.

Friday, May 24, 2024

சிறப்பு பணி ஓய்வு பாராட்டு விழா

கொரோனா பேரிடர் காலத்தில்   எந்தவிதமான கூட்டம் நடத்த மாநில நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
ஆகையால் மார்ச் 2020 முதல் ஏப்ரல் 2022 வரை நமது மாவட்டத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்த இயலவில்லை. 
நமது மாவட்ட சங்கம் மட்டும் தொடர்ந்து மாநில  நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுத்ததின் அடிப்படையில் மே 2022 முதல் கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது.

(இதில் விளையாட்டு குழுவிற்கும் பொருந்தும் ஆனால் சில நபர்களுக்கு எதுவும் பொருந்தாது)
இந்த 26 மாத கால இடைவெளியில் 28 தோழர்கள் ஓய்வு பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்த இயலவில்லை. 

மே 2022 முதல் நமது மாவட்ட சங்கம் மட்டும் தொடர்ந்து இவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்த வேண்டும் என  தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

சேம நல குழு கூட்டம் மேனாள் பொதுமேலாளர் திருமதி  D. திலகவதி ITS  அவர்கள் தலைமையில் கூடிய போது கொள்கை அளவில் மாநில நிர்வாகத்தின் அனுமதியுடன் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அந்த குழு கூட்டத்தில் NFTE இயக்கம் மட்டும்தான் மிக அழுத்தமாக கோரிக்கையை முன்வைத்தது. SNEA உறுப்பினர் அவர்களும் நமது கோரிக்கைக்கு ஆதரவளித்தார்கள் .

முடிவெடுத்தாலும் அமுல்படுத்துவதில் அன்றைய பொது மேலாளர் அக்கறை செலுத்தவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

இன்றைய பொது மேலாளர் திரு பாலச்சந்தர் அவர்கள் பதவி ஏற்ற உடன் முதல் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை வலியுறுத்தி இருந்தோம்.
நமது நியாயமான கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டாலும் சில அதிகாரிகளின்  ஆர்வ இன்மையால் விரைவாக நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது. 

தலைமை பொது மேலாளர் அவர்கள் இருமுறை கடலூர் வந்து பொழுது மாவட்ட சங்கத்தின் சார்பில் இந்த கோரிக்கையை முன்னுரிமை கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

தலைமை பொது மேலாளர் அவர்கள் நமது கோரிக்கை முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக நடத்துவதற்கு   நமது பொது மேலாளர் அவர்களுக்கு அனுமதி அளித்தார்.

மே 24ம் தேதி  நடத்துவதற்கு முறையாக அனுமதி அளிக்கப்பட்டு இன்று காலை கடலூர் கூட்ட அரங்கில் பொது மேலாளர் உயர்திரு பாலச்சந்திரன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. 

28  தோழர்களில் 23 தோழர்கள் நேரடியாக குடும்பத்துடன் பங்கு பெற்று சிறப்பித்தனர்.
அனைவருக்கும் பொது மேலாளர் மாலை, சால்வை  அணிவித்து கௌரவித்தார். 
துணை பொது மேலாளர் சி எம் அவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தார். 
IFA to GM அவர்கள் பங்கு பெற்று சேம நலநிதி மூலம்  ஓய்வு பெற்ற அனைவருக்கும் ட்ராலி பேக் வழங்கி சிறப்பு செய்தார்.

தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் பங்கு பெற்று ஓய்வு பெற்ற அனைத்து தோழர்களையும் மற்றும்  மாவட்ட நிர்வாகத்தையும் பாராட்டி மிக சுருக்கமாக உரையாற்றினார்கள்.

நமது இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர்  D.குழந்தைநாதன் தனது  வாழ்த்துறையில் 28 ஓய்வு பெற்ற தோழர்களையும் மற்றும் அவர்களது குடும்பத்தாரையும் பாராட்டினார். அவர்கள் அனைவரும் ஓய்வு பெறுகின்ற வரை மிகச் சிறப்பாக செயல்பட்டனர் . விருப்ப ஓய்வு திட்டம் வந்த பொழுதும் அதை ஏற்க மறுத்து வயது மூப்பு வருகின்ற வரை உழைத்திட்ட அவர்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்தார். 
ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தியதின் அடிப்படையில் இன்று சிறப்பாக விழா நடைபெறுகின்றது.

இதற்கு உறுதுணையாக இருந்த பொது மேலாளர் அவர்களுக்கு  நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இதை நன்கு திட்டமிட்டு வழக்கம்போல் சிறப்பாக செயல்படுகின்ற கடலூர் மாவட்ட வெல்ஃபர் செக்ஷன்  ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பதிவு செய்தார்.

தமிழகத்திலேயே  விருப்ப ஓய்வு VRS 2019 அமல்படுத்தப்பட்ட பொழுது விருப்ப ஓய்வு சென்ற  284 தோழர்களுக்கு  மிக சிறப்பான விழா நடத்திய ஒரே மாவட்டம் கடலூர்  மாவட்டம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். அந்த வகையில் கொரோனா  காலத்தில் பணி ஓய்வு பெற்ற தோழருக்கும் காலம் கடந்திருந்தாலும் சிறப்பான பணி ஓய்வு நடத்திய மாவட்டம் கடலூர் மாவட்டம் தான் என்பதிலும் பெருமை கொள்வோம்.

பணி ஓய்வு பெற்ற தோழர்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து  உரையை நிறைவு செய்தார்.

முன்னதாக உதவி  பொது மேலாளர் நிர்வாகம் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

ஓய்வு பெற்ற சங்கத்தின் சார்பாக AIBSNLPWA மற்றும் AIBDPA ஓய்வு பெற்ற தோழர்கள் கௌரிக்கப்பட்டனர்.

 நிர்வாகத்தின் சார்பில் உதவி பொது மேலாளர் திரு வெங்கடேசன், துணைப் பொது மேலாளர் சி எம் மற்றும் நிதி ஆலோசகர் ஆகியோர் மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள். 

உதவி பொது மேலாளர் திட்டம் திருமதி S. சசிகலா அவர்கள் தோழர்  V S.ரவி  DE விஜிலன்ஸ் ஓய்வு அவர்களின்  பாராட்டு மடலை வாசித்தார்.

பொது மேலாளர் அவர்கள் தனது தலைமை உரையில் 28 ஓய்வு பெற்ற தோழர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும்
வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

விழா யாரால் நடைபெறுகின்றது என்பதை விட விழா நடைபெற்றது என்பது தான் மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்பதை மிக அழகாக பதிவு செய்தார்.

எதிர்பாராத கடினமான சூழலில் குறித்த நேரத்தில் விழா நடத்த இயலவில்லை. 
தற்பொழுது  நீங்கள் அனைவரும் கலந்து கொண்டது மிகவும் சிறப்பு அம்சமாகும்.

 கடினமான கொரோனா காலத்தை கடந்து வந்திருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி தான்.

நீங்கள் அனைவரும் விருப்ப ஓய்வு திட்டத்தில் சேராமல் வயது மூப்பு வரை பணியாற்றி ஓய்வு பெற்றமைக்கு மற்றொரு முறை வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

கடலூர் மாவட்டம் தமிழகத்திலேயே பணி ஓய்வு பாட்டு விழா நடத்துவதில் ஒரு முன்மாதிரியான  மாவட்டம் என்பதை இந்த கூட்ட அரங்கில் நேரடியாக பங்கு பெற்ற தலைமை பொது மேலாளர் அவர்கள் பதிவு செய்ததை நினைவு படுத்தினார். 

பல முரண்பாடுகள் இருந்தாலும் பணி ஓய்வு பாராட்டு விழாவில் அனைத்து தொழிற்சங்கமும்  கலந்து கொண்டு ,ஓய்வு பெற்ற தோழர்களை வாழ்த்துவது தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் தான் சாத்தியம் என்பதை பெருமைப்பட பதிவு செய்தார். 

இன்றைய சூழலில் தமிழகத்தின்  பிஎஸ்என்எல் வருவாய் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை  மகிழ்ச்சியாக பதிவு செய்தார். 
குறிப்பாக 2024 மார்ச் மாதம் வருவாய் சென்ற ஆண்டு மார்ச் 2023 விட நல்ல முறையில் கூறியுள்ளது .அதேபோல் செலவினமும் குறைந்துள்ளது.

முன்பு போல் இல்லாமல் இப்பொழுது பவர் பிளான்ட் ,பேட்டரி போன்ற சாதனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன .
4g சேவையும் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. 
இந்த ஆண்டுக்குள் மாவட்ட முழுவதும் 4G சேவை வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

மிக விரைவில் நமது நிறுவனம் லாபம் தருகின்ற நிறுவனமாக மாறிவிடும் என்ற நம்பிக்கையுடன் அனைவரையும் மற்றொரு முறை வாழ்த்தி ,உரையை நிறைவு செய்தார்.

ஓய் பெற்ற  தோழர்களில் ஐவர் தோழர் M. துரைராஜன், SDE கடலூர், தோழர் மனோகரன்  TT விழுப்புரம், தோழர் அகஸ்டின் TT விழுப்புரம், தோழர் N. சுந்தரம் AOS, செஞ்சி, மற்றும்  தோழியர் N. சரோஜாதேவி OSP கடலூர் ஆகியோர் ஏற்புரை ஆற்றினார்கள் 

ஓய்வு பெற்ற தலைமை கணக்கு அதிகாரி  உயர்திரு D. சண்முகசுந்தரம் அவர்கள் மிக சுருக்கமாக மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்..

JTO General அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவு பெற்றது.
 
தமிழ்த்தாய் வாழ்த்து உடன் கூடிய விழா தேசிய கீதத்துடன்  நிறைவு பெற்றது..

குறித்த நேரத்தில் துவங்கி 10.30 am சரியாக நண்பகல் 12.30 மணிக்கு நிறைவு பெற்றது




















Saturday, May 18, 2024

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

2024 APRIL மாத IDA விற்கான உத்தரவு வெளியிடப்படாத காரணத்தால் ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு leave encashment payment வழங்கப்படவில்லை. IDA உத்தரவு வந்ததற்கு பின்னால் leave encashment payment செய்யலாம் என நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. மாநிலச் சங்கம் மாநில நிர்வாகத்திடம் இது குறித்து பேசி April மாதத்திற்கான IDA உத்தரவு வெளி வந்ததற்கு பின்னால் அதற்கான நிலுவைத் தொகையை  தனியாக கொடுக்கலாம், ஓய்வு பெறும் மாதத்தில் அவர்களுக்கான LEAVE ENCASHMENT PAYMENT ஐ உடனடியாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்திருந்தோம். தற்பொழுது அதற்கான வழிகாட்டுதல் மாநில நிர்வாகத்தால் மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த மாதம் (மே மாதம் ) PAYMENT ஐ  கொடுப்பதற்கு மாவட் நிர்வாகங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. மாவட்டச் செயலர்கள் மாவட்ட நிர்வாகத்தோடு பேசி ஓய்வு பெற்ற தோழர்களுக்கு LEAVE ENCASHMENT PAYMENT ஐ பெற்று தருமாறு தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன், 
கே.நடராஜன், 
மாநிலச் செயலாளர்,
NFTE-BSNL,
TN, CIRCLE,
CHENNAI,

Friday, May 17, 2024


 விளையாட்டில் அரசியலை புகுத்தி விளையாடாதே 
 பகுதி 5 
 
பலமுறை திரும்பி திரும்பி சொன்னால் பொய்யான செய்திகள் என்றைக்கும்  உண்மை ஆகாது.

இது போன்ற விமர்சனங்களை கடந்து தான் 35 ஆண்டு காலமாக  தொழிற்சங்கப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

உங்களைப் போன்று அல்லது உங்கள் இயக்கத்தில் உள்ளவர்களை போன்று எந்த துணைப் பொது மேலாளர் அவர்களையும் இல்லத்தில் சந்தித்தது கிடையாது.
எங்களுக்கு ஆக்கர் சந்தும் தெரியாது, ஜோதி  நகரும் தெரியாது.
திண்டிவனமும் தெரியாது.

உங்களது தற்கொலை மிரட்டல் மெசேஜ் வெளியிட வேண்டிய அவசியம் ஏற்படாது என்று கருதுகின்றேன்.

உங்களுக்கும் இன்றைய துணைப் பொது மேலாளர் நிர்வாகத்திற்கும்  நல்லதொரு உறவு இருக்கட்டும்.

 நல்வாழ்த்துக்கள்

இந்த உறவின் அடிப்படையில் தானே நீங்கள் விதிக்கு மீறிய குடியிருப்பிற்கான  கட்டணம் செலுத்தாமல் அவசர அவசரமாக வீட்டை காலி செய்தீர்கள்.

நீங்கள் நன்றி கடன் செலுத்துவது காலத்தின் கடமையாகும். 
அவர் திருப்பி உங்களுக்கு நன்றி கடனாக ஆங்கிலம் மலையாளம் தமிழ் ஆகிய  மும் மொழியில்  புகழ்  பாடலாம்.

எங்களது இயக்கம் எந்த அதிகாரியை நம்பியும் செயல்படுவது கிடையாது. 

அதிகாரிகள் மேல் திட்டமிட்டு வீண்பழி சுமத்துவது அல்லது மிரட்டுவது யார் என்பது  நன்றாகவே தெரியும்?

உங்களது மிரட்டல் தான்  தற்கொலைக்குச் சென்றது என்பதை மறந்து விட வேண்டாம்.

தேர்தல் அதிகாரி மாற்ற வேண்டும் என்று கோரிக்கை  வைக்கப்பட்டது? 
ஏன் தோழா? மாற்றப்பட்டது.

 ஆனால் நாங்கள் கவலை கொள்ளவில்லையே!! காரணம் நாங்கள் தோழர்களை முழுமையாக நம்புகின்றோம். நாங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

அன்புக்குரிய உங்களது உறுப்பினர் கொரோனாவில் பதிக்கப்பட்டும்,கை குழந்தையோடு அல்லல் படுகின்ற பொழுது வேடிக்கை பார்த்தது யார்?
மிரட்டியது யார் யார்?   அவதூறுகளை கிளப்பி விட்டது யார் யார்?  மாற்றலை தடைபடுவதற்கு முயன்றது யார்?

எந்த விதமான தடைகளையும்  தகர்த்தெறிய தெம்பு பெற்றவர்கள் நாங்கள் என்பதை மறந்து விட வேண்டாம். உங்களைப் போன்று அல்லது உங்களது  சட்ட ஆலோசகர் போன்று தோற்ற பிறகு சங்கம் மாற கூடியவர்கள் இல்லை நாங்கள்.

பதவிக்காக சங்கம் மாறிய உங்களுக்கெல்லாம் நல்லதொரு சிந்தனை வரும் என்று எதிர்பார்ப்பது தவறுதான்.

எந்தத் தொழிலும் செய்து பொருள் இட்டு வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். 

மாவட்டத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதாவது தொழிலில் ஈடுபட்டிருந்தால் நீங்கள் நிரூபிக்க தயாராக இருந்தால் நான் தொழிற்சங்கத்தை விட்டு விலக தயாராக இருக்கின்றேன் .

உங்களைப் போன்று எந்த  ஊழியரையும் பழிவாங்குவது எங்களுடைய தொழில் அல்ல..

சமூகத்தில் குரல் எழுப்ப முடியாத  தோழர்களுக்காக குரல் எழுப்புவது எங்களது கடமை.

எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து குரல் எழுப்பி கொண்டே இருப்போம். 

 மாவட்ட அலுவலகத்தில்  ஒலிபெருக்கியால்  NOISE வருவதாக சொல்லி கடிதம் கொடுக்கப்பட்டது .
உங்களது சங்கத் நண்பர்களும் அதற்கு ஆதரவு  அளித்தது தான்  உங்களது சங்கத்தின் தொழிற்சங்க வேலை என்பதை மறந்து விட முடியாது..

வலிக்கின்றவன்  தான் குரல் எழுப்புவான் .
சுகுசாக இருக்கின்றவன் மெய் மறந்து இருப்பான்.
 
எத்தனை தடைகள் வந்தாலும் உங்களையும் அரவணைத்து தான்  (ஒலி  பெருக்கியில்)குரல் எழுப்புவோம். 

யாருக்கு எந்த கஷ்டங்கள் வந்தாலும் தோழமையுடன் தோள் கொடுப்போம் .

தோழமைக்கு  என்றும் தலை வணங்குவோம்.

 VOICE for VOICELESS  PEOPLE .

தோழமையுடன் 

இரா ஸ்ரீதர் 
உறுப்பினர் கடலூர் பிஎஸ்என்எல் விளையாட்டு குழு.

Thursday, May 16, 2024

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். கொடைக்கானலில் 20.05.2024 அன்று நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான AWARD FUNCTION அதாவது "BHARAT FIBER CHAMPIONS LEAGUE 2024 " நிகழ்ச்சிக்கு ஊழியர் தரப்பும் அழைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை 7.5.2024 அன்று நடைபெற்ற மாநில கவுன்சில் கூட்டத்தில் எழுப்பி இருந்தோம். பிறகு கோயமுத்தூரில் 10.05.2024 நடைபெற்ற சேவா மாநில மாநாட்டில் மாநில தலைமை பொது மேலாளர் அவர்களிடம் மீண்டும் நினைவு படுத்தினோம். அதன் அடிப்படையில் தற்போது கார்ப்பரேட் அலுவலகத்தில் அனுமதி பெற்று தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. ஊழியர் தரப்பு கோரிக்கைகளை ஏற்sறுக்கொண்டு உடனடியாக அனுமதி பெற்றுத் தந்த மாநில தலைமைக்கு நன்றி.


Wednesday, May 15, 2024

விளையாட்டில் அரசியல் புகுத்தி விளையாடாதே 

 பகுதி 4

புதிய குழு அமைக்கப்பட்டு 2018 பிறகு நமது நிறுவனத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக சென்றுவிட்டதால் அனைத்து விளையாட்டு குழு நடவடிக்கைகளும் 2019 முதல் நிறுத்தப்பட்டன .

 2020 க்கு பிறகு பேரிடர் காலம் அறிவித்ததன் அடிப்படையில் 2023 வரை மீண்டும் அனைத்து விளையாட்டு குழு நடவடிக்கையும் நிறுத்தப்பட்டன.

இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமல் பாவம்  யாரையோ திருப்தி படுத்துவதற்காக அறிக்கை என்ற போர்வையில் உண்மைக்கு மாறான செய்திகளை தொடர்ந்து எழுதுவது என்பது தோழரின் அறியாமையைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

விளையாட்டுக் குழுவின் செயல்பாடுகளை மிக விரைவில் நடைபெற இருக்கின்ற ஆண்டு மாநாடு அறிக்கையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

(தோழர்  நேரில் பங்கு பெற முடியாது. அறிக்கையினுடைய நகலை  வேண்டுமானால் அட்வான்ஸ் ஆக அனுப்ப    முயற்சிக்கின்றேன்)

ஒன்றை மட்டும் நினைவு ,படுத்த விரும்புகின்றேன் 2024  கடலூர் வரதராஜன் பிள்ளை நகரில் நடைபெற்ற வாலிபால் தமிழக அணி தேர்வு குழு மிக சிறப்பாக நடைபெற்றது.

இருக்கையில் அமர்ந்து கொண்டு புரட்சி செய்கின்றவர்கள் அன்றைக்கு எங்கே சென்றார்கள்?

அந்தத் தேர்வு குழுவுக்கு அவர்களின் பங்களிப்பு என்ன?

கொரோனா பேரிடர்  காலத்திற்கு பிறகு தமிழகத்தில் எந்த மாவட்டமும் நடத்த முன் வராத பொழுது  கடலூர் மாவட்டம் முன்வந்து  நடத்தியது.

 நீங்கள் யாரும் பாராட்ட வேண்டாம். ஆனால் உண்மையை  மறைக்க முயற்சிக்க வேண்டாம்.

இளம் தோழர் துடிப்புமிக்க தோழர் என்பதில் கருத்து முரண்பாடு கிடையாது.

மாநில ஸ்போர்ட்ஸ் கவுன்சில் இருந்து கடலூர் நிர்வாகத்திற்கு  கடிதம் மூலம்  ஸ்போர்ட்ஸ் செயலாளர் யார் என்று கேட்ட பொழுது அதற்கு பதில் தராமல் குழப்பம் செய்தது யார்?

அன்றைக்கு உங்களது  நண்பரிடம் உங்களது இருசக்கர  வாகனத்தில் பிரேக் போட்டு கேள்வி கேட்டிருந்தால் நீங்கள் உண்மையில் துடிப்பு மிக்க தோழர் தான்.

அன்றைக்கு தனியாக துணைப் பொது மேலாளர் அவரிடம் முறையிட்டது  யார்?

துணைப் பொது மேலாளர் அவர்கள் கணக்கை முடிக்க சொன்ன பொழுது நேற்றைய முன் தினம் வரை ரகசியம் காத்ததின் மர்மம் என்ன?

பொது மேலாளர் அவர்களை தனியாகச் சென்று சந்தித்ததின் ரகசியம் என்ன?

விளையாட்டுக் குழுவில் முறைகேடு நடந்ததாக எவரும் சொல்லவில்லை.
 
செயலாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய பொருளாளர் தனித்தே செல்வதின் மர்மம் என்ன?

மாவட்ட விளையாட்டு குழுவில் மேல் அக்கறையிருந்தால் ஒன்றுபட்டு செயல்பட்டு அனைவரும் அமர்ந்து பேசி கூட்டத்தை நடத்த  முயற்சி செய்திருக்கலாமே?

ரகசிய அறையில் ரகசிய கூட்டம் தேவை இருந்திருக்காதே?

பொது மேலாளர் அலுவலக மன மகிழ் மன்றத்தின் உண்மையின் வரலாற்றை தெரியாதவர்கள், வாய் சொல்லில் வீரர்கள், இருக்கையில் அமர்ந்து கொண்டு புரட்சி செய்பவர்கள் எல்லாம் ஒன்று கூடி அறிக்கை விடுகின்றார்களாம். 

பாவம் தோழர் சம்பந்தம் ரூபாய் 2000 நடராஜருக்கு நடனம் ஆடுகின்றார் . 
மொத்த வசூலா 14,000 ரூபாய். மூவருக்கும் நடராஜர் ஆறாயிரம் ரூபாய். L1 SKC ரூபாய் 2000 .
மீதித்தொகை 6000.
இதுதான் உங்களது பார்ட்டியின் கணக்கு.
இதற்கு நற் சான்றிதழ் 

இந்தாண்டு கடும் வெயில் தான் ஏற்றுக் கொள்கின்றோம் . வெயிலில் கலங்க வேண்டாம். அமைதி காக்கவும்.

மனமகிழ மன்றம் என்பது பொது மேலாளர் அலுவலகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் சேர்ந்துதான்.
பணி ஓய்வு பாராட்டு விழா மட்டும்தான் மன்றம் நடத்த வேண்டும்.
பணி மாறுதல் விழா என்பது கட்டடத்திற்குள் தனியாக நடத்திக் கொள்ள வேண்டும். 
இதுதான் மன மகிழ் மன்ற நடைமுறை.

தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் அமைதியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
குட்டி அதிகாரிகளின் ஆதரவுக்காக வரம்பை மீறி  செயல்படாதீர்கள்.

கடலூர் பொது மேலாளர்  மன மகிழ் மன்றத்தின் சந்தா தொகை நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ரூபாய்  40 ஆயிரம் யாரிடம் உள்ளது. இதைப் பற்றி சிந்தித்தது உண்டா?  எல்லாம் சரியாக இருப்பதாக சாட்டர்டே அக்கௌன்ட் போல் சான்றிதழ் கொடுப்பதற்கு நீங்கள் யார்?  அதற்கான தகுதி அல்லது அருகதை உண்டா? 

இறந்த பிறகு முதலை கண்ணீர் வடிக்கின்ற நீங்கள் உட்பட இந்த கட்டிடத்தில் பல பேர் அந்த தோழருக்கு பணி மாறுதல் பாராட்டு விழாவிற்கு பங்கு செலுத்தவில்லையே?

இதுதான் உங்களது ஜனநாயகமா? 

இந்தப் பட்டியலை வெளியிட்டால் உங்களைப் போன்ற கிளர்ச்சியாளர்கள் புரட்சியாளர்களுக்கு அவமானம் என்பதை மறந்து விடாதீர்கள்.

தோழமையுடன் 

இரா ஸ்ரீதர் 
உறுப்பினர் கடலூர் பிஎஸ்என்எல் விளையாட்டு குழு.

Tuesday, May 14, 2024

விளையாட்டு கவுன்சிலில் அரசியலை புகுத்தாதே

பகுதி 3

தோழர்  A.சகாய செல்வன்
சென்னை தொலைபேசியில் இருந்து Junior Sports Assistant ரூல் 8 மாற்றலில் கடலூர் மாவட்டத்திற்கு  வந்தார் .
2004 க்கு முன்பு Sports Recruit  மூலம் பணியில் சேர்ந்தவர்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் (SSLC )மூன்றாம் பிரிவில் பணியமர்த்தப்பட்டனர்.

 இன்று ஆட்சியாளர்களின் போல் போலி வாக்கு உறுதிகளை அள்ளி வீசி NFTE யை  அனைவரும் கூட்டணி அமைத்து தோற்கடித்தனர்.
அதன் உடனடியான விளைவு என்னவென்றால் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் தேர்வான அனைத்து ஊழியர்களும் ATT    கேடரில் பணி அமர்த்தபட்டனர் .

 தோழர் சகாயம் MBA (Regular) படித்திருந்தாலும் நான்காம் பிரிவில்தான் பணி அமர்த்தபட்டார்.
கடலூர் மாவட்டத்திற்கு வந்த பிறகுதான் அன்புக்குரிய தோழர் D.அன்பு தேவன் JTO அவர்களின் முயற்சியில் தோழர் சகாய செல்வன் உட்பட நான்கு தோழர்கள் TT தேர்வில் வெற்றி பெற்றார்கள்.

தொடர் முயற்சியில் தமிழகத்தில் முதல்  மதிப்பெண் பெற்று JE பதவிக்கு தேர்வாகி உள்ளார் . மிக விரைவில் JTO தேர்விலும் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் கிடையாது.

பி எஸ் எல் யூ சங்கம் தேர்தலில் வெற்றி பெற அனைத்து மோசடி வேலைகளையும் செய்யத் தெரிந்தது ஒழிய, ஊழியர்கள் மற்றும் துறை சார்ந்த எந்த பிரச்சினையும் தீர்க்க வழி தெரியாமல் பிதுங்கிக் கிடக்கின்றது .

2007 க்கு பிறகு வந்த இளம் தோழர்களுக்கு தான்  60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஊதிய குழுவின் மூலமாக பெற்று வந்த ஊதியம் குறைக்கப்பட்டது என்பதில் வேண்டுமானால் BSNLEU சங்கம் பெருமை கொள்ளலாம்.

இந்தப் புரட்சியாளர்கள் நம்பி தான் சில  கிளர்ச்சியாளர்கள் அணி சேர்ந்திருக்கின்றார்கள்.

இவர்கள்  கடலூர் விளையாட்டு குழு தலைமையை பிடித்து ஒலிம்பிக் செல்வதற்காக திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

விழிப்புடன் இருப்போம் சதி வலையை தகர்த்தெறிவோம்.

Monday, May 13, 2024

விளையாட்டில்  அரசியலை புகுத்தி விளையாடாதே

 பகுதி 2

 வெட்கப்படுங்கள் தோழரே

2013இல் நடைபெற்ற விளையாட்டு குழு கூட்டத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு இளம் தோழர் S. சதீஷ்குமார் TTA அவர்களை செயலாளராக தேர்ந்தெடுத்தோம்.

தோழர் M. தினகரன் அவர்கள் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காலம் கடந்து  செயல்பாட்டை விமர்சிக்க விரும்பவில்லை.

 சரியாக ஐந்து ஆண்டுகள் கழித்து பொதுக்குழு கூடியது. அதில் அவரை மாற்ற வேண்டும் என்று கருத்து மேலோங்கி இருந்தது. 
அன்றைக்கு அவர் பிஎஸ்என்எல் யூ சங்கத்தில்  அதிதீவிர உறுப்பினராக இருந்ததால் இவரை மீண்டும்   தொடர  வேண்டும் என்று BSNLEU துடித்தது.

இன்று போல் அன்றும் சில குறிப்பிட்ட அதிகாரிகளின் உதவியுடன் அணி சேர்த்தது.

மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய அன்றைய பொது மேலாளர் திருமதி லீலா ஷங்கரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஸ்போர்ட்ஸ் கவுன்சில் என்பது  (பொது மேலாளர் ) தலைவர் என்ற முறையில் நியமிக்கப்பட வேண்டியது.
 தேர்ந்தெடுக்கப்படுகின்ற பதவி அல்ல என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்.
அன்றைய குடும்ப சூழ்நிலையில் மாவட்ட செயலாளராக இருந்த தோழர் ஸ்ரீதர் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. மாவட்ட உதவி செயலாளர்  தோழர் D. குழந்தைநாதன் பங்கெடுத்துக்கொண்டு நமது கருத்தை மிக அழுத்தமாக  உறுதிப்பட பதிவு செய்தார்.  Right  man should be in right  place  அதாவது விளையாட்டு அடிப்படையில் ( SPORTS QUOTA) பணியாமத்தப்பட்ட ஊழியரை விளையாட்டு குழு செயலாளராக நியமிக்கப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட ஊழியர்கள் இல்லை என்றால் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் அல்லது கலாச்சாரத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் விரும்பினால் விளையாட்டுக் குழுவின் செயலாளராக நியமிக்கலாம்.

இன்று அரசியல் சூழ்நிலையை போல் வரலாற்றை திருத்தி எழுத பார்க்கின்றார். 

வெறுப்பு  அரசியலை தூண்டிவிட்டு ஆதாயம் தேட சில குட்டி அதிகாரிகளுடன்  அணி சேர்க்கை  சேர்ந்து நமது இயக்கத்திற்கு எதிராக உயர் அதிகாரியிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றார். 

அன்றைய பொது மேலாளர் திருமதி லீலா சங்கரி அவர்கள் எந்த விதமான முடிவும் எடுக்காமல் கூட்டம் நிறைவு பெற்றது. Nfte இயக்கம் தோழர் D.குழந்தைநாதன் தலைமையில் முழு எதிர்ப்பினை பதிவு செய்து,  வெளிநடப்பு  செய்தது.

மரியாதைக்குரிய உயர்திரு R. மார்ஷல் அந்தோணி  லியோ பொது  மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக நடைபெற்ற  விளையாட்டு குழு கூட்டத்தில் எந்த விதமான சலசலப்புக்கும் அஞ்சாமல் நேர்மையான முடிவுகளை எடுத்தார்.

இளம் தோழர் சதீஷ்குமார் பொருளாளராக பதவி ஏற்க , மூத்த தோழர் A.சகாய செல்வன் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தோழமையுடன் 

இரா.  ஸ்ரீதர் 
உறுப்பினர் கடலூர் விளையாட்டு குழு

Sunday, May 12, 2024

*விளையாட்டில் அரசியலை புகுத்தி விளையாடாதே 
பகுதி 1* 

தோழர் சௌந்தரராஜன் என்ற பெயரில் தோழர் கேடி  சம்பந்தத்தின் அறிக்கை வந்துள்ளது.

பரவாயில்லை தோழர் சம்பந்தத்தை அறிக்கை தயார் செய்வதற்காக சங்கம் பயன்படுத்துகின்றார்களே என்ற வகையில் பெருமை கொள்கின்றேன். வாழ்க்கையில் உண்மைக்கும் அவருக்கும் எந்த விதமான தொடர்பு இல்லை என்பதை பல முறை நிரூபித்துள்ளார்.

60 வயது என்பது அனைவருக்கும் ஓய்வு தான். ஆனால் இவர் ஓய்வு பெற்று ஓராண்டுக்கு பின்பும் வெயிலின் தாக்கத்தின் காரணமாகவும், உடல் நிலையின் தாக்கத்தின் காரணமாகவும் தோழர்களின் அரவணைப்பு இல்லாத காரணத்தின் காரணமாகும் சில வேண்டியவர்களுக்குl புரோக்கராக செயல்படுவது தவிர்க்க முடியாதது தான் .

அறிக்கை எழுதுவதற்கு முன்பாவது குறைந்தபட்சம் அவரது  வழிகாட்டி பாசமிகு தோழர் பால்கி அவரிடம் கேட்டு தெளிவு பெற்று இருக்கலாம்.

நீங்கள் யாரிடமும் தெளிவு பெறுகின்ற நிலையில் இல்லை என்பதை நான் உணர்கின்றேன்.

உங்களது  விமர்சனத்தை கண்டு என்றும் கவலைப்படுவதும் கிடையாது .பெரிதாக எடுத்துக் கொள்வதும் கிடையாது. 

ஆனால் உண்மைக்கு மாறான செய்திகளை மறுக்க வேண்டியது ஜனநாயகத்தின் கடமையாகும். 

பரந்து, விரிந்த ஜனநாயகத்தைப் பற்றி எழுதுகின்ற நீங்கள் வாழ்க்கையில் என்றாவது ஒருமுறை கடை பிடித்திருக்கின்றார்களா?
 
சமீபத்தில்  10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற லோக்கல் கவுன்சில் கூட்டம் மிகத் தெளிவாக உங்கள் ஜனநாயகத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. 

இதைவிட அவமானகரமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. குறைந்தபட்சம் உங்களது  மாநில சங்கத்தை பார்த்தாவது திருந்த முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு மிகவும் நல்லது. மேலும் உங்களது உடல் நலத்திற்கும் அது மிகவும் நல்லது..

தனிமையில் இருக்கின்ற பொழுது உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள் .யார் தோழன் யார் நண்பன் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
விளையாட்டு குழு வரலாற்றைப் பற்றி உங்களது ஆலோசகர் உயர்திரு R.V.ஜெயராமன்  அவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். 

நீண்ட வரலாறு சொல்ல விரும்பவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேமநல குழு இல்லை என்பது யாரால்?
உங்கள் சங்கம் தான் 20 ஆண்டுகளுக்கு மேலாக  அங்கீகரிக்கப்பட்ட சங்கமாச்சே? 2004 முதல் 2013 வரை நீங்கள் மட்டும் தானே  அங்கீகரிப்பட்டு சங்கமாக செயல்பட்டு வந்தீர்கள். இருபது ஆண்டு காலம் ஜனநாயகத்தைப் பற்றி சிந்திக்கவில்லையா? 

ஜனநாயகம் என்றால் என்ன என்பது புரியவில்லையா? 

தற்போது  ஆலோசனை சொல்ல குட்டி அதிகாரிகள் இருப்பது போல் அன்று குட்டி அதிகாரிகள் இல்லையா? 10 ஆண்டுகளுக்கு மேலாக கடலூர் மாவட்டத்தில் தல மட்ட குழு கூட்டத்தை தடை செய்தது தான் பரந்த ,விரிந்த ஜனநாயகமா?

பணி ஓய்வு பாராட்டு விழா வரலாறு தெரியுமா?

ஊழியர் தரப்பிற்கு அளிக்கப்பட்டிருந்த பெருமையை சீர்குலைத்தது யார்?

இன்று பணி ஓய்வு பெறும் தோழருக்கு மாலை போடுவது யார்?  வெட்கப்படுங்கள் தோழரே !!

Wednesday, May 8, 2024

ஸ்போர்ட்ஸ் கவுன்சில்

கடலூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கவுன்சிலை சில புரோக்கர்கள் திட்டமிட்டு கைப்பற்றுவதற்காக கூட்டு சதி வலையை உருவாக்கி உள்ளதாக கேள்விப்படுகின்றோம்.

ஊழல்வாதிகளும் புரோக்கர்களும் தொடர்ந்து சிக்காமல் இருக்க முடியாது.

காலம் நெருங்கி விட்டது. 
உயர் அதிகாரிகளின்
 தயவில்  பொழப்பை ஓட்ட முடியாது.

 மாலை நேர சந்திப்பில் முடிவெடுத்தாலும் அல்லது இரவு நேர சந்திப்பில் முடிவு எடுத்தாலும் தடுமாற்றம் தடுமாற்றம்தான்.

பொது மேலாளர் அலுவலக மனமகிழ்  மன்றம் நிதியை  ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வைத்திருப்பவர் யார்?

ஐந்து ஆண்டுகளாக ஸ்போர்ட்ஸ் கவுன்சில் நிதியை  பராமரிப்பது யார்   ?

ஸ்போர்ட்ஸ் கவுன்சில் கணக்கை வழங்காதது யார்? 

2018 விளையாட்டு குழு கூட்டத்தை மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?

சரியான நபரை சரியான இடத்தில் போட வேண்டும் என்பது ஸ்போர்ட்ஸ் கவுன்சிலுக்கும் பொருந்தும் !!!

பைபரில் வருவாய் முடிந்து விட்டதோ? 

கவனம் வேற பக்கம் திரும்பி விட்டதோ!

ஆட்சி மாற்றம் வருவதனால் புரோக்கர் தொழில் பாதிக்கப்படுமோ?

தலைமை பொது மேலாளர் ஓய்வு பெற போகிறார் என்பதால் வந்த அசட்டு துணிச்சலோ?

Right man should be in right place 
Sports man should be in sports council

 ஒன்றுபட்டு ஸ்போர்ட்ஸ் கவுன்சிலை கூட்டுவோம். 

தகுதி உள்ளவரை கொண்டு வருவோம்.

விளையாட்டில் வெறுப்பு அரசியலை   வேரறுக்க சபதம் ஏற்போம்.

தோழமையுடன் 

இரா ஸ்ரீதர் 
உறுப்பினர் 
கடலூர் விளையாட்டு குழு.

Tuesday, May 7, 2024

நேற்று 07.05.2024 நடைபெற்ற Circle council  கூட்டத்தில் ......



07-05 2024 அன்று  மாநில கவுன்சில்  கூட்டம் தலைமை பொது மேலாளர் திரு D. தமிழ் மணி  அவர்கள் தலைமையில், சென்னை கிரீம்ஸ்  சாலையில் அமைந்துள்ள தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மாநில குழுவில் நமது மாவட்ட செயலாளர் தோழர் D. குழந்தைநாதன் பங்கு பெற்று சிறப்பு செய்தார்.

ஊழியர் தரப்பு கூட்டம் அன்று காலை NFTE மாநில சங்க அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நமது மாவட்ட நிர்வாகம் போல் அல்லாமல் ஊழியர் தரப்பு தலைவரை முறைப்படி 
முதலில் பதிவு செய்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. 
மேலும் அந்த அகர வரிசைப்படி தான் இருக்கையும் அமைந்திருந்தது.

கடலூர் மாவட்டத்தில் சிலரை திருப்தி படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம்  நடந்து கொண்டதை என்ன என்று சொல்வது.
( நமது எதிர்ப்பை கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட குழு கூட்டத்தில் கடுமையாக பதிவு செய்திருந்தோம் )

கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக  பல பிரச்சினைகள் ஏற்கனவே முன் வைக்கப்பட்டிருந்தன. 

 அவற்றில் சில 

 மெடிக்கல் பில் வெளிப்புற சிகிச்சை

 சம்பந்தமாக ஒரு கோரிக்கையை வைத்தோம் .அதாவது கையால் எழுதப்படுகின்ற மருத்துவ பில்களை பட்டுவாடா செய்வதில் பிரச்சனைகள் உள்ளதை சுட்டிக்காட்டினோம். மாநில நிர்வாகம் குறிப்பாக பொது மேலாளர் நிதி எந்த பில்லாக  இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற உறுதி மொழியை தந்துள்ளார் . ஆகவே தோழர்கள் கையால் எழுதப்பட்ட பில்கள் இருந்தால் சமர்ப்பித்துக் கொள்ளலாம். அதில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால் மாவட்ட செயலாளரை அணுகவும்.

ஏற்கனவே இந்த பிரச்சனை மாவட்ட குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நமது சேர்மன் அவர்கள்  மாநில குழு வழிகாட்டல் கட்டாயம் பின்பற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

 மருத்துவமனையை அங்கீகரித்தல் 

உள் நோயாளி சிகிச்சைக்காக பணம் கட்டாமல் சிகிச்சை மேற்கொள்வதற்கு மிக விரைவில் கடலூர் மாவட்டத்தில் மருத்துவமனையில் அங்கீகரிப்பதற்கு  மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்படும்.
 இது கால வரம்பிற்குள் முடிக்கப்படும்.

பள்ளிகளுக்கு வழங்குகின்ற FTTH சேவையில் ரிமோட் ஏரியாவாக இருந்தால் அதற்கு ஆகுகின்ற கேபிள் செலவுகளை பள்ளி நிர்வாகத்திடம் வாங்கிக் கொண்டுதான்  FSP -க்கள் அனைவரும் இணைப்பை தந்து வருகின்றனர். ஆனால் மாநில நிர்வாகம் ஒரு வழிகாட்டுதலை கொடுத்திருக்கின்றது சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இணைப்புகளை தர வேண்டும் அதற்கு ஆகின்ற செலவுகளை நிர்வாகத்திடம் கொடுத்து அதை பள்ளி கல்வித்துறையில் இருந்து ஒரு வருடத்திற்கு  (instalmsnt basis) முறையில் வசூல் செய்து பின்னர்  நிர்வாகம் சம்பந்தப்பட்ட FSP களிடம்  சமர்ப்பிக்கும் என்று மாநில நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது . இதை அனைத்து மாவட்ட தலைமை பொது மேலாளர் அவர்களுக்கும் அனுப்பப்பட்டு அனைத்து 
FSP - களையும் அழைத்து தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. 

இதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைத்துள்ளோம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மெயின் தொலைபேசி நிலையத்தில் இருக்கின்ற கழிவறை, வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருக்கின்ற கழிவறைகள், சிதம்பரம் தொலைபேசி நிலையத்தில்  உள்ள கழிவறைகள்,  மற்றும் கடலூர் IQ , சிதம்பரம் IQ  பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாக மாநில குழு வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது 
 .
கூட்டத்தில் இது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்கள் என்பதை மிகக் தெளிவாக எடுத்துரைத்தோம்  .

குறிப்பாக தலைமை பொது மேலாளர் நமது கூற்றை அப்படியே ஏற்றுக்கொண்டார். குறிப்பாக கடலூர் தோழர்கள் கடலூர் ஆய்வின்  போது மிகத் தெளிவாக  குறிப்பிட்டு இருந்தார்கள்.
குறிப்பு தயாரிப்பில் தவறு நடந்திருப்பதாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 மிக விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டுள்ளது.

 புதிய மருத்துவ அடையாள அட்டை

அனைவருக்கும் கால வரம்பிற்குள் புதிய மருத்துவ அடையாள அட்டை ஸ்மார்ட் கார்டு மூலம் வழங்கப்படும்.

 ஒப்பந்த ஊழியருக்கு ஊதியம்

இந்த பிரச்சினைகளையும் முரண்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது சுட்டிக்காட்டப்பட்டது. 

 மாநில குழு கூட்டத்திற்கு தவறான தகவல் தருவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை மாநில தலைமை பொது மேலாளர் அவர்களும் ஏற்றுக் கொண்டார்.
நமது மாவட்டத்தை பொருத்தவரை பழைய மற்றும் புதிய ஊதிய தகவல்களை சேகரித்து தந்துள்ளோம்.

நமது ஒப்பந்த ஊழியர்களும் (பழைய ஒப்பந்த ஊழியர்கள் உட்பட) முறையாக பேங்க் பாஸ்புக் நகலை பதிவிட்டு மாவட்ட சங்கத்திற்கு ஒரு இரு தினங்களில் வழங்க வேண்டுகின்றோம்.

இந்த மாதம் தலைமைப் பொது மேலாளர் அவர்கள் ஓய்வு பெறுவதை முன்னிட்டு ஊழியர் தரப்பின் சார்பாக சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

மிக விரைவில் மாநில குழு கூட்டம் நடைபெற்றதற்கு ஊழியர் தரப்பின் சார்பாக நன்றி  தெரிவிக்கப்பட்டது

Wednesday, May 1, 2024

மே தினம்
கடலூரில் மே தின நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. காலை  9.15 மணிக்கு தொலைபேசி நிலையம் கடலூர் மூத்த தோழர் R. செல்வகுமார் நமது சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்பு செய்தார். 
நமது தோழர் E. விநாயகமூர்த்தி மே தின கோரிக்கை  முழக்கங்களை எழுப்பினார். அனைவருக்கும் சூடான கேசரி இனிப்புகள் வழங்கப்பட்டன. 

அடுத்த நிகழ்வாக காலை 9 மணி 40 நிமிடத்திற்கு வாடிக்கையாளர் சேவை மையத்தில் நமது கிளை செயலாளரும், மாநில சங்க துணை தலைவர் ஆகிய, தோழர்  A.சகாய செல்வன் நமது சங்க கொடியை  ஏற்றி வைத்து சிறப்பு செய்தார்.
மிக சுருக்கமாக தோழர் E.விநாயகமூர்த்தி கோரிக்கை  முழக்கங்களை எழுப்பினார்.

நிறைவாக கடலூர் பொது மேலாளர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நமது சங்க கொடியை  மூத்த தோழியர் S.சுகந்தி அவர்கள் ஏற்றி வைத்தனர்.

ஒலிபெருக்கி வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 
நமது மூத்த தோழர் E.விநாயகமூர்த்தி மே தின சிறப்பு கோஷங்களையும் மற்றும் நமது பிஎஸ்என்எல் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையும் இணைத்து  நல்லதொரு கோஷமிட்டார்.

தேசிய செயலாளர் ஸ்ரீதர் மிக சுருக்கமாக மே தின உரையை ஆற்றினார்.

அவரது உரையில், ரத்தம் சிந்தி  போராடி சாதித்த எட்டு மணி நேரம் உட்பட பல கோரிக்கைகள் இன்று நீர்த்து போகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தொழிலாளி வர்க்கத்திற்கு ஜாதி ,மத , மொழிகளைக் கடந்து வர்க்க ரீதியாக ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய தருணம் ஆனால் துரதிஷ்டவசமாக ஒற்றுமை கட்டுவதில் பல சுணக்கங்கள் உள்ளன. இதை மாற்றி அமைத்து நம் அனைவரும் ஒன்றிணைத்து போராடி பெற்ற சலுகைகளை தக்க வைப்பதோடு மேம்படுத்த வேண்டும். 

வருங்கால சந்ததிக்கு நல்லதொரு உத்தரவாதமான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு நாம் ஒன்றுபட்டு  போராட வேண்டும் என்று  அரைக்கூலுடன் தனது உரையை நிறைவு செய்தார்.

பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரிகின்ற அனைத்து அதிகாரிகள் மற்றும்  ஊழியர்களுக்கு சூடான சுவையான கேசரி வழங்கப்பட்டன.

மாலையில் மத்திய தொழிற்சங்கங்கள் ஏஐடியூசி மற்றும் சிஐடியு இணைந்து நடத்திய மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் நமது தோழர்கள் நிறைவாக பங்கு பெற்றனர் .

மாவட்ட செயலாளர் கலந்துகொண்டு மே தின உரையை ஆற்றினார்.
மாவட்ட செயலாளர் தோழர்  D. குழந்தைநாதன் கடலூரில் மே தின சிறப்பு கூட்டங்களை  நல்லதொரு முறையில் ஒருங்கிணைத்து சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.

மேலும் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் மே தினக் கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.