.

Tuesday, June 30, 2015

இரங்கல்

 கடலூர் மாவட்ட  LJCM உறுப்பினரும்  மற்றும் செஞ்சி கிளை செயலருமான தோழர்  R.ரவி   
அவர்களின்  தந்தையார்  இன்று காலை ( 30-06-2015)  இயற்கை எய்தினார். 
அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும்   மாவட்ட சங்கத்தின் சார்பில்  இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 இறுதி நிகழ்ச்சி இன்று  (30-06-2015)மாலை  செஞ்சி அருகேயுள்ள பொன்பத்தி கிராமத்தில்   நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.



நம்முடன் பல ஆண்டு காலம் பணிபுரிந்து இன்று (30-06-2015) பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கும். தோழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும்
ஓய்வுக் காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.

ஓய்வு பெறுபவர்கள்:
திரு.M.சேகர், AGM கடலூர்
தோழர்.S.தேசிங், TM கள்ளக்குறிச்சி
தோழியர்.T.வாசுகி, SSS கடலூர்
தோழர்.N.பாலசுப்ரமணியன், TM கடலூர்
தோழர்.M.தங்கவேலு, TM கடலூர்
தோழியர்.S.மங்கையர்க்கரசி, STS விழுப்புரம்
தோழர்.N.மேகநாதன், STS விழுப்புரம்


Sunday, June 28, 2015

தோழர்.S.தேசிங் T.M பணிநிறைவு பாராட்டு 
 27-06-2015

கள்ளக்குறிச்சி கிளைத் தோழர்.S.தேசிங் T.M அவர்களின் பணிஓய்வு பாராட்டு கூட்டம் கிளைத்தலைவர் தோழர்.K.பாண்டியன் தலைமையில்
 27-06-2015 அன்று நடைபெற்றது. தோழர்.K.செல்லமுத்து வரவேற்பு நல்கிட மாநிலத்துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் துவக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் தோழர்.R.செல்வம், மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், மாவட்ட உதவித்தலைவர் தோழர் P.அழகிரி, மாவட்ட உதவி செயலர் தோழர்.D.குழந்தைநாதன், மாவட்ட உதவி தலைவர் தோழர்.K.அம்பாயிரம், RGB தோழர்.V.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர் P.காமராஜ், சிறப்புரையாற்றினார். பின்னர் தோழர் S.தேசிங் அவர்கள் ஏற்புரை வழங்கிட, கிளைப்பொருளர் தோழர்.K.இராமன் நன்றியுரை ஆற்றிட பாராட்டு விழா இனிதே நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கிளை சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.














வங்கித்தோழர்.விஜயராகவன் பணிநிறைவு பாராட்டு விழா
27-06-2015 
கடலூர் இந்தியன்வங்கி ஊழியர் சங்கத் தோழரும் நமது அலுவலக கிளைத் தோழியர்.B.S.நிர்மலா அவர்களின் கணவருமான தோழர்.S.விஜயராகவன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா இந்தியன் வங்கி சங்கத்தின் சார்பில் கடலூரில் நடத்தபட்டது. நமது மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். கடலூர் தாலுக்கா வங்கி ஊழியர் சங்க பொதுசெயலர் தோழர்.B.ஸ்ரீதரன், வங்கிஊழியர் சங்கத் தலைவர்  தோழர். P.பழனிகுமார் ஆகியோரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். 




Saturday, June 27, 2015

கள்ளக்குறிச்சி கலந்தாய்வுக் கூட்டம் 26.06.2015

கூட்டமைப்பு அறைகூவலுக்கிணங்க BSNL வளர்ச்சிக்கான இரண்டாவது கலந்தாய்வுக் கூட்டம் 26.06.2015 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. மாவட்ட அதிகாரிகள் மற்றும் கூட்டமைப்பு தலைவர்கள், கள்ளக்குறிச்சி பகுதி தோழர்கள் நிறைவாக கலந்து கொண்டது மிக சிறப்பாகும். நமது சங்கத் தோழர்கள் பலரும் கலந்தாய்வில் கலந்து கொண்டு எவ்வித நோக்கமும் இல்லாமல் BSNL வளர்ச்சிக்கான பல ஆக்கபூர்வ கருத்துக்களை மட்டுமே எடுத்துரைத்தது சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்!!






Friday, June 26, 2015

22-வது மாநிலக் கவுன்சில் கூட்டம்-நமது பதிவு


23-06-2015 அன்று தலைமைப் பொது மேலாளர் அவர்கள் தலைமையில் பயனுள்ள வகையில் நடைபெற்றது. உறுப்பினர்கள், நமது மாவட்டசெயலர் இரா.ஸ்ரீதர் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். ஊழியர் தரப்புத்தலைவர் நமது மாநிலசெயலர் தோழர்.பட்டாபி அவர்களின் உரை ஆழமாக, அழுத்தமாக, சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்தது.

Tuesday, June 23, 2015


சிதம்பரம் கேபிள் பழுது 

சிதம்பரம் நகர பகுதியில் நகராட்சி கழிவு நீர் வாய்க்கால் தோண்டும் போது  நமது 1600 pair அளவுகொண்ட கேபிள் துண்டிக்கப்பட்டு பல தொலைபேசி இணைப்புகள் செயல் இழந்தன. நிர்வாகம் உடனடியாக சரிசெய்யும் பணியை துவங்கியது. சரி செய்யும் பணியில் (21-6-2015) ஞாயிறு விடுமுறை நாளென்றும் பாராமல் நமது ஒப்பந்த ஊழியர்கள் தோழர்கள் சத்யராஜ், மதி,நாகராஜன் ஆகிய மூன்று பேர் மற்றும் அந்த பகுதி டெலிகாம் மெக்கானிக் தோழர்.T.ராஜேந்திரன்  ஆகியோர்  கேபிள் ஜாயின்ட் பணியில் ஈடுபட்டு சரிசெய்தனர். இத் தோழர்களுக்கு நமது மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். (1600 pair அளவு கொண்ட இக் கேபிள் ஒரு சில இடங்களில் மட்டுமே போடப்பட்டிருக்கும். இக் கேபிள் தற்போது விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்           திரு.பன்னீர்செல்வம், SDE அவர்கள் முயற்சியில் போடப்பட்டது)
  
இப்பகுதியில் கேபிள் பகுதியில் பணிபுரிவதற்கு ஏற்கனவே மேலும் சில ஒப்பந்த ஊழியர்களை நிர்வாகத்திடம் கோரியிருந்தோம். ஆனால் நிர்வாகம் நமது கோரிக்கையை ஏற்கவில்லை. இது போன்ற அவசர காலத்தில் கூடுதலாக பணிபுரிவதற்கு ஏதுவாக இருந்திருக்கும். இருப்பினும் குறைந்த ஒப்பந்த ஊழியர்களை கொண்டே கேபிள் பழுதை சரிசெய்துள்ளனர். நமது வாழ்த்துக்கள்


நிர்வாகம் இனியாவது கூடுதல் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும் என நம்புகிறோம்!!!



பண்டிகைக்கால கடன் பெறுவதற்கு காலம்
குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்கபட வேண்டும். அதற்கான கால அட்டவணை கீழே....

பண்டிகையின் பெயர்        பண்டிகை தேதி        விண்ணப்பிக்க கடைசி தேதி

ரம்ஜான்                                             18-07-2015                               01-07-2015
சுதந்திரதினம்                                 15-08-2015                               01-08-2015
விநாயகர் சதுர்த்தி                      17-09-2015                               01-09-2015
பக்ரித்                     25-09-2015                               01-09-2015
தசரா                                                  22-10-2015                               03-10-2015
மொஹரம்                                      24-10-2015                               03-10-2015
தீபாவளி                                           11-11-2015                               20-10-2015
மிலாடிநபி                                       24-12-2015                               07-12-2015
கிறிஸ்துமஸ்                                 25-12-2015                               07-12-2015

புத்தாண்டு2016                         01-01-2016                     07-12-2015




Friday, June 19, 2015

செய்திகள்
  • மாநிலக்கவுன்சில் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும். ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் மாவட்ட செயலரிடம் உடனடியாக தெரிவிக்கவும். 
  • ஏற்கனவே அளிக்கப்பட்ட குறிப்புகள் காண இங்கே கிளிக் செய்யவும். CIRLCE JCM ITEMS
  • நவம்பர்-27 வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்களுக்கு இந்த மாதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.   


வருமான வரி பிடித்தம் சரிசெய்வதற்காக தாங்கள் செலுத்திய இன்சூரன்ஸ் ரசீது, டியூஷன் பீஸ் ரசீது, வீடு லோன் கடன் செலுத்திய விவரம் ஆகியவற்றை மாவட்ட அலுவகத்திற்கு தெரிவிக்கவும். தற்போது ரசீது அளிக்க முடியாவிட்டாலும் அதனுடைய விபரங்களை கடிதம் மூலம் தெரிவித்து பிடித்தம் செய்வதை தவிர்க்கவும். 
வருமான வரி பிடித்தம் சரிசெய்வதற்காக அளிக்கப்படும் புதிய வீட்டு வாடகைக்கான படிவம் FORM No-10BA இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ளது.



நமது மாநிலசங்கம் மாநில கவுன்சிலில் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் அவரவர் சர்விஸ் புத்தகத்தை காண வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே 
தோழர்கள் தங்களது சர்விஸ் புத்தகத்தில் கீழ்க்கண்ட விபரங்களை அவசியம் சரிபார்த்துக்கொள்ளவும்
தங்களது பெயர், தங்களது குடும்பத்தினர் விபரம், வாரிசு பெயர் மற்றும் பிறந்த தேதி, மறுமணம் செய்து  கொண்டவர்கள் அவர்களின் பெயர்கள் வாரிசாக இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
TSM ஆர்டர் ஒட்டபட்டிருக்கிறதா என சரிபார்க்கவும்,
ERP-ல் உள்ள விபரங்களும் சர்விஸ் புத்தகத்தில் உள்ள விபரங்களும் ஒரே மாதிரி உள்ளதா எனவும் சரிபார்த்துக்கொள்ளவும் 

கடலூர் பகுதியில் பணிபுரிபவர்கள் GM அலுவலகத்தில் நேரில் சென்று தங்களது சர்விஸ் புத்தகத்தை சரிபார்த்துகொள்ளவும், மற்ற பகுதியில் பணிபுரிபவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் பகுதிக்கே கொண்டுவரப்படும்.
செயலகக் கூட்ட முடிவுகள்
18-06-2015
செயலகக் கூட்டம் 18-06-2015 மாலை கடலூர் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர்.R.செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மூத்த தோழர் S.தமிழ்மணி, மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் மற்றும் மாவட்ட, கிளைச் சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவுகள்
  • ஜூலை முதல் வாரத்திற்குள் சிரில் அறக்கட்டளை தமிழுக்கு ஊக்கம் பரிசளிப்பு விழாவை நடத்துவது எனவும்  அதற்கான முழு பொறுப்பை அறக்கட்டளை செயலர் தோழர்.V.லோகநாதன் அறக்கட்டளை உறுப்பினர் தோழர். G..ஜெயச்சந்திரன் ஆகியோர் மேற்கொள்வர்.
  • EOI டெண்டர் பகுதியில் பணிபுரியும் தொலைபேசி நிலைய செக்யூரிட்டி ஆட்குறைப்பு பிரச்சனை
  • சிதம்பரத்தில் நடைபெற்ற அதிகாரிகள்-ஊழியர்கள் கலந்தாய்வு கூட்ட முடிவுகள் மற்றும் மற்ற கோட்டப்பொறியாளர் பகுதிகளில் நடைபெறவிருக்கின்ற கலந்தாய்வு கூட்டத்தில் நமது பங்கை எப்படி செய்வது எனவும் நமது நிறுவனத்தை முன்னெடுத்து செல்வதற்கு நமது பங்களிப்பை முழுமையாக அளிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
  • கூட்டத்தில் விருத்தாசலம் புதிய கிளைச்செயலர் தோழர்.V.இளங்கோவன் தோழர்.S.தமிழ்மணி அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.





Wednesday, June 17, 2015

கடலூர் மாவட்ட அதிகாரிகள்-ஊழியர்கள்
கலந்தாய்வு கூட்டம்-சிதம்பரம்


கடலூர் மாவட்ட FORUM சார்பாக எடுக்கப்பட்ட முடிவின் படி BSNL வளர்ச்சிக்காக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம் முதன் முதலாக சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் 16-06-2015 அன்று நடைபெற்றது. கூட்டத்தை சிதம்பரம் கோட்ட பொறியாளர் திரு.N.செல்வராஜ் அவர்கள் தலைமையேற்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக திரு.K.சமுத்திரவேலு, DGM/CFA, திரு.P.சாந்தகுமார்,DGM/Fin., திரு.M.சேகர்,AGM/N.W ஆகியோரும், தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக திரு.C.பாண்டுரங்கன், மாவட்டதலைவர்.SNEA, தோழர்.இரா.ஸ்ரீதர், மாவட்டசெயலர்.NFTE, தோழர்.K.T.சம்மந்தம் .மாவட்டசெயலர்-BSNLEU மற்றும் தலமட்ட அதிகாரிகளும், 80 க்கும் மேற்பட்ட ஊழியர்களும் கலந்துகொண்டனர். நிர்வாக வளர்ச்சிப்பற்றி அதிகாரிகளும், தொழிற்சங்க தலைவர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். ஊழியர் தரப்பில் கேபிள் பழுதுகள் நிறைய உள்ளதையும் அதனை விரைந்து முடிக்க கூடுதலாக ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கோரியதை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, கூடுதல் ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பதாக உறுதியளித்துள்ளது. மேலும் டூல்ஸ் மற்றும் புதிய HMT-கள் உடனடியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர். ஊழியர்களும் கூடுதலாக புதிய இணைப்புகளை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்ய தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளனர். சிதம்பரத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டம் பயனுள்ளதாக அமைந்ததாக மாவட்ட நிர்வாகமும் தொழிற்சங்கமும் கருதுகிறது.