.

Wednesday, November 30, 2016

பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்!!



குடந்தை மாவட்டத்தின் துடிப்புமிக்க தோழரும், குடந்தை மாவட்டத்தில் E3 மாவட்ட செயலராகவும், தமிழ்மாநில சங்கத்தில் மாநில நிர்வாகியாகவும், பல்வேறு பொறுப்புகளையும் வகித்த திறன்மிக்க தோழர் G.கலியமூர்த்தி off.Supdt(Genl) அவர்கள் இன்று (30.11.2016) தனது இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அத்தோழரது பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Tuesday, November 29, 2016

TM சுழல் மாற்றல்
        ஆர்ப்பாட்டம்


தோழர்களே!
TM சுழல் மாற்றல் புதிய ஒன்றல்ல. நான்காவது முறையாக அமுல்படுத்தபட வேண்டிய ஒன்று. எனவே தாமதமின்றி நடத்தி இருக்க முடியும். கிளைச்செயலர்களின் ஒத்துழைப்போடு மாவட்ட சங்கம் நிர்வாகம் வழங்கிய மாற்றலுக்குரிய தோழர்களின் பட்டியலை முழுமைசெய்து நிர்வாகத்திடம் அளித்துவிட்டோம். பல சுற்று பேச்சு வார்த்தையும் நடத்திவிட்டோம். ஆனால், என்ன காரணத்தினாலோ நிர்வாகம் சுழல் மாற்றலுக்கான கலந்தாய்வு தேதியை முடிவு செய்வதில் தேவையற்ற காலதாமதம் செய்கிறது. மேலும் தாமதம் நியாயமற்றது. எனவே தாமதமின்றி உடனடியாக சுழல் மாற்றலை நடைமுறைப்படுத்த நிர்வாகத்தை வலியுறுத்தி முதற்கட்டமாக கிளைகளில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,
கிளைகள் தோறும் வருகின்ற டிசம்பர் 2-ந் தேதி வெள்ளிக்கிழமை 
 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சக்தி மிக்கதாக நடத்திட வேண்டுகிறோம்.

தோழமையுடன்
        R.செல்வம்                               இரா.ஸ்ரீதர்
        மாவட்ட தலைவர்                                                மாவட்ட செயலர்


குறிப்பு: கடலூரில் மதிய உணவு இடைவேளையில் GM அலுவலக வளாகத்தில் நடைபெறும்.

Monday, November 28, 2016

PIMS மருத்துவமனைக்கு அங்கீகாரம்

புதுவை PIMS மருத்துவமனைக்கு சில நாட்களாக அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இருந்தாலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனைக்கு நிர்வாகம் செலுத்த வேண்டிய பில் தொகை நிலுவையில் இருந்த காரணத்தினால் தோழர்களுக்கு சிகிச்சையளிக்க மறுக்கப்பட்டு வந்தது. 17.11.2016 இரவு நெய்வேலி தோழர் N.ராதாகிருஷ்ணன் T.T அவர்களுக்கு அவசர சிகிச்சை மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். உடனடியாக மாவட்ட சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அன்று இரவே புதுவை மகாத்மா காந்தி மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மறுநாள் மாவட்ட நிர்வாகத்திடம் நமது கடுமையான அதிருப்தியை பதிவு செய்தோம்.  நிர்வாகம் சூழ்நிலையை புரிந்து கொண்டு மிக விரைவாக செயல்பட்டு 21.11.2016 முதல் PIMS மருத்துவமனையுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தோழர்கள் இனி சிகிச்சைக்கு PIMS மருத்துவமனைக்கு செல்லலாம். 
காலதாமதமாக முடிவெடுத்தாலும் நாம் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் துரிதமாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி.  

Sunday, November 27, 2016

சம்மேளனதின சிறப்புக்கூட்டம் விழுப்புரம்

28-11-2016 மாலை 5.00 மணியளவில்
விழுப்புரம்  கிளைசார்பில் நடைபெறும்
சம்மேளனதினசிறப்புக்கூட்டதில்

சம்மேளன செயலர்
தோழர் G.ஜெயராமன்
மற்றும்
நமது தமிழ்மாநில செயலர்
தோழர் K.நடராஜன்

ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.


வருந்துகிறோம்!

BSNLEU முன்னணித் தோழரும் மாவட்டப் பொருளருமான தோழர் V.குமார் இன்று(27.11.2016) மதியம் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் குமார்  BSNLEU சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து திறம்பட செயலாற்றியவர். JCM கூட்டு ஆலோசனைக் குழுவிலும் இடம் பெற்றவர். மேலும் கூட்டு போராட்டங்களில் முன்னின்று சிறப்பாக செயல்பட்டவர்.

அத்தகைய தோழரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

Saturday, November 26, 2016


BSNL அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு-கடலூர் மாவட்டம்

கடலூர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு 25-11-2016   டவர் கார்ப்பரேஷன் தனியாக அமைப்பதை ரத்து  செய்வதற்கான தர்ணா போராட்டம் மிகச் சிறப்பாக களம் நிறைந்து 150 தோழர்களுக்கும் மேலாக கலந்து கொண்டு தோழர் P.சிவக்குமார் மாவட்ட செயலர் SNEA,  தோழர் K.தனசேகரன் மாவட்டத்தலைவர் AIBSNLEA ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது. தோழர் E.விநாயகமூர்த்தி  கிளைச் செயலர் NFTE , கோரிக்கை முழக்கம் எழுப்பி வரவேற்புரை நிகழ்த்தி சிறப்பித்தார்.


NFTE-யின் மாநில உதவிச் செயலர் தோழர் P.சுந்திரமூர்த்தி துவக்கவுரை நிகழ்த்தினார்.  கண்டன உரையில் தோழர் அ.அண்ணாமலை மாநில அமைப்புச் செயலர் BSNLEU , தோழர் விஸ்வலிங்கம் (AIBSNLEA) ,  தோழர் வாசுதேவன் ( SEWA – BSNL )  தோழர் அசோகன் (SNEA) தோழர் நல்லத்தம்பி ( PEWA –BSNL),  தோழர் V.லோகநாதன்  ( NFTE ), தோழர் துரைபாண்டியன் (SNEA), தோழர் S.நடராஜன்(AIBSNLEA), தோழர் V.இளங்கோவன் (NFTE),  தோழர் நடராஜன் ( SNEA) தோழர் R.செல்வம் ( NFTE) , தோழர் N.திருஞானம் (ஓய்வு பெற்றோர் சங்கம்), தோழர் S.முத்துக்குமாரசாமி (ஓய்வு பெற்றோர் சங்கம்), தோழர் செந்தில்குமாரன் (SNEA) , தோழர் ஆனந்த் (AIBSNLEA) ,  தோழர் D.குழந்தைநாதன் ( NFTE ) தோழர் S.பாண்டுரங்கன் ( SNEA) , தோழர் N.அன்பழகன் ( NFTE ), தோழர் P.வெங்கடேசன் ( AIBSNLEA) , தோழர் அருட்செல்வம் ( SNEA) மற்றும் BSNLEU மாவட்ட செயலர் தோழர் K.T.சம்மந்தம் ஆகியோர் பொருள் பொதிந்த கண்டன உரை நிகழ்த்தினர். மூத்த தோழர் சு.தமிழ்மணி  அவர்கள் முழுமையாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இறுதியாக தோழர் பால்கி         (SNEA)  நிறைவுரையோடு, தோழர் R.V.ஜெயராமன் (BSNLEU)  நன்றியுடன்  போராட்டம் நிறைவு  பெற்றது.


தோழர்கள்  மையக் கருத்தாக டவர் கார்ப்பரேஷன் அனுமதிக்க முடியாது என்றும், 15-12-2016 –ல் நடைபெற இருக்கின்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நூறு சதம் வெற்றிகரமாக்குவோம் என உறுதியேற்போம் என்றும் அழுத்தத்தோடு உணர்ச்சியோடு பேசினார். மேலும் மத்திய அரசின் ஊழியர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை விமர்சனத்தோடு பட்டியிலடப்பட்டது.


           நாளெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ! நாங்கள் சாகவோ! என்று ஆர்ப்பரித்து ‘ BSNL  நிறுவனம் காப்போம்”    என சபதமேற்ப்போம் என முழக்கத்தோடு  முடிவுற்றது.






செவ்வணக்கம் !   அஞ்சலி !



     கியூபாவின் புரட்சியாளர், முன்னாள் அதிபர் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ இன்று 26—11—2016 சனிக்கிழமை 90 வது வயதில் காலமானார்.

    கியூபா என்றவுடன் புரட்சி வீரர்களுக்கு நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ. சோவியத் ரஷ்யா துண்டு துண்டாகிவிட்ட நிலையிலும்கூட நம்பிக்கை இழக்காமல் கம்யூனிஸத்தை உயர்த்திப் பிடித்தவர்ஃபிடல் காஸ்ட்ரோ. 
அமெரிக்காவின் தெற்கு நுனியில் உள்ள ஃப்ளோரிடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. கியூபாவில் செகுவேராவுடன் இணைந்து புரட்சிக்குத் தலைமை தாங்கி, பாடிஸ்டா ராணுவ ஆட்சியை வீழ்த்தினார்.

     கியூபா அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ.1959 முதல் 1976 வரை அந்நாட்டின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை அதிபராகவும் இருந்தவர். (24-02—2008 ல் பதவி விலகும் வரை) 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தவர். அனைவருக்கும் கல்வியை இலவசமாக்கினார்.  தரமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தினார்,

  நீண்ட காலம் ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் என்ற பெருமைகுரியவர் ஃபிடல் காஸ்ட்ரோ. யாருக்கும் இல்லாத ஒரு பெருமை-- உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் ஃபிடல் காஸ்ட்ரோ .

  1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர். இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர். 1945-ல் கியூபாவின் தலைநகர் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படித்தார். கல்லூரிப் பருவத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவின் அபாரமான பேச்சுத் திறமை வெளிப்பட்டது.

  பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கம்யூனிசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்ட பிடல் காஸ்ட்ரோ அதனால் ஈர்க்கப்பட்டார். கூடவே அரசியலில் நேரடியாகப் பங்கேற்கும் ஆர்வமும் வந்தது. செயற்கரிய செய்து முடித்தார்.அவரைக் கொல்ல பலமுறை அமெரிக்க சிஐஏ முயற்சித்தும் அவை அனைத்தையும் முறியடித்து அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.  இந்தியத் தலைவர்களுடன் நல் உறவு கொண்டிருந்தார்.  அணி சேரா நாடுகளின் மரியாதைக்குரிய தலைவர்.  மேற்கத்திய நாடுகள் விரிக்கும் கடன் வலையில் வளரும் நாடுகளின் முன்னேற்றம் தடுக்கப்படுவதைக் கண்டித்து அந்தக் கடனை வளரும் நாடுகள் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை என அறைகூவல் விடுத்தார்.

  உலகின் எந்த மூலையில் நடக்கும் புரட்சிகர நடவடிக்கைகளையும் என்றென்றும் ஊக்கப்படுத்தும் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவு.
தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு
நம் செங்கொடி தாழ்த்தி

அஞ்சலி செலுத்துவோம்!

Friday, November 25, 2016

பணி சிறக்க
வாழ்த்துகின்றோம்


25-11-2016  அன்று திருவாரூரில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலராக முன்னாள் TMTCLU மாவட்ட செயலாளருமான மன்னை தோழர்  கிள்ளிவளவன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தோழரின் பணி சிறக்க கடலூர் மாவட்ட சங்கங்களின் சார்பாக வாழ்த்துகின்றோம்.
           
      தோழமையுடன்
NFTE- மாவட்ட சங்கம்

TMTCLU –மாவட்ட சங்கம்

Wednesday, November 23, 2016


நவம்பர் 24, சம்மேளன தினம்

“1947 ஆகஸ்ட் 15 ம் நாள் நமது புனித நாட்டின் ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டு பாக்கிஸ்தான் பிரிந்ததுஅதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியின் கூடிய தபால் தந்தி ஊழியர்கள்    UPTW என்ற புதிய சங்கத்தைத் துவக்கி ஒற்றுமையை உருவாக்கினர். 


        இந்த ஒற்றுமை முயற்சிக்கு ஆக்கம் தந்தவர் நமது மதிப்பிற்குரிய தலைவர் ஓம் பிரகாஷ் குப்தாஇவரையே இந்த   U P T W சங்கத்தின் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுத்தார்கள். 


இச்சங்கம் தோன்றிய பிறகே நமது தொழிலில் தொழிற்சங்க விழிப்புணர்ச்சி ஏற்பட்டதுஜனநாயக மரபுகள் வளர்க்கப்பட்டனபோராட்ட மனோபாவ வளர்ச்சியில் தீவிர முன்னேற்றம் கண்டோம்,


                                                                   தோழர் டி. ஞானையா
                                                           “ஒளிவீசும் சம்மேளனம்நூலில்



இந்த ஒன்றுபட்ட UPTW சங்கமே தோழர் குப்தா, தாதா கோஷ் இவர்களின் தொடர் முயற்சியாலும் அன்றைய காங்கிரஸ் அரசின் மதிப்பு மிக்க தலைவர்கள் ரபி அகமத் கித்வாய் மற்றும் பின்னர் பாபு ஜெகஜீவன் ராம் முதலானோர் உதவியாலும் ஒன்றுபட்ட உருக்கு போன்ற சம்மேளனமாம் NFPTE பேரியக்கம் 1954 நவம்பர் 24 ல் உதயமானது.


உதயமானது முதலே அதன் தாரக மந்திரம் ஒற்றுமை, ஒற்றுமை மேலும் ஒற்றுமை என்பதுதான். அதுதான் அன்றும் இன்றும் என்றும் நம்மை வழி நடத்தும் விடி வெள்ளி. 


நமது போராட்டங்களை வீழ்த்தநமது ஒற்றுமையைச் சீர்குலைக்கஅதே காங்கிரஸ் அரசு போட்டி சங்கத்தை உருவாக்கியதுஅடுத்து வந்த அரசு தனது கட்சி சங்கத்திற்கு அங்கீகாரம் தந்ததுஆனால் என்ன நடந்தது?


பிரச்சனை என்று வந்தபோது தோழர் குப்தா திசைக்கொன்றான மூன்று சம்மேளனங்களையும் ஒன்றாய் ஒரே அணியில் திரட்டினார்ஒற்றுமைக்கான தொடர் போராட்டங்களை நடத்தினார். வெற்றியை அனைவருக்கும் பொதுவாக்கினார். 


N F P T E பேரியக்கத்தின் சாதனைகள் ஒன்றா இரண்டா?


அவை எல்லாம் முன்மாதிரி இல்லாத முதல் மாதிரி.


சங்கங்களை உடைத்ததனால் நம் சாதனைகள் நிற்கவில்லை.


உயர் பதவி இடங்கள் காலி இல்லை எனின் பதவி உயர்வு இல்லை என்ற தேக்கத்தை உடைத்து இரண்டு கட்ட பதவி உயர்வு திட்டம் கொண்டு வந்த போது அத்தகைய நடைமுறை மத்திய அரசுத் துறை எதிலும் இல்லாத ஒன்று.


அரசு ஊழியர்களுக்கு போனஸா என்று பகடி செய்தவர்கள் நிமிர்ந்து முகம் பார்க்க முடியாதபடி ஆண்டு தோறும் உயர்ந்து வந்த உற்பத்தியோடு இணைந்த போனஸ் பெற்றுத் தந்தது எங்கள் சங்கம்.


நிரந்தர ஊழியர்களின் கோரிக்கைகளை--அவர்களின் போராட்டங்களை--ப் பலவீனமாக்க RTP சுரண்டல் முறையை கொண்டு வந்தது அரசுஆனால் RTP ஊழியர்களுக்காக நிரந்தர ஊழியர்களைப் போராட வைத்து அவர்களையும் நிரந்தரமாக்கியது.


பலம் பொருந்திய மத்திய அரசு ஆள் எடுப்பு தடைச் சட்டம் அமல்படுத்திய நிலையில் ஒன்னரை லட்சம் மஸ்தூர் தோழர்களை நிரந்தரமாக்கியது N F P T E செங்கொடி.


பன்னாட்டு / உள்நாட்டு தொலைத்தொடர்பு முதலாளிகளுக்குப் பல்லக்குத் தூக்க அரசுத் துறை பொதுத் துறையாக BSNL உருவாக்கியது அரசு.


அரசு கொள்கை நிலை என்பதனால் கோட்டைவிடவில்லை எங்கள் சங்கம்.


அப்போதும் ஒற்றுமையைக் கட்டிஒரு சிலர் ஓரம் கட்டிய போதும்போராட்டக்களம் கண்டதுபல லட்சம் தோழர்களின் வியர்வையாலும் ரத்தத்தாலும் உருவான தொலைபேசித் துறையைப் பொதுத் துறையான பின்னும் மக்கள் சேவையை உயர்த்திப் பிடிக்க வைத்ததுதனியார் செல்பேசி கட்டணக் கொள்ளையைத் தடுத்தது


உழைத்து உதிரம் சிந்திய தோழர்களின் எதிர்கால பென்ஷனைக் காப்பாற்றிக் கொடுத்தது எங்கள் செங்கொடி சம்மேளனம்! 


இன்றைய புதிய தாக்குதல்கள் எந்த வடிவில் வந்தாலும் சரி—-


எங்கள் கையாலேயே எங்கள் கண்ணைக் குத்துவது போல எங்கள் செல்பேசி கோபுரங்களைத் தனி டவர் கம்பெனியாக உருவாக்கும் சதியாலும் சரி--


எத்தனையோ கருத்து மாறுபாடுகள் கொள்கை வேறுபாடுகள்    இருந்தாலும் சரி –-


எங்கள் தியாகத் தலைவர்கள் காட்டிய ஒப்பற்ற ஒற்றுமைப் பாதை,


ஒற்றுமை உணர்வு, போராடும் மனவலிமை எங்களுக்கு உண்டு.


அதை நாளும் எங்களுக்கு ஊட்டி வரும் சம்மேளனப் பதாகையை உயர்த்திப்பிடிப்போம்!



சம்மேளன தின நன்நாளில்
கிளைகளில் எல்லாம் செங்கொடியை
வானளாவப் பறக்க விடுவோம்! 


தியாகத் தலைவர்களை நினைவு கூர்வோம்!



NFTE ஜிந்தாபாத்!     Workers’ unity ஜிந்தாபாத்!

இன்குலாப் ஜிந்தாபாத்!