ஸ் தவணை தவறியதால் பாலிசி காலவதியாகும் நிலையில் உள்ளது. இனி இன்சூரன்ஸ் தொகை பிடித்தம் செய்ய வேண்டாம், ஊழியர்களே நேரடியாக செலுத்துவார்கள் என மாநில நிர்வாகத்தை கேட்டுள்ளோம். GPF, சொசைட்டி பிடித்தம் செய்து தொகையை செலுத்திட தவறியதால் கடன் பெற முடியாமல் ஊழியர்கள் பெறும் அவதி பட்டு வருகின்றனர். பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உரிய நிறுவனத்தில் செலுத்திட , கடன் பாதிப்பை களைந்திட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி அக் 10 ம் தேதி ஆர்ப்பட்டத்தை வெற்றிகரமாக்குவோம். நமது தோழமை (SEWA,PEWA,PEWA) சங்கத்தின் தோழர்கள்ளோடு பெரும்திரள் ஆர்ப்பாட்டம்  நடத்திடுவோம்.

                                                                                                  D.குழந்தை நாதன்

                                                                             மாவட்ட செயலாளர்

Thursday, October 3, 2019



இன்றைய தகவல்
(03.10.2019)

தோழர்களே!...
        நமது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நேரத்தை குறைப்பது மற்றும் சில ஒப்பந்த ஊழியர்களை  வேலையை விட்டு நீக்குவது  உள்ளிட்ட  பிரச்சனை சம்மந்தமாக பொது மேலாளரை இன்று (03.10.2019) 12:00 மணியளவில்   சந்தித்து பேச்சு வார்த்தை  நடத்தினார்கள்.
       பேச்சுவார்த்தையில் சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்திலிருந்து மறு உத்தரவு வரும் வரையில் எந்த ஒப்பந்த தொழிலாளர்களையும்  நீக்கமாட்டோம் என்று   உறுதியளித்துள்ளார். மற்றும் அப்படி ஏதேனும்  மாறுதல் இருந்தால் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நட்த்தி அதன் மூலம் செயல்படுத்துவோம் என நமது பொது மேலாளர் அவர்கள் நமது சங்க  நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
       எனவே இப்போது  இந்த பணி நேர குறைப்பு மற்றும்  சில தொலைபேசி நிலையங்களில் ஆட்களை நீக்குவது  நிறுத்தப்பட்டுள்ளது.

       பேச்சுவார்த்தைக்கு நமது மாவட்டச் செயலர் தோழர் D.குழந்தைநாதன் ,  மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம்  மற்றும் மாவட்டப் பொருளாளர் தோழர் A.S.குருபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்....