.

Monday, September 26, 2016

முப்பெரும் விழா-கிருஷ்ணகிரி
இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கிருஷ்ணகிரி BSNLEU கிளைச் சங்கத்தை சேர்ந்த 35 க்கும் மேற்பட்ட நிரந்தர தோழர்களும், TNTCWU சங்கத்தில் இருந்து 40 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் விலகி நமது NFTE,TMTCLU இணைந்துள்ளனர். அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

முப்பெரும் விழாவில் தோழர்கள் பட்டாபி, தோழர் சேது, மாநில தலைவர் தோழர் காமராஜ், மாநில செயலர் தோழர் நடராஜன், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (வி.தொ.) தேசிய குழு உறுப்பினர் தோழர்  V.கிருஷ்ணமூர்த்தி, மூத்தத் தோழர் S.தமிழ்மணி, TMTCLU மாநில பொதுச்செயலர் R.செல்வம், மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன், மற்றும் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர். நமது மாவட்டத்திலிருந்து தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Sunday, September 25, 2016

கண்ணீர் அஞ்சலி



நமது மாநிலப் பொருளாலரும், கோவை மாவட்ட செயலாளருமான தோழர் L. சுப்புராயன் அவர்களின் துணைவியார் திருமதி  மாலதி அவர்கள் நேற்று இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரை பிரிந்து வாடும் நமது தோழருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது கடலூர் மாவட்ட சங்கங்களின் சார்பாக இரங்கலையும், பரிவையும்  தெரிவித்துக் கொள்கின்றோம்

            -BY-
NFTE - மாவட்ட சங்கம், கடலூர்.
TMTCLU - மாவட்ட சங்கம், கடலூர்.

Friday, September 23, 2016

இரங்கல் செய்தி
சிதம்பரம் ஓய்வுபெற்ற தோழர் K.லஷ்மிநாராயணன் அவர்களின் தாயார் திருமதி.தனகோடி அம்மாள் 22.09.2016 இரவு 10.30 மணியளவில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வாடும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அம்மையாரது இறுதி சடங்கு இன்று (23.09.2016) மாலை 04.00 மணிக்கு  சிதம்பரம் மணலூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

Thursday, September 22, 2016

TMTCLU கோரிக்கை விளக்கக் கூட்டம்

         குடந்தை TMTCLU மாநில செயற்குழு அறைகூவல் விடுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் மாநில நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் இன்று மாலை (22.9.2016) கடலூர் GM அலுவலக வாயிலில் எழுச்சிமிக்க கோரிக்கை விளக்க கூட்டமாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
      மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, துவக்கவுரையாற்றினார். NFTE மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன், மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், மூத்தத்தோழரும், TMTCLU மாநில இணைப்பொது செயலருமான தோழர் S.தமிழ்மணி, TMTCLU மாநில உதவிச்செயலர் தோழர் A.சுப்ரமணியன் விழுப்புரம் , NFTE மாவட்ட உதவிச்செயலர் தோழர் D.குழந்தைநாதன், TMTCLU மாவட்ட அமைப்புசெயலர் தோழர் V.முத்துவேலு, GM அலுவலக NFTE கிளைத் தோழர் S.குருபிரசாத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.
         மாநில பொதுசெயலர் தோழர் R.செல்வம் சென்னையில் நிர்வாகத்துடன் 21-ந்தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தை விவரங்களை விளக்கினார். வருகின்ற 30-ந் தேதி CGM அவர்களுடன் விவாதிக்கவுள்ளோம். நமது கோரிக்கைகளை வெல்வோம் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
         மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் தமது உரையில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளில் பல நமது மாவட்டத்தில் தீர்க்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டினார். உதாரணமாக,
  • நமது மாவட்டத்தில் DGM(CFA) Nodal  அதிகாரியாக செயல்படுகிறார். எப்போதும் நம்மால் அவருடன் பிரச்சனைகளை எடுத்துக்கூற முடிகிறது.
  • EPF/ESI, வங்கி மூலம் சம்பளம் வழங்கல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. சில தோழர்களுக்கு ESI அட்டை கிடைக்காததற்கு அவர்கள் விண்ணப்பிக்காததே காரணம்.
  • மாவட்டத்தில் எட்டு மணி நேர பிரச்சனை இல்லை.
  • எந்த தோழர்களையும் பணி நீக்கம் செய்ய நமது சங்கம் அனுமதிப்பதில்லை. சங்கராபுரம் பகுதியில் பணியிலிருந்து இருவர் மீண்டும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டனர். அதே போல் கடலூர் பகுதியில் பணிபுரிந்த  நால்வர் பிரச்சனையை விரைந்து தீர்க்க நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
  • போனஸ் சென்ற ஆண்டு பெற்றோம். இந்த ஆண்டு முழுமையான போனஸ் பெற முயற்சிகளைத் துவக்கிவிட்டோம்.

BSNL  விடுமுறை நாட்களுக்கு ஊதியம் பெறும் பிரச்சனைத் தீர்க்கப்பட வேண்டும்.
கேரள மாநில உத்தரவு அமுலாக்கம் என்பது தமிழ்மாநில நிர்வாகத்துடன் பேசி தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சனை.

இறுதியில் தோழர் P.சுந்தராஜ் கிளைத்த தலைவர் அவர்கள் இறுதியாக நன்றி கூறி  கூட்டத்தை முடித்து வைத்தார்.

தொடர்ந்து இயக்கத்தை வலுப்பெறச் செய்வோம் என பேசிய தோழர்கள் அனைவரும் நமது கடமையை நினைவுறுத்தினர்.







Saturday, September 17, 2016

தமிழ் மா நில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
மாவட்டச் சங்கம், கடலூர்.

தோழர்களே!.
            வரும் 19-09-2016 அன்று நமது NFTE  சங்க அலுவலகத்தில் மாலை 05:30 மணியளவில் TMTCLU – மாவட்ட செயற்குழு நடைபெறும் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க  தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
                                
                                   ஆய்படுபொருள்

                    *22ந் தேதி நடைபெறும் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம்
                *ஆட்குறைப்பு
                *இன்னும் பிற தலைவர் அனுமதியுடன்


சிறப்புரை
         தோழர் R.செல்வம் பொதுச் செயலர்
        தோழர் இரா.ஸ்ரீதர்மாவட்ட செயலர்-NFTE

தோழமையுடன்
G.ரங்கராஜ்
மாவட்ட செயலர்,

TMTCLU

Monday, September 12, 2016

TMTCLU மாநில செயற்குழு
மற்றும்
குடந்தை TMTCLU மாவட்ட மாநாடு
செப்டம்பர் 10 சனிக்கிழமை அன்று குடந்தையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  தஞ்சை AITUC மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாநில அமைப்பாளர் தோழர் மு.அ.பாரதி, மூத்த தோழர் K.சேது, சட்ட ஆலோசகர் தோழர் என்.கே.எஸ், NFTE மாநிலசெயலர் தோழர் K.நடராஜன், மாநிலத் தலைவர் தோழர் P.காமராஜ், மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், TMTCLU மாநில செயலர் தோழர் R.செல்வம், இணைப்பொதுசெயலர் தோழர் S.தமிழ்மணி மாநிலபொருளர் தோழர் விஜய் ஆரோக்கியராஜ், NFTE கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், TMTCLU கடலூர் மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு, மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
கடலூர் மாவட்டத்திலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திட்ட குடந்தை மாவட்ட சங்கத் தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். 








Sunday, September 4, 2016

செப்டம்பர் 2 பொது வேலைநிறுத்தம்
கடலூர் மாவட்டத்தில் வழக்கமான கேள்விகள்  ஏதும் இல்லை ...
கோரிக்கையை புரிந்து ...கலந்து கொண்டோர் அதிகம் ...
நிரந்தர ஊழியர்கள் பங்கேற்பு, ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்பு ...
என 90% சதத்திற்கும் மேல் பங்கேற்பு...
கடலூர்,விழுப்புரம்.சிதம்பரம் ஆகிய ஊர்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.......
தொழிற்சங்கங்கள் நடத்திட்ட மறியல் போராட்டத்தில் தோழர்கள் பங்கேற்பு...
மூத்த தோழர் S.தமிழ்மணி மறியலில் கைது...

வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ...ஆதரவு தந்திட்ட ...
சிறப்பித்த தோழர் ..தோழியர் அனைவருக்கும் நன்றி !நன்றி !
அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும் நன்றி !








Friday, September 2, 2016


செஞ்சிகிளைமாநாடு-29.08.2016
செஞ்சி கிளை மாநாடு மற்றும் கிளைச்சங்க உறுப்பினர் தோழர் N. உத்தண்டி அவர்களின் பாராட்டு விழாவும் 29.8.2016 செவ்வாய்கிழமை செஞ்சி தொலைபேசி நிலையத்தில் கிளைத்தலைவர் தோழர்G.பாலாஜி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. முதலில் வாயிலில் நமது சம்மேளனக்கொடியை மாநிலசெயலர் தோழர் K.நடராஜன் ஏற்றிவைத்து, புதியக் கொடிக்கம்பக் கல்வெட்டை திறந்து வைத்தார். தோழர் Y.ஹாரூன்பாஷா தனது கம்பீரக்குரலில் கோஷம் எழுப்பிட முறையாக மாநாடு துவங்கியது. தோழர்ஹாரூன்பாஷா வரவேற்புரை நிகழ்த்திட, மாநில துணைத்தலைவர் தோழர்V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார். அதனை தொடர்ந்து மாநாட்டு ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு (ஆண்டறிக்கை தனியே இணைக்கப்பட்டுள்ளது) சிறுதிருத்தங்களுடன் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் புதியநிர்வாகிகள் தேர்வு நடைபெற்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளைத்தலைவராக தோழர் G.பாலாஜி, செயலராக தோழர் R.ரவி, பொருளராக தோழர் A.சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து விழுப்புரம் கிளைச்செயலர் தோழர் G.கணேசன், AIBSNLEA மாநில துணைத்தலைவர் S.நடராஜன், மாவட்டத்தலைவர் தோழர் R.செல்வம், மாவட்ட செயலர் தோழர்இரா.ஸ்ரீதர், மாநில சங்கசிறப்பு அழைப்பாளர் தோழர்V.இளங்கோவன், மாநில உதவிச்செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி  மற்றும் மாநிலசெயலர்தோழர் K.நடராஜன் ஆகியோர் புதியநிர்வாகிகளை வாழ்த்தியும் ஓய்வு பெறும் தோழர்உத்தண்டி அவர்களை வாழ்த்தியும் பேசினர். தோழர் N.உத்தண்டி ஏற்புரையாற்றினார். தோழர் A.சேகர் நன்றி கூறினார். முன்னதாக செஞ்சி அலுவலக ஊழியர்கள் சார்பில் ஓய்வு பெறும் தோழருக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றது. திண்டிவனம்  கோட்டபொறியாளர், மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர். தோழரின் உற்றார் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டது சிறப்பாகும்.