.

Friday, November 29, 2013

தர்மபுரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா மற்றும் மாவட்ட மாநாடு 28-11-2013

தர்மபுரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா மற்றும் மாவட்ட மாநாடு 28-11-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது.
நமது தமிழ்நாடு தொலைதொடர்பு வட்ட முதன்மை பொது மேலாளர் சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மாநில செயலர் பட்டாபி,முன்னாள் சம்மேளன செயலர் R K , ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்மணி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் ஜெயபால் சேது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .நமது மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் சங்க அலுவலக பெயர் பலகையை திறந்து வைத்து வாழ்த்துரையாற்றினார் 
திரளான தோழர்கள் கலந்து கொண்ட மாவட்ட மாநாட்டில் தோழர் மணி மீண்டும் மாவட்ட செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .  வாழ்த்துக்கள் .

Sunday, November 24, 2013

செயலக கூட்டம் 25-11-2013

செயலக கூட்டம் 25-11-2013 அன்று மாலை  மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகளும் முன்னணி தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் 

Saturday, November 23, 2013

24-11-2013 -NFPTE இன் 60 வது அமைப்புதினம்

24-11-2013 -NFPTE இன் 60 வது அமைப்புதினம் 
தியாகிகளுக்கு செவ்வணக்கம் 
அனைவருக்கும் அமைப்புதின வாழ்த்துக்கள் 

.மறைந்த தலைவருக்கு அஞ்சலி

தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இறுதி நிகழ்ச்சிகள் நாளை மாலை சென்னையில் நடைபெறும்.மறைந்த தலைவருக்கு அஞ்சலி

Friday, November 22, 2013

இரங்கல்

நமது சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் மாவட்ட தலைவருமான P சின்னசாமி LI அவர்கள்    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் ஆத்தூருக்கு அருகில் உள்ள தியாகனூரில் 22-11-2013 அன்று மாலை 4 மணியளவில்  நடைபெறும் .


அவர் இயக்க பணி மட்டுமல்லாமல் தொலைபேசி இணைப்பு நிர்மான பணியிலும் சிறந்து விளங்கி சஞ்சார் சாரதி விருதையும் பெற்றவர் என்பதை நினைவு கூர்கிறோம்  

Thursday, November 21, 2013

தமிழ் மாநில செயற்குழு -கிருஷ்ணகிரி-20-11-2013

தமிழ் மாநில செயற்குழு கிருஷ்ணகிரியில்  20-11-2013 அன்று மாநில தலைவர் நூருல்லா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தருமபுரி மாவட்ட செயலர் மணி மற்றும் வேலூர் சென்னகேசவன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர் . நமது மாவட்டத்தை சேர்ந்த மாநில துணைத்தலைவர் லோகநாதன் அஞ்சலியுரையாற்றினார் .ஆய்படுபொருள்களை அறிமுகப்படுத்தி மாநில செயலர் பட்டாபி அறிமுக உரையாற்றினார்.மாநில சங்க நிர்வாகிகளும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் விவாதங்களில் பங்கேற்று உரையாற்றினர். சம்மேளன செயலர் G ஜெயராமன்,அகில இந்திய அமைப்பு செயலர் SS கோபாலகிருஷ்ணன்,மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் குடந்தை ஜெயபால், மதுரை சேது,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்மணி ,இளைஞர் கன்வீனர் சுபேதார் அலிகான்,மகளிர் கன்வீனர் லைலா பானு,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  இறுதியில் மாநில செயலர் பட்டாபி விவாதங்களுக்கு பதிலளித்து கருத்துரையாற்றினார். சிறிய மாவட்டமாக இருந்தாலும் செயற்குழு ஏற்பாட்டை செம்மையாக செய்திட்ட தருமபுரி மாவட்ட செயலர் மணி மற்றும் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் முனியன் ஆகியோரையும் மற்ற தோழர்களையும் பாராட்டுகிறோம்  

 செயற்குழு காட்சிகள் இங்கே 

ஒலிக்கதிர் பொன்விழா நிதியினை நிறைவாக வழங்கிய சிவில் , குடந்தை,காரைக்குடி,மதுரை,குன்னூர்,வேலூர் மாவட்ட சங்கங்களுக்கும் மகளிர் கன்வீனர் லைலா பானு-தஞ்சை,மாநில துணை தலைவர் மனோகரன்-திருச்சி , ராபர்ட்-கோவை ஆகிய தோழர்களுக்கும் நன்றி.மற்ற மாவட்ட சங்கங்களும் நிர்ணயிக்கப்பட்ட நிதியினை விரைவில் வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

மொத்தத்தில்,மாநில செயற்குழு கிருஷ்ணகிரி ஒற்றுமை பாதைக்கான வழிகாட்டிருக்கிறது. நமது கடலூர் மாவட்ட அமைப்பு மற்றும் நிதி பிரச்சினையும்  விரைவில் தீர்வடையும் என்று நம்புகிறோம் .


Monday, November 18, 2013

அன்பார்ந்த தோழர்களே 
    நமது ஒலிக்கதிர் பொன்விழா நன்கொடை நிதியினை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் 20-11-2013 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ள மாநில செயற்குழுவிற்கு வரும்போது பொன்விழா குழு செயலரிடம் அளிக்கும்படி கேட்டுகொள்கிறோம் .
சேலம் மாவட்ட செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் பாலகுமாருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 

Staff Welfare Board கூட்டம்

தமிழ்நாடு BSNL Staff Welfare Board -ன் கூட்டம் 29-11-2013 அன்று நடைபெறவிருப்பதால் Staff Welfare சம்பந்தமான பிரச்சினைகளை 20-11-2013 அன்றுக்குள் rsridharbsnl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9443212300 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொண்டு தெரிவித்திட வேண்டுகிறோம் 

Friday, November 15, 2013

பி எஸ் என் எல் கடலூர் -குழந்தைகள் தின கொண்டாட்டம் -14-11-2013

பி எஸ் என் எல் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின்  சார்பில் அரசு சேவை இல்லத்தில் சமுக நலத்துறையுடன் இணைந்து 14-11-2013 மாலை குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. நமது முதுநிலை பொதுமேலாளர் தலைமையேற்று பி எஸ் என் எல் சார்பில் நலத்திட்ட உதவிகளை சேவை இல்லத்திற்கு வழங்கினார். மிதிவண்டி, எமர்ஜென்சி லேம்ப் , சமையல் உபகரணங்கள் , நோட்டு புத்தகங்கள் , பிஸ்கட்  போன்றவை வழங்கப்பட்டன .
துணை பொதுமேலாளர்கள் நிதி,நிர்வாகம் மற்றும் மார்க்கெட்டிங்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .நமது சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் , வெளிப்புற கிளை தலைவர் V இளங்கோவன் TTA ஆகியோர் கலந்துகொண்டனர் .
SDE மார்க்கெட்டிங் P சிவகுமரன் நன்றியுரை ஆற்றினார்.
சிறிய முயற்சியாக இருந்தாலும் கடைசி நேர முடிவாக இருந்தாலும் நல்ல முடிவு எடுத்த மார்கெட்டிங் பிரிவிற்கு குறிப்பாக AGM மார்க்கெட்டிங் P குணசேகரன் அவர்களுக்கும் நமது நன்றிகள் .





Wednesday, November 13, 2013

முகரம் விடுமுறை மாற்றம்

முகரம் விடுமுறை 14-11-2013 க்கு பதிலாக 15-11-2013 க்கு  மாற்றப்பட்டுள்ளது 

Monday, November 11, 2013

BSNL Tamilnadu Circle Staff Welfare Board

6-வது சரிபார்ப்பு தேர்தலுக்கு பிறகு
 பி எஸ் என் எல் தமிழ்மாநில  பணியாளர் நல வாரியம் (BSNL Tamilnadu Circle Staff Welfare Board ) திருத்தி அமைக்கப்பட்டுள்ளது . 
 நமது மாவட்ட செயலர் 

இரா ஸ்ரீதர்


NFTE சார்பில் பணியாளர் தரப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் . 
நமது மாவட்ட செயலரின் பணி சிறக்க வாழ்த்துவோம் .  
மாநில சங்கத்திற்கு நன்றிகள் .  

Thursday, November 7, 2013

பண்ருட்டியில் கலந்துரையாடல் 07-11-2013

பண்ருட்டியில் தேங்கி கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள் குறித்து கிளை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் 07-11-2013 அன்று கிளை தலைவர் T வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது . மாவட்ட அமைப்பு செயலர் G ரங்கராஜன் கிளை பிரச்சினைகளை தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர்  மற்றும் மாநில துணை தலைவர் V லோகநாதன், கடலூர் தொலைபேசி கிளை தலைவர் V இளங்கோவன் TTA   ஆகியோர் கலந்து கொண்டனர்.
 1. பண்ருட்டி தொலைபேசி நிலையத்திற்கு மின் இணைப்பு NON STANDARD முறையில் உள்ளது.
2.Equipment Room இல் A C மற்றும் மின் விளக்குகள் இயங்காமல் உள்ளன .
 3.CSC இல் மின்விசிறி வசதி கூட இல்லை. 
 4. CSC இல் Postpaid Sim Activation செய்ய TTA நியமிக்கப்படவேண்டும் . 
 5. OTA ஒரு வருடத்திற்கு மேலாக ஊழியருக்கு வழங்கபடுவதில்லை. 
6. அவுட்டோரில் பில்லர்கள் பழுதடைந்து உள்ளன 
போன்ற பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
சில தோழர்கள் கூட்டத்திற்கு இடையே  வந்து சலசலப்பு ஏற்படுத்தினர்.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பண்ருட்டி தோழர்களை வாழ்த்துகிறோம் . பிரச்சினை தீர்வில் மாவட்ட சங்கம் உரிய கவனம் செலுத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .



கள்ளக்குறிச்சி கிளை பொதுக்குழு 07-11-2013

கள்ளக்குறிச்சி கிளை பொதுக்குழு கூட்டம் தோழர் K பாண்டியன் தலைமையில்   07-11-2013 அன்று நடைபெற்றது.  கிளை செயலர் S மணி வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் R செல்வம் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்.  மாவட்ட உதவி தலைவர் P அழகிரி அவர்கள்  ஒலிக்கதிர் பொன்விழா நிதி பெறுவது பற்றி விளக்கினார் .  ஒலிக்கதிர் பொன்விழாவை சிறப்பாக நடத்த கிளை சார்பில் முழு ஒத்துழைப்பையும் வழங்க முடிவு செய்யப்பட்டது 

சிதம்பரம் AITUC சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அருகில் உள்ள பெருமாத்தூர் கிராமத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் நடைபெற்றுவந்த ஸ்ரீவராகி கெமிக்கல்ஸ் ஆலை தொழிலாலர்களுக்கு EPF,ESI இல்லை சம்பளம்,போனஸ் மறுப்பு இவைகளை எதிர்த்து ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.இதை ஆதரித்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் AITUC மாவட்ட செயலர் தோழர்.M.சேகர் கண்டன உரையாற்றினார்.  நமது NFTE சங்கத்தின் சார்பாக தோழர்.D.ரவிச்சந்திரன் மாவட்ட உதவி செயலர், கண்டன  உரையாற்றினார்.   தோழர்  H.இஸ்மாயில், V.கிருஷ்ணமூர்த்தி, தோழர்.K.நாவு ஆகியோர் கலந்து கொண்டு போராட்டம் வெறறிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் .


  

Tuesday, November 5, 2013

இரங்கல்

நமது மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் K அன்பாயிரம் உளுந்தூர்பேட்டை அவர்களின் தாயார் இன்று(05-11-2013) மாலை    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் ஆத்தூருக்கு அருகில் உள்ள தியாகனூரில் 06-11-2013 அன்று காலை 9 மணியளவில்  நடைபெறும் .


Monday, November 4, 2013

செயலக கூட்டம்

செயலக கூட்டம் வருகின்ற 08-11-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும் . அனைத்து கிளை செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் முன்னணி தோழர்களும் கலந்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Friday, November 1, 2013





தீபங்களின் ஒளி  வெள்ளத்தில் 
மத்தாப்புகளின் சிரிப்பில் 
பட்டாசுகளின் இசையில் 
இனிப்புகளை பரிமாறி தித்திக்கும் 
தீபாவளியை கொண்டாட 
வாழ்த்துகிறோம். 
இந்த தீபாவளி 
BSNL நிறுவனத்திற்கும் 
NFTE  இயக்கத்திற்கும் 
நல்வழியில் ஒளியேற்றட்டும்