.

Monday, December 30, 2013



இனிய புத்தாண்டே 
இரண்டாயிரத்து பதினான்கே 
கொண்டு வா 
இல்லந்தோறும் இனிமையை 
உள்ளந்தோறும் உவகையை 

உயர்ச்சி அடையட்டும் நம் சேவை 
மகிழ்ச்சி கொள்ளட்டும் வாடிக்கையாளர்கள் 
வளர்ச்சி காணட்டும் பி எஸ் என் எல் 
மலர்ச்சி அடையட்டும் நம் தோழர்கள் 




இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

சொசைட்டி டைரி

நமது சென்னை தொலைதொடர்பு ஊழியர் கூட்டுறவு சொசைட்டி உறுப்பினர்களுக்கு  31-12-2013 அன்று கடலூரிலும் 01-01-2014 அன்று விழுப்புரத்திலும் டைரி வழங்கப்பட உள்ளது  

செயலக கூட்டம் 30-12-2013

நமது மாவட்ட செயலக  கூட்டம் இன்று 30-12-2013 மாலை 5:30 மணிக்கு சங்க அலுவலகத்தில் நடைபெறும். நிர்வாகிகளும் முன்னணி தோழர்களும் தவறாமல் பங்கேற்கவும். பொருள் :ஒலிக்கதிர்  பொன்விழா 

Saturday, December 28, 2013


ஒலிக்கதிர் பொன்விழா -ஜனவரி 6, 2014 -கடலூர்

ஒலிக்கதிர் பொன்விழா -ஜனவரி 6, 2014 -கடலூர் விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன  . அழைப்பிதழ்களும் போஸ்டர்களும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன . 

ஓர் அன்பு வேண்டுகோள் 

அனைத்து மாவட்ட தோழர்களும் தமது வர்க்க கடமையாற்ற நிதி வசூலை விரைவாக முடித்து நிதியினையும் ரசீது புத்தகங்களையும் விரைவாக ஒப்படைத்தும்  நிறைவான பங்கேற்பை உறுதி செய்தும் விழாவினை மேலும் சிறப்பாக்க வேண்டுகிறோம் .

Friday, December 27, 2013

Wednesday, December 25, 2013

இரங்கல்

நமது DGM(FINANCE) திரு P சாந்தகுமார் அவர்களின் தாயார் இன்று(25-12-2013) காலை    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் வண்டிபாளையம் முருகன்கோயில் தெருவில் 26-12-2013 அன்று காலை 7 மணியளவில்  நடைபெறும் .


Monday, December 23, 2013

இரங்கல்

 ஓய்வு பெற்ற தோழர் S காப்ரியல் STS  அவர்கள்    இன்று 23-12-2013 காலை காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் கடலூர் சாமிபிள்ளை நகரில் இன்று  23-12-2013 மாலை  நடைபெறும் .



Saturday, December 21, 2013

தேசியக்கூட்டாலோசனைக்குழு கூட்டம்



அகில இந்திய JCM  23/12/2013 அன்று டெல்லியில் கூடுகின்றது. 
முதன் முறையாக தேசியக்கூட்டாலோசனைக்குழு  கூட்டத்தில் பங்கேற்கும் நமது மாநிலச்செயலர் 
தோழர். பட்டாபி 
அவர்களை வாழ்த்துகிறோம் . 

கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன.

ஊழியர் தரப்பில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் 

  • RM, GRD பதவிகளில் STAGNATION  தேக்க நிலை தீர்த்தல் 
  • அனைவருக்கும்  போனஸ் வழங்குதல்
  • 78.2 சத IDA இணைப்பு நிலுவை வழங்குதல்.
  • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல்.
  • 78.2 சத IDA இணைப்புக்கேற்ப அனைத்துப்படிகளும் வழங்குதல்.
  • நான்கு கட்டப்பதவி உயர்வை முறைப்படுத்துதல்.
  • SC/ST தோழர்களுக்கு இலாக்காத்தேர்வுக்கான தகுதி மதிப்பெண்களை தளர்த்துதல்.
  • LTC,மருத்துவப்படி மற்றும் LTCயில் விடுப்பை காசாக்கும் வசதிகளை அமுல்படுத்துதல்.
  • BSNLலில் பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வகுத்தல்.
  • TM பயிற்சி முடித்து பதவி இல்லாததால் காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்குதல்.

நிர்வாகத்தரப்பில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் 

  • மாநில,மாவட்ட மட்ட JCM குழு உருவாக்கத்தில்  உள்ள பிரச்சினைகள் தீர்த்தல்.
  • JCM  மாநில, மாவட்டக்குழு எண்ணிக்கையை முறைப்படுத்துதல்.
  • கருணை அடிப்படை வேலைக்குப்பதிலாக புதிய இழப்பீட்டு முறை உருவாக்குதல். 
  • BSNL நிறுவனத்தின் பணிக்கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துதல்.

Friday, December 20, 2013

தோழியர் K V அஞ்சலி கூட்டம்

மறைந்த தோழியர் K V   அஞ்சலி கூட்டம் 20-12-2013 அன்று மதிய இடைவேளையில் அனைத்து சங்கங்களின் சார்பில்  கடலூர் GM அலுவலக வாயிலில் தோழர் இரா ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது .  திரளான தோழர்களும் தோழியர்களும்  கலந்துகொண்டு மறைந்த  தோழியரின் நினைவை போற்றி அஞ்சலி செய்தனர்.
திருமதி N ஜெயந்தி அபர்ணா DGM (CFA ), திரு P  சாந்தகுமார் DGM (Finance) , திரு K ராதாகிருஷ்ணன் DGM (CM ) தோழர் B திருநாவுக்கரசு ஓய்வூதியர் சங்கம் , தோழர் RV ஜெயராமன் FNTOBEA , தோழர் R ஜெயபாலன் FNTO ,தோழர் KT சம்பந்தம் BSNLEU , தோழர் P வெங்கடேசன் AIBSNLEA , தோழர் C பாண்டுரங்கன் SNEA , NFTE சம்மேளன செயலர் தோழர் G ஜெயராமன் ஆகியோர் அஞ்சலியுரையாற்ற மாவட்ட தலைவர் R செல்வம் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி கூறி அஞ்சலி கூட்டத்தை நிறைவு செய்தார் 






தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் மாநில சங்க  சிறப்பு அழைப்பாளர் தோழர் சேது நேரில் அஞ்சலி   செலுத்தினார் . மேலும் மாநில பொருளாளர் K அசோகராஜன்  மாநில உதவி செயலர் L சுப்பராயன் , புதுவை மாவட்ட செயலர் P காமராஜ் ஆகியோரும்  கடலூர் மற்றும் புதுவை தோழர் தோழியர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர் 

தோழியர் KV க்கு அஞ்சலி கூட்டம்

அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 
மறைந்த தோழியர் KV க்கு 

அஞ்சலி கூட்டம் 
இன்று (20-12-2103)
மதிய உணவு இடைவேளையில் 
GM அலுவலக வாயிலில் நடைபெறும்
 

Wednesday, December 18, 2013

இதய அஞ்சலி

கேவி (COM .K .V ) என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட 
தோழியர் K விஜயலட்சுமி 
இன்று நம்மிடையே இல்லை .
                 

         
          தொழிற்சங்கப் போராளியான தோழியர் K V   இறுதியில் நோயிடனும் கடுமையாகப் போராடி, இன்று (18-12-2013) மாலை தனது போராட்டத்தை முடித்து கொண்டு கால வெளியில் கலந்து விட்டார் .
                  
       சிரித்த முகம், அனைவரையும் அரவணைக்கும் பாங்கு, கொள்கையில் உறுதி, விவாதங்களில் விவேகம், அலுவலக பணிகளில் நேர்த்தி என பன்முக பரிமாணம் கொண்ட அன்புத்  தோழி அவர்.
       
      தொழிற் சங்க இயக்கத்தில் பெண்களைத் திரட்டுவதில் களம் காண்பதில் தனி முத்திரை பதித்த தோழியர், GM அலுவலக கிளை சங்கத்தில் பல பொறுப்புகளையும் , மாவட்ட சங்க நிர்வாகியாகவும் , மாநில சங்க அமைப்புச் செயலராகவும் சிறப்புற பணியாற்றியவர் .

       தோழியரின் மறைவுக்கு நமது கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம் .
                                                                                                        - NFTE 
இதய அஞ்சலி தகவல் பலகைக்கு  இங்கே  

மாநில சேம நல நிதிக்குழு கூட்ட மினிட்ஸ்

 மாநில சேம நல நிதிக்குழு கூட்ட மினிட்ஸ் வெளியிடப்பட்டுள்ளது 

Tuesday, December 17, 2013

LJCM ஊழியர் தரப்பு கூட்டம் 13-12-2013

கடலூர் மாவட்ட LJCM ஊழியர் தரப்பு கூட்டம் 13-12-2013 அன்று நமது   NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஊழியர்தரப்பு தலைவர் தோழர் . R.ஸ்ரீதர்  தலைமையேற்றார். ஊழியர்தரப்பு உறுப்பினர்கள் தோழர்கள்  K.மகேஸ்வரன் ,D.சிவசங்கர் ,E.நீதி ,R.ரவி, N.மேகநாதன், V.குமார், ,மற்றும் தோழியர் K.பிரேமா ஆகியோர் பங்கேற்று ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கினர்.நிலுவையில் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட இருபதுக்கும் மேலான பிரச்சினைகள் ஒரு மனதாக தொகுக்கப்பட்டது. ஊழியர்தரப்பு செயலர் தோழர் K.T.சம்பந்தம் பிரச்சினைகளை ஒருங்கிணைத்து நிறைவுசெய்து முடித்துவைத்தார்.தோழர் K.மகேஸ்வரன் நன்றியுரை கூறினார் 




லோக்கல் கவுன்சில் அஜெண்டா 



ஒலிக்கதிர் பொன்விழா

ஒலிக்கதிர் பொன்விழா  



நாள் : 06-01-2014     
இடம் :சுப்பராய ரெட்டியார் திருமண மண்டபம் 
கடலூர் 

Sunday, December 15, 2013

NFTE தொழிற்சங்க வரலாற்றில் நெல்சன் மண்டேலா


ஒலிக்கதிர் ஆகஸ்ட் 1988 இதழிலிருந்து 

கடலூரில்ஜூலை 17-20,1988 இல்  நடைபெற்ற லைன்ஸ்டாப்  மாநில மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த மண்டேலா அரங்கம் மற்றும் நிகழ்வுகளின் புகைப்பட பதிவுகள் 






Wednesday, December 11, 2013

கடலூர் மாவட்ட செயற்குழு 10-12-2013

 கடலூர் மாவட்ட செயற்குழு 10-12-2013 அன்று அறிவித்தபடி சரியாக

மதியம் 02-30மணிக்கு தோழர் R.செல்வம் மாவட்ட தலைவர்

 உரையுடன் துவங்கியது கூட்டத்தில் 60 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் 

கலந்து கொண்டனர்.

தோழியர் கீதா மாவட்ட துணை தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார். 

தோழர் G.ரங்கராஜன் மாவட்ட அமைப்பு செயலர் 

அஞ்சலியுரையற்றினார். 

   அதனை தொடர்ந்து குடந்தை தோழர் R.ஜெயபால் மாநில சிறப்பு 

அழைப்பாளர் துவக்கவுரையாற்றினார்கள் அவர் உரையில் மதுரை

 மாநில மாநாடு,வேலூர் மாநில செயற்குழு,கிருஷ்ணகிரி மாநில 

செயற்குழு மற்றும் கடலூர் மாவட்ட மாநாடு நிகழ்வுகளை 

பகிர்ந்துக்கொண்டார். ஒலிக்கதிர் சிறப்பு பற்றியும் அதன் பொன்விழா 

பற்றியும் விரிவாக விளக்கினார். அதனை தொடர்ந்து தோழர் 

இரா.ஸ்ரீதர் மாவட்ட செயலர் ஜன-06-2014 அன்று நடைபெறும் 

ஒலிக்கதிர் பொன்விழா நிகழ்வுக்கான பொறுப்பாளர்களை நியமனம் 

செய்து அவர்களுக்கான பணிகளை பற்றி விளக்கினார். 

பொறுப்பாளர்கள் விபரம் விரைவில் வெளியிடப்படும். 

சம்மேளன செயலர் தோழர் G.ஜெயராமன் சொந்த வேலை இருப்பதால் 

செயற்குழுவில் கலந்துக்கொள்ள முடியவில்லை என 

தொலைபேசியில் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற 

பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 10-12-2013 அன்று 

நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கபடுகிறது என 

செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. 



Tuesday, December 10, 2013

FORMAL MEETING 09-12-13

மாவட்ட நிர்வாகத்துடனான FORMAL MEETING 09-12-2013 அன்று நடைபெற்றது .மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் மாநில உதவித்தலைவர் V  லோகநாதன் மாவட்ட தலைவர் R செல்வம் மாவட்ட உதவி செயலர் K கிருஷ்ணகுமார் GM அலுவலக கிளை செயலர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர் .பிரச்சினை தீர்விற்கான விவாதம் நடைபெற்றது சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது 

கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்திற்கான விரிவான பேச்சுவார்த்தை இன்று 10-12-2013 நடைபெறும் 

தோழர் எஸ் எஸ் தியாகராஜன் படத்திறப்பு கூட்டம் சிதம்பரம்

சிதம்பரம் AITUC சார்பில் நடைபெற்ற தோழர் எஸ் எஸ் தியாகராஜன் படத்திறப்பு மற்றும் அஞ்சலி கூட்டத்தில் தோழர் இரா .ஸ்ரீதர் மாவட்ட செயலர் மற்றும் தோழர்.V.லோகநாதன் மாநில துணை தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலியுரையாற்றினார்கள்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் -10-12-2013

பிரச்சினை தீர்வில்
 மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறையில் மாற்றத்தை கோரி
 10-12-2013 அன்று மாலை 5 மணிக்கு 
கடலூர் மாவட்ட அலுவலத்தின் முன் 
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
 நடைபெறும் .
 தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் 

Monday, December 9, 2013

FORMAL MEETING 09-12-2013

கடலூர் மாவட்ட நிர்வாகத்துடனான FORMAL MEETING இன்று (09-12-2013) நடைபெறவுள்ளது 

தோழர் எஸ் எஸ் தியாகராஜன் படத்திறப்பு கூட்டம் சிதம்பரம்

சிதம்பரம் AITUC சார்பில் நடைபெறும் தோழர் எஸ் எஸ் தியாகராஜன் படத்திறப்பு மற்றும் அஞ்சலி கூட்டத்தில் தோழர் இரா .ஸ்ரீதர் மாவட்ட செயலர் மற்றும் தோழர் லோகநாதன் மாநில துணை தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலியுரையாற்றுகிறார்கள் . 



Friday, December 6, 2013

மண்டேலா மறைந்தார்


இனவெறிக்கு எதிராய் போராடி 
இருபத்தேழு ஆண்டுகள் சிறைவாசத்தில் 
இன்னல்கள் பல அனுபவித்து 
இனிய குடியரசை தென்னாப்பிரிக்காவில் 
மலர செய்த 
மாமனிதர் மண்டேலா மறைந்தார் 
இச்சமயத்தில் 
1988-இல் கடலூரில் நடைபெற்ற 
லைன் ஸ்டாப் மாநாட்டில் 
அவரது பிறந்த நாளை கொண்டாடியதோடு 
அவரது விடுதலைக்கு குரல் கொடுத்ததை நினைவு கூர்கிறோம் 
அஞ்சலியையும் உரித்தாக்குகிறோம் 

Thursday, December 5, 2013

                     JCM தலமட்டக்குழுவிற்கான அஜெண்டா தயாரிப்பு கூட்டம் 4-12-2013 அன்று மாலை நமது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. முதலில் நமது NFTE சார்பிலான JCM உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மாவட்ட செயலரும் லோக்கல் JCM ஊழியர் தரப்பு தலைவருமான இரா ஸ்ரீதர் , D சிவசங்கர் TTA , R ரவி TM செஞ்சி , E நீதி TM திண்டிவனம் , K மகேஸ்வரன் TTA சிதம்பரம் ஆகியோருடன் மாவட்ட தலைவர் R செல்வம் , மாநில துணை தலைவர் V லோகநாதன் ,மாவட்ட அமைப்பு செயலர் AC முகுந்தன் மற்றும் வெளிபிரிவு கிளை தலைவர் V இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர் . பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது 
              


 பின்னர் BSNLEU தரப்பு  JCM உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் BSNLEU மாவட்ட செயலர் K T சம்பந்தம் , G S குமார் , V  குமார் ,N மேகநாதன் , I M மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

                13-12-2013 அன்று நடைபெறும் கூட்டத்தில் அஜெண்டா முறைப்படி இறுதி செய்யப்படும்.

Wednesday, December 4, 2013

மாவட்ட செயற்குழு 10-12-2013

நமது மாவட்ட செயற்குழு 10-12-2013 அன்று மதியம் 2 மணிக்கு மாவட்ட அலுவலக மனமகிழ் மன்றத்தில் நடைபெற உள்ளது 

தலைமை : R செல்வம் மாவட்ட தலைவர் 
துவக்கவுரை : R ஜெயபால் குடந்தை, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் 
சிறப்புரை :G ஜெயராமன் சம்மேளன செயலர் 

அஜெண்டா 
1. அமைப்பு நிலை 
2. நிதி நிலை 
3. ஒலிக்கதிர் பொன்விழா 
4.பிரச்சினை தீர்வும் மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறையும் போராட்டமும் 
5.பிற -தலைவர் அனுமதியுடன் 
        

மாவட்ட கவுன்சில்( LOCAL JCM ) அஜெண்டா தயாரிப்பு கூட்டம்

மாவட்ட கவுன்சில்( LOCAL JCM ) அஜெண்டா தயாரிப்பு கூட்டம் இன்று 04-12-2013 மாலை மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். தோழர்கள் தங்களின் கருத்துகளை தோழர் K மகேஸ்வரன் TTA (JCM உறுப்பினர் ) அவர்களுக்கு இன்று மாலைக்குள் தெரிவிக்க வேண்டுகிறோம் 

Sunday, December 1, 2013

மாநில சேம நல நிதி கூட்டம் 29-11-2013

           மாநில சேம நல நிதி கூட்டத்திற்கு முன் தயாரிப்புக்காக 29-11-2013 அன்று முற்பகலில் மாநில சேம நலக்குழு NFTE உறுப்பினர் இரா ஸ்ரீதர் , மாநில செயலர் R பட்டாபிராமன் மற்றும் RGMTTC கிளை செயலர் சீனிவாசன் ஆகியோருடன் மாநில சங்க அலுவலகத்தில் விவாதித்தார் 
        




        மாலையில் மாநில சேம நல நிதிக்குழு கூட்டம் புதிதாக கிரீம்ஸ் சாலையில் மாற்றப்பட்ட CGM அலுவலக CONFERENCE HALL-ல்  -அலுவலகத்திலேயே முதல் கூட்டமாக  நடைபெற்றது .CGM திரு.அஷ்ரப் கான்  அவர்கள் தலைமை தாங்கினார். GM (HR ) திருமதி R இராதா அவர்கள் வரவேற்றார் . புதிய கட்டிடத்தில் நடக்கும் முதல் கூட்டமாக ஊழியர் சேம நலக்கூட்டம் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் .DGM (A ) திரு R .ரகுநாதன் செயல்பாட்டறிக்கையை தாக்கல் செய்தார் 
          
       பின்னர் நாம் அளித்த விவாதப்பொருள் 8 உட்பட விவாதிக்கப்பட்டது .

1. ஓய்வு பெறும்போது GIFT CHEQUE ரூ 1200/- லிருந்து ரூ 2000/- ஆக உயர்த்தல்-  ஏற்கப்பட்டது 

2. மூக்குக்கண்ணாடிக்காக ரூ 400/- லிருந்து ரூ 800/- உயர்த்தல்- ஏற்கப்பட்டது 

3. சேம நலப்பிரிவு ஊழியருக்காக மதிப்பூதியம் இரண்டு மடங்காக உயர்த்தல் - ஒப்புக்கொள்ளப்பட்டது 

4.புத்தக உதவித்தொகை , தொழிற்நுட்ப மற்றும் தொழிற்நுட்பமல்லாத படிப்பு உதவித்தொகையை உயர்த்திட கேரளா மற்றும் கர்நாடகா நடைமுறையை பரிசீலனை செய்து முடிவு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது 

5. திருமண கடன் தமிழகம் முழுவதும் ரூ 50000/-ஆக ஒரே மாதிரி அமுல்படுத்தப்படும்  திருமண கடன் ரூ 1 லட்சம் வரை உயர்த்துவது குறித்து அடுத்த கூட்டத்தில் சாதகமாக பரிசீலிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது 

6. பெண்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை மீண்டும் ஒருமுறை அனுமதிக்க வேண்டப்பட்டது . முதன்மை பொது மேலாளர் இரு பாலருக்கும் அனுமதிக்கவும் தொகையை உயர்த்தவும் இசைந்துள்ளார் 

7.மருத்துவ முகாம்கள் -நல்ல யோசனை என்று வரவேற்கப்பட்டு முகாம் ஏற்பாடு செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் குறிப்பு அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது 

8. கடன் தவணை பிடித்தத்தை  HRMS PACKAGE -ல் இணைக்க CGM அலுவலக கணக்குப்பிரிவு முன்முயற்சி எடுக்கும். பூனா ITPC பிரிவுக்கு எழுதி உடனடியாக அமல்படுத்த ஏற்கப்பட்டது 

9. ஊழியர் வங்கி கணக்கு மூலம்( NEFT /RTGS ) மாவட்டங்களில் சேம நல கடன்களை வழங்கிட ஏற்கப்பட்டது 

10. வங்கிக்கடன் பெறும்போது இன்ஷூர் செய்வதன் முக்கியத்துவம் விவாதத்தில் வெளிப்பட்டது உரிய முறையில் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU ) செய்யும்போது காப்பீடு செய்வதையும் இணைக்க கார்பரேட் அலுவலகம் டெல்லிக்கு பிரச்சினையை பரிசீலிக்க அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது 

11.சேம நல மாதாந்திர சந்தா ரூ 50/- ஆக முந்தைய 09-01-2013 கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவை தமிழகம் முழுவதும் அமல் செய்து சேமநல நடவடிக்கைகளை மேலெடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது 

(கூட்ட நடவடிக்கை மினிட்ஸ் கிடைத்ததும் வெளியிடப்படும் )

Friday, November 29, 2013

தர்மபுரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா மற்றும் மாவட்ட மாநாடு 28-11-2013

தர்மபுரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா மற்றும் மாவட்ட மாநாடு 28-11-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது.
நமது தமிழ்நாடு தொலைதொடர்பு வட்ட முதன்மை பொது மேலாளர் சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மாநில செயலர் பட்டாபி,முன்னாள் சம்மேளன செயலர் R K , ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்மணி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் ஜெயபால் சேது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .நமது மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் சங்க அலுவலக பெயர் பலகையை திறந்து வைத்து வாழ்த்துரையாற்றினார் 
திரளான தோழர்கள் கலந்து கொண்ட மாவட்ட மாநாட்டில் தோழர் மணி மீண்டும் மாவட்ட செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .  வாழ்த்துக்கள் .

Sunday, November 24, 2013

செயலக கூட்டம் 25-11-2013

செயலக கூட்டம் 25-11-2013 அன்று மாலை  மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகளும் முன்னணி தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் 

Saturday, November 23, 2013

24-11-2013 -NFPTE இன் 60 வது அமைப்புதினம்

24-11-2013 -NFPTE இன் 60 வது அமைப்புதினம் 
தியாகிகளுக்கு செவ்வணக்கம் 
அனைவருக்கும் அமைப்புதின வாழ்த்துக்கள் 

.மறைந்த தலைவருக்கு அஞ்சலி

தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இறுதி நிகழ்ச்சிகள் நாளை மாலை சென்னையில் நடைபெறும்.மறைந்த தலைவருக்கு அஞ்சலி

Friday, November 22, 2013

இரங்கல்

நமது சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் மாவட்ட தலைவருமான P சின்னசாமி LI அவர்கள்    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் ஆத்தூருக்கு அருகில் உள்ள தியாகனூரில் 22-11-2013 அன்று மாலை 4 மணியளவில்  நடைபெறும் .


அவர் இயக்க பணி மட்டுமல்லாமல் தொலைபேசி இணைப்பு நிர்மான பணியிலும் சிறந்து விளங்கி சஞ்சார் சாரதி விருதையும் பெற்றவர் என்பதை நினைவு கூர்கிறோம்  

Thursday, November 21, 2013

தமிழ் மாநில செயற்குழு -கிருஷ்ணகிரி-20-11-2013

தமிழ் மாநில செயற்குழு கிருஷ்ணகிரியில்  20-11-2013 அன்று மாநில தலைவர் நூருல்லா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தருமபுரி மாவட்ட செயலர் மணி மற்றும் வேலூர் சென்னகேசவன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர் . நமது மாவட்டத்தை சேர்ந்த மாநில துணைத்தலைவர் லோகநாதன் அஞ்சலியுரையாற்றினார் .ஆய்படுபொருள்களை அறிமுகப்படுத்தி மாநில செயலர் பட்டாபி அறிமுக உரையாற்றினார்.மாநில சங்க நிர்வாகிகளும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் விவாதங்களில் பங்கேற்று உரையாற்றினர். சம்மேளன செயலர் G ஜெயராமன்,அகில இந்திய அமைப்பு செயலர் SS கோபாலகிருஷ்ணன்,மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் குடந்தை ஜெயபால், மதுரை சேது,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்மணி ,இளைஞர் கன்வீனர் சுபேதார் அலிகான்,மகளிர் கன்வீனர் லைலா பானு,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  இறுதியில் மாநில செயலர் பட்டாபி விவாதங்களுக்கு பதிலளித்து கருத்துரையாற்றினார். சிறிய மாவட்டமாக இருந்தாலும் செயற்குழு ஏற்பாட்டை செம்மையாக செய்திட்ட தருமபுரி மாவட்ட செயலர் மணி மற்றும் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் முனியன் ஆகியோரையும் மற்ற தோழர்களையும் பாராட்டுகிறோம்  

 செயற்குழு காட்சிகள் இங்கே 

ஒலிக்கதிர் பொன்விழா நிதியினை நிறைவாக வழங்கிய சிவில் , குடந்தை,காரைக்குடி,மதுரை,குன்னூர்,வேலூர் மாவட்ட சங்கங்களுக்கும் மகளிர் கன்வீனர் லைலா பானு-தஞ்சை,மாநில துணை தலைவர் மனோகரன்-திருச்சி , ராபர்ட்-கோவை ஆகிய தோழர்களுக்கும் நன்றி.மற்ற மாவட்ட சங்கங்களும் நிர்ணயிக்கப்பட்ட நிதியினை விரைவில் வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

மொத்தத்தில்,மாநில செயற்குழு கிருஷ்ணகிரி ஒற்றுமை பாதைக்கான வழிகாட்டிருக்கிறது. நமது கடலூர் மாவட்ட அமைப்பு மற்றும் நிதி பிரச்சினையும்  விரைவில் தீர்வடையும் என்று நம்புகிறோம் .


Monday, November 18, 2013

அன்பார்ந்த தோழர்களே 
    நமது ஒலிக்கதிர் பொன்விழா நன்கொடை நிதியினை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் 20-11-2013 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ள மாநில செயற்குழுவிற்கு வரும்போது பொன்விழா குழு செயலரிடம் அளிக்கும்படி கேட்டுகொள்கிறோம் .
சேலம் மாவட்ட செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் பாலகுமாருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 

Staff Welfare Board கூட்டம்

தமிழ்நாடு BSNL Staff Welfare Board -ன் கூட்டம் 29-11-2013 அன்று நடைபெறவிருப்பதால் Staff Welfare சம்பந்தமான பிரச்சினைகளை 20-11-2013 அன்றுக்குள் rsridharbsnl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9443212300 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொண்டு தெரிவித்திட வேண்டுகிறோம் 

Friday, November 15, 2013

பி எஸ் என் எல் கடலூர் -குழந்தைகள் தின கொண்டாட்டம் -14-11-2013

பி எஸ் என் எல் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின்  சார்பில் அரசு சேவை இல்லத்தில் சமுக நலத்துறையுடன் இணைந்து 14-11-2013 மாலை குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. நமது முதுநிலை பொதுமேலாளர் தலைமையேற்று பி எஸ் என் எல் சார்பில் நலத்திட்ட உதவிகளை சேவை இல்லத்திற்கு வழங்கினார். மிதிவண்டி, எமர்ஜென்சி லேம்ப் , சமையல் உபகரணங்கள் , நோட்டு புத்தகங்கள் , பிஸ்கட்  போன்றவை வழங்கப்பட்டன .
துணை பொதுமேலாளர்கள் நிதி,நிர்வாகம் மற்றும் மார்க்கெட்டிங்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .நமது சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் , வெளிப்புற கிளை தலைவர் V இளங்கோவன் TTA ஆகியோர் கலந்துகொண்டனர் .
SDE மார்க்கெட்டிங் P சிவகுமரன் நன்றியுரை ஆற்றினார்.
சிறிய முயற்சியாக இருந்தாலும் கடைசி நேர முடிவாக இருந்தாலும் நல்ல முடிவு எடுத்த மார்கெட்டிங் பிரிவிற்கு குறிப்பாக AGM மார்க்கெட்டிங் P குணசேகரன் அவர்களுக்கும் நமது நன்றிகள் .





Wednesday, November 13, 2013

முகரம் விடுமுறை மாற்றம்

முகரம் விடுமுறை 14-11-2013 க்கு பதிலாக 15-11-2013 க்கு  மாற்றப்பட்டுள்ளது 

Monday, November 11, 2013

BSNL Tamilnadu Circle Staff Welfare Board

6-வது சரிபார்ப்பு தேர்தலுக்கு பிறகு
 பி எஸ் என் எல் தமிழ்மாநில  பணியாளர் நல வாரியம் (BSNL Tamilnadu Circle Staff Welfare Board ) திருத்தி அமைக்கப்பட்டுள்ளது . 
 நமது மாவட்ட செயலர் 

இரா ஸ்ரீதர்


NFTE சார்பில் பணியாளர் தரப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் . 
நமது மாவட்ட செயலரின் பணி சிறக்க வாழ்த்துவோம் .  
மாநில சங்கத்திற்கு நன்றிகள் .  

Thursday, November 7, 2013

பண்ருட்டியில் கலந்துரையாடல் 07-11-2013

பண்ருட்டியில் தேங்கி கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள் குறித்து கிளை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் 07-11-2013 அன்று கிளை தலைவர் T வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது . மாவட்ட அமைப்பு செயலர் G ரங்கராஜன் கிளை பிரச்சினைகளை தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர்  மற்றும் மாநில துணை தலைவர் V லோகநாதன், கடலூர் தொலைபேசி கிளை தலைவர் V இளங்கோவன் TTA   ஆகியோர் கலந்து கொண்டனர்.
 1. பண்ருட்டி தொலைபேசி நிலையத்திற்கு மின் இணைப்பு NON STANDARD முறையில் உள்ளது.
2.Equipment Room இல் A C மற்றும் மின் விளக்குகள் இயங்காமல் உள்ளன .
 3.CSC இல் மின்விசிறி வசதி கூட இல்லை. 
 4. CSC இல் Postpaid Sim Activation செய்ய TTA நியமிக்கப்படவேண்டும் . 
 5. OTA ஒரு வருடத்திற்கு மேலாக ஊழியருக்கு வழங்கபடுவதில்லை. 
6. அவுட்டோரில் பில்லர்கள் பழுதடைந்து உள்ளன 
போன்ற பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
சில தோழர்கள் கூட்டத்திற்கு இடையே  வந்து சலசலப்பு ஏற்படுத்தினர்.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பண்ருட்டி தோழர்களை வாழ்த்துகிறோம் . பிரச்சினை தீர்வில் மாவட்ட சங்கம் உரிய கவனம் செலுத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .



கள்ளக்குறிச்சி கிளை பொதுக்குழு 07-11-2013

கள்ளக்குறிச்சி கிளை பொதுக்குழு கூட்டம் தோழர் K பாண்டியன் தலைமையில்   07-11-2013 அன்று நடைபெற்றது.  கிளை செயலர் S மணி வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் R செல்வம் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்.  மாவட்ட உதவி தலைவர் P அழகிரி அவர்கள்  ஒலிக்கதிர் பொன்விழா நிதி பெறுவது பற்றி விளக்கினார் .  ஒலிக்கதிர் பொன்விழாவை சிறப்பாக நடத்த கிளை சார்பில் முழு ஒத்துழைப்பையும் வழங்க முடிவு செய்யப்பட்டது 

சிதம்பரம் AITUC சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அருகில் உள்ள பெருமாத்தூர் கிராமத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் நடைபெற்றுவந்த ஸ்ரீவராகி கெமிக்கல்ஸ் ஆலை தொழிலாலர்களுக்கு EPF,ESI இல்லை சம்பளம்,போனஸ் மறுப்பு இவைகளை எதிர்த்து ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.இதை ஆதரித்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் AITUC மாவட்ட செயலர் தோழர்.M.சேகர் கண்டன உரையாற்றினார்.  நமது NFTE சங்கத்தின் சார்பாக தோழர்.D.ரவிச்சந்திரன் மாவட்ட உதவி செயலர், கண்டன  உரையாற்றினார்.   தோழர்  H.இஸ்மாயில், V.கிருஷ்ணமூர்த்தி, தோழர்.K.நாவு ஆகியோர் கலந்து கொண்டு போராட்டம் வெறறிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் .


  

Tuesday, November 5, 2013

இரங்கல்

நமது மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் K அன்பாயிரம் உளுந்தூர்பேட்டை அவர்களின் தாயார் இன்று(05-11-2013) மாலை    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் ஆத்தூருக்கு அருகில் உள்ள தியாகனூரில் 06-11-2013 அன்று காலை 9 மணியளவில்  நடைபெறும் .


Monday, November 4, 2013

செயலக கூட்டம்

செயலக கூட்டம் வருகின்ற 08-11-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும் . அனைத்து கிளை செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் முன்னணி தோழர்களும் கலந்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Friday, November 1, 2013





தீபங்களின் ஒளி  வெள்ளத்தில் 
மத்தாப்புகளின் சிரிப்பில் 
பட்டாசுகளின் இசையில் 
இனிப்புகளை பரிமாறி தித்திக்கும் 
தீபாவளியை கொண்டாட 
வாழ்த்துகிறோம். 
இந்த தீபாவளி 
BSNL நிறுவனத்திற்கும் 
NFTE  இயக்கத்திற்கும் 
நல்வழியில் ஒளியேற்றட்டும்