.

Thursday, April 30, 2020

*VRS இல் சென்ற தோழர்களுக்கு..*🙏
  *தங்களது லீவ் சேலரியில் பிடித்தம் செய்யப்பட்ட வங்கிக் கடன் தொகை அந்தந்த வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சில வங்கிகளில் வரவு வைக்கப்பட்டு விட்டது. கனரா வங்கியில் இன்னும் வரவு வைக்கப்பட வில்லை. அந்த வங்கியிலும் விரைவில் வரவு வைக்கப்பட்டு விடும். தோழர்கள் சிலருக்கு மீதமுள்ள கடன் தொகையும் இரண்டாவது exgratia  தொகையில் பிடித்தம் செய்யப்பட்டு விடும். இது சம்பந்தமாக யாரும் வங்கிகளுக்கு செல்லத் தேவையில்லை. கடன் முழுமை பெற்றதற்கான  *no due certificate*ஐ கடலூர் BSNL மாவட்ட நிர்வாகமே வங்கியில் இருந்து பெற்றுக் கொள்ளும். இது பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. *தோழமையுடன் குழந்தை நாதன் மாவட்டச் செயலர்*

Friday, April 24, 2020

80சதம் ஒப்பந்த ஊழியர்கள் ஆட்குறைப்பு



   தோழர்களே நமது மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை 80 சதம் குறைப்பதற்கு நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது .  இதன்  சம்மந்தமாக நிர்வாகத்தினை இன்று 24.04.2020 காலை 11.00 மணியளவில்  நமது NFTE  சார்பில்   

   மாவட்டச் செயலர் தோழர் D.குழந்தைநாதன், மாவட்ட பொருளாளர் தோழர் A.S.குருபிரசாத், கிளைச் செயலர் தோழர் A.சகாயசெல்வன்  ஆகியோரும்  BSNLEU  சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர் தோழர் K.T.சம்பந்தம், மாவட்ட உதவிச் செயலர் தோழர் K.சிவசங்கர் ஆகியோர் சந்தித்தனர்.  நமது மாவட்ட செயலர் எக்காரணத்தை கொண்டும் ஆட்களை குறைக்க கூடாது எனவும். இது சம்மந்தமாக தற்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம் எனவும்.  இந்த கோவிட்-19 சம்மந்தமாக எந்த ஒரு ஊழியரையும்  வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப கூடாது என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட  உத்திரவினையும் எடுத்து கொடுத்தோம்.

        நமது  கடிதத்தின் பேரில் நிர்வாகம் ஆட்குறைப்புனை  செய்யும் வேலைகளை தற்போது நிறுத்தி வைப்பதாக நமது சங்கத்திடம் கூறியுள்ளது.  
தோழமையுடன்

                                                D.குழந்தைநாதன்
மாவட்ட செயலர், 
கடலூர்.


 நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட கடித நகல்:-




நமது கடலூர் மாவட்ட சங்கம் கடந்த 8 மாதங்களாக சம்பளம் இன்றி அல்லலுறும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவிட வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதனை ஏற்று பலரும் சங்க வேறுபாடின்றி மனமுவந்து  உதவி செய்து வருகின்றனர். இதையொட்டி ஓய்வுபெற்ற கடலூர் பொது மேலாளர் (நிதி) திரு. P.சாந்தகுமார் அவர்கள் மனமுவந்து ரூபாய் 10,000 அளித்துள்ளார். அவருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

Wednesday, April 22, 2020

தோழர்களே வணக்கம்.

       CSC பகுதியில் காலை 09.00மணி முதல்  மாலை 05.00 மணி வரையில் தொடர்ந்து நமது ஊழியர்கள்  இந்த கொரோன வைரஸ் தொற்றை பரவலை கட்டுபடுத்திட (144) ஊரடங்கு காலத்தில் பணிக்கு அனைத்து ஊழியர்களும்  வரவேண்டும் என  நமது மாநில நிர்வாகத்தின் உத்திரவின் பேரில் நமது மாவட்ட நிர்வாகம்  மேற்கண்ட உத்திரவினை வாய்மொழி மூலமாக அமுல்படுத்தியதன் மூலம் நமது ஊழியர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். நமது மாவட்ட சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக  பொது மேலாளரை  நேரில் சந்தித்து விவாதித்தோம்.  சரியான தீர்வு கிடைக்காததால்  மாநில சங்கத்திற்கும் கொண்டு சென்றோம். மாநிலச் சங்கம் , மாநில  நிர்வாகத்திடம் வலியுறுத்தியன் பேரில் , மாநில நிர்வாகமும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநிலச் செயலரிடம் உறுதி அளித்தனர். இருப்பினும் நமது மாவட்ட செயலாளர் நமது பொது மேலாளரிடம்  தொடர்ந்து  முறையிட்டதின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம்   இன்று துணைப் பொது மேலாளர் (CFA) அவர்கள்  மாவட்ட செயலரை அழைத்து பேசினார். அதனை தொடர்ந்து நாளை ( 23.04.2020) முதல்  CSC   பணிக்கு வரும் ஊழியர்கள் காலை 09.00மணி முதல்  மதியம் 01.00 மணி வரையில்  பணி  செய்தால் போதும் எனவும் மதியம் 01.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையில் ஒருவர் மட்டும்  பணியில் இருந்தால் போதும் என அறிவித்தார். 

       இதற்கு ஒத்துழைப்பு நல்கிய மாநில  செயலாளருக்கும், மாவட்ட பொது மேலாளர் அவர்களுக்கும் , துணை பொது மேலாளர் ஆகியோருக்கு நமது  நன்றி...

                                                                                            தோழமையுடன்
                                                                                            D.குழந்தைநாதன்

                                                                             மாவட்டச் செயலர், NFTE,                                                                                                                              கடலூர்.

Saturday, April 18, 2020

காலத்தி    னாற்செய்த  நன்றி  சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது – குறள்102.



            நாடு முழுவதும் மக்கள் கொரோனா தாக்குதலில் இருந்து மீள முடியாத துயரத்தில் இருக்கும் போது  தம் வாழ்வாதாரத்தினை இழந்து  கடந்த 8 மாதங்களாக சம்பளம் இல்லாமல் பணிபுரிந்து கொண்டிருக்கும் நமது ஒப்பந்த ஊழியர்களை சக மனிதனாக நினைத்து, அவர்களின் துயர் துடைத்திட  கடலூர் கோட்டத்திற்குட்பட்ட தொலைபேசி நிலையங்கள், பொது மேலாளர் அலுவலகம், TRA வருவாய் பிரிவு ஆகிய பகுதிகளில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும்  தலா 10கிலோ அரிசி,  81 தோழர்களுக்கு பெரும் உதவியினை உடனடியாக செய்து கொடுத்து பெரும் பங்காற்றிய  மதிப்பிற்குரிய திரு P.செந்தில்குமரன் SDE (IT) VRS அவர்களை மனதார பாராட்டுகின்றோம். வாழ்த்துகின்றோம்.
       இந்த  துயர் துடைக்கும்  சீரிய மகத்தான பணியினை  நமது மாவட்ட சங்கமே முன் நின்று செயல்படுத்திட வேண்டுகோள் விடுத்தார்.  அந்த வேண்டுகோளுக்கிணங்க நமது மாவட்ட செயலர் தலைமையில் முன்னின்று சங்க வேற்பாடின்றி அனைத்து  தோழர்களுக்கும் 18.04.2020 இன்று வழங்கினோம்.... இச்செயலுக்கு உறுதுணையாக நின்ற நமது தோழர்களுக்கு   மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றி கலந்த பாராட்டுகள்.
மனிதம் காத்திடுவோம்,,,, மனம் நிறைவடைவோம்...

தோழமையுடன்
D.குழந்தைநாதன்
மாவட்டச் செயலர்,

NFTE, கடலூர்.






மனிதம் வாழ்கிறது.... வாழ்த்துக்கள் தோழரே!...


             நமது தொழிற்சங்கத்தின் பாரம்பரியம் ஒவ்வொரு பேரிடர் காலங்களில்  தம்முடன் சார்ந்த தொழிலாளர்களுக்கு  இயன்றதனை செய்து வருவது நமது NFTE பேரியக்கத்தின் மரபு. அவ்வழியில் உலகை ஆட்டிப் படைக்கும் இந்த கொரோன வைரஸ் தாக்குதலிருந்து  மீண்டிட  முயற்சிகள் நடைபெற்று வருகிறது .    நிரந்திரமாக சம்பளம்  பெறுபவர்களே தினறும் வேலையில் நமது ஒப்பந்த தொழிலாளர்களின் நிலைமை கேள்வி குறியே????...   இந்த  சூழ்நிலையில் தோழர்  K.சுப்புராயலு TT அவர்கள் மே மாதம் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு நமது NFTEயின் வேண்டுகோளை ஏற்று  கடலூர் மெயின் தொலைபேசி நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ( சங்க வேறுபாடின்றி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும்) தலா 10கிலோ அரிசி  25 தோழர்களுக்கு  வழங்கி துயர் துடைக்க முயற்சி எடுத்து அதனை இன்று 18.04.2020 காலை தொலைபேசி நிலையத்தில்  ஒப்பந்த ஊழியர்களுக்கு  வழங்கினார்.  தோழர் மே மாதம் பணி ஓய்வு பெற இருந்தாலும் , இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு இன்றே செய்வது தான் சாலச் சிறந்தது என எண்ணி  தன்னால் இயன்ற வரையில் செய்து கொடுத்த தோழர் K.சுப்புராயலு TT  அவர்களுக்கு கடலூர் NFTE ,TMTCLU மாவட்டச் சங்கங்களின் சார்பில் மனதார பாராட்டுகின்றோம். 

தோழமையுடன்
D.குழந்தைநாதன்
மாவட்டச் செயலர்,

NFTE, கடலூர்.
 





Monday, April 13, 2020



                    மனிதம் காத்திட நிதியளிப்பீர்
தோழர்களே,, தோழியர்களே ..

அனைவருக்கும் வணக்கம்,  நமது தொலைத்தொடர்பு நிறுவனத்தில் அயராது தொடர்ச்சியாக அரும்பாடு பட்டு வரும் நமது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு மேல் ஊதியப் பட்டுவாட நடைபெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. 

இந்த சூழ்நிலையில் உலகையே  ஆட்டிப்பிடிக்கும் கொரனா  வைரஸ் தாக்குதலில் உலகம் முழுமையும்  உள்ள செல்வந்தர்கள் முதல் ஏழை தொழிலாளி வரை அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மக்களை வெளியே யாரும் நடமாட கூடாது எனவும்  மாநில , மத்திய அரசுகள் எச்சரிக்கை மணி அடித்து 144உத்தரவு வெளியிட்டுள்ளது . இதனால் மக்கள் யாரும் வெளியில் வராமல் இருப்பதனை கொண்டு உண்டு வருகிறார்கள்.. 

இது போதுமான பொருளாதாரம் கொண்ட மக்களுக்கு இது பொருட்டல்ல. ஆனால் நமது மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் நிலைமையினை எண்ணும் போது சற்றே மனம் வருந்துகிறது... ஏற்கனவே ஏழு மாதம் சம்பளம் பெறாமல் தினசரி வேலை செய்யும் நம் தோழர்களுக்கு உதவுவது நமது தலையாய கடமையாகும்.

ஆகையால் எத்தனையோ நபர்களுக்கு வாழ்வளித்துள்ளது நமது தொழிற்சங்கம்.  அவ்வழியில் நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு நமது தொழிற்சங்கத்தின் இயன்றதனை செய்ய நமது மாவட்ட சங்கம்  முன் முயற்சி எடுத்துள்ளது. ஆகையால் நமது தோழர்கள், தோழியர்கள், அதிகாரி பெருமக்கள், ஓய்வு பெற்ற தோழர்கள் நம்மால் இயன்ற நிதி உதவியினை தந்து அவர்கள்  உண்டு வாழ்ந்திட   உதவிகரம் கொடுப்போம்... மனிதம் காப்போம்..


 நிதியளிப்போர்
கீழ் உள்ள மாவட்ட செயலரின் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம்
D.குழந்தைநாதன்
வங்கி எண்: 614901502899
IFSC CODE: ICIC0006149
வங்கி கிளை: ICICI கடலூர்

Google Pay, Phonepe: 9489960633.



தாரளமாக  நிதி அளிப்பீர்... மனிதம் காப்போம்

                                                      தோழமையுடன்

         G. கணேசன்                           A.S குருபிரசாத்                D.குழந்தைநாதன் 
            மாவட்ட தலைவர்               மாவட்ட பொருளாளர்      மாவட்டச் செயலர்,
               

Friday, April 10, 2020

கண்ணீர் அஞ்சலி!
*கடலூர் வருவாய் பிரிவு பகுதியில் (TRA) ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் நமது தோழர் ஜான்சன் அவர்களின் துணைவியார் மஞ்சள் காமாலை நோய்வாய்ப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை 3 மணி அளவில் மரணமுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். துணைவியார் மறைவினால் துயருறும் தோழர் ஜான்சன் அவர்களுக்கும் அவர்தம் உற்றார் உறவினர்களுக்கும் கடலூர் NFTE-BSNL, TMTCLU மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு இன்று மாலை கடலூர் சொரக்கல்பட்டு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*

Thursday, April 2, 2020



திரு V.ராஜு Sr DDG , எர்ணாகுளம்       (முன்னாள் CGM தமிழ்நாடு circle) அவர்கள் 1.4.2020       அன்று இரவு 10.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.31.03.2020 பணியில் இருந்து ஓய்வு பெற்றார்கள். பழகுவதற்கு இனிமையான மனிதர். மனிதாபிமானம் மிக்க நல்ல அதிகாரி. நெருக்கடியான காலகட்டத்தில் தலைமைப் பொது மேலாளராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர்.  திருநெல்வேலி, திருச்சி,காரைக்குடி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் பணியாற்றியவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது மறைவிற்கு அஞ்சலியையும், அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு கடலூர் மாவட்ட சங்கம்  தனது ஆறுதலையும் பதிவு செய்கிறது. குழந்தை நாதன், மாவட்டச்செயலர், NFTE-BSNL.