.

Monday, September 30, 2013

சொசைட்டி செய்திகள் 

# 01-10-2013முதல் வட்டிவிகிதம் 16.5%இருந்து 1%குறைந்து  15.5%ஆக மாற்றப்பட்டுள்ளது 

#ஈவுத்தொகை (Dividend) 12% அக்டோபர் மாத சம்பளத்தில் வழங்கப்படும்  

#இன்சுரன்ஸ் ரூ 3 லட்சத்தில் இருந்து  ரூ 4 லட்சமாக உயர்த்தப்படும் 

#மாதந்தோறும் பிடிக்கப்படும் FWS ரூ 600 லிருந்து ரூ 800 ஆக உயர்த்தப்படும் 

#அபராத வட்டி (Penal interest ) 5%லிருந்து 2%ஆக குறைக்கப்பட்டுள்ளது 

#Ordinary Loan ரூ 5 லட்சமாக உயர்த்த ஒப்புதல்  பெற டெல்லி க்கு அனுப்பப்பட்டுள்ளது 



30-09-2013 அன்று பணி ஒய்வு பெறும் தோழர்கள்  
 
 M L ராஜா CAO கடலூர் 

 N முனுசாமி SSS விழுப்புரம்  


தோழர்களுக்கு மாவட்ட சங்கம் தனது நெஞ்சு நிறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

Saturday, September 28, 2013

ஜுனகத் செயற்குழு முடிவுகள் 

இங்கே கிளிக் செய்யவும் 
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில்  ஊதியம் பெறுவோர் கவனத்திற்கு 
இந்த மாதம் முதல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில் ஊதியம் பெறுவோருக்கு ICICI வங்கியிலிருந்து நேரடியாக கிரெடிட் செய்யப்பட உள்ளது. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் மாவட்ட செயலரையோ கணக்கு அதிகாரியையோ உடனே அணுகவும் 

Wednesday, September 25, 2013

மத்திய அரசு ஊழியருக்கான 7-வது ஊதியக் குழு


மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7வது மத்திய ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் தனது ஒப்புதலை அளித்துள்ளார். இக்குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தனது பரிந்துரைகள் அளிக்க சராசரியாக 2 ஆண்டுகள் வழங்கப்படும். ஊதியக் குழு அறிவிக்கும் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.
ஊதியக் குழுவின் தலைவர், உறுப்பினர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஒப்பந்த ஊழியர் VDA உயர்வு

ஒப்பந்த ஊழியர் VDA 01-10-2013 முதல்  நாள் ஒன்றுக்கு ரூ 9/- உயர்ந்து உள்ளது

BASIC- ரூ 120/-

புதிய DA- ரூ 87/-  

மொத்தம் -ரூ 207/-

Monday, September 23, 2013

திருச்சி மாவட்ட சங்க அலுவலகத் திறப்பு விழா

திருச்சி மாவட்ட சங்க அலுவலகத் திறப்பு விழா 20-09-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. 

உணர்வுபூர்வமான சிறப்புரையாற்றிய நமது சம்மேளன செயலர்  தோழர் G ஜெயராமன் அவர்கள் 
"NFTE சங்க அலுவலகம்  NFTE உறுப்பினருக்கு என்று மட்டுமல்லாமல் அனைத்து ஊழியர்களின் நலன்கள் பற்றி விவாதிக்கும் இடமாக, அனைத்து சங்கத்தினரும் வருகை தரும் இடமாக, மூடபடாத ஒரு செயல்பாட்டு தளமாக விளங்க வேண்டும்" என்று குறிப்பிட்டார் .
அது அவர் பணிபுரியும் வாழ்ந்து வரும் கடலூர் மாவட்டத்திற்கும் பொருந்தும் என்றே கருதுகிறோம். நன்றி 

மத்திய செயற்குழு

நமது மத்திய செயற்குழு செப்டம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் குஜராத் மாநிலம் ஜுனகத் தில் நடைபெற உள்ளது . BSNL வளர்ச்சி மற்றும் ஊழியர் நலன் தொடர்பாக பல நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்று நம்புகிறோம். நமது தமிழ் மாநில செயலர் R பட்டாபிராமன் கலந்து கொள்கிறார் . செயற்குழு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகிறோம் 
 செப்டம்பர் மாத GPF 
#GPF வழங்குவதற்கான நிதி சம்பந்தமாக நமது மத்திய சங்கம் DIRECTOR (FINANCE ) அவர்களிடம் விவாதித்துள்ளது.  GPF க்கான நிதி வரும் புதன் அல்லது வியாழன் அன்று ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது .




அக்டோபர் மாத IDA 
# 01-10-2013 முதல் IDA 6.9% அல்லது அதற்கு மேல் உயரக்கூடும் என்று தெரிய வருகிறது 

மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்

கடலூர் வண்ணாரபாளையம் ஊழியர் குடியிருப்பில் கழிவு நீர் அடைப்பால் கீழ்த்தளங்களில் வசிப்போர் பெரும் இன்னலுக்கு ஆளாயினர்.சம்பந்தப்பட்ட துணைக்கோட்ட பொறியாளர் S நாகராஜன் அவர்களிடம் பல முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டிக்கிறோம்.
அதே சமயம் நாம் மாவட்ட நிர்வாகத்தின் (AGM (Admin)) கவனத்திற்கு கொண்டு சென்றவுடன்  உரிய நடவடிக்கை எடுத்து உடனே  பிரச்சினையை சரி செய்ய ஏற்பாடு செய்த துணைக் கோட்ட பொறியாளர் T ராமலிங்கம் அவர்களை பாராட்டுகின்றோம் 
மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகள் 

Friday, September 20, 2013

NFTE சமர்ப்பித்துள்ள தேசிய கவுன்சில் NJCM ஆய்படு பொருள்
1.NEPP தொடர்பான ஊழியர்  பிரச்சினைகள் 
2.போனஸ் 
3.மெடிக்கல் அலவன்ஸ் LTC ரீஇம்பர்ஸ்மென்ட் வசதிகளை திரும்ப பெறுவது
4.பெண் ஊழியருக்கான மாதம்  ஒரு நாள் சிறப்பு விடுப்பு
5.78.2% இணைப்பால் குருப் D  மற்றும் RM ஊழியருக்கு ஏற்பட்டுள்ள தேக்கநிலை 
6. 78.2% இணைப்பு பலனை 01-01-2007 அன்று பணியிலிருந்த அனைவருக்கும் அளிப்பது 
7.BSNL -ல் நேரடி நியமன ஊழியருக்கான ஓய்வூதிய பலன்கள் 
8.TTA பயிற்சிக்கான STIPEND ஐ புதிய சம்பள விகிதத்தின் படி திருத்தி அமைத்து ARREARS  வழங்குதல் 
9.  தகுதி பெற்ற பயிற்சி பெற்ற RM களை TELECOM MECHANIC களாக  பதவி உயர்த்துதல் 
10.Officiating JTO களை 35% 15% பதவி  உயர்வு  முறை பாதிக்கபடாமல் பதவி உயர்த்துதல் 
11.SC /ST பிரிவில் நிரப்பப்படாமல் உள்ள காலி இடங்களை நிரப்புதல் 
12.நடந்து முடிந்த JAO /JTO தேர்வுகளில் விதிகளை தளர்த்துதல் 
13.Management Trainee பதவிக்கான  தேர்வுக்கு அதிகாரிகள் மட்டுமின்றி  தகுதியுள்ள ஊழியர்களையும் அனுமதிப்பது 
14. BSNL ல் பணிபுரியும் மாற்று திறனாளிகள் நலன் 
15.TTA பதவிக்கான விதிகளில் மாற்றம் 

Click here to view the letter 

Wednesday, September 18, 2013

இரங்கல்

நமது AGM (CFA -NWP ) திரு M சேகர் அவர்களது தந்தையார்  திரு. முருகையன் அவர்கள் இன்று (18-09-2013)இரவு கடலூரில்  காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த  இரங்கலை உரித்தாக்குகிறது. 

இறுதி ஊர்வலம்  நாளை (19-09-2013) கடலூர், காவேரி நகரில்  உள்ள  இல்லத்திலிருந்து புறப்படும் .


Tuesday, September 17, 2013

FACT FINDING COMMITTEE -விசாரணை 14-09-2013

              வேலூர் மாநில செயற்குழு முடிவின்படி அமைக்கப்பட்ட மாநில துணை தலைவர் M லட்சம் தலைமையில் தோழர்கள் விஜயரங்கன் , P சென்னகேசவன் , K அசோகராஜன், P காமராஜ்   ஆகியோரை கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் (FACT FINDING COMMITTEE ) விசாரணை 14-09-2013 அன்று கடலூரில் நடைபெற்றது.  
 சம்பந்தப்பட்டவர்களுக்கு  முறையான சம்மன் முன்கூட்டியே அனுப்பப்பட்டு  விசாரணை(second sitting ) நடைபெற்றது .
         
        காலையில் நமது மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் COMMITTEE முன்பு ஆஜரானார்.கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் அமைப்பு விதிமீறலுக்கும் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் உறுப்பினர் எண்ணிகையை விட குறைவான ஓட்டுகளை பெற்றதற்கும் சம்மேளன செயலாளரே காரணம் என்று தான் வேலூர் செயற்குழுவில் பதிவு செய்திருந்த குற்றச்சாட்டுகளை மீண்டும் தக்க ஆதாரங்களோடு COMMITTEE முன்பு சமர்ப்பித்தார்.
        
         மாலையில் சம்மேளன செயலர் G ஜெயராமன் COMMITTEE  முன்பு ஆஜரானார்.
          
         முறையான சம்மன் முன்கூட்டியே அனுப்பப்பட்டும் முன்னாள் மாவட்ட செயலர் P சுந்தரமூர்த்தியும் முன்னாள் மாவட்ட பொருளர் M மஞ்சினியும் COMMITTEE முன்பு ஆஜராகவில்லை .

     "ண்மை , தூய்மை , சுயநலமின்மை ஆகிய இந்த மூன்றை பெற்றிருப்பவர்களைக் கெடுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ, மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும்,அதை எதிர்க்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு "
                                                                                                        -சுவாமி விவேகானந்தர் 


Sunday, September 15, 2013

அவசர மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்

NFTE கடலூர் மாவட்டம்
அவசர மாவட்ட செயற்குழு
தீர்மானங்கள்
பிரச்சினை தீர்வும் மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறையும்
       நமது முதுநிலை பொது மேலாளர் மூன்று மாவட்டத்திற்கு பொறுப்பு என்பதால் பிரச்சினை தீர்விற்கு முடிவெடுப்பதில் கால தாமதமாகிறது. எனவே நமது மாவட்டத்தின் பணி சூழலை பாதுகாக்க தொழிற்சங்கம் முன்னெடுக்கும் ஊழியர் பிரச்சினைகளை உரிய கவனம் செலுத்தி உடனடியாக தீர்க்க வேண்டுமாய் மாவட்ட நிர்வாகத்தை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது
சேவை மேம்பாடு
      புதிய தொலைபேசி இணைப்பு, பிராட்பேண்ட் இணைப்பு ஆகியவற்றுக்கு ஊழியர்கள் , உதான் டீம் ஆகியோர் விண்ணப்பங்கள் பெற்று வந்தாலும் புதிய இணைப்பு கொடுப்பதற்கு தேவையான ட்ராப் வயர், பிராட்பேண்ட் உபகரணங்கள் இல்லை என்ற நிலைதான் உள்ளது. ஆகவே நமது மாவட்டத்தில் கேட்டவுடன் தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு கொடுக்கவும் அதனை தக்க வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மாவட்ட நிர்வாகத்தை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது
      நமது மாவட்டத்தில் செல் டவர்கள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. பவர்கட்நேரங்களில் உடனடியாக ஜெனரேட்டர்கள் இயங்குவதற்கு தேவையான பேட்டரிகள் சரியாக இல்லாத நிலை உள்ளது.மேலும் மின்சாரம் இல்லாத நேரங்களில் BTS வேலை செய்ய அமைக்கப்பட்டுள்ள பேட்டரிகளின் Waranty Period முடிந்து தற்போது ஏறத்தாழ அனைத்து இடங்களிலும் புதிய பேட்டரி செட் அமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. குறிப்பாக சிதம்பரம்,விருத்தாசலம் , நெய்வேலி திருநாவலூர் பகுதிகளில் உடனடியாக மாற்றியமைத்திட வேண்டும்.பல இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை .அங்கு செல் டவர் அமைப்பதற்கு பதிலாக ஏற்கனவே டவர் உள்ள இடங்களுக்கு அருகாமையிலே புதிய டவர்கள் அமைக்கபடுகின்றன. அதற்கு பதிலாக சிக்னல் இல்லாத இடங்களில் புதிய டவர்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது
ஒப்பந்த ஊழியர் பிரச்சினை
      இன்னோவேடிவ் செக்யூரிட்டி சொலுஷன்ஸ் ஒப்பந்ததாராக அமர்த்தப்பட்டதிலிருந்து ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் கடுமையான கால தாமதமாகிறது. ஏழு மாதங்களாக EPF,ESI தொகையையும் கட்ட வில்லை. விதிகளை மீறிய இந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டுமாய் மாவட்ட நிர்வாகத்தை  இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
நிதிநிலை
      நமது மாவட்ட மாநாடு முடிந்து ஆறு மாதங்களாகின்றன. பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம். குறிப்பாக சிரில் அறக்கட்டளை தமிழ்விழா உட்பட அனைத்து விழாக்களையும் நமது தோழர்களிடம் நன்கொடை வசூலித்து தான் நடத்த வேண்டியிருக்கிறது . மேலும் மாவட்ட சங்கம் இன்னும் சிறப்பாக செயல்பட பிரச்சினை தீர்வில் போராட்டங்கள் நடத்திட சுற்றறிக்கைகள் வெளியிட தொலைபேசி தோழன் வெளியிட நிதி தேவை என்பதால் தோழர்கள் உடனடியாக நன்கொடை வழங்கிட வேண்டுமாய் இந்த மாவட்ட செயற்குழு கேட்டுக்கொள்கிறது  
அமைப்பு மாநாடு
      நமது மாநாடுகள் கூடங்களில் பல பிரச்சினைகளை விவாதிக்கிறோம் உரியவருக்கு சிறப்பு செய்கிறோம். ஆனால் அமைப்பு நிலை விவாதம் என்பது நிகழ்ச்சி நிரலில் இருக்குமே தவிர, முறையாக முழுமையாக விவாதம் நடத்த நேரம் இருப்பதில்லை ஜனநாயக முறைப்படி நடக்கும் நமது அமைப்பில் அமைப்பு நிலை விவாதம்  என்பது மிகவும் அடிப்படையானது
      எனவே நமது சங்கத்தை மேலும் முன்னெடுத்துச்செல்ல ஒவ்வொரு கிளைச்செயலரும் முழுமையாக பங்கேற்கும் வகையில் அமைப்புநிலை மாநாடு ஒன்று நடத்திட இச்செயற்குழு முடிவு செய்கிறது.
அமைப்பு விதிகளை அனுசரிப்போம்
      நமது மாவட்ட மாநாட்டிற்கு பிறகு, மாவட்டத்தில் அமைப்பு விதி மீறல்களும் குழுப்போக்கும் நீடிக்கிறது என்பதை இச்செயற்குழு கவலையுடன் பரிசீலித்தது. உதாரணமாக பொதுவான தமிழ்விழா , பணி ஓய்வு பாராட்டு விழாமுதலியவற்றில் கூட கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க குழுப்போக்கே காரணம்
      நீண்ட மரபுடைய நமது மாவட்ட சங்கத்தில் பொறுப்பாளர்கள் தொடர்ந்து மாறி வந்துள்ளனர்.  ஒருபோதும் புதிய நிர்வாகிகளிடம் பொறுப்பை ஒப்படைப்பதில் சிக்கல் எழுந்தது இல்லை.  ஆனால் இயக்க நடவடிக்கைகளை முடக்கும் வகையில் மாவட்ட கணக்குகள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை  என்பது நமது மரபார்ந்த செயல் அல்ல என்பதை இச்செயற்குழு கவலையுடன் பதிவு செய்கிறது
இந்த நிலை நீடிக்க முடியாது. உரிய மாறுதல்களை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட செயலருக்கு இச்செயற்குழு முழுமையான அதிகாரம் அளிக்கிறது.
ஒலிக்கதிர் பொன்விழா -வரவேற்பு குழு
      ஒலிக்கதிர் பொன்விழாவை சிறப்பாக நடத்திட அனைத்து கிளைகளின் ஒத்துழைப்பையும் இச்செயற்குழு கோருகிறது.ஒலிக்கதிர் பொன்விழா குழு  செயல் தலைவராக V.இளங்கோவன்  TTA, பொது செயலாளராக R.ஸ்ரீதர் SS, பொருளாளராக K.கிருஷ்ணகுமார் TTA ஆகியோரை இச்செயற்குழு ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறது. மற்ற குழுக்களை அமைப்பதற்கான அதிகாரத்தை  செயலக கூட்டத்திற்கு இச்செயற்குழு அதிகாரமளிக்கிறது.
12-09-2013
சிதம்பரம்                    R.செல்வம்                   இரா ஸ்ரீதர்
                         மாவட்ட தலைவர்         மாவட்ட செயலர்

Friday, September 13, 2013


தமிழ்நாடு AITUC -இன் தலைவர், பொதுசெயலாளர் 
இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் 
ஜனசக்தி இதழின் ஆசிரியர் 
போன்ற 
பல பொறுப்புகளை வகித்த 
விடுதலை போராட்ட வீரர் 
தோழர் A M  கோபு 
அவர்களின்
முதலாம் ஆண்டு நினைவு தினம் 
இன்று (13-09-2013)
அவசர மாவட்ட செயற்குழு - சிதம்பரம் -12-09-2013

                     கடலூர் மாவட்ட அவசர செயற்குழு 12-09-2013 அன்று சிதம்பரம் தில்லை கோவிந்தராஜன் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் R செல்வம் தலைமையில் நடைபெற்றது.



தேசிய கொடியை முன்னாள் மாநில தலைவர் S தமிழ்மணியும் சம்மேளன கொடியை சிதம்பரம் கிளை தலைவர் H  இஸ்மாயில் மரைக்காயரும் ஏற்றினர் .
மாவட்ட துணை தலைவர் P அழகிரி அஞ்சலியுரையாற்றினார் 
மாவட்ட உதவி செயலர் D ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.
சம்மேளன செயலாளர் G ஜெயராமன் தனது துவக்கவுரையில் சிரியாவில் ஏற்பட்டுள்ள  சூழ்நிலையை பற்றியும் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியும் பேசினார்.








மாவட்ட தலைவர் R செல்வம் நமது மாவட்ட பிரத்யோகமான சூழ்நிலையை பற்றி குறிப்பிட்டு  தலைமையுரையாற்றினார் 
மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் ஆய்படுபொருளை அறிமுகபடுத்தி நமது மாவட்ட பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைத்தார் 
நமது இணையதளத்தில் வெளியிடபட்டிருந்த மாவட்ட சங்கத்தின் நிதிநிலை அறிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மூன்றில் இரண்டு பங்கு செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆய்படுபொருள் குறித்து பேசினர் 
மாநில உதவி தலைவர் V லோகநாதன் ,சிரில் அறக்கட்டளை தலைவர் K சீனிவாசன், PEWA தோழர் V நல்லதம்பி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்  






சிறப்புரையாற்றிய மாநில அமைப்பு செயலர் V  மாரி தனது அழகு தமிழில் போர்குணம் கொண்ட நமது மாவட்டத்தை வாழ்த்தியும் BSNL /MTNL  குறித்த Group Of Ministers கூட்டத்தை பற்றியும் தோழர் குருதாஸ் தாஸ் குப்தா அவர்கள் மத்திய தொலைதொடர்புதுறை அமைச்சருக்கு BSNL புனரமைப்பு குறித்து எழுதிய கடிதத்தை பற்றியும் விரிவாக குறிப்பிட்டார் 

சிறப்புரையாற்றிய மாநில உதவி செயலர் K நடராஜன் தஞ்சை தமிழில் அமைப்பு பிரச்சினைகளை பற்றியும் BSNL வளர்ச்சி பற்றியும் மத்திய செயற்குழு பற்றியும் குறிப்பிட்டார் 

இறுதியாக அனைவரின் உணர்வுகளையும் பிரதிபலளிப்பதாய் அமைந்தது மாவட்ட செயலரின்  தொகுப்புரை.

நிறைவாக மாவட்ட பொருளாளர் A சாதிக் பாட்சா நன்றியுரையாற்றினார்

சிறப்பான ஏற்பாடுகளை செய்த சிதம்பரம் கிளைக்கு நமது பாராட்டுக்கள் .காலை தேநீர் ஏற்பாடு செய்த D ரவிச்சந்திரன்  மாலை தேநீர் வழங்கிய K கிருஷ்ணகுமார் சுண்டல் வழங்கிய V.கிருஷ்ணமூர்த்தி குடிநீர் வழங்கிய K.நாவு ஆகிய தோழர்களுக்கு நன்றிகள் 

தீர்மானங்கள் விரைவில் வெளியிடப்படும் .

Wednesday, September 11, 2013

நிதிநிலை அறிக்கை 
                
                  முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் இன்றுவரை (11-09-2013) கணக்குகளை ஒப்படைக்காவிடினும்  மாவட்ட சங்கம் தனது நடவடிக்கைகளில்  எந்தவித தொய்வுமின்றி செயல்பட  நன்கொடையளித்து உதவிய  தோழர்களுக்கு நன்றிகள். மேலும் நிதியை திறம்பட கையாண்ட  நமது மாவட்ட பொருளாளர் A சாதிக் பாட்சா அவர்களுக்கு பாராட்டுக்கள் .

03-03-2013 முதல்  11-09-2013 வரையிலான காலத்திற்கான
கடலூர் மாவட்ட சங்கத்தின் வரவு செலவு பட்டியல்

வரவு
செலவு

முன்னாள் பொருளாளர் தோழர் மஞ்ஜினியிடமிருந்து வரவு

சிரில் நினைவு தமிழ் விழா நன்கொடை

தேர்தல் நன்கொடை

மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா நன்கொடை

தனி நபர் நன்கொடை









50000.00




25700.00

16600.00



14640.00


  3500.00







6-வது சரிபார்ப்பு தேர்தல் செலவு

BR நினைவஞ்சலி

சங்க அலுவலக திறப்பு விழா

சிரில் நினைவு தமிழ் விழா  செலவு

கூட்டுறவு சங்க தேர்தல் செலவு

போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்


40216.00

  1878.00


14789.00


26725.00


  2750.00



26583.00


110440.00

112941.00

நிகர பற்றாக்குறை ரூ 2501.00


குறிப்பு: உளுந்தூர்பேட்டை மாவட்ட செயற்குழு செலவுகளை அந்த கிளையே ஏற்றுக்கொண்டது.

Tuesday, September 10, 2013

பாரதியார் நினைவு நாள் செப்டம்பர் 11







JCM தேசிய கவுன்சில்

JCM தேசிய கவுன்சில் உருவாக்கத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது  . 


நமது அகில இந்திய தலைவர் 
தோழர் இஸ்லாம் அகமது 
ஊழியர் தரப்பு தலைவராகவும்

நமது பொது செயலாளர் 
தோழர் சந்தேஷ்வர்சிங் 
 ஊழியர் தரப்பு உறுப்பினராகவும் 
அறிவிக்கப்பட்டுள்ளனர் 


 ஊழியர் தரப்பு உறுப்பினராக நமது மாநில செயலர்
தோழர் R பட்டாபிராமன்
 அறிவிக்கப்பட்டிருக்கிறார் .  அவரது அனுபவமும் ஆற்றலும் BSNL நிறுவன வளர்ச்சிக்கும் ஊழியர் நலனுக்கும் பயன்பட அவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம் 


Friday, September 6, 2013

FACT FINDING COMMITTEE

வேலூர் செயற்குழு முடிவின்படி மாநில சங்கத்தால் அமைக்கப்பட்ட மாநில துணை தலைவர் தோழர் லட்சம் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு (FACT FINDING COMMITTEE) -ன் முறையான விசாரணை (second sitting ) 14-09-2013 அன்று கடலூரில் நடைபெற உள்ளது .

1.   6-வது சரிபார்ப்பு தேர்தலில்  கடலூர் மாவட்டத்தில் வாக்கு வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
2.  வாக்கு வீழ்ச்சிக்கு பொறுப்பாளர் யார் ?
3. மாவட்ட மாநாட்டில் ஏற்கப்பட்ட நிதிநிலை அறிக்கை படி நிதியை ஒப்படைக்காதது 
4.அமைப்பு விதி மீறல் 

ஆகியவற்றை பற்றி விசாரிக்க உள்ளனர் 

Thursday, September 5, 2013

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை - தமிழ் விழா 24-08-13 -வரவு செலவு பட்டியல்

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை 
தமிழ் விழா 24-08-13
வரவு செலவு பட்டியல் 

வரவு
செலவு                                                                                               
நன்கொடை மூலம் 
விபரம்

தோழியர் பார்வதி SSS CDL---ரூ 4500/-
தோழர்  ராமானுஜம் TM VAL---ரூ 3700/-
தோழர் அருள்லாரன்ஸ் STS VDC--ரூ3000/-
தோழர் அழகிரி STS KAC---ரூ 2000/- 
தோழியர் சிவசுந்தரி TTA CNI---ரூ 2000/-
தோழர் நடராஜன் SDE TNV--- ரூ 2000/-
தோழர் விஜயகுமார் SSS CDL --- ரூ 1000/-
தோழர் வெங்கட்ராமன் SDE CDL---ரூ 1000/-
தோழியர் ரேவதி STS CDL--- ரூ   500/- 
தோழியர் நிர்மலா SSS CDL --- ரூ   500/-
தோழர் தேவராஜன் STS KTL  ரூ   500/-
தோழர் சீனிவாசன் STS CDL ---  ரூ   500/-
தோழர் ஸ்ரீதர் SS CDL ---  ரூ   500/-
தோழர் ஜெயச்சந்தர் TTA ESK--- ரூ   500/-
தோழர் செல்வராஜூ STS CDL--- ரூ    500/-
தோழர் குழந்தைநாதன் TTA ULD----   500/-
தோழர் பாலாஜி TTA MMP---- ரூ  500/-
தோழர் லோகநாதன் STS NTS---  ரூ   500/-
தோழர் அப்துல்லா TM NTS--- ரூ    500/-
தோழர் அருள்செல்வம் TM VDC ரூ 500/-
தோழர் அன்பழகன் STS VDC ரூ 500/-

நிகர பற்றாக்குறை
 25700.00















 





     









 1025.00
மாணவர் விண்ணப்பம்
விழா  முதல் நோட்டீஸ்  
அழைப்பிதழ்
பேனர்
சான்றிதழ்

பொன்னாடை
இரவு உணவு          
சேர்
மின்விளக்கு 
பரிசளிப்பு புத்தகங்கள்
சிறப்பு விருந்தினர் பரிசு
சிறப்பு விருந்தினர் பயணப்படி
மாணவர் பரிசு தொகை
                  
      100.00
       500.00
     1200.00
     1605.00
       550.00
    
  1015.00 
     3280.00
       600.00
   400.00
   1600.00
       875.00
  1000.00 
   14000.00
மொத்தம்
   26725.00
   மொத்தம்
    26725.00

மாவட்ட சங்கத்திலிருந்து நிதி பெறாமல் சிறப்பான விழாவை நடத்திய அறக்கட்டளை செயலர் லோகநாதன் மற்றும் தலைவர் சீனிவாசன் ஆகியோரை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது