.

Saturday, May 30, 2015

மாவட்டத்துணைத் தலைவர் தோழர்.S.அன்பழகன் பணி ஓய்வு பாராட்டு விழா 
28-05-2015 விருத்தாசலத்தில் நடைபெற்றது, கிளைசெயலர் தோழர் V.இளங்கோவன் தலைமையில், மாநில துணைத்தலைவர் தோழர். V.லோகநாதன் துவக்க உரையாற்றினார். தோழர்கள். SNATTA மாநிலதுணைத்தலைவர் தோழர்.சிவசங்கரன், கிளை பொருளர் P.கமலக்கண்ணன், மாவட்ட தலைவர் R.செல்வம், மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், மாவட்டத்துணைத் தலைவர் தோழர்.P.அழகிரி, மாவட்ட அமைப்பு செயலர் தோழர், K.அம்பாயிரம், மாவட்ட உதவி செயலர் தோழர்.D.குழந்தைநாதன், முன்னாள் மாவட்ட செயலர் தோழர்.R.சுந்தரமூர்த்தி, கிளையின் மூத்தத் தோழர் D.மோகன்ராஜ், TMTCLU மாவட்ட செயலர் தோழர்.G.ரங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயலர் தோழர் பட்டாபி வாழ்த்துரை வழங்கியது மட்டுமிலாமல் இன்றைய அரசியல் சூழ்நிலையையும் அதில் நமது பங்களிப்பையும் விளக்கி பேசினார். தோழர் பட்டாபியின் உரை சிறப்பாக அமைந்தது. பின்னர் ஏற்புரை தோழர் அன்பழகன் வழங்க நன்றியரை வழங்கினார் தோழர் கமலக்கண்ணன். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த கிளைசெயலர் தோழர் இளங்கோவன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

















TMTCLU சங்க கொடியேற்றம்

உளுந்தூர்பேட்டையில் 28-05-2015 அன்று மாவட்டத்தின் இரண்டாவது இடமாக TMTCLU சங்கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கக் கொடியை மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் ஏற்றிவைத்தார். மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், TMTCLU மாவட்ட செயலர் தோழர்.G.ரங்கராஜ், மாவட்ட அமைப்பு செயலர் தோழர், K.அம்பாயிரம், மாவட்ட உதவி செயலர் தோழர்.D.குழந்தைநாதன், தோழர் V.இளங்கோவன், கிளை செயலர் தோழர் M.நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.




சேலம் மாவட்ட மாநாடு

26-05-2015 அன்று இனிதே நடைபெற்றது . இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுஉறுப்பினரும், ஈரோடு மாவட்டசெயலரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் செயலருமான  தோழர். த.ஸ்டாலின் குணசேகரன் எழுச்சியான துவக்க உரை நிறைவான உரையாக அமைந்தது.  
மாநில செயலர் தோழர் பட்டாபியின் அறிக்கைகளைத் தொகுத்து பட்டாபி 100 என்ற நூலை சேலம் மாவட்டத்தின் சார்பாக முதல் பிரதியை தோழர்.ஆர்கே வெளியிட, சேலம் மாவட்ட மாநாட்டின் வரவேற்பு குழுத்தலைவர். M.சுப்பிரமணியன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலின் அறிமுகவுரையை மாநில உதவி செயலர் தோழர். தஞ்சை K.நடராஜன் வழங்கினார். இந்நூல் வெளியிட கடுமையாக உழைத்த குடந்தைத் தோழர்.விஜய் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
மாநில செயலர் தோழர் பட்டாபியின் எழுச்சிமிகு சிறப்புரையில் நடந்து முடிந்த வேலைநிறுத்தத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை விளக்கினார். தொழிற்சங்கத்தில் சேலம் பகுதியின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.
கருத்துரை வழங்கினர் மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ், மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.K.சேது.  
தோழர். ஆர்.கே நிறைவுப்பேருரை ஆற்றினார். நமது மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். உடன் நமது மாவட்டத்துணைத் தலைவர் தோழர்.P.அழகிரி கலந்துகொண்டார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. மாநாட்டிற்கான மண்டபம் முதல் ஊரின் பல பகுதிகளிலும் தோரணங்கள், விழா மேடை அமைப்புகள், உணவு உபசரிப்புகள், சிறப்பான ஆண்டறிக்கை, சிறப்பு விருந்தினர்களுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. சேலம் மாவட்ட பொதுமேலாளர், மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைத்து தோழமை சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டது சிறப்பாக இருந்தது. மாநாட்டினை சிறப்பாக நடத்திட்ட மாவட்ட செயலர் தோழர்.C.பாலகுமார் மற்றும் இதற்காக உழைத்திட்ட தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.







புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர் தோழர் S.சின்னசாமி, மாவட்ட செயலர் தோழர்.C.பாலகுமார், மாவட்ட பொருளராக தோழர்.S.காமராஜ் ஆகியோருக்கும் கடலூர் மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. 


Friday, May 29, 2015

JTO LICE 2013

We come to know from authorised sources some clarifications have been issued to TN circle regarding calculation of JTO vacancies as per the year wise existing rules.

Regarding  litigation, we  come to know that the Corporate office directed the Circle to go SLP.

இரங்கல் செய்தி



கடலூர் நேரு நகர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர்   S ரங்கநாதன் TM அவர்களின் தாயார் இன்று (29-05-2015) காலை இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும்   மாவட்ட சங்கத்தின் சார்பில்  இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 இறுதி நிகழ்ச்சி நாளை (30-05-2015) காலை கடலூர் சண்முகம் பிள்ளை தெருவிலிருந்து  நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Tuesday, May 26, 2015

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை கூட்டம்

2014-2015-க்கான 10-ம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு தேர்வுகளில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ செல்வங்களுக்கு இந்த வருடமும்  (16-ம் ஆண்டு விழா) பரிசளிப்பு அளிக்க விழா எடுக்கவிருப்பதால் அதற்குரிய கலந்தாய்வுக்கூட்டம் வருகின்ற 29-05-2015 வெள்ளிகிழமை மதியம் 2-30 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. ஆகவே அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன், 

V. லோகநாதன்
செயலாளர்
சிரில் அறக்கட்டளை 








Monday, May 25, 2015

AIBSNLEA கண்டன ஆர்பாட்டம்
AIBSNLEA மத்திய சங்கத்தின் அறைகூவலின்படி MANAGEMENT TRAINEE RECRUITMENT-க்கு வெளியிலிருந்து ஆளெடுப்பு நடைபெறுவதைக் கண்டித்தும், BSNL-ல் பணிபுரியும் ஊழியர்களைக் கொண்டே அப்பதவிகள் நிரப்பப்பட வேண்டும் என  வலியுறுத்தியும் கடலூர் GM அலுவலக வாயிலில் கண்டன ஆர்பாட்டம் இன்று (25-05-2015) நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 



Sunday, May 24, 2015

வாழ்த்துக்கள்
கடலூர் AITUC மாவட்ட குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபட்ட தோழர்கள்


தோழர்.V.இளங்கோவன் 


தோழர்.G.ரெங்கராஜூ 

மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!

திட்டக்குடி கிளை மாநாடு மற்றும்
தோழர் A.சுப்பிரமணியன் பணி ஓய்வு பாராட்டு

23-05-2015 அன்று நடைபெற்றது. மாநாட்டில் மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் பண்ருட்டியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு சற்று தாமதமாக கிளை மாநாட்டில் கலந்துகொண்டார். தனது வாழ்த்துரையில் மாவட்ட சங்க செயல்பாடு மற்றும் குறைபாடுகள் ஆகியவற்றை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். மாவட்ட துணைத்தலைவர் தோழர் S.அன்பழகன் உடன் கலந்துகொண்டார். சம்மேளன செயலர் தோழர்.G.ஜெயராமன்,
மாநிலப்பொருளர் தோழர்.K.அசோகராஜன், மூத்தத் தோழர் T.ரகு
ஆகியோரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

AITUC கடலூர் மாவட்ட 6-வது மாநாடு

பண்ருட்டியில் மாவட்டத் தலைவர் N.மாரியப்பன்
தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில்
மாநிலத்தலைவர் தோழர்.K.சுப்புராயன், துவக்க உரையாற்றினார்.
மாநில பொதுச்செயலர் தோழர்.T.M.மூர்த்தி சிறப்புரையாற்றினார். மாநாட்டில் திரளாக தோழர்கள் கலந்து கொண்டனர்.
CPI கடலூர் மாவட்ட செயலர் தோழர்.T.மணிவாசகம்,
நமது பகுதியில் இருந்து
மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர்,
 மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன்,
 TMTCLU மாவட்ட செயலர் தோழர்.G.ரெங்கராஜூ,
கடலூர் கிளைத்தலைவர் தோழர்.V.இளங்கோவன்,
 பண்ருட்டி கிளைச்செயலர் தோழர்.S.பாஸ்கரன்,
பண்ருட்டி தோழர்கள் லட்சுமணன், தோழர்.ராஜா,
கடலூர் தோழர்.P.ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மாவட்ட தலைவராக தோழர்.N.மாரியப்பன்,
செயலராக தோழர் P.துரை,  பொருளராக தோழர் V.குளோப்,
நமது பகுதியிலிருந்து NFTE சார்பாக தோழர் V.இளங்கோவன்,
TMTCLU சார்பாக மாவட்ட செயலர்  தோழர்.G.ரெங்கராஜூ ஆகியோர் கடலூர் மாவட்டக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்










Friday, May 22, 2015

போராட்டம் ஒத்திவைப்பு

இன்று (22-05-2015) காலை நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரச்சனையின்பால் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் நாளை(23-5-2015) நடைபெறவிருந்த கவனஈர்ப்பு ஆர்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. பிரச்சனை தீர்வுக்கு உறுதுணையாக இருந்த DGM(EB), AGM(Admn) ஆகிய இருவருக்கும் நன்றி.