.

Thursday, March 13, 2014

T M T C L U மாநில சிறப்பு மாநாடு

T M T C L U 
தமிழ் மாநில தொலைத்தொடர்பு 
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
மாநில  சிறப்பு மாநாடு 

30-03-2014 - ஞாயிறு - காலை 10 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணி மண்டபம் 
காரைக்குடி.

பங்கேற்பு : தோழர்கள் 

ஆர்.கே

S.தமிழ்மணி 

R .பட்டாபிராமன் 

K.சேது 

R .ஜெயபால் 

PL.இராமச்சந்திரன் 

மற்றும்  தோழர்கள்..

உரிமைகளை வென்றிட.. 
கொடுமைகளைக் கொன்றிட..
உணர்வுடன் வாரீர்..

தோழமையுடன்..

M S குமார்                                                                              G ரங்கராஜ்   
மாவட்டத் தலைவர்                                                        மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 
TMTCLU - கடலூர்                                                               TMTCLU-கடலூர்  

Tuesday, March 11, 2014

விவாதம் என்பது சண்டையல்ல!
By பிரபா ஸ்ரீதேவன்

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் மறைவுக்குப்பின் அவரைப்பற்றி கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய ஒரு கட்டுரையில் இடம் பெற்ற ஒரு வாசகம்: "விவாதத்தில் மற்றவரை வெல்லவேண்டும் என்று முயற்சி செய்யாதே. உரையாடல் ரகங்களில் அது தரம் குறைந்தது. எதிராளி தன் எண்ணத்தை சொல்லட்டும். நீ சொல்ல நினைப்பதை சொல்லி பிறகு விட்டு விடு, அந்த சொற்கள் தங்கள் செயலை மெதுவாக செய்யவிடு என்று அவர் என்னிடம் ஒரு முறை கூறினார்' - இன்று இந்த அறிவுரை நமக்கு மிகவும் தேவை.

பொதுவாக இன்று நம் நாட்டில் சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து வருகிறது, மாற்றுக் கருத்தினைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற பண்பாடும் இல்லை; பொறுமையும் இல்லை.

மார்க் டல்லியின் "இந்தியாவின் முடிவில்லா பயணம்' (Indias Unending Journey) என்ற நூலில், அவர் அயர்லாந்து நாட்டு கவிஞர் மீஹால் ஓஷீல் (Michael Osiadhail ) சொன்னதை பகிர்ந்து கொள்ளுவார்.


"ஆம், ஒரே கண்ணோட்டம்தான் உள்ளது என்று சொல்லமுடியாது.

எவருக்கும் உண்மையின்பால் ஏகபோக உரிமை கிடையாது.

நீ இது போல் சொல்லிக்கொள்ள வேண்டும்.

நான்தான் சரி என்று நான் நினைக்கிறேன், நான் தவறாக இருக்கலாம்.

நீ தான் சரி என்று நீ நினைக்கிறாய், நீ

தவறாக இருக்கலாம்.

இன்றிலிருந்து இந்த மந்திரத்தை திரும்பத் திரும்ப சொல்லலாமா?

சுதந்திரம், சுதந்திரப்பண் பாடினோம்,

(மெல்ல மெல்ல, எதுவும் இன்று பேசலாம்)

எப்படியோ நீயும் நானும் வேறாகிப் போனோம்,

விதண்டாவாதம் பிதற்றுபவர் போல;

பேபெல் ஸ்தூபி கட்டுனர் போல.


- ஓஷிலின் "சுதந்திரம்' என்ற கவிதையின் ஒரு பகுதி இது. எதுவும் பேசலாம் என்பதினாலேயே நாம் கவனமாகப் பேச வேண்டும்.

தொலைக்காட்சியில் விவாத மேடை நிகழ்ச்சிகள் எல்லா மொழிகளிலும் வருகின்றன. எல்லாரும் ஒரே சமயத்தில் கோஷ்டி கானம்போல பேசுகிறார்கள். உண்மையின் மறு பெயர் இரைச்சலா என்று தெரியவில்லை. நிகழ்ச்சித் தொகுப்பாளர் (அவரும் பெரும்பாலும் உரக்கதான் பேசுவார்) ஒரு கேள்வி கேட்பார், "ஏன் நீங்கள் இவ்வாறு செய்தீர்கள்' என்று. அதற்கு பதில் என்னவாக இருக்கவேண்டும்? "இது தான் எங்கள் கொள்கை', அல்லது "இது நாங்கள் தீர ஆலோசித்து வந்த முடிவு' அல்லது "அது தவறுதான் என்பதை பிறகு உணர்ந்தோம்' போன்ற விடைகள், விளக்கங்கள்தானே?

ஆனால் அதை விடுத்து "அவன் தான் முதலில் செய்தான்' என்று சொன்னால், சிறு வயதில் நம் ஆசிரியர் வகுப்பில் கேட்பார் "இங்கே வா, ஏன் பலகையை உடைத்தாய்' "அவன்தான் டீச்சர் முதலில் உடைத்தான்'. அந்த இடத்திலிருந்து நாம் யாருமே நகரவில்லையா? பள்ளிக்கூடத்திலேயே உறைந்து போய்விட்டோமா? இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. எல்லாரும்... எல்லாரும் இதையே செய்கிறார்கள். அரசியல்வாதிகள் மட்டுமல்ல எல்லாரும்.

மற்றவர்கள் குரல்களைக் கேட்டு பதிவு செய்து கொள்வதில்தான் ஒரு சமூகம் வளர்ச்சி பெறும்; ஆன்ம வளர்ச்சியும் நடைபெறும். இப்பொழுது தொலைக்காட்சியினால் நம் பிம்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆகையால் உரக்க கத்திவிட்டு தனக்கே கைத்தட்டலாக ஒரு புன்சிரிப்பும் உதிர்க்க வேண்டியுள்ளது.

எத்தனை மக்கள் பார்க்கிறார்கள்? அவர்கள்முன் நாம் குரலை தாழ்த்தினால்கூட தோல்வியை ஒப்புக்கொள்வது போலாகாதா? அதனால் இதுபோன்ற நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்கூட கே.ஆர். நாராயணன் அறிவுரையை பின்பற்றுபவர்களை அழைக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.

பொது வாழ்வில் இரு துருவங்களாக இருந்தவர்கள்கூட தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாக இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம் அல்லது பிறர் சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் இன்று விவாதம் என்பது சண்டையாக கீழே இறங்கிவிட்டது. இங்கு நட்புக்கு இடமில்லை. பண்பாடு என்பது மென்பாடு என்றில்லாமல் வன்பாடு ஆகிவிட்டது.

சமீபத்தில் ஜானதன் ஹெய்ட் என்பவர் எழுதிய The Righteous Mind  என்ற புத்தகம் படித்தேன். அதன் இரண்டாவது தலைப்பு மிக சுவாரசியமானது - "நல்ல மனிதர்கள் ஏன் அரசியலாலும் மதத்தாலும் பிரிக்கப்படுகின்றனர்?' சபாஷ் சரியான கேள்வி என்று "வஞ்சிக்கோட்டை வாலிபன்' வீரப்பா போல நாமும் பாராட்டலாம்.

இந்த புத்தகத்தின் ஒரு அத்தியாயம், "நம்மால் ஆக்கபூர்வமாக எதிர்வாதம் செய்ய முடியாதா?' (cant wree  more constructively ?). அவர் இடதுசாரி கண்ணோட்டம் உள்ளவர்களையும் வலதுசாரி கண்ணோட்டம் உள்ளவர்களையும் பற்றி கூறி, ஒருவர் மற்றவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துக்கொள்ளக்கூட முடியாதா என்று கேட்கிறார். ஒப்புக்கொள்ள சொல்லவில்லை புரிந்துகொள்ளலாமே என்றுதான் ஆதங்கப்படுகிறார்.

உதாரணத்திற்கு வேர்க்கடலையை எடுத்துகொள்வோம். ஒருவருக்கு அது பிடித்த உணவு; இன்னொருவருக்கு அது அறவே பிடிக்காது; மூன்றாமவருக்கு அது ஒவ்வாமை உணவு. ஒவ்வொருவருக்கும் அவருடைய கண்ணோட்டம் தான் நிஜம், உண்மை, சத்தியம். எப்படி உனக்கு பிடிக்கலாம் என்றோ, எப்படி வெறுக்கலாம் என்றோ, எப்படி ஒவ்வாமை என்று சொல்லலாம் என்றோ கேட்க முடியுமா?

வேர்க்கடலையை வெறுப்பவர் அதன் கேடு விளைவிக்கும் தன்மையைப பற்றி பேசலாம். அதற்கு விடையாக அதை விரும்புபவர் அதன் நன்மையைப் பற்றி கூறலாம். அவ்வளவே. ஒருவரை ஒருவர் ஏசலாமா? அவர் கண்ணோட்டம் அது, அவ்வளவே. ஆனால் இன்று நம்மைச் சுற்றி பார்த்தால் மாறுபட்ட கருத்து என்றாலே யாருக்கும் சகிக்க முடியவில்லை என்று தோன்றுகிறது.

முன்னேற்றம் என்றால் மாற்றம்தானே? மாற்றம் வருவதற்கு பலவித குரல்கள் ஒலிக்கவேண்டும். கலீலியோ அன்று "சூரியனைச் சுற்றி உலகம் சுழலுகிறதே தவிர, உலகத்தை சுற்றி சூரியன் செல்லவில்லை' என்று சொன்னார். அந்த மாற்றுக் கருத்தை அன்று யாரும் ஒப்புக்கொள்ள வில்லை. மாறாக, அவருக்கு தண்டனை கிடைத்தது. ஆனால் அவர் கண்டுபிடிப்புதானே இன்றும் நிற்கிறது?

"எங்கிருந்தும் நல்ல கருத்துகள் வீசட்டும்' என்கிறது வேதத்தின் வாக்கு. அதற்கு நாம் நமது ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். நமக்கு ஏற்கவில்லை என்றால், "அந்த கருத்தை சொன்னவர் மேல் கல்லெறிவேன்' என்று ஒரு ஆரோக்கியமான ஜனநாயகம் கூறாது. இன்று சமூக வலைதளங்கள் இந்த போக்கை உற்சாகப்படுத்துகின்றன. அந்தத் தளங்கள் தரும் பாதுகாப்புப் போர்வையினால், எனக்கு பிடிக்காத கருத்து சொல்பவரை எப்படி வேண்டுமானாலும் ஏசலாம் என்றாகி விட்டது.

குதிரைக்கு நான்கு கால்கள் என்பவரிடம், என் முயலுக்கு மூன்று கால் என்று சொன்னால், இங்கு விவாதம் குதிரையைப்பற்றியோ முயலைப்பற்றியோ அல்ல. அவையில் என்ன சொல்கிறார் என்று கேட்டு புரிந்துகொள்ள வேண்டும். இந்த உரத்த குரல்களின் சொந்தக்காரர்கள் பலரும் புரிதல் வேண்டும் என்பதை புரிந்து கொள்வதில்லை.

மேற்சொன்ன புத்தகத்தில் ஜானதன் ஹெயிட் கூறுகிறார்: "1995க்கு முன் இரு கட்சியை சேர்ந்தவர்கள் ஒரே நிகழ்ச்சிகளுக்கு செல்வார்கள். குடும்பங்களும் நட்பாக இருந்தன. ஆனால் இன்றோ கட்சிதாண்டிய நட்பு மறைந்து வருகிறது. நிலம் தீய்க்கும் அரசியல் பரவுகிறது' என்கிறார். அவர் கூறுவது அமெரிக்கர்களைப்பற்றி. நம்மைப்பற்றி நமக்குத் தெரியும்.

அது என்ன "நிலம் தீய்ப்பது?' அது ஒரு போர் முறை. எதிரிக்கு உதவும் எல்லாவற்றையும் தீய்த்துவிடுவது. BC யில் வாழ்ந்த கிரேக்கரும் "இண்டிகா' என்ற நூலை எழுதியவருமான மெகஸ்தனிஸ் BC 4இல் நம் போர் முறையைப்பற்றி ஒன்று கவனித்தாராம். "மற்ற நாடுகள் போர் செய்யும்போது எதிரியின் நிலத்தை அழித்து அதை விளைச்சலுக்கு தகுதியில்லாமல் செய்வது வழக்கம். ஆனால் இந்தியர்கள் நிலத்தை உழுபவர்களை போற்றுகிறார்கள். ஆகையால், போர் நடந்தால்கூட, போர் பூமி குருதிக்களமாக ஆனால் கூட அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாய நடவடிக்கைகளை அவர்கள் அழிப்பதில்லை; அவர்கள் எதிரியின் நிலத்தை எரிப்பதில்லை; மரங்களை வெட்டுவதில்லை' என்று சொன்னாராம்.

இதை அலைன் டானியலு (Alain Danialou ) எழுதிய "இந்திய சரித்திர'த்தில் (A Brief History of India ) பார்க்கலாம். "நிலம் தீய்க்கும் கொள்கை' நம்மிடம் அன்று இல்லை என்கிறார். அன்று போரிடும் நேரத்திலும் அறம் காத்த நாம் இன்று வாதம் புரியும் நேரம் அறம் காக்க மறக்கிறோம்.

ஆரோக்கியமான விவாதங்கள் வேண்டும். அப்பொழுதுதான் பல குரல்கள், பல எண்ணங்களின் சேர்க்கையினால் தெளிவு பிறக்கும். பரமபத சோபான ஆட்டத்தில் ஏறுவோம், இறங்குவோம். ஆனால் காயை நகர்த்தினால்தான் வெற்றியடையும் வாய்ப்பு கிட்டும். அதை விட்டு, காயை நகற்றாமல் அங்கேயே நின்று எதிரியை நேராக அடித்தால் எப்படி ஆட்டத்தை ஆடமுடியும்? யோசிக்கவேண்டும்.


கட்டுரையாளர்: உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு).

நன்றி : தினமணி 

சென்னை சொசைட்டி -RGB தேர்தல் வேட்பாளர்கள்

கடலூர் மாவட்டத்திற்கானதேர்தல் நாள் : 21-04-2014 
கடலூர் மாவட்டத்திற்கான வாக்கு சாவடி :  கடலூர் 

நடைபெறவுள்ள சென்னை சொசைட்டி தேர்தலில் கடலூர் மாவட்டத்திற்கான 9 RGB இடங்களுக்கு  NFTE, BSNLEU ,AIBSNLEA ,SNEA ஆகிய சங்கங்கள் இணைந்து போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் விவரம் 

வரிசை எண்      வேட்பாளர் பெயர்  
         3                       A அண்ணாமலை SSS கடலூர் 
         4                       I  துரைசாமி TM திண்டிவனம் 
         5                       V  இளங்கோவன் TTA அரகண்டநல்லூர் 
         7                       V  கிருஷ்ணமூர்த்தி TM சிதம்பரம் 
         8                       P குமார் TM கடலூர் 
       10                        S நடராஜன் SDE திண்டிவனம் 
       12                        C பாண்டுரங்கன் SDE கடலூர் 
       14                       P சங்கரன் TM விழுப்புரம் 
       15                       N உமாசங்கர் TM விழுப்புரம் 

வட்டி விகிதத்தை குறைத்திடவும் , தனி நபர் SURETY இல்லாமல் கடன் பெற்றிடவும், ஊழலற்ற நிர்வாகத்தை நடத்திடவும் நமது வேட்பாளர்களை ஆதரித்து மேற்கண்ட வரிசை எண்களில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.

-NFTE கடலூர் மாவட்ட சங்கம் 

திண்டிவனம் கிளை செயற்குழு கூட்டம் 08-03-2014

திண்டிவனம் கிளை செயற்குழு கூட்டம் 08-03-2014 அன்று துணை தலைவர் R சேகர் தலைமையில் நடைபெற்றது.பெரும்பான்மையான தோழர்கள் கலந்து கொண்டனர். 
1. தோழர் G மணி பணி ஓய்வு பாராட்டு விழாவையும் சொசைட்டி RGB தேர்தல் நமது வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தையும் ஒன்றாக நடத்துவது 
2.சொசைட்டி RGB தேர்தலில் மாவட்ட சங்கம் அறிவித்துள்ள நமது கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்வது 
ஆகிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Sunday, March 9, 2014

மகளிர் தின விழாக்கூட்டம் சிதம்பரம்

சிதம்பரம் கோவில் தொலைபேசி நிலையத்தில் மகளிர் தினவிழா அனைத்து தோழர்களும் தோழியர்களும் இனைந்து கொண்டாடினர். தோழர்கள் இஸ்மாயில்,ரவிச்சந்திரன்,ரவிக்குமார் ஆகியோர் மகளிர் தோழியர்களுக்கு வாழ்த்துரைகளை வழங்கினர். மகளிர் தோழியர்கள் ஏற்புரை வழங்கி நன்றி தெரிவித்துக்கொண்டனர்.​

Friday, March 7, 2014

மார்ச் 8 மகளிர் தின வாழ்த்துக்கள்



பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;

எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி!

                                                                                                                                      -மகாகவி சுப்ரமணிய பாரதியார் 

Thursday, March 6, 2014

சிதம்பரம் தோழர் R.நந்தகுமார் TM. காலமானார்

கண்ணீர் அஞ்சலி:

சிதம்பரம் புதுச்சத்திரம் தோழர் R.நந்தகுமார் TM அவர்கள் 05-03-2014 அன்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நமது இரங்கலை உரித்தாக்குகின்றோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் 06-03-2014 மாலை03:00 மணிக்கு புதுச்சத்திரம் அவரது இல்லத்திலிருந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள் கிறோம். 

Tuesday, March 4, 2014

Sunday, March 2, 2014

LJCM கூட்டம்

வருகின்ற 05-03-2014 அன்று நடைபெறவிருந்த கடலூர் மாவட்ட கவுன்சில் LJCM கூட்டம் மறுதேதி குறிப்பிட படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

Friday, February 28, 2014

பணி ஓய்வு - பிப்ரவரி 2014

28-02-2014 அன்று பணி ஓய்வு பெறும் தோழர்கள் 

M தேவராஜன் STS காட்டுமன்னார்கோயில் 
R ராமலிங்கம் SSS  விருத்தாசலம் 
D ராமசந்திரன் RM குமராட்சி 
P ராஜேந்திரன் TM விழுப்புரம் 

ஆகியோருக்கு மாவட்ட சங்கம் தனது நெஞ்சு நிறை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது 

HIGH SPEED CYBER CAFE துவக்கம்

கடலூரில் அதிவேக இணைய தள கூடம் (HIGH SPEED CYBER CAFE ) 28-02-2014 அன்று துவக்கப்பட உள்ளது. FRONT OFFICE மற்றும் BACK OFFICE எங்கே செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் CALL CENTRE -ஐ பழைய இடத்திற்கே மாற்றி அந்த இடத்தில CYBER CAFE செயல்பட உள்ளது.  HIGH SPEED CYBER CAFE சிறப்பாக  செயல்பட நம் வாழ்த்துக்கள்  

தோழர் R ராமலிங்கம் பணி நிறைவு பாராட்டு விழா-26-02-2014

விருத்தாசலம் கிளை செயலர் தோழர் R ராமலிங்கம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா  26-02-2014 அன்று நடைபெற்றது.கிளை தலைவர் V இளங்கோவன் தலைமை தாங்கினார்.தோழர்  மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். மூத்த தோழர் ரகு , ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் K சுப்ரமணியன், சம்மேளன செயலர் G ஜெயராமன் ,மாநில துணை தலைவர் லோகநாதன், மாநில பொருளர் அசோகராஜன், மாவட்ட தலைவர் செல்வம் மற்றும் மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

Thursday, February 27, 2014

LJCM கூட்டம்

கடலூர் மாவட்ட கவுன்சில்( LJCM ) கூட்டம் வருகின்ற 05-03-2014 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது 

செயலக கூட்டம்

மாதாந்திர மாவட்ட செயலக கூட்டம் வருகின்ற 01-03-2014 அன்று மாலை 5 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகளும் அனைத்து கிளை சங்க நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

அஞ்சலி

மத்திய அரசு ஊழியர்களின்  தலைவரும்  AIRF இரயில்வே தொழிற்சங்கப்பிதாமகரும்  தொழிலாளர் மேம்பாட்டிற்காக தோழர்.குப்தாவுடன் தொடர்ந்து தோள் கொடுத்தவருமான 
                                                 தோழர்.உம்ரமால் புரோஹித் 

இன்று 27/01/2014 அதிகாலை மும்பையில் இயற்கை எய்தினார்.
அவரது மறைவு மத்திய அரசு ஊழியருக்கு பேரிழப்பு.
 மறைந்த தலைவருக்கு நமது அஞ்சலி 

Sunday, February 23, 2014

RGB தேர்தல் -கமிட்டி கூட்டம் 24-02-2014

சென்னை சொசைட்டி RGB தேர்தல் சம்பந்தமாக கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் அவசர கூட்டம் 24-02-2014 அன்று மாலை 3 மணியளவில் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும் 

இரங்கல்

விழுப்புரத்தில்   பணிபுரியும் தோழியர் S வசந்தா RM   அவர்கள்    23-2-2014 அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் நமது இரங்கலை உரித்தாக்கிக்கொள்கிறோம்.  இறுதிச்சடங்கு 24-2-2014 மாலை இருந்தை கிராமத்தில்   நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

Saturday, February 15, 2014

மாவட்ட செயலக கூட்டம் 18-02-2014

மாவட்ட செயலக கூட்டம் வருகின்ற 18-02-2014 அன்று மதியம் 2 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகளும் அனைத்து கிளை சங்க நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.  பொருள்: சென்னை சொசைட்டி RGB தேர்தல் 

Wednesday, February 12, 2014

பயிலரங்கம்

NFTE தமிழ் மாநில சங்கம் நடத்தும் லோக்கல் மற்றும் மாநில கவுன்சில் உறுப்பினர்களுக்கான பயிலரங்கம் வேலூரில் 22-02-2014 அன்று நடைபெறவுள்ளது. 

அதில் பங்கேற்பவர்களுக்கான சிறப்பு விடுப்பு அறிவிப்பும் வெளியாகிவுள்ளது.
 
இந்த பயிலரங்கில் தேசிய கவுன்சில் உறுப்பினரும் ஜார்கண்ட் மாநில செயலருமான தோழர்  மகாவீ ர் சிங், சம்மேளன செயலர் தோழர் G ஜெயராமன் ,அகில இந்திய அமைப்பு செயலர் தோழர் S S கோபாலகிருஷ்ணன் , தோழர் ஆர் கே , தோழர் முத்தியாலு , தோழர் தமிழ்மணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.  

பொதுமேலாளர் (நிர்வாகம் ) திருமதி இராதா மற்றும் வேலூர் பொதுமேலாளர் திரு C  A ரெட்டி ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
திண்டிவனம் தோழியர்  J சொக்கம்மாள் பணி நிறைவு பாராட்டு விழா 














Friday, January 24, 2014

சேம நல செய்தி

மாநில சேம நல குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கடலூர் மாவட்டத்தில் திருமண கடன் ரூ 50000 ஆகவும், பணி ஓய்வு GIFT CHEQUE ரூ 2000 ஆகவும் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது 
உணவின் சுவை உண்பதில் இருக்கு...
"கத்துகடல் சூழ்நாகை காத்தான்தன் சத்திரத்தில் 
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி 
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம் 
இலையில்இட வெள்ளி எழும்"
சத்திரத்தில் அரிசி வருவதற்குள் அஸ்தமித்து விடும் . அதை குத்தி,புடைத்து, கல் நோம்பி உலையில் இடுவதற்குள் ஊரே அடங்கிப்போகும். உலை கொதித்து, சோறு வடித்து , அது ஆறி பரிமாறுவதற்குள் விடிஞ்சிடும் ...
-இது பசியில் காள மேக புலவர் பாடிய பாடலின் கருத்து.

ஆக்கப்  பொறுக்கலாம் 
ஆறப் பொறுக்கலாம் 
பரிமாறவும் பொறுக்கணும்னா 
-பசி பொறுக்காதே !

Thursday, January 23, 2014

இரங்கல்

நம்முடன் பணியாற்றி ஓய்வு பெற்ற தோழியர் D மஞ்சுளா STS (Retd ) அவர்கள் 22-01-2014 அன்று இயற்கை எய்தினார்.அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை மாவட்ட சங்கம் உரித்தாக்குகிறது. 

Tuesday, January 21, 2014

லெனின்  நினைவு தினம்  ஜனவரி 21
லெனினை பற்றிய ஒலிக்கதிர் அட்டைபடம் 


லெனினை நினைவு கூற பொருத்தமான ஜனசக்தியில் வந்துள்ள செய்தி 
தோழர் ஏ பி பரதன் அவர்கள்  தனது கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறுகிறார் "நமது நாடு தனது அரசியல், பொருளாதார,சமூக வாழ்வில் மிகவும் நெருக்கடியான சிக்கலான கட்டத்தில் உள்ளது.  இந்த சூழலில் தத்துவார்த்த ரீதியாக வளர்ந்த அனுபவம் மிக்க தலைவர்களை  இழந்துள்ளோம்.  பெரும் எண்ணிக்கையில் இளம் கம்யுனிஸ்ட்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.  இயக்கத்தை தலைமை தாங்கி நடத்த இது அவசியம்.  உண்மையில் அவர்கள் நம்மை சுற்றி உள்ளனர். தற்போதைய நிலையில் இளைஞர்கள் நாட்டின் அரசியல் , எதிர்காலம் பற்றி ஆர்வம் காட்டுகின்றனர் . ஏற்கனவே முற்போக்கு சிந்தனையோடு உள்ள சோஷலிசத்தின் பால் ஈர்க்கப்பட்ட அந்த இளைஞர்களை இயக்கத்திற்குள் கொண்டுவர வேண்டும் "

Saturday, January 18, 2014

ஜீவா நினைவு நாள் -இன்று


ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக,சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர்.1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஜீவா நூற்றாண்டு பற்றி நமது ஒலிக்கதிரில் வெளியானது 

Friday, January 17, 2014

அஞ்சலி

நமது அகில இந்திய சங்கத்தின் பொருளாளர் தோழர்  P L துவா  அவர்கள் இன்று 17-1-2014 இயற்கை எய்தினார் . மறைந்த தலைவருக்கு செங்கொடி தாழ்த்தி நமது  அஞ்சலி.  

Thursday, January 16, 2014

நன்றி! நன்றி!! நன்றி!!!

ஒளி தரும் சூரியனுக்கு உணவளிக்கும் உழவருக்கு 
நன்றி சொல்லும் இந்த நன்னாளில் 
ஒலிக்கதிர் பொன்விழாவினை  பொன்னாய் ஒளிரச் செய்த 
ஒவ்வொருவருக்கும் நன்றிகள்!

நன்கொடை வழங்கிய பொது மேலாளர் , அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து நல் இதயங்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கிளைச் செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் , மாநில சங்க நிர்வாகிகள், பிற மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழமை சங்க நிர்வாகிகளுக்கும் நன்றிகள்!

உறுதுணையாய் நின்றிட்ட மாநில உதவி செயலர் தோழர் சென்னகேசவன், புதுவை காமராஜ், ஆலோசனை வழங்கிய மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் குடந்தை ஜெயபால் , மதுரை சேது , உடன் நின்று செயலாற்றிய ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் தமிழ்மணி ஆகியோருக்கும் நன்றிகள்! கடலூர் மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட தோழர்களுக்கும் மாநிலம் முழுவதிலிமிருந்து கலந்து கொண்ட 1600க்கும் மேற்பட்ட தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

விருந்தோம்பல் சிறக்க வயிறார வாழ்த்த உணவு பொருட்கள் வழங்கியோர்க்கு நன்றிகள்! 
தோழர்கள் 
P அழகிரி STS  KAC              -துவரம் பருப்பு     -35 கிலோ 
R குணசேகரன் TM NKM -இட்லி அரிசி          -75 கிலோ 
S செல்வராஜ் STS(Rtd.) TNV      -சாப்பாட்டு அரிசி -50 கிலோ 
A செல்வகுமார் TOA TNV- சாப்பாட்டு அரிசி -50 கிலோ
P ஜெயராஜ் TM NKM          -க.பருப்பு -20 கிலோ பா. பருப்பு -15 கிலோ 
T கோவிந்தசாமி TM ULD -உளுந்து -15 கிலோ 
G ஜெயச்சந்தர் TTA ESK   -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
R பாஸ்கரன் SSS PRT        -ந.எண்ணெய் -5கிலோ முந்திரி -4கிலோ 
G கணேசமூர்த்தி TM ULD  -அப்பளம் -1300
M சுந்தரராமன் TM TGRI   -தேங்காய் -80 
P கமலா TM CDL                   -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
P மணி TM CDL                     -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
P செல்வி TM CDL                -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
C ஜெயலட்சுமி STS CDL    -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
R கஸ்தூரி STS CDL             --தேங்காய் -50  
C சம்மனசு மேரி SSS CDL -சர்க்கரை 20 கிலோ 
P பிச்சைப்பிள்ளை STS CDL -டீ -3கிலோ, காபி -2கிலோ, சிக்கரி -400கிராம் 
R புருஷோத்தமன் TM CDL -வெல்லம் -15 கிலோ 
TV பாலு TM CDL                        -தயிர் 30 லிட்டர் 
N ஜெயராமன் TM CDL             - புளி  -7 கிலோ 
H ஜெகதீசன் TM CDL                 -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
V இளங்கோவன் TTA ARA      -காய்கறிகள் 
V பாலகிருஷ்ணன் TM  KTL  -வெற்றிலை பாக்கு 
P குமார் TM CDL                          -பால் -50 லிட்டர் 
R கிருஷ்ணமூர்த்தி TM CDL -பால் -50 லிட்டர்
V பெருமாள் TM CDL                 -டீ கப் -20 ரோல் 
V முத்துவேல் TM CDL           --ரவா , மைதா 
MS குமார் CL CDL                     --உப்பு -12 கிலோ 
D குழந்தைநாதன் TTA ULD -கோதுமை மாவு -15 கிலோ 
மேலும் மற்ற பொருட்கள் வழங்கியோர் 
D ரவிச்சந்திரன் TM CDM    -வாழைமரம் -10
G கணேசமூர்த்தி TM ULD  -- துண்டு -50
N ராஜாராமன் SSS CDL           -காபி பிளாஸ்க் 
PL செல்வன் TTA நாகர்கோயில் --ஒலிக்கதிர் சின்னம் பதித்த பலூன்கள் 

தகவல் பலகைக்கு இங்கே 







ஒலிக்கதிர் பொன்விழா சிறக்க பணியாற்றிய ஒவ்வொருவருக்கும்  நன்றிகள்!
குழுக்களும் பணியாற்றியவர்களின் விவரமும் 
1.ஒலிக்கதிர் பொன்விழா புகைப்பட கண்காட்சி 

தோழர்கள் 
S  தமிழ்மணி ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் 
D அன்புதேவன் TTA கடலூர் 
R சுப்பிரமணி TM கடலூர் 
K செல்வராஜ் STS கடலூர் 
2.உணவுக்குழு 

தோழர்கள் 
S ராஜேந்திரன் TM கடலூர் 
R மலர்வேந்தன் TM நெல்லிக்குப்பம் 
D குழந்தைநாதன் TTA உளுந்தூர்பேட்டை
G ஜெயசந்தர் TTA எலவனாசூர்கோட்டை 
V முத்துவேல் TM கடலூர் 
G கணேசமூர்த்தி TM உளுந்தூர்பேட்டை 
K ஜலதரன்  RM கடலூர் 
T பாலாஜி TM பண்ருட்டி 
K மகேஸ்வரன் TTA சிதம்பரம் 
TV பாலு TM கடலூர் 
3.விளம்பர பதாகைகள் 

தோழர்கள் 
V நீலகண்டன் SSS கடலூர் 
V லோகநாதன் STS நெய்வேலி 
R ஸ்ரீநாத் TTA நெய்வேலி 
R நந்தகுமார் TTA செஞ்சி 
4.தோரணங்கள் மற்றும் கொடிகம்பம் ஏற்பாடு குழு 

R கிருஷ்ணமூர்த்தி TM கடலூர் 
MS குமார் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர்
K ராகவன் TM கடலூர் 
N சந்திரசேகர் STS கடலூர் 
S பாஸ்கரன் TM பண்ருட்டி 
P லட்சுமணன் TM பண்ருட்டி 
M தினகரன் TTA கடலூர் 
R புருஷோத்தமன் TM கடலூர் 
R விஸ்வநாதன் RM கடலூர் 
S அண்ணாதுரை ஒப்பந்த ஊழியர் கடலூர் 
S பாலகணபதி ஒப்பந்த ஊழியர் கடலூர் 
M  மணிகண்டன் ஒப்பந்த ஊழியர் கடலூர் 
P விஜய் ஒப்பந்த ஊழியர் கடலூர் 
K தீபன்ராஜ் ஒப்பந்த ஊழியர் கடலூர் 
G சக்தி வேல் ஒப்பந்த ஊழியர் கடலூர் 
சுரேஷ் ஒப்பந்த ஊழியர் கடலூர் 
5.வரவேற்புக்குழு 

தோழர்கள் 
R  பன்னீர்செல்வம் TM கடலூர்
V இளங்கோவன் TTA அரகண்டநல்லூர் 
 P குமார் TM கடலூர் 
R ஜெயராஜ் TM கடலூர் 
V பெருமாள் TM கடலூர் 
P ஜெயராஜ் TM நெல்லிக்குப்பம் 
V கிருஷ்ணமூர்த்தி TM சிதம்பரம் 
N ரேவதி STS கடலூர் 
V பாலகிருஷ்ணன் TM சிதம்பரம் 
R மாதேஸ்வரன் TM சிதம்பரம் 
6.மேடை ஏற்பாடுகள் குழு 

தோழர்கள் 
R செல்வம் Sr TOA விழுப்புரம் 
P பிச்சைபிள்ளை STS கடலூர் 
K அன்பாயிரம் TM உளுந்தூர்பேட்டை 
L மகாலிங்கம் TM விழுப்புரம் 
G ரங்கராஜு   TM பண்ருட்டி 
P அன்பு TM கடலூர் 
K தட்சணாமூர்த்தி TM விழுப்புரம் 
7.நிதிக்குழு 

தோழர்கள் 
A சாதிக் பாட்சா JAO கடலூர் 
P அழகிரி STS கள்ளக்குறிச்சி 
K கிருஷ்ணகுமார் TTA சிதம்பரம் 
P ராமானுஜம் TM விழுப்புரம் 
7.சிறப்பு விருந்தினர் உபசரிப்பு குழு 
தோழர் AC முகுந்தன் TM கடலூர் 
8.கோல அலங்காரம் 

தோழியர்கள் 
V கீதா STS கடலூர் 
M பார்வதி SSS கடலூர் 
K ஜோதி RM கடலூர் 
10.நிகழ்ச்சி புகைப்பட குழு 

தோழர் D ரவிச்சந்திரன் TM சிதம்பரம் 
11.மண்டபம் பொறுப்பாளர் 

தோழர் M பக்கிரி SSS Retired கடலூர் 

IDA 5% உயர்வு

ஜனவரி 2014 முதல் IDA 5% உயர்ந்துள்ளது. BSNL உத்திரவு இங்கே