.

Monday, January 31, 2011

Votes Polled Booth wise

The details of Votes Poled in our SSA.


Booth name                            Total Votes            Polled Votes


1. Cuddalore                              288                            285
2. Chidambaram                       133                            133
3. Vridhachalam                        100                             99
4. Villupuram                              216                           212
5. Neyveli                                   121                           120
6. Tindivanam                            105                           105
7. Kallakurichi                               86                             85
=====================================
Total Vots:    1049 (Excluding postal votes)
Polled       :     1039 (99.046%)

Saturday, January 29, 2011

கெட்டிக்காரன் புளுகு 8 நாட்களில்..BSNLEU புளுகு 8 நிமிஷத்தில்.


தமிழகத் தோழர்களே!!   நேற்று ஒரு "முறம்" பெரிய நோட்டிஸ்- BSNLEU-
வினால் கடலூரில் வெளியிடப்பட்டது!.  அது NEPP அரியர் லிஸ்ட்.  
எல்லோருக்கும் அல்ல! ஒரு 77 பேருக்கான் லிஸ்ட். யாரைக் "கவிழ்த்து" 
இந்த லிஸ்ட் போட்டார்களோ தெரியவில்லை!  அவர்களது லிஸ்டில் 
சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம்.  ஆனால் உண்மையில் இவர்கள் 
பெறப்போகும் தொகையினையும் கொடுத்துள்ளோம்.


==============================================================
பெயர்(நோட்டிஸ் வ.எண்.        BSNLEU-ARR.           உண்மையில் Arr.
==============================================================
சேகர் .P (55)                                10,365.00                      (-) 5440 (பிடித்தம்
துரை D  (53)                                 15,253.00                              210
சாலியபேக் R( 54)                     22,538.00                           8485
கோபாலகிருஷ்னன்(57)        20,153.00                           5290
அந்தோணிசாமி(59)                22,342.00                         13029
கோமதி ராமலிங்கம்(71)       23,322.00                         20990
சுப்பிரமணியன் பி( 66)           18,025.00                          11110
ரோகிணி(64)                              18,525.00                          14395
உஷா
கோபாலகிருஷ்னன்(58)        22,342.00                          12957
==============================================================
இவை ஒரு சாம்பிள் தான்.   மீதி உள்ள 963 தோழர்களுக்கும் கணக்கிட்டால் 
எத்தனை பேர் இலாக்காவிற்கு பணம் கட்ட வேண்டியிருக்குமோ?


இது என்ன வகையான் பித்தலாட்டம்?  
தேர்தலுக்குப் பிறகு இருக்கமாட்டோம் (BSNLEU) என்ற தைரியமா? 
இந்த பொய்யர்களுக்கு ஒரு பாடம் வேண்டாமா?


இணைந்த கரங்களுக்கு எண்-13-ல் வாக்களியுங்கள்

Friday, January 28, 2011

இப்போது இல்லையெனில்... எப்போதும் இல்லை..


முதல் சம்பள பேச்சுவார்த்தைக்கு - நமக்குதேவைப்பட்டது..4 மாதமே.  
இவர்களுக்கு இரண்டாவது சம்பளம் முடிவு செய்ய 4 ஆண்டுகள்..
இதிலும் எத்தனை குழப்பங்கள்..குளறுபடிகள்..
குறைந்த பட்ச சம்பள உயர்வினை உறுதி செயய முடிந்ததா?
TTA-RM தோழர்களுக்கு சம்பளம் குறைந்தது உண்மையா இல்லையா?
Diet Allowance - ஐ கோட்டைவிட்டது எப்படி?


பதவி உயர்வுத்திட்டத்தில் நமக்கு இழைக்கப்பட்ட துரோகம் பற்றி .அநீதி பற்றி இந்த வலைத்தளத்திலேயே பன்முறை விளக்கப்பட்டுள்ளது!


நம்புதிரியின் "போனஸ்" சாதனை நாடறிந்தது!


BSNL நிறுவனத்தை "கடை நிலைக்கு தள்ளிய"  அரசின் முயற்சிகளை 
எதிர்க்க வக்கற்று போனதுடன் -  ஒத்துழைப்பும் நல்கியது ஏன்?  தனியார் 
நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு போட்ட உத்திரவுகளை கண்டும் 
காணாமல்  ஏன் இருந்தார்கள்?


அருமைத் தலைவர் குப்தா கொண்டுவந்த "மருத்துவ"  திட்டத்தினை 
நீர்த்துப் போகும்படி ஏன் செய்தார்கள்?


கருணை அடிப்படை  வேலைத்திட்டத்தைக் கூட கோட்டை விட்டது ஏன்?
நன்னடத்தை விதிகளில்-55 வயது ஆன ஒருவரை வீட்டுக்கு அனுப்பும் ஷரத்து 
பற்றி "மௌனவிரதம்" ஏன்?


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் பற்றி BSNL -ன் இரட்டை வேடம் நாடறிந்தது!


LTC -யின் போது பத்து நாட்கள் லீவினை சம்பளமாக்கிக் கொள்ளலாம் என்ற உத்திரவினை எதிர்த்து அபிமன்யூ கடிதம் ஏன் கொடுத்தார்?


சென்ற தேர்தல்களின் போது 'BSNLEU'  அள்ளி வீசிய 5-நாள் வேலை - MTNL சம்பளம் - அதிகாரிகளுக்கிணையான பதவி உயர்வுத்திட்டம்- ௨௦0௦ நாள் கேஷுவல் லீவு 
1200௦௦ இலவச கால்கள் இன்னும் எத்தனை-எத்தனையோ வாக்குறுதிகள் 
எல்லாம் என்ன ஆச்சு?


மேற்கண்ட "சாதனைகள்" மூலம் நிரூபணமாவது:


1. சொல்புத்தியும் இல்லை ..சுயபுத்தியும் இல்லை   என்பதற்கு ஒரு வாழும் 
    உதாரணமாய் விளங்குவது - BSNLEU.


2. ஊழியர் கோரிக்கை பற்றி எந்தவித  தெளிவும்-சிந்தனையும்     அற்றவர்கள்.
    தீர்மானிக்கும் திறனுமற்றவர்கள்.


3. போராடுவதற்கும்-கோரிக்கைகளை வெல்வதற்கும்   தேவையான தெம்பும்-
    திராணியும் அற்றவர்கள்.


4.  இவர்களை நம்புவது மண் குதிரையினை நம்புவது - போல!


5.  இவர்கள் மீண்டும் வந்துவிட்டால் -     BSNL-க்கும் அதன் ஊழியர்களுக்கும் 
     இறுதி அத்தியாயம் எழுதப்படுவது நிச்சயம்.


மதியற்று உறங்கிக் கிடப்பதற்கும் அரசின் சீர்குலைவு கொள்கைகளுக்கு துணை 
போவதற்கும் எப்படி இவர்களால் முடிந்தது?
ஊழியர் விரோத போக்கினையே கொள்கையாக கொள்வதற்கு "சிவப்பு" எதற்கு?
சுய நலமே பிரதானமாக நடந்து கொள்வதற்கு  "சித்தாந்தம்" எதற்கு?
வெட்கமின்றி மீண்டும் வாக்கு கேட்க எப்படி "BSNLEU"  - ஆல் முடிகிறது?


நாம் இழந்தவகைகளை நினைத்தால்...
BSNL-நிலையினை கண்டால்... நெஞ்சு பதறுகிறது!


நாம் பெற்ற அவமானங்கள் துடைத்தெறியப்பட வேண்டாமா?
இழந்த உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டாமா?
BSNL - இழந்த கௌரவத்தினை மீட்டிட வேண்டாமா?
BSNL -ஊழியர்களின் நலன்கள்  காக்கப்பட வேண்டாமா?
இந்த இழி நிலைக்கு நம்மைத் தள்ளியர்வகளுக்கு
 பாடம் புகட்டிட வேண்டாமா?


வாய்ப்பு வந்துவிட்டது!!


அனைத்து ஊழியர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்!
NFTE -க்கு இணைந்த கரங்களில் வாக்களியுங்கள்.
'அங்கீகாரம்'  பெறுவதற்காக மட்டுமே 
உங்களை நாடி வரும் சங்கமல்ல NFTE!
NFTE-க்கு அங்கீகாரம் என்பது நிறுவனத்திற்கான உத்திரவாதம்!
ஊழியர்கள் நலனிற்கான உத்திரவாதம்.


===============================================================
குறிப்பு:  
பல்வேறு மாவட்டங்களில் 'திருமங்கலங்கள்'  உலாவருவதாக செய்திகள்
வருகின்றன.. இப்படியும் ஒரு "சீரழிவா?"   இதுவும் ஒரு  பிழைப்பா?
 ==============================================================

Thursday, January 27, 2011

உப்பு லேது..பப்பு உந்தி!!

ஒரு 77 பேருக்கான அரியர் லிஸ்ட் படித்தீர்களா?


நாம் கேட்டது அரியர் லிஸ்ட் அல்ல...அதிகாரிகளுக்கு 5 கட்ட பதவி உயர்வு.
நமக்கு மட்டும் ஏன் 4 கட்டம்?


அதிகாரிகளுக்கும் நமக்கும் 1.10.2004 முதல்தான் பதவி உயர்வு திட்டம் அமுலாகியது.  ஆனால் அதிகாரிகளுக்கு 1.10.2004 முதலே அரியர்... நமக்கு 1.4.2008 
முதல்தான் அரியர்.   ஏனிப்படி?  இந்த 42 மாத வித்தியாசம் ஏன்?


அதிகாரத்தில் இருந்துகொண்டு இந்த பாரபட்சத்தை எப்படி அனுமதிதீர்கள்?


இந்த வினாக்களுக்கு பதிலளிக்காமல் அரியர் லிஸ்ட் "படம்" காண்பிப்பது யாரை ஏமாற்ற? 


உங்கள் லிஸ்ட்டில் உள்ள தோழர்களும் 42-மாத அரியர் தொகையினை இழந்தது 
உண்மையா இல்லையா?


அவர்கள் போட்ட லிஸ்டை ஆராய்ந்து பார்த்தால் பல உழியர்களுக்கு பட்டியலில் 
கண்டதை விட பல ஆயிரம் குறைவாகத்தான் வருகிறது என்கிறார்களே? பலருக்கு அரியரே இல்லை என்கிறார்களே? ஒருவேளை அந்த 77 பேர்களை தேர்ந்தடுத்து 
போட்டார்களோ?  தைரியாமாக 1300 பேர்களுக்கும் லிஸ்ட் போடவேண்டியது தானே? 



குடியரசு தின பரிசு.

26-01-2011 முதல் - விடுமுறை நாட்களில் ஊழியர்கள் பெற்று
வந்த OTA - நிறுத்தப்படுகிறது.
மாற்றாக சி.ஆப் வழங்கப்படுமாம்! 

பயணப்படிகளிலும் கடுமையான் கெடுபிடிகள்!
இம்மாதிரியான உத்தரவுகளை வெளியிட
நிர்வாகத்திற்கு  தைரியம் பிறந்தது எப்படி ?


நம்பூதிரி-அபிமன்யு கோஷ்டியனர் "எல்லா உத்தரவுகளுக்கும்"
ஆமாம் சாமி போட்டதின்  விளைவாகவா?
எதிர்த்து போராடவே மாட்டார்கள்
என்ற 'உத்திரவாதமா?"

தேர்தல்   வரட்டும். இந்த உத்திரவுகள் அனத்தையும் 
 தவிடுபொடி ஆக்கிக்காட்டுவோம்!!

வாக்களிப்பீர் இணைந்த கரங்களுக்கு!

Tuesday, January 25, 2011

இணைந்த கரங்களும் - அக்டோபஸ் கரங்களும்!


BSNLEU -எனும் அக்டோபஸ் கரங்களிலிருந்து விடுபடுவோம்..
இணைந்த கரங்ககள் இருக்கிறது 
நம்மை பாதுகாக்க!!!
வாக்களிப்பீர் NFTE  - க்கு 




நமது கூட்டணி மேலும் வலுவடைகிறது!

நமது     அணியினை  வலு சேர்க்கும் விதமாக
பகுஜன் தொழிற்சங்கம்
நம்பூதிரி கூட்டணியில் இருந்து விலகி
நம்முடன் இணைந்துள்ளது !
10 சங்கங்களை உள்ளடக்கிய வலுவான
கூட்டணியாக நாம் உருவெடுத்துள்ளோம்.
BSNLEU -  தோற்கடிக்கப்படும் வேளை நெருங்கிவிட்டது!!

Monday, January 24, 2011

வெற்றி நமதென ஆக்குவோம்!! !!!


அருமைத் தோழர்களே!!


இயக்க முன்னோடித் தோழர்கள் அனைவரும் 
ஓய்வின்றி ஓடியாடி -தேனீக்கள் போல அனைத்துத் 
தோழர்களையும் சந்தித்து நமது சங்கத்திற்கு 
ஏன் வாக்களிக்க வேண்டும் என விளக்கி வருகின்றனர்.  


மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்கள் 
கடலூரிலும் ,  விழுப்புரத்திலும் சிறப்பு மிகு
உரையாற்றினார்.  இந்தியா முழுவதும் வரும் தகவல்கள் 
நமக்கு ஊக்கமளிப்பதாகவும் - தெம்பூட்டுவதாகவும் உள்ளன. 
பல மாநிலங்களில் EU விலிருந்து விலகி தோழர்கள் நம்மை 
நோக்கி வந்து கொண்டுள்ளனர்.  


ஆறு வருட காலம் EU போட்ட கும்பகர்ண தூக்கம் - 
ஊழியர்களிடமிருந்து அவர்கள் விலகிச் சென்றது - 
அதிகார வர்க்கம் சொன்னதிற்கெல்லாம் "ஆமாம் சாமி" 
போட்டுக்கொண்டு காலத்தை ஓட்டியது -
வர்க்க நலனை மறந்து - அதிகார போதையும் -
மமதையும் கொண்டு ஆட்டம் போட்டது 
யாவற்றிற்கும் நம்பூதிரி & Co. பதில் சொல்லும் காலம் 
வந்துவிட்டது.


நாம் கண நேரமேனும் வாளாவிருக்க முடியாது.  
ஒவ்வொரு தோழரும் EU-வினுடைய - தில்லு முல்லு 
பிரசாரங்களை அவ்வப்போது முறியடிக்க வேண்டும்.  
அவர்கள் "செய்யக்கூடிய அனைத்து விதமான" 
(கு)யுக்திகளையும் நமது நேர்மை என்னும் ஆயுதம் 
கொண்டு சமாளியுங்கள்.  


 நியாயம் நம் பக்கம் உள்ளது தோழர்களே!  
உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு 
நேரம் பிரசாரத்தில் ஈடுபடுங்கள்.  ஒவ்வொரு 
உறுப்பினர்களையும் மீண்டும் - மீண்டும் சந்தியுங்கள்.
 நியாயத்தை எடுத்துச் சொல்லுங்கள்.   இப்போது 
இல்லையெனில் எப்போதும் இல்லை என்பது போல
பணியாற்றுங்கள்.  அறுவடை நேரத்தில் வாளாவிருந்து 
விட்டால் வெள்ளாமை வீடு வந்துசேராது தோழர்களே!  
           
விழிப்பு - கவனம் - இடைவிடாத பிரசாரம் - 
எதிரிகளின் பொய்ப்பிரசாரத்திற்கு உடனடியான பதில் -
இவையே தேர்தல் முடியும் வரை நமது தாரக மந்திரமாக
இருக்க வேண்டும்.  


 நடக்க விருப்பது நியாயத்திற்கும் - அநியாயத்திற்குமான
போராட்டம்.  வர்க்கப் போராளிகளுக்கும் - வர்க்க விரோதிகளுக்குமிடையான 
போராட்ட்டம். இந்த "குருஷேத்திர யுத்தத்தில்" 
 நாம் அனைவருமே "அர்ஜுனர்கள்" .  
 ஒரு நொடி நேரம் கூட தளராது - அயராது தர்மத்தை 
நிலை நாட்ட அனைத்து விதமான உழைப்பையும் 
இயக்கத்திற்கு கொடு தோழா! 
கடலூர் பகுதியில் பெருவாரியான ஓட்டுக்களை 
NFTE - கூட்டணி பெற்று வென்றது 
என்ற பெருமை மிகு செய்தியினை 
அளிக்கும்வரை ஓய்வில்லை தோழா ! 
     
வெற்றி ஒன்றே லட்சியம்.  
 நமது வெற்றி மட்டுமே BSNL -ன் எதிர்காலத்தை 
உறுதிப்படுத்தும்.  நமது எதிர்காலத்தினை வளமாக்கும்.


இணைந்த கரங்களுக்கு 
வாக்களிப்போம் 

JUST A SAMPLE


- 200 workers from Employees Union
  Muzaffarnagar UP West 
  and 60 members of EU  have joined 
  in NFTE Shastrinagar Meerut.
 - 98 employees left BSNLEU of NTR Circle 
    and joined in NFTE-BSNL.
- 113 Members from BSNLEU in Bhatinda,
    Joined in NFTE
- 150 Employees Union Members 
    in Hosiapur Punjab joined in NFTE-BSNL
-  50 Members in Barabanki
    Members in Ujjain MP Circle
    Joined in NFTE-BSNL
-   50 Members of BSNLEU in Adilabad 
     joined into NFTE-BSNL

-     தஞ்சையில் 40 தோழர்கள் நம்மிடம் 
      இணையவுள்ளனர் 
     மேற்கண்டவை ஒரு "சாம்பிள்" தான் .     

Saturday, January 22, 2011

More and more join NFTE-BSNL


1. In presence of Com.Gunjal and Com.Godse District 
   Secretary Nasik , Under the leadership of 
   Com.A.R.Shinde Branch Secretary, Chanwad branch 
   joined NFTE(BSNL) along with 26 members.


2. Com. Harkesh Singh, Gajraj and Com Prakash have
   left BSNLEU along with 150 colleages and jointed NFTE
   at Gzaziabad.

சொல்வதைச் செய்வோம் - BSNL WORKERS ALLIANCE - உறுதி அளிக்கிற்து!!


1.  BSNL  வளர்ச்சியினை உறுதி  செய்வோம்.


2. புதிய "போனஸ் " ஃபார்முலா" உறுவாக்குவோம்.


3. "78.2 IDA மெர்ஜர்" - நடைமுறைப்படுத்துவோம்.


4.அதிகாரிகளுக்கு உள்ளது போல பதவி உயர்வு
   திட்டத்தினை   அமுல்  படுத்துவோம்.


5. JTO/JAO தேர்வுகளுக்கு ஐந்து வருட சேவை கட்டாயம் 
    என்பதை மாற்றுவோம்.
    15% மற்றும் 15% கோட்டா வினை Merge செய்வோம்.


6. அனைத்து RM/Group-D and TM தோழர்களும் TTA 
    தேர்வெழுத அனுமதி - கல்வித்தகுதியில்  க ட்டுப்பாடு 
     ஏதுமின்றி 


8. 30% Fitment benefit in pay fixation for Direct Recruit TTAs and 
    compassionate ground appointees etc.


9. Relaxation in recruitment Rule for TTA departmental quota
     examination  and provision for walk in in group besides LDCE.  
     Qualification restricton be withdrwan.


10. Modification and relaxation in CG appointment Rule.


11. Modification in CDA rule - 2006 and deletion of clause 55 under
     which an official can be retired at the age of 55 years.


12. Implementation of pay scale of Sr. TOAs  from retrospective effect.


13.  அனைத்து கேடர்களின் பெயர் மாற்றம்.


14.  Up-gradation of qualified and trained RMs to the cadre of
       Telecom Mechanic.


15.  Up-gradation of qualified and trained TTAs to the cadre of JTO 
       along with their posts.


16. NO VRS / No disinvestment.


17. Group -C மற்றும் Group-D ஊழியர்களின் - BSNLEU-வினால்
      இழக்கப்பட்ட   கௌரவத்தினையும் -
     கண்ணியத்தினையும் மீட்டெடுப்போம்.


18.  ஊழலுக்கும் - தவறான போக்குக்கும் எதிராக போராட்டம்.


                                                   இவண்.
(NFTE-BSNL)   -       (BSNL WRU)  -     (SNATTA)        -  (BSNL ATM)
( AIBCTES)      -       (BSNLES)      -      (BSNL PEWA)   - (SEWA - BSNLU)


வாக்களிப்பீர் இணைந்த கரங்களுக்கே!! 

Thursday, January 20, 2011

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய்....இந்த நாட்டிலே


ந.மு மற்றும் ந.பி.


கி.மு-கி.பி கேள்விப்பட்டிருக்கிறோம்... 
இது என்ன ந.மு...ந.பி?
அதுதான் நம்பூதிரிக்கு முன்...நம்பூதிரிக்குப் பின்.

போனஸ் - நம்பூதிரிக்கு முன் (நாம் அங்கீகாரத்தில் ...)
      உற்பத்தியுடன் இணைந்த போனஸ்.. 15 நாட்களில்
     துவங்கி 74 நாட்கள் வரை
     போனஸ் ஏறிக்கொண்டே போனதே தவிர 
     இறங்கியதே இல்லை.

போனஸ் - நம்பூதிரிக்கு பின் (BNLEU அங்கீகாரம் பெற்ற பின் )
     லாபத்துடன் இணைந்த போனஸ்.. கடைசியாக நாம்
     பெற்ற போனஸ்.. பெரிய முட்டை!

பதவி உயர்வு - நம்பூதிரிக்கு முன்
     OTBP,BCR,10%. என ...எல்லா நிலைக்கும் சம்பள விகிதம் உண்டு.
      யாருக்கும் ஊதிய இறக்கம் இல்லை
     கேடர் சீரமைப்பு மூலம் எல்லா கேடர்களுக்கும்
      உயர் நிலை ஊதியம்.

பதவி உயர்வு - நம்பூதிரிக்குப் பின்
     அதிகாரிகளுக்கு உள்ளது போல 5 கட்டம் இல்லை.
     4 கட்டம் தான்.
     அதுவும் கூட எல்லோருக்கும் இல்லை.
     இட ஒதுக்கீடு இல்லை.
     சம்பளப் பிடித்தம் கூட உண்டு.
     சம்பள விகிதம் கூட இல்லை.

சம்பளக்குழு - நம்பூதிரிக்கு முன்
     2002-ல் நிறைவான ஊதிய விகிதம்.

சம்பளக்குழு - நம்பூதிரிக்குப் பின்
     01-01-2007 க்குப்பின் வந்தோருக்கு 30% FITMENT இல்லை.
     42 மாத நிலுவையை கைவிட்டனர்.
     அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் - சம்பளத்தில்
     பெருத்த வேறுபாடு.
     சிலருக்கு ஊதிய இறக்கம் கூட..
     78.2%  merger-ஐ கைவிட்டனர்.

நிதி ஆதாரம் - நம்பூதிரிக்கு முன்
     கிராமப்புற சேவைக்கு ஈடாக ரூ .6900 கோடி மத்திய 
     அரசிடமிருந்து கிடைத்தது.  
     ADC மூலம் ஆண்டு தோறும் ரூ. 14000 கோடி வருவாய்.
     லைசென்ஸ் கட்டனம் நிறுத்தி வைப்பு.
     DOT -க்கான வட்டி நிறுத்தி வைப்பு.
  
நிதி ஆதாரம் - நம்பூதிரிக்குப் பின்
     மன்யம் ரத்து.
     லைஸென்ஸ் கட்டனம் பிடித்தம்.
     ADC கட்டணம் ஒழிப்பு.
     2011-ல் ரூ 5000 கோடி நஷ்டம்.

வாக்களிப்பீர் இணைந்த கரங்களுக்கு!!

Wednesday, January 19, 2011

NFTE -க்கான வாக்கு BSNL-நிறுவனத்திற்கான வாக்கு!!

தேர்தல் நாள் நெருங்குகிறது. 
இத்தேர்தல் அங்கீகாரம் NFTE- க்கா  இல்லை BSNLEU-க்கா 
என்பதற்காக இல்லை தோழர்களே!


BSNL-நிறுவனம் இருக்க வேண்டுமா.. வேண்டாமா
என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல்!


ஊழியர்களுக்கு எதிர்காலம் இருக்கிறதா இல்லையா
என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல்!


நாம் போரடிப்பெற்ற போனஸை ஒரே நாளில் காற்றில் 
பறக்கவிட்ட இந்த வக்கற்றவர்களை வெளியேற்ற நமக்கு
ஒரு சந்தர்ப்பமளிக்கும் தேர்தல்!


புதிய சம்பள நிர்ணயத்தில் பெருங்கோட்டை விட்டவர்களை
 இனியும் அனுமதிக்கப் போகிறோமா எனபதற்கான தேர்தல்!


கோட்டை விட்டதோடல்லாமல் - இந்த இழப்பையே 
சாதனையாகச் சொல்லிக்கொண்டு அலையும் போலிப்
 போராட்டக்காரர்களை(!)  அடையாளம் காட்டும் தேர்தல்!


TTA -க்கள் 01.01.07-க்குப்பின் பணிக்கு வந்திருந்தால் 30%
ஊதிய நிர்ணயம் வேண்டாம் என ஏற்றுக்கொண்ட
வர்களை நிராகரிக்கும் தேர்தல்.


10 நாள் விடுப்பை LTC- ன் போது பணமாக்கிக் கொள்வதைக்கூட
எதிர்க்கும் வீணர்களை வீட்டிற்கு அனுப்பும் தேர்தல்!


இரத்தமும் வியர்வையும் சிந்தி நாம் கட்டிய இந்த BSNL -
நாதியற்று பாழடைய விடப்போகிறோமா-இல்லையா 
என்பதற்கான தேர்தல்!


இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.


உற்பத்தியுடன் இணைந்த போனஸை கொச்சைப்படுத்திய
 இந்த வாய்ச்சொல் வீரர்கள் - லாபத்துடன் இணைந்த
 போனஸை "கேட்டுப்பெற்று" நமக்கு பட்டை நாமம்
 சாத்தியவர்கள்.  மருத்துவப்படி,அலவன்ஸ், கருணை 
அடிப்படையில் பணி இப்படி யாவற்றிலும் நமக்கு துரோக
மிழைத்த இந்த வெட்டிப்பேச்சு வீரர்கள் மீண்டும் வெட்கமின்றி
 ஓட்டு கேட்டு வருகின்றனர்.   ஆறு ஆண்டுகளின் 
சாதனைகளாக சொல்லிக்கொள்ள ஒன்றுமேயில்லாத இந்த 
கையாலாகாதவர்கள் "எப்படியாவது நாங்கள்தான்வெல்வோம்...
ஓட்டுக்களை மாற்றிப் போடுங்கள்"  என கெஞ்சும்  பரிதாப 
நிலைக்கு வந்து விட்டனர் - இந்த குள்ள நரிக்கூட்டத்தினர்.


நம்பூதிரி - அபிமன்யூ கோஷ்டியினரால் ஒருபோதும்
ஊழியர்களையோ-நிறுவனத்தினையோ காக்க முடியாது. 
அதற்குண்டான திட்டமோ-சிந்தனையோ-தீர்மானமோ 
அற்றவர்கள். 


இந்த திராணியற்றவர்களிடமா நமது எதிர்காலத்தை 
ஒப்படைக்கப் போகிறோம்?


நினைத்துப்பாருங்கள்..நாம் அங்கீகாரத்தில் இருந்திருந்தால்.....


போனஸை விட்டிருப்போமா?
கேவலமான ஊதிய ஒப்பந்தம் போட்டிருப்போமா?
படு குழப்பமான - முரண்பாடான - தலை சுற்ற வைக்கும் 
பிரமோஷன் உடன்பாடு நடந்திருக்குமா? 
ஊதியத்திலும் - பிரமோஷனிலும் நமக்கும் அதிகாரிகளுக்கும் 
இடையே உள்ள வேறுபாட்டினை பொறுத்திருப்போமா? 
இந்த அவமானங்களை கண்டும் வாளாவிருப்போமா?


இனியும் பொறுப்பதில்லை!


இவர்களை நம்பியது போதும்..  இவர்கள் நம்மை நட்டாற்றில்
 விட்டதும் போதும்.! இந்த வர்க்க துரோகிகளை இனம் 
கண்டு கொண்டோம்! 
இனியும் இந்த குடுகுடுப்பைக் காரர்களுக்கு இடமில்லை!!


நமது ஒவ்வொரு வாக்கும் நம்முடைய எதிர்காலத்தை 
தீர்மானிக்கப் போகிறது!  
நமக்கு அங்கீகாரம் என்றால் - BSNL- க்கு உத்திரவாதம்!  
BSNL-ஊழியர்களின் நலனுக்கு உத்திரவாதம்!!


வீழட்டும் BSNLEU !!   வாழட்டும் BSNL!!!



Thursday, January 13, 2011

Telecom Mechanic Results

வகுப்பெடுத்து உதவிய தோழர்கள் ப.  செந்தில்குமரன் JTO மற்றும் தோழர் அன்புதேவன் TTA ஆகியோருக்கு நன்றி.

Wednesday, January 12, 2011

இனியும் பொறுக்கப் போகிறாயா தோழா

பதவி உயர்வில் நமக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள வேறுபாட்டினைக் கண்டும் நாம் வளா விருப்போமா?
இந்த கேடு கெட்ட ஒப்பந்தம் போட்டவர்களை மீண்டும் அனுமதிக்கப் போகிறோமா?


போனஸே இல்லை என்ற பிறகும் வாய் மூடி நிற்கும் இந்த கையாலாகாதவர்களை இனியும் நம்பப்போகிறோமா?


ராஜா இருக்கும் வரை வெண்சாமரம் வீ சிவிட்டு இப்போது "அம்மாடியோன்னு.." எழுதும் வேஷதாரிகள் உனக்கு தேவையா?


இணைந்த போரட்டத்தினை ராத்திரியில் தனியே வாபஸ் வாங்கிய இந்த பயங்கொள்ளிகளுக்கு ஒரு பாடம் வேண்டாமா?


R.M to T.M மற்றும் T.M to TTA   பதவி உயர்வுகளுக்கு தகுதித்தேர்வு இல்லாமல் கல்வித்தகுதி உடன்பாடு போட்ட தொழிலாளர் துரோகிகளுக்கா உனது ஓட்டு?


ஒரு லட்சம்-நிரந்தர ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அந்த இடத்தில் கேஷுவல் லேபர்களை கேஷுவல் லேபராகவே வேலைவாங்கும் திட்டத்திற்கு உடன்படும் நம்பூதிரிக்கா உனது ஓட்டு?


பட்ட அவமானங்கள் போதாதா?  


இழந்த உரிமைகள் போதாதா?


ரோஷமும் - வீரமும் -போரட்ட இரத்தமும் அற்றுப்போய் விட்ட இந்த கோழைகளுக்கு இனி இடமில்லை.


இனி பொறுப்பதில்லை...ஓட்டுச் சீட்டு எனும் எரிதழல் கொண்டு இந்த துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம்.


இணைந்த கரங்களுக்கு வாக்களிப்போம்.. இழந்த உரிமைகளையும் - பெருமைகளையும் மீட்போம்.

Monday, January 10, 2011

NFTE சங்கத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?

சரிபார்ப்புத் தேர்தல்
01.02.2011
   ===================================================
01. வளமான பி.எஸ்.என்.எல் நிறுவனம்.
02. புதிய போனஸ் திட்டம், போனஸ் பெறுவதை உறுதி       
      செய்திட.
03. நேரடி நியமணம் பெற்ற  TTA கள்  மற்றும் பரிவு
      அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு 30 சதம்
      சம்பள நிர்ணயம் பெற்றிட.
04. அகவிலைப்படி 78.2 சதத்திற்கு இணையான சம்பளம் 
      பெற்றிட
05. அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதைப் போல் புதிய பதவி  
       உயர்வு திட்டம்  பெற்றிட.
06. புதிய பதவி உயர்வுத் திட்டத்தில்  SC / ST ஒதுக்கீட்டுப்
      பலனைப்  பெற்றிட.
07. JTO, JAO தேர்வுகளுக்கு 5 ஆண்டு சேவைக் காலம்,
      தளர்த்தப்பட்ட கல்வித் தகுதி மற்றும் 35% & 15% 
      ஒதுக்கீட்டை  ஒன்றிணைத்திட.
08. ரெகுலர் மஸ்தூர், நான்காம் பிரிவு ஊழியர். டெலிகிராப் மேன்
      முதலிய கேடரில் பணியாற்றுவோர்  கல்வித் தகுதி
      தடையில்லாது டெலிகாம் மெக்கானிக் தேர்வு எழுதும் வாய்ப்பு
      பெற்றிட.
09.  ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டில்,  TTA  பதவி உயர்வுக்கான
       விதிகளை தளர்த்திட, போட்டி தேர்வு முறையுடன்,
       நேரடி (Walk in Group) நியமமும் பெற்றிட, கல்வித்
       தகுதியினை இரத்து செய்திட.
10. பரிவு அடிப்படையில் பணிக்கான விதிகளை மாற்றிட,
      தளர்த்திட.
11. நன்னடத்தை மற்றும் தண்டனைச் சட்டத்தில் மாற்றங்கள்
      செய்திட,  55 வயது முடிந்த ஊழியர்களை பணியிலிருந்து
      நீக்கும் அதிகார விதி 55 ஐ ரத்து செய்திட.

 12. பி.எஸ்.என்.எல் அனுமதி அளித்த தேதியிலிருந்து, முன்
      தேதியிட்டு, சீனியர்TOA ஊழியர்களுக்கு உயர் ஊதியம்
      பெற்றிட.
13. அனைத்து கேடர்களுக்கும் பெயர் மாற்றம் செய்திட.
14. தகுதி தேர்வில் வெற்றி பெற்ற, பயிற்சி முடித்திட்ட ஆர்.எம்.
      தோழர்களை டெலிகாம் மெக்கானிக்காக உயர்த்திட.
15. தகுதி தேர்வில் வெற்றி பெற்ற, பயிற்சி முடித்திட்ட TTA களை
      அவர்களின் பதவியினையே பயன்படுத்தி JTO வாக
       உயர்த்திட.
16. விருப்ப ஓய்வு மற்றும்  பங்கு விற்பனை தடுத்திட.
17. கேசுவல் ஊழியராக பணியாற்றிய காலத்தை சேவை
      தொடர்பான பலன்களுக்கு பணிக் காலமாக கணக்கிட.
18. ஊழியர்களின் மரியாதையையும் கெளரவத்தையும்
      மீட்டு நிலை நிறுத்திட.
19. ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக
      போராடிட.
         NFTE - க்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்திடுவீர்!

Saturday, January 8, 2011

Com Mathivanan's Speech on 07/01/2010

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!

உங்களை இதன் வழியே சந்திப்பதில் மகிழ்ச்சி!. 


07-01-2011 அன்று மாலை 5.30 மணிக்கு இடி முழக்கமென தனது உரையைத் துவக்கினார் தோழர் மதிவாணன். 350-க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்து கொன்டனர். கூட்டம் முடியும் வரை அனைவரும் கட்டுண்டது போல அவரது உரையினை கேட்டனர். அவரது உரையின் சில முக்கிய அம்சங்கள்: 




               ("ப்ளாக் ஸ்பாட்"  துவக்கம்  தோழர் மதிவானான்)

           அதிகாரம் இல்லாதபோது இலாபம் வந்தாலும் வராவிட்டாலும் போனஸ் - கொடுபடா ஊதியம் போனஸ் என்று முழங்கிய நம்பூதிரி - அபிமன்யூ கோஷ்டியினர் அங்கீகாரம் பெற்றதும் இலாபம் வந்தால் மட்டுமே போனஸ் எனற் - எந்த சித்தாந்த சிந்தனையும் இல்லாத கேவலமான உடன்பாட்டினை போட்டனர்.  போனசே இல்லாத வருடங்கள் தான் இவர்களது சாதனை.


ஊதிய உடன்பாட்டில் 78.2% D.A Merger என்பதில்  கோட்டைவிட்டுவிட்டு 68.8% கொடுத்தால் போதும் என மோசடி ஒப்பந்தம் போட்டார் நம்பூதிரி.


MRS திட்டத்தினையும் முடமாக்கிவிட்டார்.


திரு.ராஜா பதவியில் இருக்கும்பொது மயான அமைதி காத்துவிட்டு - இப்போது 2G பற்றி எழுதுகிறார் இந்த இரட்டை வேட நம்பூதிரி-அபிமன்யூ கோஷ்டியினர். 
2G ஊழலை வெளிக்கொணர்வதில் நமது பங்கு என்ன என்பதனை நாடே அறியும். 


பதவி உயர்வு திட்டதிலும் சிந்தனையற்று 1-10-2004 முதல் 31-3-2008 வரை பதவி உயர்வு அரியர்ஸ் வேண்டாம் என கேடுகெட்ட ஒப்பந்தம் போட்டு ஊழியர்க்ளுக்கு 42 மத அரியர் இழப்பு ஏற்படுதினார். (தோழர் குப்தா Cadre Restructuring கையெழுத்திட்டது 1996 ல்.  ஆனால் அரியர் பெற்றுத்தந்தது 1993 முதல்)


                                                    




                                                           (திரண்டிருந்த தோழர்கள்


போராட தயங்குவர் நம்பூதிரி-அபிமன்யூ கோஷ்டியினர்.  தப்பி தவறி போராட்ட அறிவிப்பு வந்தலோ எந்தவிதமான உடன்பாடும் இல்லாமல் போரட்டத்தினை வாபஸ் பெறுவதில் கில்லாடிகள்.


போராட  வக்கற்ற - பேச்சுவர்த்தை நடத்த திராணியற்ற இவர்களது இரட்டை 
வேடத்தினையும், சரண்டர் போக்கினையே தத்துவமாக கொனண்டுள்ள இவர்கள்து "யோக்கியதாம்சங்களை" இந்தியா முழுவதும் ஊழியர்கள் நன்கு உண்ர்ந்துள்ள்னர்.   SNEATTA உள்ளிட்ட 9 சங்கங்கள் கொண்ட வலுவான கூட்டணியினை உறுவாக்கியுளோம்.


இம்முறையும் நம்பூதிரி-அபிமன்யூ அங்கீகாரம் பெற்று விட்டால் BSNL -ம் அதன் ஊழியர்களும் மீளமுடியாத பள்ளத்தில் BSNLEU-வினால் தள்ளப்படுவர்.  
இத்தேர்தல் நமக்கு கிடைதுள்ள வாய்ப்பு.  நமது உறுப்பினர்கள் தேனிக்கள் போல பணியாற்றி BSNLEU-பதவிக்கு வந்துவிட்ட்டால் நேர்ந்துவிடும் அபாயங்கள் பற்றி ஒவ்வொரு உறுப்பினர்களிடையேயும் எடுத்துரைக்க வேண்டும். வெற்றிக்கனியினை பறிக்கும் வரை நாம் ஒரு வினாடி கூட ஓயாமல் விழிப்பாக இருக்கவெண்டும்.  BSNLEU பயன்படுததகூடிய "அனைத்து வகையான" யுக்திகளையும் நாம் முறியடிக்க வேண்டும்.

வெற்றி கிட்டும்வரை ஓயாமல் பாடுபடுவோம். போராட்ட வாழ்த்துகளுடன்,


தோழமையுடன்,
P.சுந்தரமூர்த்தி.

Thursday, January 6, 2011

The LION ROARS

அஞ்சா நெஞ்சன் தோழர் மதிவாணன் 07 -01-2011  அன்று முழங்குகிறார் . இடம் ஒருங்கினைந்த சேவை வளாகம், கடலூர்.  அனைவரும் வருக !!

NFTE CUDDALORE IN "BLOGSPOT"

Dear Comrades,

This "Blogspot"  is opened by Com.C.K.MATHIVANAN,Dy.GS,NFTE, in the presence of  Com.N.Anbazhagan,Circle Org.Sec,Com.R.Sridhar,Circle Special Invitee and Com.P.Sundaramoorthy, District Secretary, NFTE, Cuddalore, Com S. Anandan, District Secretary TMTCLU on 07.01.2011 at the Integrated Services Complex,BSNL,Cuddalore.

Stay with us for more News.

                             NFTE JINDABAD!